Tuesday, March 4, 2014

ஸ்ரீவைத்திய நரசிம்மர் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம்


ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம காயத்ரி மந்த்ரம்:

   ஓம் வஜ்ர நாகாய வித்மஹே;
   தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி;
   தந்நோ நாரசிம்ஹ ப்ரசோதயாத்!
 ஆந்திர  மாநிலத்தில் அமைந்துள்ள மிகப்பழமையான புகழ்பெற்ற யாதகிரி குட்டா நரசிம்மர் ஆலயத்தின் வரலாறு ராமாயண காலத்தோடு தொடர்புடையது.

ஆதிசங்கரர் இயற்றிய கராவலம்பஸ்தோத்திரம்..! 


திரேதா யுகத்தில், ரிஷ்யசிருங்க மகரிஷியின் மகனான யாத மகரிஷி இப்பகுதியிலுள்ள குகையில் தவம் செய்து கொண்டிருந்தார்.

அவருக்கு காட்சிதந்த அனுமன், “வேண்டுவது யாது?’ என்று வினவ, “நரசிம்ம தரிசனம் பெற அனுக்கிரகிக்க வேண்டும்’ என்றார் யாத மகரிஷி. அவ்வாறே அருளினார் அனுமன். அதன் பயனாக யாத மகரிஷிக்கு அந்தக் குகையில் ஐந்து கோலங்களில் காட்சிதந்தார் நரசிம்மர்.
அந்த ஐந்து நரசிம்ம வடிவங்களையும் ஆராதித்துவந்த யாத மகரிஷி இறுதியாக சித்தியடைந்தார்

ஜ்வாலா நரசிம்மர், யோக நரசிம்மர், கந்தபெருண்ட நரசிம்மர், உக்ர நரசிம்மர், லட்சுமி நரசிம்மர் ஆகிய. ஐந்து வடிவங்களில் நரசிம்மர் காட்சிதந்ததால் இத்தலம் பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரம் எனப்படுகிறது. 
புவனகிரி, ராயகிரி ஆகிய குன்றுகளுக்கிடையே  யாத மகரிஷி உட்பட பல முனிவர்கள் தவம்செய்து சித்திபெற்ற இடமாக யாதகிரி பகுதி   திகழ்கிறது. எனவே  ரிஷி ஆராதனா க்ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

. ஒரு பக்தையின் கனவில் தோன்றிய நரசிம்மர் தான் குன்றிலுள்ள குகையில் கோவில் கொண்டிருப்பதை உணர்த்தினார். அதன்பின்னர் அவ்விடத்தைக் கண்டுபிடித்த மக்கள், நரசிம்மரை பக்தியோடு வழிபட்டு தங்களது பல்வேறு இன்னல்கள் தீரப்பெற்றனர் என்கிறது தலவரலாறு. 

யாதகிரிதலம் பற்றிய விவரம் கந்தபுராணத்தில் காணப்படுகிறது..!

தற்போதும் இங்கே ஐந்து நரசிம்ம வடிவங்கள் உள்ளன.

ஸ்ரீலட்சுமி நரசிம்மர் பிரதான தெய்வமாக விளங்குகிறார்.
இவரை வைத்திய நரசிம்மர் என்றே இப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். எத்தகைய பிணியானாலும் தீர்த்து வைத்து நல்வாழ்வு அருளுபவர் இவர் என மிக நம்பிக்கையோடு கூறுகிறார்கள். கனவில் வந்தும் நோய் தீர்த்து அருளியுள்ளார்..!
SEEKING BLESSINGS: Priests performing Sri Sudarshana Narasimha Gayatri Homam in the Lakshminarasimha Swamy temple at Yadagirigutta in Nalgonda district on Monday.
இங்குவரும் பக்தர்கள். பில்லி, சூன்யம், ஏவல் போன்றவையும் இங்குவந்தாலே விலகிவிடுமாம். மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இங்கு வருகிறார்கள். ஒரு மண்டல கால (40 நாட்கள்) பிரதட்சிணம் என்னும் வேண்டுதல் இங்கே பிரசித்தம். திருமணப்பேறு, பிள்ளைப்பேறு உள்ளிட்ட எல்லா நலன் களும் இத்தலம் வந்தால் கிட்டுகின்றனவாம்.
 மூன்றடி உயரமும் அகலமும் கொண்ட சுதர்சன சக்கரம் ஆலயத்தில் உள்ளது. வெகு காலத்துக்குமுன் இது சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாம். பின்னர் மெல்ல நகர்ந்து நகர்ந்து இந்தக் கோவிலுக்கு வந்து விட்டதாம்!
நரசிம்மர் காட்சிதந்த தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பாஞ்சராத்ர ஆகமப்படி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

வங்கீபுரம் நரசிம்மாச்சார்யலு என்பவர் யாதகிரி சுப்ரபாதம் இயற்றி உள்ளார்.
சென்னை- ஹைதராபாத் ரயில் வழியில் புவனகிரி உள்ளது. அங்கிருந்து சுமார் 14 கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. 
ஹைதரா பாத்திலிருந்து 60 கிலோமீட்டர். ரயில், சாலை என போக்குவரத்து வசதியுண்டுthe occasion of Kalyanotsavam at Yadagirigutta
[yadagirigutta.jpg]


16 comments:

 1. பஞ்ச நரசிம்ம சேத்திரத்தின் அருமை அறிந்தேன்
  படங்கள் அருமை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. அற்புதமான படங்களுடன் சிறப்பான தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. வங்கக் கடல் கடைந்த

  மாதவா ! கேசவா !

  கஞ்சன் வயிற்றில் நெருப்பென்ன

  நின்ற நெடுமாலே !

  மல்லரை மாட்டிய

  தேவாதி தேவா !

  எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

  உற்றோமே யாவோம்.

  உனக்கே நாம் ஆட்செய்வோம் ,

  அருள் புரிவாய்.

  ReplyDelete
 4. சிறப்பான செய்திகளுடன் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமியின் திவ்ய தரிசனம்..
  மிக்க மகிழ்ச்சி!..

  ReplyDelete
 5. ஸ்ரீ வைத்ய நரசிம்ஹர் பற்றியும்

  பஞ்ச நரசிம்ஹ க்ஷேத்ரம் பற்றியும்

  அறிய தந்துள்ளது மிகச்சிறப்பாக உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 6. கோயிலின் அமைப்பு, இருப்பிடம், செல்லும் பாதை, கோபுரம் என அனைத்தையும் அழகாகக் காட்டி, ஹைதராபாத்துக்கே நேரில் அழைத்துச் சென்றது போல ஓர் பிரமையை ஏற்படுத்தி விட்டீர்கள் !!!!!

  >>>>>

  ReplyDelete
 7. அத்தனைப் படங்களும், விளக்கங்களும் மிகவும் அழகோ அழகு ! அற்புதமாக, அதிசயமாக, அசத்தலாக உள்ளன.

  >>>>>

  ReplyDelete
 8. கராவலம்ப ஸ்தோத்ரம் உள்பட இரு காணொளிகளும் கண்டோம்.
  மகிழ்ந்தோம். மிக்க மகிழ்ச்சி. ;))

  >>>>>

  ReplyDelete
 9. பதிவினில் காணொளி இணைப்பதிலும் கரைகாண முடியாத திறமைகளை தாங்கள் வளர்த்துக்கொண்டுள்ளது நினைக்க மனதுக்கு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  அதற்கு என் மனம் நிறைந்த தனி பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
 10. கீழிருந்து 4வது படம் [ஆட்டோக்கள் வரிசையாக நிற்பது] சூப்பர் கவரேஜ். சபாஷ்.

  கேமராவுக்கும், அதனைப்படம் பிடித்த அன்புக் கரங்களுக்கும் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  பதிவினில் உள்ள அனைத்துக்குமே பாராட்டுக்கள்.

  வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்.

  oo oo oo

  ReplyDelete
 11. அருமையான தகவல்களும், படங்களும். புதிதாக ஒரு ஸ்தலத்தை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

  ReplyDelete
 12. அறிந்திராத தகவல்கள், ஸ்ரீவைத்திய(லஷ்மி)நரசிம்மரின் அழகிய தரிசனம், படங்கள், காணொளி என எல்லாமே அருமை.மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 13. இந்த ஸ்தலம் பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். படங்களுடன் விளக்கங்களும்.,கதையும் அருமை.

  ReplyDelete
 14. பதிவை வாசித்தது ஒருவித அமைதியை கொடுக்கிறது, அது கோயிலுக்கு சென்று வரும் மகிழ்வுக்கு நிகரானது

  ReplyDelete
 15. பஞ்ச நரசிம்மரையும் ஒரு சேர தரிசித்தது மனதுக்கு நிறைவைத் தருகிறது.

  ReplyDelete
 16. ஆந்திராவில் பல நரசிம்ம க்ஷேத்திரங்கள் உண்டு... இந்த க்ஷேத்திரம் பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.

  தகவலுக்கும் படங்களுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete