Tuesday, September 16, 2014

சிங்காரமாய் அருளும் செந்தூர விநாயகர்


ஓம் நம: ஸித்திவிநாயகாய ஸர்வகார்ய கர்த்ரே
ஸர்வ விக்ன ப்ரசமனாய ஸர்வராஜ்ய
வச்யகரணாய, ஸர்வஜன ஸர்வ ஸ்த்ரீ புருஷ
ஆகர்ஷணாய ஸ்ரீம் ஓம் ஸ்வாஹா
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி!
மனத்திற் சலன மில்லாமல், மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடநீ செயல்வேண்டும்.
கனகுஞ் செல்வம்,நூறுவயது: இவையும் தரநீ கடவாயே..!
 கொங்கணி பிரதேசத்தில்    கோவாவின் அழகான கடற்கரை, சாஹ்யாத்ரி மலைத் தொடர் என ரம்மிய கோலத்துடன் இயற்கை எழில் சூழ்ந்த  பகுதியில் அழகிய கோயில் கோவாரத்னகிரி கணபதிபுலே எனும் இடத்தில் உள்ள கஜானன் ஆலயம்! 

கணபதி சிலை மணற்பாறையில் தானே உருவானதாக ஐதீகம்..

சிங்கத்தின் மீது அமர்ந்த நிலையில் காட்சியளிக்கும் 
கணபதியின் தாமிரச்சிலையும் உண்டு..




பச்சை போர்த்திய குன்றின் அடிவாரத்தில், கடற்கரைக்கு அருகில், சிவப்பும் வெள்ளையுமான நிறத்தில் பளிச்சிடுகிறது திருக்கோயில்.  உள்ளே சுயம்புமூர்த்தியாக  ஸ்ரீஸித்தி விநாயகராக அருள்கிறார் 
 ‘மேற்கு துவார பாலன்’ எனப் புராணங்கள் போற்றுகின்றன.
மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில், இந்த இடம் தாழை வனமாக இருந்த போது பிடே எனும் அந்தணர் ஒருவர் எத்தனையோ இக்கட்டான சூழ்நிலைகள் வந்தபோதும், இடர்ப்பாடுகள் ஏற்பட்டபோதும், மனம் தளராமல் காற்றை மட்டுமே சுவாசித்து, ஆனைமுக அண்ணலை மனத்தில் ஏற்றி கடுந்தவம் மேற்கொண்டார் பிடே.
அவருடைய தவத்தில் மகிழ்ந்த கணபதி பெருமான், ‘இதோ, இந்த மலையும் வனமும் சேர்ந்த பகுதிக்கே வந்துவிட்டேன். தினமும் எனக்கு பூஜைகள் செய். இந்தப் பகுதியே சுபிட்சமாகும்’ என அருளினார்.
 பிடே வளர்த்து வந்த பசுக்களில் ஒன்று தினமும் தானாகவே ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று பால் சொரிவதை வழக்கமாகக் கொண்டிருந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது, அங்கே காணப்பட்ட அழகிய கணபதியின் விக்கிரகத் திருமேனி கண்டு நெக்குருகிப் போய் அங்கேயே ஸ்ரீகணபதி பெருமானுக்குச் சிறிய அளவில் கோயில் கட்டி, நித்யானுஷ்டானங்களுடன் சிறப்புற பூஜைகளைச் செய்து வந்தார். 
கணபதி பெருமான் கோயில்கொண்ட அந்தப் பகுதி, பின்னாளில் ‘கணபதி புலே’ என அழைக்கப்பட்டது. புலே என்றால் மணல் மேடு என்று பொருள்.
மிக அற்புதமாக அமைந்திருக்கும் திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் மண்டபம், முழுக்க முழுக்க கொங்கணி தேசத்துப் பாணியில் அமைக்கப்பட்டு, கண்களைக் கவருகிறது. 

கோயிலைச் சுற்றி உள்ள இயற்கை வளத்தை ரசிப்பதற்காக சுமார் 1 கி.மீ. தொலைவுக்கு கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருக்கும் வகையில் தேக்கு மரக்கட்டைகளால் ஆன கூரையுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 

திருக்கோயிலின் வடக்குப் பகுதியில் ஸ்வாமிக்கான ஆபரணங்கள் வைக்கும் அறையும், தெற்குப் பகுதியில் பள்ளி அறையும் உள்ளன. சங்கடஹர சதுர்த்தி மற்றும் சிறப்பு நாட்களில் ஸ்ரீகணேசரின் விக்கிரகத் திருமேனியை அலங்கரித்து, ஸ்வாமி பல்லக்கில் வலம் வரும் நிகழ்ச்சி சிலிர்க்கவைக்கும்.

 மூர்த்தம் சிறியதுதான் என்றாலும், மொழுமொழுவென அழகு ததும்ப, செக்கச்செவேலனக் காட்சி தரும் விநாயகருக்குச் செந்தூரம் சார்த்தி வணங்குவது சிறப்பு. 
வருடத்தில் குறிப்பிட்ட நாட்களில், சூரிய கிரணங்கள் நேராக மூலஸ்தான விக்கிரகத் திருமேனியில் விழுவது விசேஷம்!

கோயிலின் பின்னணியில் இருக்கும் மலையையும் ஸ்ரீகணபதியின் சொரூபமாகவே போற்றுகிறார்கள்.கணபதிபுலே விநாயகரைத் தரிசித்தால் வினைகள் யாவும் நீங்கி வாழ்க்கை செழிக்கும்.

கோவாவில் இருந்து மும்பை செல்லும் ரயில் வழித்தடத்தில் உள்ளது ரத்னகிரி ரயில் நிலையம். இங்கிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது கணபதிபுலே கோயில். 

ஆலயத்துக்கு அருகிலேயே தங்கும் விடுதி மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளன.

12 comments:

  1. Ganaan thwa ganapathim hawamahe kavika veenam
    ...

    Ganapathaye Namaha.

    Wonderful Pictures of Lord Ganapathy.
    subbu thatha

    ReplyDelete
  2. செந்தூர நாயகனின் அழகிய தரிசனம்....

    ReplyDelete
  3. விநாயகர் கொள்ளை அழகுடன் இருக்கின்றார். இது கிட்டத்தட்ட முர்டேஸ்வரர் கோயில் போல் உள்ளது இல்லையோ!?

    கண்டிப்பாகச் செல்ல வேண்டும்...மிக்க நன்றி பகிர்ந்ததற்கு!

    ReplyDelete
  4. நல்ல அறிமுகம். படங்கள் அழகு.

    ReplyDelete
  5. மிக அழகான விநாயகர். கண்கவரும் படங்கள் .நல்லதொரு அழகான சூழலில் செந்தூரவிநாயகர். பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  6. சிறப்பாக இருக்கும் செந்தூர விநாயகன் அருமை!

    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  7. ராஜ கம்பீரத்துடன், கணமதி மகராஜ் ஜி திருவுருவப்படங்கள் அழகு. கோபம் குறைப்பார் செந்தூர பிள்ளையார். பதிவிற்கு நன்றி.

    ReplyDelete
  8. படங்கள் அனைத்தும் அருமை.

    ReplyDelete
  9. பிரமாதமாய் இருக்கிறார் செந்தூர விநாயகர். நல்ல பகிர்வு.

    ReplyDelete
  10. அருமையான கோவில். சூழலே மிகவும் சிறப்பாக இருக்கிறது! பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  11. கணபதிபுலே தலம் பற்றியும் செந்தூர் கணபதி பற்றியும் பல விவரங்களை படித்து அறிந்தேன். படங்கள் மிக அழகாக உள்ளன. .

    ReplyDelete
  12. சிறந்த பகிர்வு

    ReplyDelete