Saturday, March 1, 2014

ஓம் சக்தி .ஓம் சக்தி ..ஓம் சக்தி ஓம்..

மாசி மாத அமாவாசை நாளில், அனைத்து அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் நடைபெறும் மயானக் கொள்ளை விழாவின் அடிப்படை- சிவபெருமான் பிரம்மதேவனின் சிரம் கொய்த நிகழ்வுதான்.
ஈசனைப்போல ஐந்து தலைகள் இருந்த பிரம்மன் சிவனை நாம் ஏன் வணங்க வேண்டும் என்ற  ஆணவத்தை அழிக்க, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்ட காரணமாக சிவனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக் கொண்டதுடன், கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவபெருமானின் கரத்தில் வந்து அமர்ந்தது. 
அதை சிவன் கீழே போட்டாலும் மீண்டும் அவர் கரத்துக்கே 99 முறை வந்து அமர்ந்த நிலையில், "அதைக் கீழே போடாமல் சிறிது நேரம் கையிலேயே வைத்திருங்கள்' என்று பார்வதி தேவி சிவனிடம் கூறினாள். 
சிவன் அவ்வாறே செய்ய, பிரம்மாவின் தலை கபாலமாக மாறி அவர் கரத்திலேயே ஒட்டிக் கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. 

போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், 
உலகுக்கே படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.
 பிரம்மாவின் தலை கொய்யப்பட்ட வேதனையில் இருந்த சரஸ்வதி தேவி, அது கபாலமாக மாறி சிவன் கையில் ஒட்டிக்கொள்ளுமாறு உபாயம் கூறிய பார்வதிமீது சினம் கொண்டு, "கொடிய உருவத்துடன் பூவுலகில் திரிய சாபமிட்டாள். 

அதன்படி பார்வதி தேவி பூவுலகில் பல தலங்களில் அலைந்து, முடிவில் மலையனூர் வந்து அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள்.
அப்போது  ஈஸ்வரனும் மலையனூர் வர, அங்காள பரமேஸ்வரி
சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். 

எல்லாவற்றையும்  கபாலம் விழுங்கிவிட, அங்கு வந்த
மகாலட்சுமி பரமேஸ்வரிக்கு ஒரு உபாயம்  கூறினாள். 

அதன்படி பரமேஸ்வரி இரண்டு கவளம் உணவை கபாலத்தில் இட்டாள். 

அதை கபாலம் உண்டுவிட்டது. மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோல கீழே போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழே போனது.

அப்போது அங்காள பரமேஸ்வரி விஸ்வ ரூபமெடுத்து, பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கரத்தை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். ஈசனைப் பற்றிய பிரம்மஹத்தி தோஷமும் அகன்றது.
இந்த சம்பவத்தின் அடிப்படையில்தான் மயானக் கொள்ளை 
எனும் விழா கொண்டா டப்படுகிறது. 
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில்
மயானக் கொள்ளை  விழாவாக விமரிசையாக நடக்கும். ;

எங்கெல்லாம் அங்காள பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளதோ அங்கெல்லாம் மயானக் கொள்ளை விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். 

கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூஜிக்கின்றார்கள். 

ஆண்டுதோறும்  உற்சவத்தின் போது  புதிய தேரில் 
அன்னையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். 

பௌர்ணமி தினங்களில்  ஆலயம்  
இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டுகிறது. 

மேல்மலையனூர்  வந்து பொங்கல் வைத்து 
படையல் போடுவது மிகவும் விஷேசம். 

மாசி மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெரிய விழா நடக்கும்போது பக்தர்கள்  பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அங்காள பரமேஸ்வரிக்கு அர்ப்பணிக்கின்றார்கள். 
மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள். பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள்.  அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும்  அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம். 
[DSC00127.JPG]
ஹோமத்தீயில் எழுந்தருளும் அன்னை..
Maha kali Rupam in murchi homam

சென்னை மாநகரின் மத்திய பகுதியான சூளையில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயம் பொதுவான அங்காளப் பரமேஸ்வரி ஆலயங்களில் இருந்து வேறுபட்டு காணப்படுகிறது.

அம்மன் என்றதும் உக்கிரமாகவோ, நின்ற கோலத்திலோ அல்லாமல், தன் குழந்தையான பாவாடைராயனை தனது மடியில் வைத்து காட்சி தரும் இந்த அம்மன், குழந்தை இல்லாத தம்ப‌தியரின் மனக் குறைகளை போக்கி, அவர்களுக்கு குழந்தை பாக்கியம் அளிக்கிறார்.
அங்காளபரமேஸ்வரி - காசி விசுவநாத சுவாமி கோயில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். 

 கோயிலுக்கு வரும் குழந்தையில்லாத் தம்பதிகள், கோயிலில் பூஜித்துத் தரும் எலுமிச்சையை பிரசாதமாக எடுத்துக்கொள்கிறார்கள்...

 முதலி‌ல் மு‌னீ‌ஸ்வர‌ர் கா‌ட்‌சி தரு‌கிறா‌ர்.  ‌விநாயக‌ர், ‌வி‌‌ஸ்வ‌பிர‌ம்மாவையு‌ம், த‌ட்‌சிணாமூ‌ர்‌த்‌தியையு‌ம் த‌ரி‌சி‌த்து, கா‌சி ‌வி‌‌‌ஸ்வநாத‌ர் ச‌ந்ந‌தியை அடையலா‌ம். 

கொடிமர‌ம், ப‌லி‌‌பீட‌ம், ந‌ந்‌தியை‌க் கட‌ந்து ச‌ந்ந‌தி‌யி‌ன் ‌பிரகார‌த்‌தி‌ல் சூ‌‌ரியனையு‌ம், ச‌ந்‌திரனையு‌ம் வண‌ங்கு‌கிறோ‌ம்.

இ‌ங்கு‌ள்ள பைரவரு‌க்கு தே‌ய்‌பிறை அ‌ஷ‌்ட‌மி‌யி‌ல் ‌மிளகு, மு‌ந்‌தி‌ரி மாலை சா‌ர்‌த்‌தி வே‌ண்டி‌க் கொ‌ள்ள நோ‌ய்க‌ள் குணமாகு‌ம். 

தே‌ங்கா‌ய் உடை‌த்து அ‌தி‌ல் ‌நெ‌ய் ‌விள‌க்கு ஏ‌ற்‌றி வ‌ந்தா‌ல் கட‌ன்க‌ள் அடையு‌ம்.

கோ‌யி‌லி‌ல் ஈச‌னி‌ன் ச‌ந்ந‌தி‌க்கு அரு‌‌கி‌ல் உ‌ள்ள ம‌ண்டப சுவ‌ரி‌ல் அ‌ங்காளபரமே‌ஸ்வ‌ரி வரலாறு ‌மிக அழகாக சுதை‌ச் ‌சி‌ற்பமாக செது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. த‌னி ச‌ந்ந‌தி‌யி‌ல் வ‌ள்‌ளி - தெ‌ய்வானை சமேத சு‌ப்ரம‌ணிய‌ர் அரு‌ள்‌கிறா‌ர்.

இ‌ங்கு தல ‌விரு‌ட்ச‌ம் வ‌ன்‌னி மரமாகு‌ம். அத‌னூடே மரம‌ல்‌லி மரமு‌ம் மண‌ம் பர‌ப்‌பி ‌நி‌‌ற்‌கி‌ன்றது.

வ‌ன்‌னி மர‌த்தடி‌யி‌ல் பு‌ற்று அ‌ம்மனு‌க்கு‌ம், நாகரு‌க்கு‌ம் அருகே‌ ‌மிக ‌பிர‌ம்மா‌ண்டமான பு‌ற்று‌‌க் கோ‌யி‌ல் உ‌ள்ளது. அரு‌கி‌ல் நவ‌க்‌கிரகமு‌ம் அமை‌ந்து‌ள்ளது. இ‌ங்‌கிரு‌ந்து நேராக அ‌ன்னை ச‌ந்‌தி‌‌க்கு‌ச் செ‌ல்ல வே‌ண்டு‌ம்.

கொடிமர‌ம் கட‌ந்து செ‌ன்று பாவாடைராயனை வண‌ங்‌கி உ‌ள்ளே செ‌ன்றது‌ம், ‌மிக‌ப்பழமையான அ‌ன்னை‌யி‌ன் கருவறை‌யி‌ல், மடி‌யி‌ல் குழ‌ந்தையுட‌ன் அ‌ங்காளபரமே‌ஸ்வ‌ரி கா‌ட்‌சி அ‌ளி‌க்‌கிறா‌ர்.

‌ஆ‌ண்டுதோறு‌ம் மா‌சி அமாவாசை அ‌ன்று இ‌த்தல‌த்‌தி‌ல் நட‌க்கு‌ம் மயான‌க் கொ‌ள்ளை உ‌ற்சவ‌ம் ‌மிக ‌பிர‌சி‌த்த‌ம்.

 கோ‌யிலு‌க்கு குழ‌ந்தை இ‌ல்லாதவ‌ர்க‌ள் வ‌ந்தா‌ல் குழ‌ந்தை வர‌ம் ‌கி‌ட்டு‌ம். ‌திருமணமாகாதவ‌ர்க‌ள், ம‌ஞ்ச‌ள் க‌யி‌று வா‌ங்‌கி வ‌ந்து அ‌ம்ம‌ன் பாத‌த்‌தி‌ல் வை‌த்து அதனை அ‌ங்‌‌கிரு‌க்கு‌ம் அரச மர‌த்‌தி‌ல் க‌ட்ட ‌விரை‌வி‌ல் ‌திருமண‌ம் நட‌க்கு‌ம். ‌பி‌ரி‌ந்த த‌ம்ப‌திக‌ள் ஒ‌ன்று சேருவா‌ர்க‌ள் எ‌ன்று ந‌ம்ப‌ப்படு‌கிறது.

 பூமிக்கு மேல் சுயம்புவாக புற்று உருவாக அங்காளி தோன்றினாள் எனவும், மீண்டும் சிவனின் அங்கத்தில் ஆட்கொண்ட பரமேஸ்வரியை அங்காளம்மன் என அழைத்ததாகவும் வரலாறு.

சென்னையில் புரசைவாக்கத்தை ஒட்டிய பகுதியான சூளையில் குடிகொண்டாள் அங்காளம்மன் ... சக்தி தீர்த்தம் என்னும் திருக்குளத்தின் கரையில் அமர்ந்திருப்பவளை வழிபட திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். தீய சக்திகள், பில்லி - சூனியம் ஆகியவை விலகும்.

மூல ஸ்தானத்தில் அருளும் அங்காளி நான்கு கரங்களுடன் இடது காலை மடித்து, வலதுகாலை தொங்க விட்ட நிலையில் காட்சியளிக்கிறாள்.

இடது தொடையில் இவ்வுலக ஆன்மாக்களை தாயுள்ளத்தோடு காக்கும் அம்மாவாக வைத்துக்கொண்டு சூலமும் கபாலமும் தாங்கி, மேலிரு கரத்தில், அபய - வரதத்துடன் அருள்பாலிக்கிறாள்.

முன்புறம் சிலா ரூபம், கொடிமரம், பலி பீடம்,, சிம்ம வாகனம் உள்ளன. சந்நிதியின் முன்புறம் விநாயகரும், இடப்புறம் வீரபத்திரர் சந்நிதியும் உள்ளன. கொடிமரத்தின் இடப்புறம் சிவனின் படைத்தலைவனாகிய பாவாடை ராயனுக்கு என தனி சந்நிதி உள்ளது. இதைத் தவிர காசி விசாலாட்சி - காசி விஸ்வநாதருக்கு தனி சந்நிதி இருக்கிறது. நாகம்மனுக்கும் சந்நிதி உள்ளது.


திருக்கோயிலில் நடைபெறும் மயானக்கொள்ளையைத் தொடர்ந்து அங்காளபரமேஸ்வரிக்கு காப்பு கட்டப்பட்டு கொடியேற்றம் நடந்து பத்து நாட்கள் வீதி புறப்பாடு உற்ஸவம் நடைபெறுகிறது.

மாசி அமாவாசையன்று மூலவர் அங்காள பரமேஸ்வரிக்கும் உற்ஸவருக்கும் இரவு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

அபிஷேகத்தைத் தொடர்ந்து  பூவால் அலங்கரிக்கப்பட்ட பூங்கப்பறையுடன் படாளம் மயானத்திற்குச் சென்று அங்கு நிறுவப்பட்டிருக்கும் ஆண் உருவை சித்தாங்கம் என்னும் பிரார்த்தனை செலுத்துவோர், மருளாடிகள் ஆகியோர் பூஜை செய்வர். இதற்கு சுடுகாட்டு சுவாமி என்று பெயர். அதனை பூஜை செய்து கலைத்துவிட்டு வருவார்கள்.

மீண்டும் பூசாரி தலைமையில் ருத்ர கப்பறையுடன் சென்று அங்கு செய்து வைக்கப்பட்டிருக்கும் அலி உருவையும், நள்ளிரவு 12 மணிக்கும், அதிகாலை 5 மணிக்கும் பஞ்ச முகக் கப்பறையுடன் பூசாரி தலைமையில் சென்று, செய்து வைக்கப்பட்டிருக்கம் பெண் உருவையும் கலைத்துவிட்டு வருவர்.

மீண்டும் அதே பொருட்களைக் கொண்டு ஓர் உருவை மயானக் கொள்ளையிடுவதற்காக செய்வர்.

காலை  அங்காள பரமேஸ்வரி பூரண அலங்காரத்துடன் மயானக் கொள்ளை விடுவதற்காக செல்வாள்.

வழியெல்லாம் பக்தர்கள் காய், பழம் தானியங்கள், காசுகள் போன்றவற்றையெல்லாம் செல்லும் பக்தர்களை நோக்கியும் சித்தாங்க பிரார்த்தனைதாரர்கள், மருளாடிகள் ஆகியோரை நோக்கியும் வீசுவர். அனைவரும் ஒன்றாகச் சென்று பொருட்களை சுடுகாட்டில் நான்காவதாகப் போடப்பட்டிருக்கும் சுடுகாட்டு சுவாமியின் மீது வீசி அதனை முற்றிலுமாகக் கலைத்துவிட்டு வருவர்.

அங்கிருந்து கிளம்பி சூறை விட்ட வெற்றிக் களிப்புடன் அங்காளபரமேஸ்வரி இரவு  திருக்கோயிலை அடைவாள்.

 மூன்று வகை கப்பறையும் அங்காள பரமேஸ்வரியின் சக்திகளாகச் சென்று ஆண், பெண், அலி உருக்களை பூஜை செய்துவிட்டு வருவது அனைத்தையும் காப்பவள் அங்காள பரமேஸ்வரி என்னும் தத்துவத்தை விளக்குகிறது.

சூரை விடச் செல்லும்போது முன்னால் செல்லும் சிவகணங்களிடம் சிவனுக்காக பிச்சையிடும் புனிதச் செயல் நடக்கிறது.

சுடுகாட்டில் சென்று சூறையிடும்போது மேலே கவளம் கவளமாக எறிவது பிரும்மகபாலத்தை பிச்சைச்காக கீழிறக்கிய வரலாற்றைக் குறிப்பிட்டு பிரும்மஹத்தி தோஷம் போகும் என்பதைச் சொல்கிறது.

சூளை அங்காள பரமேஸ்வரியின் "மயானக் கொள்ளை' என்பது நம்பியவர்களைக் காத்து, இரட்சித்து, அனைத்து உயிர்களுக்கும் அல்லல் தருவோரை அழிப்பதைக் காட்டும் தத்துவ விழா என்றால் மிகையில்லை.

18 comments:

 1. மயானக் கொள்ளை விளக்கம் மிகவும் அருமை... மேல்மலையனூர் கோயிலின் விரிவான சிறப்புகளுக்கும் நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. நல்ல பதிவு. ஹோமத்தீயில் எழுந்தருளும் அன்னை உருவம் படம் அற்புதம்.

  ReplyDelete
 3. பாரும்,

  புனலும்,

  கனலும்,

  வெங்காலும்,

  படர் விசும்பும்,

  ஊரும் முருகு சுவை ஊரொளி

  ஒன்றுபடச் சேரும்

  தலைவி சிவகாம சுந்தரியின்

  அற்புத, ஆனந்த நடனம்

  ஹோமத் தீயில்.

  இதைக் காணவும்,

  அங்காள பரமேஸ்வரியைப்

  பற்றிய விரிவான விவரங்களை

  அறியவும் பாக்கியம் பெற்றேன்.

  நன்றி.

  ReplyDelete
 4. மயானக் கொள்ளை பற்றிய விரிவான தகவல்களை அறியத்தந்தமைக்கு மகிழ்ச்சி..

  ReplyDelete
 5. அருமையான பதிவு. சிறப்பான படங்களுடன்.

  ReplyDelete
 6. 'ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் .... பராசக்தி .... ஓம் சக்தி ஓம் சக்தி'

  சக்திதரும் அழகான அருமையான த லை ப் ’பூ’

  >>>>>

  ReplyDelete
 7. இங்கே சுட்டவும்

  அங்கே சுட்டவும்

  என வரவர என்னை

  சுட்டுத்தள்ளி

  வருகிறீர்களே ....

  ஓம் சக்தி தாயே!

  நியாயமோ .... இது .... நியாயமோ !

  >>>>>

  ReplyDelete
 8. ப்ரம்மனின் ஆணவத்தால் தலை கொய்யப்பட்டு அதுவே பார்வதியின் சொல்லால் கபாலமாகி சிவனின் கையால் பிட்சம் எடுக்கப்பட்டு சரஸ்வதியின் சாபத்தால் பூமி எல்லாம் சுற்றித்திரிந்த ஈஸ்வரி இங்கு அங்காள பரமேஸ்வரியாக கோலம் கொண்டு அவதரித்து ஈஸ்வரனின் ப்ரம்மஹத்தி தோஷத்தையும் போக்கி அம்பாளாக நிலைத்துவிட்டாள். மயான கொள்ளை படங்களும் ஸ்தல புராணமும் மிக அருமையாக சொல்லி இருக்கீங்கப்பா.. அன்பு நன்றிகள் பகிர்வுக்கு.

  ReplyDelete
 9. மாசி மாத அமாவாசையால் தான் என் வருகையிலும் இவ்வளவு தாமதமாக்கும்.

  ஹூக்க்க்க்கும் !

  ”ஏதாவது ஒரு காரணம் சொல்வதே வழக்கமாப்போச்சு” என தாங்கள் மனதுக்குள் புலம்புவது எனக்கும் தெரிகிறதாக்கும் ! ;)

  >>>>>

  ReplyDelete
 10. மயானக் கொ ள் ளை பற்றியெல்லாம் தாங்கள் பல கதைகள் சொல்வது கேட்க, எனக்கும் கொ ள் ளை ஆசையாகவே உள்ளது.

  >>>>>

  ReplyDelete
 11. அழகான படங்களுடன் அற்புதமான விளக்கங்களுடன் அமைந்த அட்டகாசமான பதிவு.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்.

  >>>>>

  ReplyDelete
 12. எவ்வளவோ விஷயங்கள் பேசத்தான் ஆசை. நேரம் இல்லை.

  ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் ..... பராசக்தி ..... ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் !

  எதையும் தாங்கும் இதயம் அமைய சக்திகொடு தாயே !

  பிரியமுள்ள VGK

  o o o o o o

  ReplyDelete
 13. மாயானக் கொள்ளை இதுவரைக் கேள்விப்படாத ஒரு விழா !
  பாடலுடன் தாங்கள் பகிர்விட்ட விதம் மனத்தைக் கொள்ளை
  அடித்துச் சென்றுள்ளது தோழி .ஒவ்வொரு தகவலையும் எவ்வாறு
  சேகரித்து இவ்வளவு அழகாக பதிவிடுகின்றீர்கள் என்று நினைக்கும்
  போது பெருமை கொள்ள வைக்கிறது பகிர்வின் தன்மை ! வாழ்த்துக்கள் தோழி அருமையான இப் பகிர்வுக்கு என் மனமார்ந்த நன்றிகளும் கூட .

  ReplyDelete
 14. மயானக்கொள்ளை பற்றிய தகவல் புதிது.
  நன்றி அம்மா.

  ReplyDelete
 15. மயானக் கொள்ளை புதியதகவல். அறிந்தேயிராத திருவிழா.தங்கள் பகிர்வின் மூலம் நிறைய தெரியாத விடயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. அழகான அம்மன் படங்கள்.வாழ்த்துக்கள்.நன்றி.

  ReplyDelete
 16. என் வீட்டிற்கருகில் இருக்கும் அங்காளம்மன் கோவிலில் வருடா வருடம் நடக்கும் விழா மயானக் கொள்ளை. இவ்வவு நாள் தெரிந்து கொள்ளாத கதை தெரியவைத்தமைக்கு நன்றி.

  ReplyDelete