
பூவே வெண்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
ஜப்பான் மக்கள் நிஷாகந்திமலரை "பியூட்டி அண்டர் தி மூன்' என்று பெருமைப்படுத்துவதுடன், இரவு மலர் பூக்கும் சமயத்தில் மலர்களைப் பார்த்தால் அதிர்ஷ்டம் உண்டாகும்' என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.
பிரம்ம கமலம் கொடியை பிரம்மனின் நாடிக் கொடி என்றும் அழைப்பர்.
பிரம்ம கமலம் தெய்வீக மலராக கருதப்படுகிறது
வெள்ளை நிறம் கொண்ட நிஷாகந்தி மலர்கள் "நைட்குயின்' என்றும், திருப்பாற்கடலில் பெருமாள் விஷ்ணு பாம்பு படுக்கையில் சயனத்திருப்பது போன்று இருப்பதால் "அனந்தசயனம்' என்றும் அழைக்கப்படுகிறது.
இலைகள் பச்சைமாமலைபோல் மேனி கொண்டு மஹாவிஷ்ணு சயனக்கோலத்தில் பள்ளிகொண்டிருப்பது போன்றும் , இலையின் நடுப்பகுதி விளிம்பில் அவரது தொப்புள்கொடி நீண்டு மலரின் காம்புப்பகுதியாய் உருவாகி நுனியில் பிரம்மா பூவாகி தோன்றியிருப்பதாகவும் காட்சிப்படும் அதிசயத்தை எத்தனை முறை கண்டாலும் திகட்டுவதில்லை..
எங்கள் இல்லத்தில் மீண்டும் நிஷாகந்தி மலர்கள்
மலர்ந்து மணம் பரப்பி மகிழ்வூட்டின..!
எங்கள் இல்லத்தில் மீண்டும் நிஷாகந்தி மலர்கள்
மலர்ந்து மணம் பரப்பி மகிழ்வூட்டின..!

பூவுக்குள் பார்த்தாலும் பிரபஞ்சத்தையே தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளதாய் ஆயிரம் தலைகளைக் கொண்டுள்ள அதிசய ஆதிஷேனைப் படுக்கையாகக்கொண்டுள்ள அனந்தசயனப்பெருமாள் பள்ளிகொண்டு அருள்பாலிப்பதை கண்டு அதிசயிக்கலாம்..




மலர்கள் மலரும் வேளையில் அருகிருந்து செய்யப்படும் பிரார்த்தனைகள் நிறைவேறுவதாகவும் நம்பிக்கை நிலவுகிறது..நள்ளிரவு வரை விழித்திருந்து மலர்கள் மலர்வதை பார்த்து ரசிக்கின்றனர்
நிஷாகந்தி



ஒரே ஓரு இலை மட்டும் கூட பெரிய செடியை உருவாக்கும்
ஆற்றல் பெற்றிருக்கும் தாவரம் தான் நிஷாகந்தி
என்றழைக்கப்படும் பிரம்ம கமலம் , அனந்த சயனப் பூ ஆகும் ..
இலைகள் மருத்துவ குணம் கொண்டவை..வெட்டுக்
காயங்களுக்கு மருந்தாகப்பயன்படும் மூலிகையாக திகழ்கிறது..



செடியில் உள்ள இலையை பறித்து நடவு செய் தாலே அது வளரும் தன்மையை நிஷாகந்தி மலர் செடி பெற்று உள்ளது.
இலைகள் தட்டையாக , தடிமனாக இருக்கும்.
பிரம்ம கமலப் பூ இலைகளிலிருந்தே வளர்கிறது.
வெட்டப்பட்ட மற்றொரு செடியின் துண்டிலிருந்தும் வளரும்.
பிரம்ம கமலம் காக்டஸ் செடி. நீண்டு சற்று அகலமானதாக இருக்கும்
இலையினைப் பாதியளவு மண்ணுள் புதையுண்டு இருக்குமாறு
நட்டு வைத்துவிட்டால், இலையே புதிதாக வேர்விட்டு மண்ணில்
பதிந்து கொள்ளும்.

அதன் பின், இலையே அத்தாவரத்தின் தண்டு போல் செயல்படும்.
இலையின் பக்கவாட்டுகளில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும்.
இலையின் பக்கவாட்டுகளில், சிறுசிறு கணுக்கள் தோன்றி, அவற்றிலிருந்து புது இலைகள் உருவாகும்.
அதே கணுக்களில் தான் மொட்டுக்கள் உருவாகி கண்கவர்
மலர்களாய் மலர்ந்து மணம் வீசும்.
மலர்களாய் மலர்ந்து மணம் வீசும்.

மலர்களுக்கு உரிய தனிச் சிறப்பு இரவில் தான் மலரும்.
மலர்களின் வாசனை அபாரமானதாக இருக்கும்.
மலர்களின் வாசனை அபாரமானதாக இருக்கும்.

3 மணிக்கே வாடதுவங்கி, காலையில் முழுமையாக வாடிவிடும் தன்மை கொண்டது
நிஷாகந்தி மலர்கள் வாடாமல்லி, மஞ்சள், சிகப்பு வெள்ளை,ஆரஞ்சு என்று பல்வேறு நிறங்களிலும் இருக்கின்றன.அனைத்து மலர்களும் இரவிலேயே மலர்கின்றன..
எத்தனை ..எத்தனை.. வண்ணங்கள்..
அத்தனையும் கொள்ளைகொள்ளும் எண்ணங்களை..!













