Sunday, March 23, 2014

மாங்குயிலே .. பூங்குயிலே..படிமம்:Oriole 2.jpg
மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு
முத்து முத்துக் கண்ணாலே சுத்தி வந்தேன் பின்னாலே
வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி


கொட்டும் மழை தெறித்துவிழும்
மயில்தோகை பூஞ்சிதறல்
மாங்குயிலின் தேன் உதிரும் குரலோ?
மழலை .....!

வீட்டுக் குருவியை விடப் பெரியது மைனா அளவில் அழகிய சிறு பறவை மாமரத்தில் காணப்படுவதாலும், மாம்பழம் போல் மஞ்சளால் இருப்பதாலும் மாங்குயில் எனப்படுகின்றது. மாங்குயிலின்  குரல் (குயிலும் பாடுமே..) இனிமையாக இருக்கும்

தலையில் கறுப்பாக உள்ள மாங்குயில் வேறு இனம்,
அதன் பெயர் கருந்தலை மாங்குயில்

மாங்குயில் போலவே தோற்றம் அளிக்கும் அமெரிக்க மஞ்சக்குயில்களும் ஆங்கிலத்தில் ஓரியோல் (Oriole) என்னும் அதே பெயரால் அழைக்கப்பட்டாலும் அவை முற்றிலும் வேறு பறவைக் குடும்பத்தைச் சேர்ந்தவை.

அமெரிக்க மஞ்சக்குயில்கள் அறிவியல் வகைப்பாட்டின்படி
இக்டேரஸ் (Icterus) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தவை

இக்டேரஸ் என்னும்  கிரேக்க மொழிச்சொல் ῖκτερος என்பதில் இருந்து உருவானது. இச்சொல்லின் பொருள் மஞ்சள் காமாலை (jaundice) என்னும் நோய் ஆகும். 

மஞ்சள் காமாலைநோய் உடையவர் இப்பறவையைப் பார்த்தால் இந்நோய் தீரும் என்று நம்பினராம்- வேடிக்கைதான் ...
எனவே இப்பறவைக் குடும்பத்துக்கு இக்டேரஸ் என்று பெயர்

படிமம்:Red-faced Malkoha x.jpg
 பூங்குயில் அழகிய   தனிச் சிறப்பான பறவையினங்களில் 
பெரிய பறவையினங்களுள் ஒன்றாகும்.  முதுகு அட்ர் பச்சை நிறமாகவும் வால் இளம் பச்சையாகவும் வாலின் நுனிப் பகுதி வெண்மையாகவும் காணப்படும்.  தலையும் கழுத்துப் பகுதியும் கருமையாக இருக்கும். 
முகத்தின் கீழ்ப் பகுதி வெண்மையானதாகும். 
இதன் கண்களைச் சுற்றி முகம் முழுவதும் சிவப்பாக  காணப்படும். 
இவற்றின் ஒலி மெல்லிய சீட்டியடித்தல் போன்றிருக்கும்

IMG_9944-MOTION.gif

19 comments:

 1. அழகோ அழகு... ரசித்தேன் அம்மா... நன்றி...

  ReplyDelete
 2. இந்த மாங்குயில்கள் தஞ்சையின் பலபகுதிகளில் காணப்படுகின்றன. மா மரங்கள் நிறைந்திருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்.
  நேர்த்தியான படங்களுடன் இனிய தகவல்கள்..

  ReplyDelete
 3. மாங்குயில் மிக அழகு.
  படங்கள் எல்லாம் அழகு.

  ReplyDelete
 4. அழகான படங்களும் விபரங்களும் ரசித்தேன் அமெரிக்க மஞ்சள் குயிலை பார்த்தால் மஞ்சள் காமாளை நோய் குணமாகும்.! ஆஹா அப்படி என்றால் நல்லது தானே. நன்றி வாழ்த்துக்கள் தோழி...!

  ReplyDelete
 5. மிகவும் அருமையான அழகான தலைப்பு !

  >>>>>

  ReplyDelete
 6. படங்கள் அத்தனையுமே அழகோ அழகு !

  >>>>>

  ReplyDelete
 7. விளக்கங்கள் யாவும் வியக்க வைத்தன !

  >>>>>

  ReplyDelete
 8. முதல் படமும் கீழிருந்து மூன்றாவது படமும் மிகவும் ரஸிக்க வைத்தன.

  மேலிருந்து கீழ் நாலாவது வரிசை பெரிய படம் திறக்க மறுக்கிறது.

  >>>>>

  ReplyDelete
 9. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பசுமை மிக்க சுவையூட்டிடும் அழகான பகிர்வுக்கு நன்றிகள்.

  ooooo

  ReplyDelete
 10. அழகான குருவிகள்.....

  நன்றி

  ReplyDelete
 11. அழகுப் பறவைகள்!

  இரட்டைச் சித்திரங்களுக்கு நேர் மேலே வலது பக்கம் உள்ள பறவையின் பெயரை அறிந்துகொள்ள ஆவல் அக்கா. அவை எங்கள் ஊரிலும் இருந்தன. குக்குறுபாச்சான் என்பார்கள். :-)

  ReplyDelete
 12. எங்கள் வீட்டுமாமரத்துக்கு சில பறவைகள் வருவதைக்கண்டிருக்கிறேன் . அளவில் மிகச் சிறியது தேன் சிட்டு என்று என் மனைவி கூறுவார். சில சமயங்களில் குயிலின் கூவல் கேட்கும். ஆனால் அவை எங்கிருந்து வருகின்றன என்று தெரிந்துகொள்ள முடியவில்லை

  ReplyDelete
 13. மாங்குயில் கீதம் இனித்தது! அருமையான பதிவு! அழகான படங்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு.......கேட்டோம், பார்த்தோம், ரசித்தோம்!

  குயில் பற்றிய அழகியக் குறிப்புத்ட் ஹொகுப்பு அருமை! கண்ணுக்கு குளிர்ச்சி!

  தொடர்கின்றோம்!

  ReplyDelete
 15. ஆஹா ..........அருமையான படைப்பு ! வாழ்த்துக்கள் தோழி
  மிக்க நன்றி பகிர்வுக்கு .

  ReplyDelete
 16. எத்தனை வகை குயில்கள்....அத்தனையயும் படங்களுடன் விளக்கி அசத்தி விட்டீர்கள் மேடம்.

  ReplyDelete
 17. குயில்களைப் பார்த்தால் மஞ்சள் காமாலை போகும் - வேடிக்கையான நம்பிக்கை தான். இத்தனை குயில்களை ஒருசேரப் பார்த்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 18. குயில்களில் இவ்ளோ மேட்டர் இருக்கா?
  படங்கள் மனதை அள்ளுகிறது!!

  ReplyDelete