Friday, March 14, 2014

கருணைக்கடல் சந்தோஷி மாதா.

 


சந்தோஷி மாதா காயத்ரி மந்திரம்
ஓம் ரூபாதேவி ச வித்மஹே சக்தி ரூபிணி தீமஹி
தந்நோ சந்தோஷி ப்ரசோதயாத்

கர்நாடகாவின் மிகச்சிறப்பான கடற்கரைகளில் ஒன்றான கார்வார்.  
மேற்கில் அரபிக்கடலும் கிழக்கில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரும் சூழ்ந்திருக்க எழில் கொஞ்ச அமைந்துள்ளது..!

கார்வார் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் காளி ஆற்றங்கரையில்  
ஜய் சந்தோஷி மாதாஆலயம்  அமைந்துள்ளது. 
கோயிலின் பிரதான தெய்வமாக  சந்தோஷி மாதா கருத்தைக் கவருகிறார்..
.
 கருணை தெய்வமான கணபதியின் மகளாக  கருதப்படும் சந்தோஷி மாதா  துர்க்கா தேவியின் மறு அவதாரமாகவும்,   சக்தியின் அடையாளமாகவும் நீதிக்கான தெய்வமாகவும்  அருள்பொழிகிறார்.
வருடம் முழுவதும்   பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன..

அனைத்து செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் சந்தோஷம் வர்ஷிக்கும் சந்தோஷி மாதா கோயிலில் தீபோத்ஸவம் கொண்டாடப்படும் சமயம்  ஸ்தலம் முழுதும் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. 
சிரவண மாதத்தில்  உகாதி லக்‌ஷ தீபோத்சவம் கொண்டாடப்படுகிறது.

மங்களா கார்யா, நவராத்திரி பல்லக்கி மற்றும் விருத் உத்யபாண போன்றவை  சிறப்பாகக் கொண்டாடப்படும்  விழாக்களாகும்.

சுற்றுலாப்பயணிகள் நகரத்திலிருந்து பஸ், டாக்ஸி, ஆட்டோ போன்ற போக்குவரத்து வசதிகள் மூலம் அடையலாம். 

கார்வார் வழியாக செல்லும்  அனைவருமே  கோயில் வைபவங்களில் கலந்து கொண்டு ஒரு மகிழ்ச்சியான ஆன்மீக அனுபவத்தினை பெறலாம்.

20 comments:

 1. கருணைக்கடல் சந்தோஷி மாதாவுக்கு அடியேனின் வந்தனங்கள்.

  >>>>>

  ReplyDelete
 2. மிகவும் சந்தோஷம் அளிக்கும் அற்புதமான பகிர்வு.

  >>>>>

  ReplyDelete
 3. படங்கள் அத்தனையும் அழகோ அழகு.

  முதல் பட லக்ஷ்மி முதல் தரமாக அமைந்துள்ளது.

  >>>>>

  ReplyDelete
 4. ஆங்காங்கே சுடர்விட்டு எரியும் அகல் விளக்குகளின் அணிவரிசைகள் அருமையாய் உள்ளன.

  >>>>>

  ReplyDelete
 5. கீழிருந்து இரண்டாவது படம் மட்டும் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 6. இன்று வெள்ளிக்கிழமையில் தங்கள் விருப்பம்போல எங்களை
  ’கார்வார்’ வரை கூட்டிச்சென்று சந்தோஷமளிக்கும் சந்தோஷி மாதா அம்பாளை தரிஸிக்கச் செய்துள்ளீர்கள்.

  இதைச்செய்யாதே, அதைச்செய்யாதே; இங்கே செல்லாதே, அங்கே செல்லாதே ...... என தங்களை யாரால் ‘கார்வார்’ செய்ய இயலும்?

  >>>>>

  ReplyDelete
 7. தொடர்பே சுத்தமாக அறுந்துவிடுமோ என்ற கவலை ஒருபுறம் எனக்கு இருப்பினும், மனசு கேளாமல் ஏதோவொரு அக்ஞானத்தில், தொடர்புடைய பதிவுக்கும் சென்று நானாகவே கொஞ்சூண்டு தொடர்பு வைத்துக்கொண்டுவிட்டு வந்தேன்.

  அதில் கூட ooooo 912 ooooo என்ற ஓர் குறிப்பு இருந்தது.

  >>>>>

  ReplyDelete
 8. சந்தோஷி மாதா பற்றி 2011/2012 ஆண்டுகளில் மேலும் ஒருசில பதிவுகள் எழுதியிருந்தீர்கள், அவற்றிற்கு நான் நிறைய கருத்துக்கள் எழுதியிருந்தேன். என எனக்கு நல்ல ஞாபகம் உள்ளது.

  அவற்றின் தொடர்புகளையும் கூட தாங்கள் இதில் கொடுத்திருக்கலாம்.

  பரவாயில்லை. தங்களை யாரும் ‘கார்வார்’ செய்ய முடியாது. செய்யவும் கூடாது.

  >>>>>

  ReplyDelete
 9. மொத்தத்தில் இன்று சுருக்கமான சுவையான பதிவு.

  சந்தோஷம்.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

  ReplyDelete
 10. சந்தோசி மாதா தகவல்கள் அனைத்தும் மனதிற்கு சந்தோசம் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. சந்தோஷி மாதாவின் அருள் அனைவருக்கும் பூரணமாக கிடைக்க எனது பிரார்த்தனைகள்.....

  நல்ல பகிர்வு. நன்றி.

  ReplyDelete
 12. கருணைக் கடல் மகிகை அறிந்தேன் சகோதரியாரே
  நன்றி

  ReplyDelete
 13. சந்தோஷிமாதாவின் தகவல்கள் பகிர்வு ,அழகான சந்தோஷி மாதா படங்கள் மனத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கு.நன்றி.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. சந்தோஷி மாதா குறித்து அருமையான படங்களுடன் அறியத் தந்திர்கள் அம்மா.. அருமை.... வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. படங்கள் அற்புதம். என் அத்தை சந்தோஷி மாதா பக்தை.

  ReplyDelete
 16. சந்தோஷி மாதா கணபதியின் மகளா.?பிள்ளையார் பிரம்மசாரி என்றல்லவாசொல்வார்கள். ஒரு வேளை இவர் வட நாட்டுப் பிள்ளையாரோ. அங்குதானே அவருக்கு இரு மனைவிகள் என்னும் கதை எதை ஏற்பது எதைவிடுவதுஒரே குழப்பமாய் இருக்கிறது.

  ReplyDelete
 17. நம்முடைய சைவ சித்தாந்தங்களில் இந்த விஷயம் காணப்படுவது இல்லை. அவர்கள் முருகனை ப்ரம்மச்சாரி என்கின்றனர்.

  திருச்சி மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர் கோயிலில் கூட பெரிய சந்தோஷி மாதா படத்தை வைத்து வழிபட ஆரம்பித்துள்ளனர்.

  எனினும் மக்களின் சந்தோஷம் பிரதானம் ஆகின்றது.

  ReplyDelete
 18. சந்தோஷி மாதா என்று பெயர் மட்டும் கேள்விப் பட்டுள்ளேன் மற்றபடி விபரம் ஏதும் தெரியவில்லை நீங்கள் சொல்லப் போகிறீர்கள் என்று பார்த்தால் கணபதியின் மகள் என்று சுருக்கமாக முடித்து விட்டீர்கள்.
  படங்கள் அருமை வாழ்த்துக்கள்.....!

  ReplyDelete
 19. சந்தோஷி மாதா குறித்த தகவல்களும் படங்களும் அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete