Showing posts with label திருப்பதி. Show all posts
Showing posts with label திருப்பதி. Show all posts

Wednesday, October 9, 2013

திருமலை பிரம்மோற்சவ விழா



திருவருள்  தரும்  தெய்வம்  திருமலை தெய்வம் !
தீராத  வினை எல்லாம் தீர்த்திடும்  தெய்வம் !

வரும்துயர், பகையையும், போக்கிடும் தெய்வம்!
வாய்திறந்து, கேட்டாலே வழங்கிடும் தெய்வம் !

தாயாரை  தரிசித்து  வேங்கடவனை  தரிசிப்போம் !
தரணியில்  யாவரும் நலம்பெற  யாசிப்போம் !

திருமலைவாசா  என்று அழைத்தாலே  குறை தீர்க்கும் தெய்வம் !
தினமும்  நினைத்தாலே நல்வழி காட்டும்  தெய்வம் !

கோவிந்தா, கோவிந்தா, என்றாலே  பரவசம் !
கோவிந்தன்  அருளும் கிடைத்திடுமே  நம்வசம் !

என்றும், நினைப்போம், பணிவோம் அவன்தாள் !
எல்லார்க்கும், உகந்த தெய்வம்,  திருமலை தெய்வம் !

குறையொன்றுமில்லாத கோவிந்தன் கலியுகத்தின் கண்கண்ட கடவுளாக அலர்மேல் மங்கை தாயார் அகலகில்லேன் இறைவனை என்று இதயத்தில் இடம்பெற்று திகழும் ஏழுமலையான் குடிகொண்டு இருக்கும் திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓத, அர்ச்சகர்கள் சிறப்பு பூஜை செய்து கோவிலின் தங்க கொடி மரத்தில் கருடன் உருவப்படம் வரையப்பட்ட மஞ்சள் நிறத்திலான கொடியை ஏற்றுகின்றனர்.

திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழாவின் போது கருடன் உருவம் தாங்கிய கொடி ஏற்றப்பட்டு  இனிதே தொடங்குகிறது.

திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவ விழாவிற்கான அழைப்பினை கொடியில் ஏற்றப்பட்ட கருடபகவான் தேவலோகத்திற்கு எடுத்துச்சென்று அங்கு உள்ளவர்களை விழாவுக்கு நேரில் அழைப்பதாக ஐதீகம்.

திருமலையில்  புரட்டாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா 
படைப்புக்கடவுளான பிரம்மன், தானே முன்னின்று நடத்திய விழா என்பதால் பிரம்மோற்சவம் எனப்பெயர் பெற்றது.

  பெரிய சேஷ வாகனம் ஊர்வலம்

ஏழுமலையான் கருட வாகனத்தில் பவனிவரும்
கருடசேவை நிகழ்ச்சி மிகவும் பெருமை உடையது....!

 மோகினி அவதாரத்தில் சுவாமி ஊர்வலம்


கருட வாகனத்தில் ஏழுமலையான் பவனிவரும் கருடசேவை நிகழ்ச்சி

ஊஞ்சல்சேவை.











தங்கத்தேர் பவனி

தேரோட்டம்,

பல்லக்கு உற்சவம்,

  கொடியிறக்கம்  நிகழ்ச்சிகளுடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

பிரம்மோற்சவத்தின் தேரோட்டத்தை (ரதோற்சவம்) பார்க்கும் பக்தர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பப்படுகிறது.

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி பிரம்மோற்சவத்தின், ஐந்தாம் நாளன்று, காலையில் நடக்கும் கருட சேவையில், ஆண்டாள் சூடி களைந்த மாலை பெருமாளுக்கு சார்த்தப்படும். 
ஆண்டாள் சூடி களைந்த மாலையும் பாடிக்கொடுத்த கிளியும் ஸ்ரீவில்லித்தூரிலிருந்து ஊர்வலமாக திருப்பதி வருவது கண்கொள்ளாக்காட்சி..!
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை சாற்றிய பிறகுதான் பிரம்மோற்சவத்தில் பெருமாள் கரூட வாகனத்தில் வலம்வருவார் என்பதால்  அங்கு இருந்து புறப்பட்ட மாலை மற்றும் கிளிகள்,பட்டுவஸ்திரம் போன்றவை ஒரு கூடையில் வைத்து திருமலை மாடவீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று பெருமாள் சன்னதியில் சேர்க்கப்பட்டது.
தமிழக மக்கள் சார்பாக,  ஹிந்து தர்மார்த்த ஸமிதி டிரஸ்ட், திருமலை ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்கு 11 அழகிய திருக்குடைகளை திருப்பதி பிரம்மோற்சவத்திற்கு ஏழு மலையானுக்கு சமர்ப்பணம் செய்வதற்காக, சென்னையில் உள்ள செனன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலமாக எடுத்துச்சென்று சமர்ப்பணம் செய்கிறது. 

திருப்பதி திருக்குடை ஊர்வலம் செல்லுமிடமெல்லாம் மங்களம் பெருகும், வறுமை நீங்கும், நோய் நொடி விலகும் என்பது நம்பிக்கை.
விழாவின் முத்தாய்ப்பான  நிகழ்ச்சியாக சக்கரஸ்நானம் நடைபெறும்.
கோவில் அருகே உள்ள சுவாமி புஷ்கரணியில்(குளம்) 
சுவாமிக்கும், சுதர்சன சக்கரத்திற்கும் தீர்த்தவாரி நடைபெறும்.

 பிரம்மோற்சவ விழாவின் போது தினமும் கோவில் வெளிப்புறத்தில் உள்ள கொலு மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஊஞ்சல் சேவை நடைபெறும்.

திருமலையில்  உள்ள தீர்த்தங்களில் சிறந்த சுவாமி புஷ்கரணி  குளத்து தண்ணீரில் சுவாமியின் திருமேனி படுவதால் அன்று தேவலோகத்தில் உள்ள நதிகள் எல்லாம் குளத்தில் ஐக்கியமாவதாக ஐதீகம்.



** தொடர்புடைய பதிவு
திருப்பதி அழகு குடை 
http://jaghamani.blogspot.com/2012/10/blog-post_13.html