Showing posts with label காயத்ரி. Show all posts
Showing posts with label காயத்ரி. Show all posts

Sunday, August 10, 2014

மகிமை மிக்க காயத்ரி மந்திரம்.!


















"ஓம் பூர்புவஸ் ஸுவ: தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ
தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத்.'


என்னும் காயத்ரி மந்திரம். "எவர் நமது அறிவைத் தூண்டி பிரகாசிக்கச் செய்கிறாரோ, அந்த ஜோதிமயமான இறைவனை தியானிப்போமாக' என்பதே காயத்ரி மந்திரத்தின் பொருளாகும். 
கௌசிகன் எனும் மன்னர் தம் தவப்பயனால் பிரம்ம ரிஷி பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்று பெயர் பெற்று விஸ்வத்திற்கே  வரப்பிரசாதமான காயத்ரி மந்திரத்தை நமக்களித்தவர்.

பிரம்மாஸ்திரம் எனும் இணையற்ற 
அஸ்திரத்திற்கு காயத்ரி மந்திரமே ஆதாரம்.

இதை "பிரம்ம தேஜோ பலம் பலம்' எனக் குறிப்பிடுகிறார் விஸ்வாமித்திரர். 
மகிமைவாய்ந்த காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை காயத்ரி தேவி. 
ஒருமுறை பிரம்மன் புஷ்கரம் என்னும் புண்ணிய க்ஷேத்திரத்தில் 
ஒரு யாகத்தைத் தொடங்கினார்.

அந்த யாகத்தில் பங்கேற்க சரஸ்வதி தேவி வராததால், 
நான்முகன் தனது சக்தியால் ஸ்ரீகாயத்ரி தேவியை சிருஷ்டித்தார்.

காயத்ரியே சரஸ்வதியாக எழுந்தருளினாள்.
பிரம்மனும் தன் யாகத்தை முடித்தார் 

காயத்ரி தேவி செம்பருத்திப்பூ போன்ற சிவந்த நிறம் கொண்டவள். செந்தாமரையில் எழுந்தருளும் அன்னையான இவள் 
ஐந்து திருமுகங்களும், பத்து திருக்கரங்களும் கொண்டு திகழ்கிறாள். 
காயத்ரி தேவி தன் பத்து கைகளில் வர ஹஸ்தம், அபய ஹஸ்தம், அங்குசம், சாட்டை (உட்புறமும் வெளிப்புறமும் உள்ள தீயசக்திகளை நீக்குவது)கபாலம் (சிவ தத்துவம்), கதை (விஷ்ணு தத்துவம்), சங்கு, சக்கரம், இரண்டு கைகளில் தாமரை ஏந்தியவள்; நான்கு வேதங்களையும் நான்கு திருப்பாதங்களாகக் கொண்டவள் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன. வேதத்தின் மூலாதாரமாக காயத்ரி மந்திரம் திகழ்கிறது.

காயத்ரி என்கிற பதம் காய்+ த்ரீ எனப் பிரிந்து பொருள் தரும்.

அதாவது "காய்' என்றால் கானத்திற்கு உரியது. 
பாடப்பெறுவது எனப் பொருள் கொள்ளலாம்.

காயத்ரி மந்திரத்தை தாளம் தப்பாமல் கூறி 
தியானித்தால் பெரும் பலன் உண்டு.

"த்ரீ' என்பது "த்ராயதே' என்று  விரிந்து "காப்பாற்று' எனப் பொருள்படும். அன்னை காயத்ரி தனது அபய கரங்களால் 
நமது பயத்தைப் போக்கியருள்வாள்.

கா+ ய+ ஆ+ த்ரீ எனும் நான்கு எழுத்துக்களின் சேர்க்கைதான் காயத்ரி. 

இதில் கா- என்பது நீர் தத்துவமாகிய கண்களுக்குப் புலப்படும் ஸ்தூலத்தைக் குறிப்பது. இதற்கு அதிபதி பிரம்மன். 

ய- என்பது வாயு தத்துவமாகிய சூட்சுமத்தைக் குறிப்பது. 
இதற்கு அதிதேவதை விஷ்ணு. 

ஆ- என்பது காரணதேகம். இதன் அதிபதி ருத்ரர். த்ரீ- எனும் பதம் இம்மூவரும் சேர்ந்து நம்மைக் காப்பாற்றியருள்வர் என்பதைக் குறிக்கும். 

எனவே ஒருமுகப்பட்ட மனத்தோடு காயத்ரி மந்திரம் சொல்லி 
வழிபட மும்மூர்த்திகளின் அருளையும் பெறலாம்..

உடல்பயிற்சி உடலை உறுதிப்படுத்துவது போன்றும், 
கல்வி மனதைப்  பண்படுத்துவது போன்றும், 
காயத்ரி மந்திரம் மனிதனுடைய ஆத்ம சொரூபத்தை ஊக்குவிக்கிறது. காயத்ரி மந்திரத்தை உரு ஏற்றுபவர்களுக்கு நன்மை உண்டாகிறது.
எல்லா தெய்வங்களுக்கும் காயத்ரி மந்திரம் 
பிரார்த்தனை மற்றும் தியான சுலோகமாக உள்ளது. 

எல்லா காயத்ரி மந்திரங்களுக்கும் பொதுவாக அமைந்தது மேற்கண்ட பிரம்ம காயத்ரியாகும். இதுதவிர மற்ற தெய்வங்களுக்குரிய நூற்றுக்கும் மேற்பட்ட காயத்ரி மந்திர சுலோகங்களும் உண்டு..

சந்தஸ் அமைப்பிலுள்ள காயத்ரி மந்திரத்தையே 
வேத மாதாவாக நாம் போற்றுகிறோம்.

காயத்ரி, சாவித்ரி, சரஸ்வதி ஆகிய மூன்று தேவிகளுமே  
காயத்ரி மந்திரத்தின் அதிதேவதையாகக் கருதப்படுகின்றனர். 

காயத்ரி தேவி காலை சந்தியாவந்தனத்தின்போது அதி தேவதையாகவும், ரிக்வேத ரூபிணியாகவும், மூன்று அக்னிகளில் கார்ஹபத்ய அக்னியாகவும் வணங்கப்படுகிறாள். 

நண்பகலில் யஜுர் வேத சொரூபிணியான சாவித்ரியாகவும்,  மாலை வேளையில் சரஸ்வதி தேவி, சாமவேதத்தின் தேவதையாக, ஆவஹணீய அக்னியாகப் போற்றப்படுகிறாள்

ஐந்து தலைகளோடும், பத்து கைகளோடும் தாமரை அல்லது அன்ன வாகனத்தின்மீது ஆரோகணித்திருக்கும் காயத்ரிதேவி பிரம்மாவின் மனைவி என்பதால், தன்னுடைய ஒரு முகத்தோடு, பிரம்மாவின் நான்கு முகங்களையும் கொண்டுள்ளதாக ஐதீகம். 

காயத்ரி தேவியின் ஐந்து முகங்களும் சிவபெருமான் நிகழ்த்துகின்ற சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதனம், அனுக்ரஹம் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) என்ற ஐந்து செயல்களை நினைவூட்டும் வகையில், சரஸ்வதி, லஷ்மி, பார்வதி, மஹேஸ்வரி, மனோன்மணி என்ற தேவதைகளின் ஐந்து முகங்களைக் 
குறிப்பிடுவதாகவும் கருதப்படுகிறது. 

ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண்களோடு 
தேவி சித்தரிக்கப்படுகிறாள்.

படைப்புக் கடவுளான பிரம்மாவின் தேவியான சரஸ்வதி, 
காக்கும் கடவுளான  ஸ்ரீமகாவிஷ்ணுவின் தேவியான மகாலட்சுமி, 
அழிக்கும் கடவுளான சிவபெருமானின் தேவியான பார்வதி 
ஆகிய மூவரும் ஓருருவமாக- காயத்ரி தேவியாக விளங்கி 
நமக்கு ஞானத்தையும் வைராக்கியத்தையும் அருளுகிறார்கள். 

ஐந்து தேவதைகளைக் குறிக்கின்ற வகையில் சிவப்பு, முத்து நிறம், மஞ்சள், நீலம், வெண்மை ஆகிய நிறங்களில் காயத்ரி தேவியின் 
ஐந்து முகங்கள் பிரகாசிக்கின்றன. 

காயத்ரி தேவியின் இருபுறங்களிலும் மகாலட்சுமியும் சரஸ்வதியும் அமர்ந்திருப்பதுபோலக் காட்டப்படுவதுண்டு.

வால்மீகி முனிவர், காயத்ரி மந்திரத்திலுள்ள 24 எழுத்துகளில் ஒவ்வொரு எழுத்திற்கும் ஆயிரம் ஸ்லோகமாக 24,000 ஸ்லோகங்களைக் கொண்டு தனது இராமாயணத்தை இயற்றியுள்ளார். 

12 ஸ்காந்தங்கள், 318 அத்தியாயங்கள், 18,000 சுலோகங்களையும் கொண்ட மிகச்சிறந்த புராணம் ஸ்ரீதேவி பாகவதம். வியாச முனிவரால் தனது புதல்வர் சுகருக்கு உபதேசிக்கப்பட்டு, சனகாதி முனிவர்களுக்கு சூதரால் கூறப்பட்ட பெருமையுடைய இந்த தேவி பாகவதத்தில் 12-ஆவது ஸ்காந்தத்தில் 51 மற்றும் 52-ஆவது அத்தியாயங்களாக அமைந்திருப்பவைதான் காயத்ரி மஹாத்மியமும், காயத்ரி ஸஹஸ்ர நாமமும். நாரத முனிவருக்கு நாராயண ரிஷியால் இவை உபதேசிக்கப்பட்டன. 

காயத்ரி மஹாத்மியத்தில் 24 சுலோகங்களைக் கொண்ட 
காயத்ரி  ஸ்தோத்திரம் அடங்கியுள்ளது. 

காயத்ரீ தேவி விஷ்ணுலோகத்தில் ஸ்ரீமஹாலட்சுமியாகவும், 
பிரம்மலோகத்தில் காயத்ரியாகவும், 
ருத்ர லோகத்தில் கௌரி என்ற பார்வதியாகவும் 
விளங்குவதாக இது குறிப்பிடுகிறது.
காயத்ரி மந்திரத்தை இடைவிடாது நேரம் கிடைக்கும்போதெல்லாம் 
ஜபம் செய்து அலைபாய்கின்ற மனத்தை ஒருமுகப்படுத்தி 
சாதனை படைத்தவர்கள் பலர். 

மேலதிக விவரங்களுக்கு
தொடர்புடைய பதிவுகள்
சுபிட்சம் அருளும் காயத்ரிமந்திரம்

ஆன்ம நலம் பொழியும் ஸ்ரீகாயத்ரி தேவி






[gayatri-mantra047-copy.gif]

Sunday, April 13, 2014

சௌபாக்யம் அருளும் காயத்ரி தீபம்







ஓம் பூர் புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்க தேவஸ்ய தீமஹி

தியோ யோந: ப்ரசோத யாத்



அந்த பிராண ஸ்வரூபமான,
துக்கத்தை நாசம் செய்யும் 
சுகஸ்வரூபமான உன்னதமான தேஜஸ்வியான
பாபத்தை நாசம் செய்யகூடிய தேவஸ்வரூபமான
பரமாத்மாவை நாம் அந்தராத்மாவில் வைத்துக்கொள்வோமாக !!
அந்த பரமாத்மா நமது புத்தியைத் தூண்டி வழிநடத்தட்டும் !!


இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியன் தன் அருள் ஒளியால் அறியாமை என்னும் இருளகற்றி அறிவென்னும் ஒளிச்சுடரை தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவாகத்திகழ்கிறான்..!!
சூரியனின் மத்தியில் பர்கன் என்கிறபெயரில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் , சிவப்பரம் பொருளின் திவ்ய மங்கள் ஜோதியையும் துதிப்பதே காயத்ரி மந்திரமாகும் ..!














காயத்ரி மந்திரத்தை குறிக்கும் தீபம் காயத்ரி தீபம்  என்று அழைக்கப்படுகிறது 
 காயத்ரி தீபம்  நடுவில் ஐந்து முகங்களும் பத்து கரங்களும் கொண்ட காயத்ரி தேவி அமர்ந்திருக்கிறாள். 

காயத்ரி தேவியைச் சுற்றியுள்ள பிரபா  மண்டலத்தில் ஐந்து சுடர்கள் பிரகாசிக்கின்றன. 
இதை இறைவன் முன்பாகக் காட்டும்போது ஓம்பூர்: புவ: சுவ: என்று தொடங்கும் காயத்ரி மந்திரம் ஓதப்படுகிறது. 
இதன் பொருள் ஓம் பூலோகம்,  சுவர்க்கலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் எவன் நம்முடைய புத்தியினை நன்றாக நடத்துகிறானோ அந்த ஒளி வடிவான (சூரியனின் மையத்தில் இருக்கும்) பர்க்கன் என்கிற  தேவனுடைய மகிமைகளைத் தியானிக்கிறேன் என்பதாகும்.