Friday, March 21, 2014

உலக வளம் காக்கும் உலக வன தினம் ..!                                     “visit” the Taj Mahal

இயற்கையுடனும், மற்ற உயிரினங்களுடன் நமக்கு இருக்கும் தொடர்பு, பரிணாம வளர்ச்சியில் மரபு வழியாக வந்த ஒரு இணைப்பு.

மனிதர்கள் மன நிறைவு இல்லாமல் இருப்பதற்கும் காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே ஆகும்

பருவ காலங்கள் மாறும் போது ஏற்படும் சூழல் மாறுதலில்,மெல்லிய காற்று நம்மை வருடி செல்வதை, தென்றல் நம் உடலை சிலிர்க்க வைப்பதை, குளிர் காற்று நம்மை நடுங்க செய்வதை, குயில் கூவுவதை, ஆந்தை அலறுவதை, நம் இல்லத்து தோட்டத்தில்  இருக்கும் செடிகளில் வண்ணத்துப்பூச்சி வந்து அமர்வதை, பருவ காலத்திற்குகேற்ப பூச்சிகள், வண்டுகள் அதிகமாகி பிறகு அழிவதை,என இயற்கைக் காட்சிகளை நுணுக்கமாக  இரசிப்பதால் நல்ல மன நலத்துடன் வாழ முடியும்.

மலைகளும்,காடுகளும்,நதிகளும்-இயற்கையின் இயக்கத்தில் இயக்கப்பட்டு காலபோக்கில் செதுக்கப்பட்டு,பல்வேறு விதமான உயிரின சூழலும், வாழ்விடங்களும்,பல்லுயிர்க்கு ஏற்றவாறு அமைந்து, உயரினங்கள்   பல்கி பெருக எதுவாக அமைந்தது. 

பல வகையான உயிரினங்களும், மரங்களும், செடிகளும், அதில் விதவிதமான மலர்கள், காய்கள், கனிகள், உயிரினங்கள், என்று காலகாலமாக பரிணாம வளர்ச்சியில் மாற்றங்கள் ஏற்பட்டு இயற்கை என்று சொன்னாலே மனம் மகிழ்ச்சி அடைய கூடிய வகையில் இயற்கைக்  காட்சிகள் நமது உள்ளத்தை பூரிப்படைய வைக்கும் திறன் கொண்டது ..!

நமது இயற்கை பிணைப்பை, தொடர்பை மீட்டெடுக்க வேண்டும். 
இயற்கை சார்ந்த அறிவொளி மரபு உண்டாக்க வேண்டும். 

அனைத்து மக்களுக்கும் பொதுவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். '

நீரின்றி அமையாது உலகு'என்று அறிந்திருப்போம் ஆனால் 
நீர் ஆதாரங்ககளை காப்பாற்ற, பாதுகாக்க தவறுவோம், 
நீரை அசுத்தப்படுத்துவோம், விரையமாக்குவோம், 
நீர் இல்லை என்றால் சாலை மறியல் செய்வோம். 

ஆகவே அனைத்து மக்களுக்கும் இயற்கைப் பற்றி 
அறிவியல் ரீதியாக விளங்க வைக்க வேண்டும். 

அனைவரும் இயற்கையை புரிந்து, அறிந்து கொள்ள முயற்சிப்போம், இயற்கையை பாதுகாக்க முயற்சி செய்வோம் என மார்ச் 21 உலக வன தினத்து அன்று உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.
 புல், பூண்டு முதல் விலங்குகள் வரை உயிரின பரவல் 
முறையாக இருந்தால்தான், உயிரின இயக்கமும் முறையாக 
இருக்கும்.  மரங்கள் வளரும். மழை கிடைக்கும். 

 மேற்கு தொடர்ச்சி மலையில் மருந்து தயாரிக்கப் பயன்படும் 
மூலிகைகள் நிறைந்துள்ளன. 

மிளகு, அரிசி, காட்டு மஞ்சள், முருங்கை போன்ற 
மலைத் தொடர்பான இயற்கை தாவரங்கள் உள்ளன. 

இதுபோன்ற தாவர வகைகளின் 'ஜீன்' பிரித்து தரமான 
தாவரங்களை உருவாக்கி, மனிதனுக்கு தேவைப்படும் 
வகையில் அவற்றை பயன்படுத்தலாம்.

உலகமே 'ஓசோன்' ஓட்டையால் வெப்பம் அதிகரிப்பதை 
எதிர்த்து ஓங்கி குரல் கொடுத்து வருகிறது.

அடர்ந்த மரங்களால், பரந்த வனங்களை வெட்டி வீழ்த்தியதே, 
தட்ப வெப்ப நிலை தடுமாற்றத்திற்கு காரணம்...!

அதனால் வெப்பத்தைத்தாங்கும் திறன் இயல்பாகவே 
குறைந்த வெள்ளையர்கள் தோல் புற்று நோயால் மிகவும் 
பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்..

தங்கள் தோலை  வெள்ளை நிறத்திலிருந்து பிரவுன் நிறத்திற்கு மாற்றிக்கொள்ளும் தோல மாற்று அறுமை சிகிச்சைக்கு எக்கச்சகமாக செலவளிக்கிறார்கள்.. 

நாமோ சிவப்பழகு மோகம் கொண்டு பெருதொகையை அழகு நிலையங்களுக்கும் , சிவப்பழகு கிரீம்களுக்கும்  செலவழிக்கும் கொடுமையை என்ன சொல்வது ..! அக்கரை பச்சை கதை தான் ..!15 comments:

 1. எங்கள் வாழ்வின் வளமும் செழிக்க இயற்கை கொடுத்த இச்
  சீதனங்களைப் பேணிப் பாதுகாத்திடல் வேண்டும் !அழகிய
  படங்களுடன் சிறப்பான பகிர்வு .வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
 2. அனைவரும் உணர வேண்டிய கருத்துகளுடன் அருமையான படங்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வனம் காப்போம்
  வளம் காப்போம்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 4. பச்சை வண்ண ரோஜாவாம் ,

  பார்த்த கண்ணு மூடாதாம்...

  ....... அழகான படங்கள்.  இறைவனையும் இயற்கையையும்

  பேதம் பிரித்து பார்க்கும் மக்கள்.  எவ்வளவோ தலங்கள்.

  ஒவ்வொன்றிலும் ஒரு தல விருட்சம் .  மருத மரம், மா மரம். வில்வ மரம் .

  ஏன் புளிய மரம் கூட தல விருட்சமாக

  கருதப் படுகிறது.

  ஆலயத்தினுள் மூலவரையும், உற்சவரையும்

  காணத் துடிக்கும் உள்ளங்கள் , அந்த இறை

  வாழும் தல விருட்சத்தை புறக்கணிப்பது,

  இறையையே புறக்கணிப்பதுபோல் ஆகாதா ?

  இந்நிலை மாறவேண்டும்.

  இயற்கைச் செல்வங்கள் பாதுகாக்கப்பட

  வேண்டும், போற்றப்பட வேண்டும்.

  ReplyDelete
 5. ''மனிதர்கள் மனநிறைவு இல்லாமல் இருப்பதற்கு காரணம் இயற்கையை விட்டு விலகி செயற்கையாக வாழ்வதே'' என்று மிகச் சரியாக சொல்லி இருக்கிறீர்கள். இ-மெயில் வந்துள்ளதால் வாழ்த்துக்களுக்காக பேப்பர்கள் அட்டைகள் பயன்படுத்துவது குறைந்துள்ளது அந்த அளவிற்கு மரங்கள் வெட்டப் படுவதும் குறையந்துள்ளது. முடிந்த இடங்களில் எல்லாம் ஒரு பக்கம் பயன்படுத்தப் பட்ட காகிதங்களை திரும்ப உபயோகிக்கலாம். வீடுகள் கட்டுவதற்காக மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்,.
  ஒவ்வொருவரும் இவற்றை புரிந்து கொண்டு செயல் பட்டால் இயற்கை அழிவதைத் தவிர்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் அருமையாக உள்ளன.

  ReplyDelete
 6. மரங்களை வளர்ப்போம், மழை பெறுவோம்.
  வனங்களை பாது காப்போம்.இயற்கையை போற்றுவோம்.
  இயற்கையை நேசிப்போம்.
  அழகான படங்கள் அருமையான செய்திகள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. இன்று உங்களுடன் உங்களால் எனக்கும் காதல் சின்னமான தாஜ்மஹாலைக் காணக் கிடைத்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சிகள்.

  அதிலும் அந்த வட்டமிட்டுப் பறக்கும் கழுகு சூப்பராக உள்ளது பாருங்கோ.

  தங்களின் மனம் போலவே படு சுத்தமான வழிக்கிடும் தரைத்தளங்கள் பார்க்கவே பளபளப்பாக ஜொலிக்கின்றனவே ! ;)))))

  EXCELLENT VIDEO .. THANKS FOR SHARING !

  >>>>>

  ReplyDelete
 8. அத்தனைப்படங்களும் அழகோ அழகு !

  >>>>>

  ReplyDelete
 9. நீரின்றி அமையாது உலகு !

  நீரின்றி அமையாது பதிவுலகு !!

  [நீர் = நீங்கள், இன்றி=இல்லாமல்]

  >>>>>

  ReplyDelete
 10. அக்கரைப் பச்சைக் கதையை அக்கறையுடன் சொல்லியுள்ளது அருமையோ அருமை தான்.

  >>>>>

  ReplyDelete
 11. இனி நாமும் செயற்கையாய் வாழ நினைக்காமல் இயற்கையாய், இயல்பாய், இயற்கையுடன் வாழப்பழகிக்கொள்வோம்.

  இயற்கையாய் மனதில் அவ்வப்போது தோன்றுபவைகளை, மனம் திறந்து சொல்ல வேண்டியவைகளை, சொல்ல வேண்டிய நேரத்தில், மெளனம் காக்காமல், அழுத்தமாகவும் பாராமுகமுமாக இல்லாமல், சொல்லிப் பகிர்ந்து மகிழ்வோம்.

  பாராட்ட வேண்டியவர்களை, பாராட்ட வேண்டிய பதிவுகளை மறக்காமல் தயங்காமல் தாராளமாகப் பாராட்டி மகிழ்வோம்.

  இயற்கைக் காட்சிகளை நேரிலோ அல்லது தங்களின் பதிவுகளிலோ நுணுக்கமாக ரஸித்து மகிழ்வதால் மட்டுமே, நல்ல மன நலத்துடன் வாழ முடிகிறது என்பதை நானும் நன்கு அனுபவத்தில் உணர்கிறேன்.

  >>>>>

  ReplyDelete
 12. உலக வளம் காக்கும் உலக வன தினத்தில் உங்களின் உன்னதமான பகிர்வுக்கு என் நன்றிகள், பாராட்டுக்கள், வாழ்த்துகள் and what not ....... எல்லாமே தான். ;)

  o o o o o o

  ReplyDelete
 13. அருமையான சிந்தனைக்குரிய விடயம். அழகான படங்கள். நன்றி.

  ReplyDelete
 14. நல்ல விஷயம்.... வனத்தினைக் காக்க ஒரு தினம் கொண்டாடுகிறார்களே....

  படங்கள் அருமை.

  ReplyDelete
 15. வனவளம் பாதுகாக்கப் பட வேண்டும்..
  வாழ்க நலம்!..

  ReplyDelete