Sunday, August 3, 2014

ஆடிப்பெருக்கு வைபவம்


மழைக்காலத்தின் தொடக்கமான  ஆடி மாதத்தில்தான் 
பூமாதேவி அவதரித்தாள்

மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள்  எல்லாம் பதினெட்டு என்ற எண் 'ஜய’த்தை  -வெற்றியைக் குறிக்கும். அடிப்படையிலேயே அமைந்தன. 

நீர் பெருக்கெடுத்து ஓடும் நதிக்கரைகளில் பதினெட்டுப் படிகளை அமைத்த நமது முன்னோர்கள், உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கும்  காவிரி அன்னைக்கு, ஆடிப் பதினெட்டு அன்று நன்றி செலுத்தும் விதமாக விழா கொண்டாடினார்கள்

ஆற்றங்கரையில் தூய்மையான  இடத்தில் பசுஞ்சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து, முளைப்பாலிகைத் தட்டுகள் வரிசையாக வைக்கப்படும். 

 பச்சரிசி, சர்க்கரை போட்டுத் தண்ணீர் ஊற்றிக் கலந்து,  பிரார்த்திப்பார்கள். சூடம் ஏற்றி வணங்குவார்கள். 
 பெண்கள்  மஞ்சள் தடவிய நூல் கயிற்றைக்  கழுத்திலும் 
சிலர், கையிலும் கட்டிக் கொள்வார்கள். 
பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிவரும் காவிரி அன்னையின் வரவால் பயிர், பச்சைகளெல்லாம் முளைவிட்டுத் தழைக்கப் போகின்றன. ’ என்ற ஐதீகத்தில் முளைப்பாலிகை,  காதோலை,  கருகமணி ஆகியவற்றை ஆற்றில் விடுவார்கள்
 தேர் போல் சின்னஞ்சிறு வடிவத்தில் . நான்கு சக்கரம் . அழகான சிறு கோபுரமும் காகிதப் பூ வேலைப்பாடுகள் கண்களைக் கவரும். மென்மையான மரங்களினால் செய்யப்பட்ட சப்பரங்களை, ஆடிப் பதினெட்டுக்கு வீதிகளில் உற்சாகமாக  குதூகலமாகச்ஓட்டிச் செல்வார்கள்.
ஆடிப்பெருக்கு விழாவின் நிறைவாக, பிள்ளையார் முன்னால் , சர்க்கரையுடன் சேர்ந்த பச்சரிசியை நைவேத்யம் செய்வார்கள்..!

 தேங்காய் சாதம், புளிசாதம், தயிர்சாதம் முதலான சித்ரான்ன வகைகளை ஆற்றங்கரையிலே அமர்ந்து சாப்பிடுவார்கள்.

 நன்றி மறவாமை, குடும்ப ஒற்றுமை, பொதுவான ஒற்றுமை, மகிழ்ச்சிகரமான வாழ்வு ஆகியவை மக்களிடையே பரவ கடலோடு நதி கலந்து வேற்றுமை இன்றி இருப்பதைப் போல,வேற்றுமை இன்றி வாழ ஆடிப்பெருக்கு வைபவத்தால் விளையும் நலன்கள் உணரவைக்கப்படுகின்றன.!
தம் திருவடிகளை அணைத்தபடி, ஆரவாரம் ஏதுமின்றி அமைதியாக தவழ்ந்தோடும்  காவிரி தாயாருக்கு, ஆடி பதினெட்டு அன்று 
அம்மாமண்டபப் படித்துறையில் அரங்கனே எழுந்தருளி 
சீதனம் தருகிறார்.
ஆடிப் பெருக்கு அன்று காலையில் உற்சவர் நம்பெருமாள், 
கன கம்பீரமாகக் கிளம்புகிறார். 

கோயிலிலிருந்து புறப்பாடு ஆகும் பெருமாள், வழியெங்கிலுமாக வழிநடை உபயம் காண்கிறார். பின்னர், அம்மா மண்டபத்தில் 
எழுந்தருளுகிறார்.
அம்மா மண்டபம் படித்துறையில் எழுந்தருளும் பெருமாள், அன்று பகல் பொழுது முழுவதுமாகக் காவிரி தாயாரைப் பார்த்தபடியே அமர்ந்திருப்பார். 
அரங்கன் சூடிக்களைந்த மாலை, சந்தனம், பட்டுப்புடைவை, தாலிப்பொட்டு, வெற்றிலை - பாக்கு, பழம் முதலியன ஒரு தாம்பாளத்தில்  கோயில் யானையான ஆண்டாள் தலையில் சுமந்தபடி, படிகளில் இறங்கி நின்று காவிரித் தாயாருக்கு பெருமாளே சீதனமாகச் சமர்ப்பிப்பார்..

16 comments:

 1. மனமார்ந்த ஆடிப்பெருக்கு நல்வாழ்த்துக்கள்..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 2. ஆடிப் பதினெட்டு – அரங்கன் படங்களோடு திருச்சி ஸ்ரீரங்கம் – அம்மாமண்டபம் காவிரிக்கரை படங்களையும் பகிர்ந்தமைக்கு நன்றி! ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. 'ஆடிப்பெருக்கு வைபவம்'

  என்ற தங்களின் தலைப்....பூ இன்று எனக்கு மிகவும் மகிழ்வளிக்கிறது.

  ஏனெனில் இயற்கையாகவே கர்னாடகாவில் பெய்துள்ள மழையால் இங்கு திருச்சி காவிரி நதிக்கு தண்ணீர் வந்து சேர்ந்து எங்களையும் குறிப்பாக தமிழக விவசாயப் பெருமக்களையும் மிகவும் மகிழ்வித்துள்ளது.

  >>>>>

  ReplyDelete
 4. மீண்டும் மீண்டும் பார்க்கப் பார்க்கப் பரவஸ மூட்டிடும் தங்களின் படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

  >>>>>

  ReplyDelete
 5. Replies
  1. கடைசியாகக் காட்டியுள்ள பூப்பல்லாக்கு எவ்ளோ அழகாகச் செய்துள்ளனர் ! மிகவும் மணம் வீசும் படமாக உள்ளது.

   Delete
 6. மேலிருந்து இரண்டாவது படம் சும்மா ஜொலிக்குது !

  >>>>>

  ReplyDelete
 7. தேங்காய் சாதம், புளியஞ்சாதம், தயிர் சாதத்துடன் கூடிய தங்கள் விளக்கங்களும் வாய்க்கு மிகவும் ருசியாக உள்ளன.

  >>>>>

  ReplyDelete
 8. ஆடிப்பெருக்கினில் பாலத்தையே தொட்டுவிடுமாறு பொங்கி வரும் ஜலத்தினைத் தங்கள் பதிவினிலாவது படத்தினிலாவது பார்த்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி எனக்கும் பொங்கித் தான் வருகிறது.

  >>>>>

  ReplyDelete
 9. அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  வாழ்க ! வாழ்க !! வாழ்க !!!

  [தங்கள் கைப்பட்ட சித்ரான்னங்கள் எனக்கும் கொஞ்சம் பிரஸாதமாக அனுப்பி வைக்கக்கூடாதா? அப்பளமும் வடாமும், தொட்டுக்கொள்ள வாய்க்கு ருசியான ஊறுகாயும் சேர்த்து அனுப்புங்கோ, ப்ளீஸ்.]

  ;) 1357 ;)

  oooOooo

  ReplyDelete
 10. ஆடிப்பெருக்கு விழாவின் சிறப்பினை அழகான படங்களுடன் விபரித்து எழுதியபகிர்வு அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 11. இன்றைய நாட்களில் காவிரியில் நீர் பதினெட்டு படிகளைத் தொடுகிறதா.?

  ReplyDelete
 12. ஆடிப்பெருக்குக் கொண்டாட்டத்தை வீட்டில்தான் கொண்டாடியிருக்கிரேனே தவிர, ஒருமுறை கூட இது போல ஆறுகள் பக்கம் சென்றதில்லை! இந்நாளில் கோவிலுக்கும் சென்றதில்லை!

  ReplyDelete
 13. ஆடிப்பெருக்கு ஆற்றங்கரையில் கொண்டாடிய நினைவுகள் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றது! இப்போது உள்ள வாழ்வியல் சூழலில் எல்லாம் சமையலறையோடு முடிந்தது......

  அழகான படங்கள். இத்தனை வெள்ளம் காவிரியில் ஓடுகின்றதா என்ன?!! கல்கியின் பொன்னியின் செல்வன் நினைவுக்கு வருகின்றான்....

  ReplyDelete
 14. ஆடிப் பெருக்கை கண்டுகளித்தோம். படங்கள் அருமை.தொடருங்கள்.

  ReplyDelete
 15. ஆடிப் பெருக்கின் அருமை எடுத்துரைக்கப்பட்டது.
  மிக்க நன்றி.
  கடற்கரையோடும் - மற்றப்படங்களும் சிறப்பு
  அருள் நிறையட்டும்.'
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete