Wednesday, October 29, 2014

வெற்றி வேல் முருகனின் சூரசம்ஹாரம்




விறல்மார னைந்து மலர்வாளி சிந்த மிகவானி லிந்து வெயில்காய
மிதவாடை வந்து கழல்போல வொன்ற வினைமாதர் தந்தம் வசைகூற

குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட கொடிதான துன்ப மயல்தீர
குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து குறைதீர வந்து குறுகாயோ

மறிமா னுகந்த இறையோன் மகிழ்ந்து வழிபாடு தந்த மடிபாளா
மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச வடிவே லெறிந்த அதிதீரா

அறிவா லறிந்து னிருதா ளிறைஞ்சும் அடியா ரிடைஞ்சல் களைவோனே
அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவா யுகந்த பெருமாளே!

நல்ல மணவாழ்க்கை அமைய  இந்த திருமணத்திருப்புகழ் பாடல் உகந்தது.

மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்

முருகன், குமரன், கந்தன், சரவணன், ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமணியன், வடிவேலன், சுவாமிநாதன், செந்தில்நாதன் என்று திருநாமங்கள் கொண்டு போற்றப்படும்  தமிழ் கடவுள் முருகப்பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். கொடுமைகள் பல புரிந்து வந்த சூரபத்மனை அவர் சம்ஹாரம் செய்த நாள் கந்த சஷ்டியின் சூரசம்ஹாரம்..!..

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்
தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்
அசுரரை வென்ற இடம் - அது தேவரைக் காத்த இடம்
கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா

பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா
கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா
நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் 
கந்தா முருகா  வருவாய் அருள்வாய்

குன்றுதோராடி குறைகள் களையும் குமரன் அருள்பொழியும்
அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா  சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகளுடன், சூரசம்ஹாரம்  கடற்கரையில் நடைபெறும் நாளில் அதிகாலை 1 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, அபிஷேகம், சாயரட்சை தீபாராதனையுடன் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர் எழுந்தருளி சூரனை வதம் செய்கிறார்..

 சந்தோஷ மண்டபத்தில் சுவாமி - அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது.ஜெயந்திநாதர், சூரனை சம்ஹாரம் செய்தபின்பு புஷ்ப சப்பரத்தில்எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளுவார்.

அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்படும். அர்ச்சகர், கண்ணாடியில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வதை சாயாபிஷேகம் என்பர்.
"சாயா' என்றால் "நிழல்' எனப்பொருள்

போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும்.

 இதை, முருகப்பெருமானே, கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம். இந்நிகழ்ச்சிக்குப்பின்பு, முருகன் சன்னதிக்கு திரும்புவார்.



 முருகன் சினம் தணிந்த இடம் என்பதால் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நடப்பதில்லை. அதற்கு பதிலாக காவிரி மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட் காட்சியளித்து சாமந்தி, ரோஜா, துளசி, கதம்பம், மல்லி, வில்வம் உள்பட 99 வகையான வண்ண மலர்களால் முருகனுக்கு புஷ்ப லட்சார்ச்சனை நடக்கும். 

திருத்தணி மூலவர் முருகனுக்கு  
புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

பள்ளி குழந்தைகள், நாதஸ்வர வித்வான்கள் பங்கேற்கும் 
கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்..!. 

திருச்செந்தூர் ஆலய வளாகத்தில் உள்ள வள்ளிகுகையின் 
மேற்கூரையில் அமர்ந்திருக்கும் மயில்கள்.

11 comments:

  1. சிறந்த பக்திப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete
  2. ஆஹா..ஆஹா.

    என்ன அருள் பெற்றேன்.

    கந்தா குமரா கார்த்திகை பாலா
    ஷண்முகா, குகா, வேலா, சரவண பவா,
    நின் நாமம் தினமும் சொல்ல
    எனக்கு துணை புரியும்
    ஜகமணி ராஜேஸ்வரி குடும்பத்தாருக்கு
    அனைத்தையும் அருள்வாய்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  3. முருகன் புகழ் பாடும் இனிய பதிவு.
    வாழ்க நலம்!...

    ReplyDelete
  4. நம் கஷ்டங்களை எல்லாம் சூரசம் ஹாரம் செய்து நம்மை எல்லாம் அந்தச் சிங்காரவேலனின் கனகவேல் "காக்க காக்க கனகவேல் காக்க" என்று காக்க வேண்டுவோம்! அவன் அருள் பெற!

    ReplyDelete
  5. காத்திட வேண்டிக் கதிர்வேலவனைக்
    காலமும் துதிக்கக் கவலைகள் தீரும்!

    அத்தனையும் அருமை!
    நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரி!

    ReplyDelete
  6. முருகன் அருள் முழுமையாக கிட்டட்டும் ....

    ReplyDelete
  7. முருகனின் சூரசம்ஹார தகவல்கள்,அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. அழகென்ற சொல்லுக்கு முருகா !

    ReplyDelete
  9. அழகன் முருகன்... ஒரு நாளைக்கு 100 முறையாவது 'அப்பா முருகா' என்று சொல்லிவிடுவேன்.. பிடித்த கடவுள்... பழனிக்கு ஆறுவருடங்கள் நடந்து முருகனைத் தரிசித்து இருக்கிறேன்...
    அழகான படங்களுடன் நல்ல பகிர்வு ஐயா....

    ReplyDelete
  10. அம்மா...
    இங்கு சூரசம்காரம்... செல்வராஜூ ஐயாவின் பகிர்வில் கந்தர் சஷ்டி... அதுதான் ஐயா என்று சொல்லிவிட்டேன்...
    நல்ல பகிர்வு அம்மா...

    நானும் அழகர் வைகையில் இறங்க வரும் போது அவருக்கு முன் ஒரு கண்ணாடி வைத்திருப்பதைப் பார்த்து இது எதற்கு என்று யோசித்திருக்கிறேன்... இந்தப் பதிவில் தெரிந்து கொண்டேன்... நன்றி அம்மா...

    ReplyDelete

  11. முருகனின் சூரசம்ஹார தகவல்கள்,அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு.

    ReplyDelete