Saturday, March 8, 2014

சந்தோஷம் மலரும் சர்வதேச மகளிர் தினம்
மார்ச் மாதம் எட்டாம் நாளினை மற்றொரு சுதந்திரதினமாகப் போற்றி மிகவும் உற்சாகமாகவும்,மகிழ்ச்சியாகவும் ஆண்டுதோறும் உலகளாவிய ரீதியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மகளிர் தினம் என்பது  வெறுமனே ஒரே ஒரு தினக் கொண்டாட்டமாக அமையாமல், மார்ச் மாதம் முழுக்க அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாசாரம் முதலான இன்னோரன்ன துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றங்களை, சாதனைகளை அடையாளப்படுத்தும் நூற்றுக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்திருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத் திருநாட்டில் 
மண்ணடிமைதீருதல் முயற்கொம்பே 

என பெண்ணுரிமையை ஏத்தினார் புரட்சிக்கவி பாரதியார்..! 

போற்றி போற்றியோராயிரம் போற்றி 
நின் பொன்னடிக்குப்  பல்லாயிரம் போற்றிகாண் .

என்ற பாரதி 

பெண்மை வாழ்கவென கூத்திடுவோமடா என்றார்..

பெண்களின் கல்வியறிவுகாகவும் சட்டங்களை செய்திடவும் கனவுகண்ட பாரதி, சாதம் படைக்க மட்டுமல்லாது தெய்வச் சாதிபடைக்கவும் பெண்கள் தகுதிபடைத்தவர்கள் என்று முழங்கினார்..!
பெண்களுக்கு உரிய அதிகாரம் கிடைப்பது மட்டும் இலக்கு அல்ல; இவ்வுலகில் வாழ்வதற்கான நல்ல சூழலை ஏற்படுத்துவதே நமது நோக்கவும் இருக்கிறது..

மனித நேயம் தழைப்பதற்கு ஒவ்வொருவரும் 
சர்வதேச மகளிர் தினத்தில் உறுதி கொள்ள வேண்டும்..

அனைத்து நாடுகளிலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்கள் பின்னுக்கே தள்ளப்படுவதும் வருத்தம் தரும் நிகழ்வாகும்..! 

பெண்கள் முன்னேற்றத்தின் அவசியம் யாராலும் 
மறுக்கப்படமுடியாத ஒன்றாகவும் திகழ்கிறது..!“பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய மனித சமூகம் பகுத்தறிவு இருந்தும் நாள்தோறும் தேய்ந்து கொண்டே வருகிறது” - 

சாதி, இன, மத, மொழி ஒடுக்கு முறைகளை விடக் கொடியதும் அதிகம் பேரை பாதிப்பதும் இந்த பெண்களின் மீதான ஒடுக்குமுறை தான். 

மனிதர்கள் என்ற அளவில் சுய மரியாதை, சமூக மதிப்புடன் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு சுதந்திரம் பெற்று ஆண்களுக்கு நிகரான சம உரிமைகளுடன் சமமான வாழ்வு பெறும் போதுதான் மனித சமுதாயம் உயர்வடையும். 

இதற்கு உத்வேகமளிக்கக் கூடிய நாளாக 
சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் நாள் விளங்குகிறது.

பெண்களைச் சிறப்பிக்கும் இந்நாள் 
பல்வேறு நாடுகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.


**அமெரிக்காவிலிருந்து வரும் ‘தென்றல்’ மார்ச் இதழில் எமது வலைப்பூ அறிமுகம் செய்யப்பட்ட செய்தி  தோழி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் மூலம் தெரியவந்தது. இணைப்பு கொடுத்திருக்கிறேன். 

ஆனால் தென்றல் இதழ் உள்ளே போக பதிவு செய்து கொள்ளவேண்டும். பயனர் பெயர், பாஸ்வேர்டு வேண்டும்.

வலையுலகின் வளைக்கரங்கள் என்ற பகுதியில் எமது மணிராஜ் வலைத்தளம் பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். 
ஆன்மீகக்கட்டுரைகள் , ஆலய தரிசனங்கள்.ஸ்லோகங்கள், புகைப்படங்கள் என அனைத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.. ஆன்மீகச்சுற்றுலா மேற்கொள்ள சிறந்த வழிகாட்டி என்றும் சொல்லலாம் ..
காயத்ரி மந்திரத்தின் மகிமை பற்றி கூறும் மிக விரிவான கட்டுரை சிறப்பு..
வரலக்ஷ்மி விரதம் கோகுலாஷ்டமி,ஆவணி அவிட்டம் ,சங்கடஹர சதுர்த்தி - என பல தலைப்புகளில் படங்களுடன் கூடிய விரிவான தகவல்களும் நிறைந்துள்ளன..
சுயஅனுபவக்குறிப்புகள் இந்த வலைப்பூவிற்கு மேலும் பலம்.// என அறிமுகப்படுத்தி மணிராஜ் வலைத்தளத்தின் இணைப்பும் கொடுத்திருக்கிறார்கள்...

 இனிய நன்றிகள் தென்றல் இதழ்! 
என்னுடன் எனக்குத் தெரிந்த நிறைய பெண்பதிவர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள்.

எங்கள் பிளாக் வலைத்தளத்திலும் சர்வதேசப் பெண்கள் தினமான இன்று, எழுத்துலகில் சாதனைகள் பல செய்துவரும், பல்வேறு திறமைகள் அமையப்பெற்ற  நம் வாசக பெண் நண்பர்கள் அனைத்து பெண்பதிவர்களையும் சிறப்புகளைக் குறிப்பிட்டிருப்பதோடு  எமது தளத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.. 
எங்கள் பிளாக்கிறகு எங்கள் நன்றிகள்..


"குடும்பம் என்பது ஜனநாயக பண்புகளை வளர்க்கும் தொட்டிலாக இல்லை" என்தை அன்றாட நிகழ்வுகளில் கண்கூடாகக் கண்டே வருகிறோம்..!

மனிதநேயம், தன்னலமற்ற பாசம் பகிர்ந்துகொள்வது, பரஸ்பரம் விட்டுக்கொடுப்பது, பண்பு கலாசாரம் ஆகியவற்றை மதிப்பது போன்றவைகளை சிறுவயதிலேயே குழந்தைகளூக்குப் பாலோடுபுகட்டும்போது சாதகமான சமூக, கலாசார, அரசியல், பொருளாதார மாற்றங்களை இளைய தலைமுறையினரால் கொண்டுவர இயலும் என்பதை மகிழ்ச்சி நிறைந்த மகளிர் கொண்டாட்ட தினத்தில் மனதில் கொள்வோம்..!


21 comments:

 1. பெண்கள் முன்னேற்றம், பெண்கள் சுதந்திரம் பற்றிய தங்கள் சிந்தனைகள் நனவாக வேண்டும்! உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
 2. அருமையான படங்களுடன் சிறப்பான பகிர்வு அம்மா...

  சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...

  ReplyDelete
 3. கட்டுரையின் இறுதியில் உள்ள இரண்டு வரிகளில்

  மிக ஆழமான, அணித்தரமான கருத்துக்களை கூறியுள்ளீர்கள்.

  இது பசுமரத்தாணிபோல் எல்லோர் மனதிலும்

  பதிய வேண்டும் என்பது என் அவா.

  ReplyDelete
 4. இனிய பதிவு!..
  சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
 5. ஜீனியஸ் மேடத்துக்கு மகளிர் தின வாழ்த்துக்கள். தென்றல் இதழில் குறிப்பிட்டு பாராட்டு பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
 7. ’மங்கையராய்ப் பிறக்க மாதவம் செய்திடல் வேண்டும்’

  இது எவ்வளவு ஓர் உண்மை !

  நாளை ஓர் ஜனனம் இங்கு என் இல்லத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

  இன்றே என் மனதெல்லாம் ஒரே

  திக்.... திக்.... திக்.... திக்.....

  >>>>>

  ReplyDelete
 8. த லை ப் ’பூ’

  ”சந்தோஷம் மலரும் சர்வதேச மகளிர் தினம்”

  மனதுக்கு சந்தோஷமும் ஆறுதலும்
  மலர வைக்கிறதூஊஊஊஊஊஊஊ

  >>>>>

  ReplyDelete
 9. மார்ச் எட்டை
  சிகப்பு மற்றும் வெள்ளை ரோஜாக்களால்
  மார்ச்-ஃபாஸ்ட் செய்து
  காட்டியுள்ள படம் மிக அழகானதோர் தேர்வு.

  >>>>>

  ReplyDelete
 10. படங்களும்,
  விளக்கங்களும்,
  பதிவும்,
  பகிர்வும்
  வழக்கம்போலவே
  ருசியோ ருசியாக உள்ளன.

  >>>>>

  ReplyDelete
 11. மகளிரில் பெரும்பாலானோர் அழுந்தச் சமத்துக்கள்.

  மாபெரும் ஷக்தி மிக்கவர்கள்.

  பொறுமையில் பூமாதேவி போன்றவர்கள்.

  பொங்கியெழுந்தால் ......

  விமர்சனம் எழுதி தாங்கள் முதல்பரிசு பெற்ற
  http://gopu1949.blogspot.in/2014/03/vgk-05-01-03-first-prize-winners.html
  "காதலாவது கத்தரிக்காயாவது” என்ற என் சிறுகதையில் வரும்
  http://gopu1949.blogspot.in/2014/02/vgk-05.html
  ‘காய்கறிக்காரி காமாட்சி’ போலவே தான்.

  வாழ்க !

  அனைத்துக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  oo oo oo

  ReplyDelete
 12. அமெரிக்கச்செய்தி ‘தென்றல்’ ஆக என் மனதை வருடிச்செல்கிறதே !

  ’வலையுலகின் வளைக்கரங்களுக்கு’ என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  மேலும் மேலும் தொடர்ச்சியாக அடுத்தடுத்து வெற்றிச்செய்திகள் பல தங்களுக்குக் கிடைக்கட்டும் என பிரார்த்திக்கிறேன்.

  பிரியமுள்ள கோபு [VGK]

  ReplyDelete
 13. மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா....

  ReplyDelete
 14. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 15. மகளிர் தின வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
 16. சர்வதேச மகளிர் வாழ்த்துக்கள்.அழகான படங்கள்.நன்றிகள்.

  ReplyDelete
 17. சர்வதேசதின‌ மகளிர் வாழ்த்துக்கள்.அழகான படங்கள்.நன்றிகள்.

  ReplyDelete
 18. மகளிர் தின வாழ்த்துக்கள் தோழி! அருமையான பதிவும் படங்களும் !
  பாராட்டுக்கள்...!

  ReplyDelete
 19. Congragulations and you deserve for all .
  Kindly give me the link for thendral.

  ReplyDelete
 20. சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள் அம்மா. (தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்).

  தெளிவான சிந்தனை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 21. சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்......

  ReplyDelete