Friday, September 19, 2014

அற்புத அன்னை ஸ்ரீசமயபுரம் மகா சக்தி




சமயபுரம் சன்னதியின் வாசலிலே - லோக 
சங்கரியே உருகி நின்றோம் பூஜையிலே
கருணை உள்ள தெய்வமாக நீ இருப்பாய் - நாங்க 
கொண்டாட வந்ததற்குப் பலன் கொடுப்பாய் 


வேண்டுவோர்க்கு வாழ்வெல்லாம் நலம் தருவாய் -  சிங்க 
வாகனத்தில் சக்தியாக வலம் வருவாய்
ஊர் வாழ மழையாக வடிவெடுப்பாய் - இந்த
உலகத்துக்கே உன் அருளால் குடை பிடிப்பாய்

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா - நாங்க
எண்ணி வந்த வரம் கொடுக்க - வாரும் அம்மா
ஆயிரம் கண் படைச்சவளே பாரம்மா - இங்கு
உன்னை அன்றி வேறு கதி - ஏதம்மா

 மக்களின்  தீராத நோய்களைத் தீர்த்து வைத்து , அநீதியையும், தீமைகளையும் அழித்து ,அம்பாள் வழிபாட்டில் முதன்மை பெற்று விளங்கும் மாரியம்மன் சமயபுரத்தில் அற்புத அம்மனாக  அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
மகாவிஷ்ணுவின் தசாவதாரத்தில் கிருஷ்ணர் அவதாரத்தில் தேவகியின் குழந்தையாக கிருஷ்ணனும், யசோதையின் குழந்தையாக மாயாதேவியும் அவதரித்த அவ்விரு குழந்தைகளும் இறைவனின் எண்ணணத்தால் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். 
இதனை  அறிந்து கொண்ட கம்சன் குழந்தைகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதை அறிய இயலாதவனாகி குழந்தையைக் கொல்லத் துணிந்து, தேவகியின் அறைக்குச் சென்று குழந்தையைத் தூக்க முற்பட்டான். 

ஆனால், அருகில் நெருங்க முடியாதபடி அக்குழந்தை தன் உண்மையான அவதாரத்தை காட்டி நின்றது.  அன்னையின் அற்புதத் தோற்றத்தைக் கண்ட கம்சன் பின் சம்ஹாரம் செய்யப்பட்டான்.

மகா சக்தியாக தோன்றிய அம்பாள், தனது எட்டுக் கரங்களிலும் எண்ணணற்ற ஆயுதங்களைத் தாங்கி இவ்வுலகைக் காக்க அவதத்து நின்றாள், இத்தேவியே மகாமா என்னும் மாயம்மனாக கண்கண்ட தெய்வமாக மக்களால் பூஜிக்கப்படுகிறாள்.

விஜயநகர நாயக்க மன்னர்களின் இஷ்ட தெய்வமான  
அம்பாள் மாயம்மனின் உத்சவ திருமேனி மிகச் சிறப்பாக 
வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

விஜயநகரப் பேரரசின் வலிமை குன்றிய போது, பகைவன் அத்துமீறிய தாக்குதலால் அம்பாளின் பல்லக்கை மாற்று இடத்திற்கு அம்பாளின் செப்புத் திருமேனியோடு வந்த அவர்கள், அன்னையின் பல்லக்கை ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் இறக்கி வைத்தனர். அவ்வாறு இறக்கி வைக்கப்பட்ட இடமே சமயபுரமாகும்.
ஓய்வை முடித்துக் கொண்டு மீண்டும் பல்லக்கை தூக்க முற்பட்டபோது, அம்பாளின் திருமேனியை அசைக்கக் கூட இயலாது  அம்பாளை வணங்கி அங்கேயே விட்டுவிட்டனர்.

மக்களால் பெரிதும் விரும்பி வழிபடப்பட்ட அம்மனுக்கு விஜயரங்க சொக்கநாத நாயக்கர் கண்ணனூரில் தனிக் கோயிலை அமைத்து பிரதிஷ்டை செய்தார் ... 

இதனை ஒட்டியே சாய்ந்தாள் சமயபுரம், சாதித்தாள் சமயபுரத்தாள் என்ற பழமொழி இன்றளவும் நிலவி வருகிறது.

 திருவரங்கம் அரங்கநாதர் திருத்தலத்தில் இருந்த அம்மனின் திருமேனி உக்கிரம் மிகுந்து இருந்தமையால், அங்கு அப்போது இருந்த ஜீயர் சுவாமிகள் அம்மனின் திருவுருவத்தை மற்றொரு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்தார். 

அதன்படி  அத்திருவுருவத்தை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி வந்து ஒரு இடத்தில் இறக்கி வைத்துவிட்டு  இளைப்பாறிய  இடம் இப்போது இனாம் சமயபுரம் என்ற பெயல் உள்ளது.

அதன் நினைவாகவே இப்போதும் இத்திருக்கோயிலின் திருவிழாவில் எட்டாம் நாளன்று அம்மன் அங்கு சென்று ஓர் இரவு ஓய்வு கொள்வது நடைபெற்று வருகிறது.
இளைப்பாறிய அப்பணிவிடையாளர்கள் அங்கிருந்து தென்மேற்காக வந்து கண்ணனூர் அரண்மனை மேட்டில் அன்னையின் திருவுருவத்தை  வைத்த இடத்திலேயே இன்று அன்னை மாரியின் திருவுருவம் கண்ணனூர் மாரியம்மன் என்னும் திருப்பெயர் கொண்டு அருள் வழங்குகிறாள்.
விஜயநகர மன்னர்கள் வடக்கிலிருந்து தென்நாட்டின் மீது படையெடுத்து வந்து கண்ணனூர் நாட்டில் காட்டினிடையே முகாமிட்டிருந்த மன்னன் அரண்மனை மேட்டில் இருந்த அன்னை மாரியை வணங்கி, தென்னாட்டில் தங்கள் படை வெற்றிக் கொண்டு அரசு நிறுவினால் இங்கு திருக்கோயில் அமைத்து அன்னையை வழிபடுவதாக வேண்டினான்.

அம்பாளின் திருவருளால் வெற்றி பெற்று அரசு அமைத்த மன்னன்,  செய்து கொண்ட வேண்டுதல் படியே திருக்கோயில் எழுப்பி, 
 அருள்மிகு விநாயகரையும், அருள்மிகு கருப்பண்ண சுவாமியையும் பிரதிஷ்டை செய்து அம்மனுக்கு குடமுழுக்குப் பெருவிழா நடத்தியோடு, நித்திய பூஜைகளுக்கான ஏற்பாடுகளையும் செய்த இடம்தான் சமயபுரம் .
திருக்கடையூரில் மார்க்கண்டேயனின் அதீத பக்திக்கு மயங்கி கால சம்ஹார மூர்த்தியாக அவதரித்து எமதர்மனை சிவன் அழிக்கவே, உலகில் ஜனன மரண நிலையில் பெதும் மாற்றம் ஏற்பட்ட நிலையில், எமதர்மன் சபையில் மூத்த அமைச்சராகவும், நோய்களின் அதிபதியாகவும் இருந்த மாயாசூரன் பூவுலகில் இறப்பு நின்றுவிட்ட நிலையில், நோய்களைப் பரப்பி மக்களைத் துன்புறுத்தினான்.

அதர்மம் அழிந்து தர்மம் தழைத்தோங்க மும்மூர்த்திகளின் வேண்டுகோளுக்கிணங்க மாயாசூரனையும், அவனது சகோதரர்களையும் வதம் செய்து, அவர்கள் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றிய சிறப்புமிக்கது சமயபுரம் திருத்தலம். 

இன்றும் கருவறையில் உள்ள அம்பாளின் வலது பொற்கமலத் திருப்பாதம் மாயாசூரனின் தலைமீது எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.

இன்றும் இத்திருக்கோயில் தீராத நோய்களைத் தீர்க்கும் சிறந்த வழிபாட்டுத் தலமாக விளங்கி வருகிறது.

ஆகம, சிற்ப, வாஸ்து சாஸ்திரங்களுக்கேற்ப  செழிப்பையும், வளர்த்தையும் உணர்த்துவதாகக் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. 

 கோயில் முகப்பில் உள்ள நீண்ட பெருமண்டபம் பார்வதி கல்யாண மண்டபம் என்றழைக்கப்படுகிறது. 

மூன்று திருச்சுற்றுகளைக் கொண்ட திருக்கோயிலின் கிழக்கே உள்ள சன்னதித் தெருவில் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலும், தெற்கே அருள்மிகு முருகன் திருக்கோயிலும் அமைந்துள்ளன. 

தேரோடும் வீதியின் வடக்கே மீண்டும் ஒரு விநாயகர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 

மேற்கில் அருள்மிகு ராஜகோபால சுவாமியை பிரதிஷ்டை செய்திருப்பது மற்றொரு சிறப்பாகும்.

திருக்கோயிலின் இரண்டாம் திருச்சுற்றிலும் அருள்மிகு விநாயகர் சன்னதியைத் தொடர்ந்து, கோயிலின் விருட்சமான வேம்பு மரம், பௌர்ணமி மண்டபம், மாதப் பிறப்பு மண்டபம், நவராத்தி மண்டபம், வாகன அறைகள், வசந்த மண்டபம், அபிஷேக அம்மன் சன்னதி, யாகசாலை மற்றும் தங்கரத மண்டபம் ஆகியவை  அடங்கியுள்ளன.

இரண்டாம் திருச்சுற்று முடிவடைந்த பின்னர் உள்ளே  கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றையும்,  தொடர்ந்து மாவிளக்கு மண்டபத்தையும் காணலாம்.

கருவறைக்குச் செல்லும் வாயிலின் இருபுறமும் துவாரசக்திகளின் சுதை உருவமும். வலதுபுறம்  அருள்மிகு கருப்பண்ணசுவாமியின் சன்னதி உள்ளது.


அம்பாள் கருவறையில் குளிர்ச்சியாக இருப்பதற்காக, உக்கிரத்தைத் தவிர்ப்பதற்காக .கருவறையைச் சுற்றி பிரகாரம் பிரகாரத்தில் விமானத்தின் அதிஷ்டான பகுதியில் தொட்டி போன்று அமைக்கப்பட்டு அதில் நீர் நிரப்பப்பட்டுள்ளது. 

கருவறையின் இடதுபுறம்  சன்னதியில்உத்சவ அம்பாளின் திருமேனிக்கு நாள்தோறும் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. 

சமயபுரம் அருகிலுள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோயிலுக்குய திருமேனிக்கும் இங்கு நாள் தோறும் அபிஷேகம் செய்யப்படுகிறது.
உத்சவ அம்பாளுக்கு தினமும் 6 கால பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. 

காலை 7.30 மணி மறறும் மாலை 5.30 மணிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தம் வடக்குப் பிரகாரத்தில் பக்தர்கள் மீது தெளிக்கப்படுகிறது. இதனால் அம்மை நோய் கண்டவர்கள் மற்றும் உடல்நலக் குறைவு உள்ளவர்கள் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டு விரைவில் நலம் பெறுகின்றனர்.

ஆயிரம்ஆண்டுகளுக்குமுற்பட்டதாகக்கருதப்படும் வேம்பு 
திருக்கோயிலின் தல விருட்சமாக விளங்கி வருகிறது. 
தற்போது திருக்காப்பு விண்ணப்பச் சீட்டை விண்ணப்பிக்கும் முதன்மை இடமாகத் திகழ்கிறது. அம்பாளுக்கு திருப்பூஜைகள் நடைபெறும் போது தல விருட்சத்திற்கும் பூஜைகள் நிகழ்த்துவது இன்றளவும் வழக்கமாக ஒன்றாக நிகழ்ந்து வருகிறது.
மற்ற கோயில்களை விட இங்கு மாறுபட்ட வடிவம் கொண்டு அன்னை அருளாட்சி வழங்குகிறாள். மூலவர் திருவுருவம் மரத்தால் ஆனதென்றாலும் அதன்மேல் சுதை வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது புதுமையான ஒன்றாகும்.

தங்கஜடா மகுடத்துடன் குங்கும மேனி நிறத்தில் நெற்றியில் அழகிய வைரப்பட்டைகள் மின்ன கண்களில் அருளொளி வீச வைரக் கம்மல்களுடன் மூக்குத்தியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் மாரியம்மன்.
ஆதிசக்தியான அம்மன் தனது எட்டுக் கைகளில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள்.
இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் சுகாசனத்தில் அமர்ந்து பக்தர்களின் குறைகளை நீக்கி அருள் வழங்கிக் கொண்டுள்ளார் மாரியம்மன்.
 பெருவளை வாய்க்கால் புனித சக்தி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. 
 மகமாயி தீர்த்தமும்,  சர்வேசுவரன் தீர்த்தமும்,  அக்னி தீர்த்தமும்,  
 ஜடாயு தீர்த்தமும் கங்கைத் தீர்த்தமும் அமைந்துள்ளது.
 .தைப்பூசத் திருவிழா, பூச்சொதல், சித்திரை பெருந்திருவிழா, புரட்டாசியில் நவராத்தி பெருவிழா தை மாதத்தில் 11 நாள்கள் தைப்பூசத் திருவிழா நடைபெறுகிறது. பத்தாம் திருநாளில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலிலிருந்து மாயம்மன் சீர் பெறுதல் வைபவம் நடைபெறுகிறது. 
மாசி மாதத்தில் கடைசி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்குப் பூச்சொதல் நடைபெறுகிறது.
கிசாசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தன் கோபம் அடங்கவும் தவம் செய்துஉண்ணாநோன்பிருந்து சாந்த சொரூபியாய் மாரியம்மன் என்று பெயர்கொண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறார்.

பங்குனி கடைசி ஞாயிற்றுக்கிழமையில் சித்திரைத் தேர்த் திருவிழாவுக்கான கொடியேற்றமும், சித்திரை முதல் செவ்வாய்க்கிழமை சித்திரைப் பெருந்திருவிழாவும் நடைபெறுகிறது.
வைகாசி மாதத்தில் 15 நாள்கள் பஞ்சப் பிரகாரத் திருவிழா நடைபெறுகிறது. 

ஆடி மாதத்தில் ஆடிப்பூரத் திருநாளில் அம்பாள் தீர்த்தவாக் கண்டருளி, இரவு ரிஷப வாகனத்தில் காட்சியளித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 
ஆவணி மாதத்தில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் யானை, தங்க சிம்மம், காமதேனு, ரிஷபம் ஆகிய வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வருதல் நடைபெறுகிறது.
புரட்டாசியில் நவராத்திரி உத்சவம், ஐப்பசியில் மகாளய அமாவாசை, கார்த்திகை மாதத்தில் தீபத் திருவிழா, மார்கழி மாதத்தில் திருவாதிரை பெருவிழா ஆகியவை நடைபெறுகிறது.

 symmariamman@sancharnet.in என்ற மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், விவரங்கள் தேவைப்படுவோர் http://www.samayapurammariamman.org/ வலைத்தளத்தில் சென்று பார்க்கலாம்.
கோயிலுக்கு அருகில் திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவ திருக்கோயில், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோயில், உறையூர் வெக்காளியம்மன் திருக்கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர், உத்தமர் கோயில், திருவெள்ளறை ஸ்ரீபுண்டரீகாக்க்ஷப் பெருமாள் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி அருள்மிகு ஞீலிவனேசுவரர் திருக்கோயில் போன்ற கோயில்கள் உள்ளன.

காவிரியின் வடகரையில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் சமயபுரம் அமைந்துள்ளது.

9 comments:

  1. சங்கடங்கள் தீர்க்கும் சமயபுரத்தாள் அழகிய படங்களும்
    பதிவும் மிக அருமை!
    அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்!
    வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  2. கண்கொள்ளாக் காட்சி...

    ReplyDelete
  3. சமையபுரத்தாள் அருள் யாவர்க்கும் இட்டதும் !அருமையான பகிர்வுக்கு
    மிக்க நன்றி தோழி .

    ReplyDelete
  4. சமயபுரம் மகா சக்தி அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  5. சமயபுரம் மாரியைத் தரிசிக்க தந்தமைக்கு நன்றி அம்மா...

    ReplyDelete
  6. இன்றைய இனிய காலையில் சமயபுரத்தாளின் அருமையான தரிசனம். நன்றி...

    ReplyDelete

  7. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    ReplyDelete
  8. சமயபுரமே நேரில் கண்டது போன்ற உணர்வு வந்தது சகோதரி.

    ReplyDelete
  9. Samayathil varuval samayapurathal
    Maari. Allamal. Oru. Kaariyam. Illai

    ReplyDelete