Tuesday, March 18, 2014

மனம் மகிழும் மருதமலை மருதாசலமூர்த்தி..!


சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா 
சுவையான அமுதே செந்தமிழாலே....
இன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்
இணையிலே நின்திருப் புகழினை நான் பாட
அரகர சிவசுத மால்மருகா என அனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
marudhamalai murugan

மருதமலை மாமணியே முருகையா..!
கருணைக் கடலே கந்தா போற்றி..!!


மருதமலைக்கு நீங்க வந்துபாருங்க.. !
தீராத நோய்களும் வினைகளும் தீர்ந்து போகுங்க..!!


தங்கத்தேரில் பவனி வரும் தங்கத்தமிழ் கடவுள்..!

இரண்டு அழகிய தோகைகளை விரித்துப் பறக்கும் மயீலின் மீது அமர்ந்து கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாய் திகழும் முருகன் பறந்து வரும் காட்சியை கண்முன் கொண்டுவந்து மகிழச்செய்யுமாறு  அமரர்கள் இடரும் அடியவர் துயரும் அற அருளுதவும் பெருமாளாக  கொங்குநாட்டின் மகுடமாய் விளங்குகிற மருதமலையில் எழில் கோலம் கொண்டு அருளுகிறார் முருகப்பெருமான்..!
எழில் கொஞ்சும் இயற்கையான சூழலில் அமைந்திருக்கும் மருதமலை, அதன் மூன்று புறங்களிலும் மலை அரண்களால் சூழப்பட்டு உள்ளது. கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மலைகளின் இயற்கை அமைப்போடு சேர்த்து பார்க்கும் போது மயில் தோகை விரித்தாற்போல் காட்சி அளிக்கிறது


அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு மருத மலையோனே!
அடியவர் வினையும் அமரர்கள் துயரும்
அற அருள் உதவு பெருமாளே! என குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர்..

முருகன் மயில் மீது அமர்ந்த தோற்றத்தை கண் முன் கொண்டுவந்து அருள்பொழியும் இயற்கை அழகுமிக்க மலைகளுக்கு இடையில் இதயம் போல் காட்சி அளிக்கும் அழகிய மலைக் கோவிலாக மருதமலை மனதை கொள்ளை கொள்கிறது.  

மருத மரங்கள் அதிகமாக காணப்படுவதால்  மருதமலை என வழங்கப்படுகிறது. கோவிலில் ஸ்தல விருட்சமாக மருத்துவச்சிறப்புகள் நிறைந்த மருதமரம் உள்ளது. ஆயுர்வேதம் மருதமரத்தை " அர்ஜுன்" என்று அழைக்கிறது..மருதமரத்தை ஸ்தலமரமரங்களாகக்கொண்ட ஆலயங்கள் மிகவும் விஷேசமானவை..

கம்பீரத்தின் மறுபெயர் "மருதம்' என்று கூறுவர்

இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ஸ்ரீசைலத்தில் உள்ள மிகப் பெரிய ஸ்ரீபிரமராம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் ஆலயம் மருதமரத்தைத் தலவிருட்சமாகக் கொண்டது. 

மருத மரங்கள் நான்கு புறங்களிலும் புடைசூழ இறைவன் எழுந்தருளியிருக்கும் திருப்புடைமருதூர் தலமும் , திருவிடை மருதூர் தலமும் மருத மரத்தை தலமரமாகக் கொண்டவை..!

 மருதமால்வரை, மருதவரை, மருதவெற்பு, மருதக்குன்று, மருதலோங்கல், கமற்பிறங்கு, மருதாச்சலம், வேள்வரை என்றெல்லாம் பேரூர் புராணத்தில் போற்றப்படுகிறது. 

.காமதேனு என்ற தெய்வீகப்பசு, மருதமலையில் பசி நீங்க மேய்ந்து மருதமரத்தின் கீழ் நல்ல தண்ணீரை பருகியதாக வரலாறு கூறுகிறது. 

மருதமலை அடிவாரத்தில் உள்ள படிக்கட்டு பாதையின் தொடக்கத்தில் 
தான்தோன்றி விநாயகர்  இயற்கை அமைப்பு மிக்க அழகுடையதாகும்

ஆதி மூலஸ்தான சன்னதி  அருவுருவத் திருமேனியாக லிங்க வடிவில் வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர் மூவரும் லிங்க வடிவில் காட்சி தருகின்றனர். 

மருதமலையான் சிரசில் (தலை) கண்டிகையுடன், பின்பக்கம் குடுமியுடன்,  வலது திருக்கரத்தில் ஞானத்தண்டு ஏந்தி, இடது திருக்கரத்தை இடையில் அமைத்து வினைகளை வேரறுத்து எமன் பயம் தீர்த்து உண்மை அறிவை அறியச் செய்யும் நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாச்சலமூர்த்தி அருள் பாலிக்கிறார். 

பட்டீஸ்வரர் சன்னதி,  மரகதாம்பிகை சன்னதி ,.  நவக்கிரக சன்னதியும், 
வரதராஜ பெருமாள் சன்னதியும் உள்ளது
நவக்கிரகங்களுக்கு எதிரே தங்கரத மண்டபம் உள்ளது.

மருத தீர்த்தக் கரையில் சப்த கன்னிமார் கோவில் உள்ளது.  
இங்கு உள்ள தீர்த்தத்துக்கு கன்னி தீர்த்தம் என்று பெயர்..

கோவில் மகா மண்டபத்தின் தென் கிழக்கில் கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணை மரம் மற்றும் ஒட்டுமரம் ஆகிய 5 மரங்கள் ஒன்றாக பின்னிப் பிணைந்து வளர்ந்த அழகிய பழமையான மரம் ஒன்று அமைந்துள்ளதுஇதன் மரத்தடியில் பஞ்சமுக விநாயகர் சிலை ஒன்று உள்ளது. இந்த மரத்தின் காற்று எல்லா நோய்களையும் தீர்க்க வல்லது என்றும் இந்த மரத்தில் பல முனிவர்கள் தவம் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. 
படிமம்:Maruthamalai Pancha virutcha Vinayagar.jpg
அன்னதான மண்டபத்தில் ஆறுமுக வேலவனின் அண்ணனான 
பஞ்சமுககணபதி வீற்றிருந்தருளுகிறார்..

அன்னதானத்திற்கு தேவைப்படும் காய்கறிகள் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களிலேயே விளைவிக்கப்படுகிறதாம்..


சினிமா படத்தயாரிப்பளரான சாண்டோ சின்னப்பாதேவர் அவர்கள் மருதமலைக்கு பல திருப்பணிகள் ஆற்றியுள்ளார்.. 

கர்ப்பக்கிரஹத்தின் அருகில் விநாயர் சன்னதியின் முன்புறம்  வேலைப்பாடுகள் மிக்க வெள்ளி வேல் கண்ணாடி அறையில் தேவரின் பெயரைப்பறைசாற்றி திகழ்கிறது ..

மடப்பள்ளியும் அவர் கைங்கர்யம் செய்த ஆண்டினை நினைவுபடுத்துகிறது..!

இடும்பன் கோவிலில், இடும்பனின் உருவம் உருண்டை வடிவமாக பெரிய பாறையில் காவடியைச் சுமந்து கொண்டு இருக்கும் தோற்றத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. இடும்பனை வணங்கினால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை..!

இடும்பன் கோவில் கோபுரம் - ஆறுமுகக் கடவுள்

18 சித்தர்களுள் ஒருவராக போற்றப்படும் பாம்பாட்டி சித்தர் முருகனின் 
அருள் பெற்று மருத மலையில் வாழ்ந்தவர்
பாம்பாட்டி சித்தர் சன்னதியில் உள்ள பாறை பாம்பு போன்ற 
அமைப்பில் இயற்கையாகவே அமைந்துள்ளது.  

மந்திர சக்திமிக்க மருதமலை தலத்தில் தங்கி இந்த குகையிலிருந்து, பாம்பாட்டிச் சித்தர் சுரங்கப்பாதை மூலமாக ஆதிமூலஸ்தானத்தில் உள்ள வள்ளி, தெய்வயானையுடனமர் முகப்பெருமானை வழிபட்டு வந்தாராம்..

இலந்தை வடகம் நிறைய வகைகளில் விஷேசமாகக்கிடைக்கிறது..
நெல்லிக்காய் ,மாங்காய் , அன்னாசிப்பழம் ஆகியவை 
தனித்தன்மையுடன் இருக்கிறது..!மருதமலைக்கு 7 நிலை கொண்ட ராஜகோபுரம் கட்டப்பட்டிருக்கிறது..!

கல்லாலான கொடிமரத்துக்கு முன் வலம்புரி விநாயகர், 
 பெரிய மயில்முக குத்துவிளக்கு,  உலோகக் கொடிமரம், மயில்வாகனம், 

மயில்முக விளக்கின் அடிப்புற ஆமைவடிவமும் அதனைத் தொடர்ந்த மேற்தண்டிலுள்ள பாம்பு உருவங்களும் கருத்தைக்கவர்கின்றன..!
படிமம்:Mayilmuga vilakku 1.jpg
திருக்கோயிலில், நடையடைப்பு என்பது மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை மட்டுமே. மற்றபடி காலை 6.00 மணியிலிருந்து இரவு 8.30 வரை இறைவனை தாரிசிக்கலாம். கட்டளைதாரர்களின் விண்ணப்பங்களைப் பொருத்து, மாலை 6.00 மணியளவில் பெரும்பான்மையான நாட்களில் தங்க ரத உலா நடைபெறுகிறது.
நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் போது இல்லத்தின் உயரமான தண்ணீர் தொட்டியின் மீது பெரிய பெரிய அகல்விளக்குகளில் தீபமேற்றி வைத்துவிட்டு , மருதமலைக்குச் செல்லுவோம் .. 

தொலை நோக்கிவழியே இல்லத்தில் ஜொலிக்கும் தீபத்தையும் , 
தீபத்தின் ஒளியில்  வைரமாய் ஜொலிக்கும் 
கோவை நகரத்தின் எழிலையும் கண்டுகளிப்போம் ..

வனகல்லூரில் நடைப்பயிற்சிக்குச் செல்லும்போது 
ஒரு இடத்தில் மருதமலைக்காட்சி என்று குறிப்பிட்டிருப்பார்கள்..

அந்த இடத்தில் அனைவரும் பாத அணிகளை கழற்றிவிட்டு 
கரம் கூப்பி கண்கண்ட தெய்வமான எழில்மிகு மருதமலையானை 
வணங்குவது வழக்கம் .. 

Bird's eye from Maruthamalai

சிட்னி முருகன் கோவில் கும்பாபிஷேகம்

12 comments:

 1. என்ன இது? ஏன் இது? இன்று போய் நடுவில் இது டேஷ் போர்டில் தோன்ற வேண்டுமா?

  >>>>>

  ReplyDelete
 2. அருமையான பதிவு. சிறப்பான காணொளிகள்.

  >>>>>

  ReplyDelete
 3. மருதமலைபற்றிய பல்வேறு தகவல்கள் மனதுக்கு ஹிதமாக இருக்கின்றன.

  கோவை அருகேயுள்ள இந்தக்கோயிலுக்கு நான் ஒரேயொருமுறை சென்று வந்துள்ளேன்.

  >>>>>

  ReplyDelete
 4. சிட்னி முருகனை கோவை முருகனுடன் சேர்த்துள்ளது, இட்லிக்குச் சட்னி சேர்த்ததுபோல ருசியாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 5. பஞ்சமுக கணபதி பார்க்க வேடிக்கையாக உள்ளார்.

  அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ReplyDelete
 6. இன்னல் துடைத்து , இன்பம் பெருக்கி

  என்னை ஈர்க்கும் பன்னிரு விழி கொண்ட

  அழகோடு விளையாடும் முருகன்.


  சிறு நகையும், சிங்கார நடையழகும்,

  கருங்குழலும் , காணாத பேரழகும்,

  விரி மார்பும், வித்தார சொல்லழகும் ,

  முழு மதியும், முத்தார பல்லழகும்,

  கவிதை சுரக்கும் கனி மொழிச் சிறப்பும்,

  கருணை பிறக்கும் தனி உடலமைப்பும்,

  கண்டதும் மனதெலாம் சுகம் பெற வைக்கும்

  அழகோடு விளையாடும்

  மருத மலை மா மணி.


  சித்தர் பூமியில்,

  சித்தம் தெளிந்திட

  வரம் தரும் இறைவன்.  அஞ்சு முகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் !

  வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும் - நெஞ்சில்

  ஒரு கால் நினைக்கில் இருகாலும் தோன்றும்,

  முருகா என்று ஓதுவார் முன்.  கண்ணைக் கவரும் படங்களுடன்,

  ஆலயம் பற்றிய விரிவான விவரங்களுடன்

  அற்புதமான படைப்பு.

  ReplyDelete
 7. மருதமலை மருதாசலமூர்த்தி தரிசனம், பாடல் பகிர்வு மிக அருமை.
  சிட்னி முருகன் கோவில் கும்பாபிஷேக பகிர்வுக்கு நன்றி.

  மருதமலையில் புதிதாக கட்டப்பட்ட ராஜகோபுர தரிசனம் கிடைத்தது அடுத்த முறை கோவை போகும் போது காணவேண்டும்.
  வாழ்த்துக்கள் அருமையான பதிவுக்கு.

  ReplyDelete
 8. மருத மலைக்கு நாங்கள் சென்று வந்த நினைவுகளை கிளறி விட்டது இந்தப் பதிவு. என் பேரனுக்கு சுமார் நான்கு வயதாய் இருக்கும் போது மருதமலைக்குக் காரில் சென்றோம். என் பேரன் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வந்தவன் restless ஆக இருந்தான்.” இந்த காட்டிலிருந்தும் மலையிலிருந்தும் தாடகை வருவாளா” என்று கேட்டான் என்னிடம் ராமாயணக்கதை கேட்டதன் விளைவு..!

  ReplyDelete
 9. மருதமலை முருகனின் சிறப்புக்கள்,தகவல்கள்,படங்கள் அருமை.பஞ்சமுககணபதி வீற்றிருக்கும் மரம் பற்றிய தகவல் ஆச்சரியமானது!!.

  ReplyDelete
 10. மருதமலை புதிய ராஜகோபுரத்துடன் கண்டு தர்சித்தோம்.முன்பு ஒருதடவை நேரில் தர்சித்திருந்தேன.

  ReplyDelete
 11. என் அப்பன் மருதமலை முருகனை தரிசிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை அதிகமாக்கிய தங்களுக்கு நன்றி.
  ஓம் சரவணபவ

  ReplyDelete