Wednesday, November 19, 2014

கைசிக ஏகாதசி

அமலனாதிபிரான்  அடியாருக்கு என்னை ஆட்படுத்த விமலன்
விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள் மதில் அரங்கத்தம்மான்
திருக்கமலபாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே
18303_381538941932205_275610997_n.jpg (960×639)


ஆடி மாதத்தில் சயனிக்கச் செல்லும் பெருமாள் புவிப் பாதுகாப்பை இந்திரனிடம் ஒப்புவித்துக் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசியன்று துயிலுணர்வதாகக் கருதி அதனைப் பிரபோதினி ஏகாதசி என்று அழைக்கிறார்கள். இதுவே, கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. 
Dalmiapuram-Kaisika-Ekadasi-Utsavam-2013-06.jpg (650×488)
 வைணவப் பக்தன் நம்பாடுவான் தனது கைசிகப் பண்ணால் ராட்சசனாகச் சபிக்கப்பட்ட பிராமணன் ஒருவனுக்கு மோட்சம் கொடுத்ததால் அப்பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது., 
arangan_periyavaaya_kangal.jpg (671×505)
கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்பெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது.
public_10291fa366450a13386ed314d16331d43077.jpg (470×360)
Thirupanazhwar-Uraiyur.jpg (720×960)
சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர் மாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்

386446_250357861691754_1354639584_n.jpg (640×960)
கைசிக ஏகாதசியன்று வராக புராணத்தில் உள்ள கைசிக புராணத்தின் வடமொழி சுலோகத்தையும் பராசரப்பட்டரின் மணிப் பிரவாளத் தமிழ் மொழி பெயர்ப்பையும் பெரும்பாலும் எல்லா வைஷ்ணவக் கோவில்களிலும் பாராயணம் செய்வார்கள். 
Srirangam_Araiyar_27.jpg (652×489)
திருக்குறுங்குடியில் மட்டும் கோவில் உள்வளாகத்திற்குள் அதற்கென வகுக்கப்பட்ட மண்டபத்தில் தெய்வங்களைப் பார்வையாளர்களாக்கி நடத்தப்படும் கூத்தாகக் கைசிக புராணக் கதை அமைந்துள்ளது.
0.jpg (480×360)
1450675_702704669753675_285922826_n.jpg (960×720)

 கைசிகம் போன்ற ஒரு கூத்துக் கலை தமிழிசையின் பெருமையை உணர்த்துவது. இயல் இசைந்த, ஆட்டங் கலந்த, சுயமண்ணின் பழகுகதையை அடிப்படையாகக் கொண்ட, சாதியின் ஏற்றத்தைக் கேள்விக்குறியாக்கும், பாண்டித்தியத்தின் செருக்கைச் சாடும், பாரம்பரியக் கூத்தில் பெண் கலைஞர்கள் ஆண்வேடம் தாங்கும் தனித்துவம் மிக்க கூத்து இது,
1557233_438319899627707_615194312_o.jpg (1024×683)
சமூகத்தின் எல்லாப் பகுதியினரையும் அவையினர் என்னும் அளவில் சங்கமிக்கச் செய்வது ....
Melkote-Vairamudi-and-Rajamudi-sevai-2014-0017.jpg (650×487)

4perumals.jpg (1368×517)
12_ஆழ்வார்கள்.jpg (900×197)

11 comments:

 1. கைசிக ஏகாதசி அறிந்தேன் உணர்ந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 2. தரிசனம் கிடைத்தது அம்மா...

  ReplyDelete
 3. வணக்கம்
  அம்மா.

  சிறப்பாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் படங்கள் மிக அழகாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
  ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை):

  ReplyDelete
 4. கைசிக ஏகாதசியின் விளக்கமும் அழகிய படங்களும் மனதில் நிறைகின்றன.. மகிழ்ச்சி..

  ReplyDelete
 5. பல திங்களுக்குப்பின் தங்களீன் வலைப்பகுதியில் கருத்திட வந்துள்ளேன். வாழ்த்துக்கள்.‍பத்மாசூரி.

  ReplyDelete
 6. எல்லாமே தெரியாத செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. அழகானப் படங்களுடன் சுவையான தகவல்கள்.

  சென்ற வருடத்துக்கு முந்தைய வருடம் கூட கைசிக ஏகாதசிக்கு எட்டு வீதிகளையும் பிரதட்சணம் செய்து பெருமாளை தரிசித்தேன். கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ள முடியாததால் போன வருடமே செல்லவில்லை....:(

  கார்த்திகை பிறந்துட்டாலே கோவிலுக்கு செல்வது குறைந்துவிடும். சபரிமலை, மேல்மருவத்தூர், வட நாட்டவர்கள் என்று கும்பலோ கும்பல் தான்...:)

  ReplyDelete
 8. என்னுடைய பின்னூட்டம் எங்கே?

  ReplyDelete
 9. கைசிக ஏகாதசி மகிமை தெரிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 10. கைசிக ஏகாதசியைப் பற்றி தற்போதுதான் தெரிந்துகொண்டேன். நன்றி.

  ReplyDelete
 11. கைசிக ஏகாதசியைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை! -துளசி, கீதா

  வாசித்துக் கொண்டே வரும்போது என்னடா, திருக்குறுங்குடி நம்பி கோயில் கைசிக ஏகாதசி பற்றி இல்லையே அது சற்று வித்தியாசாமானதாக இருக்குமே சிறப்பாகக் கொண்டாடுவார்களே....அத்தனைத் தகவல்களையும் தரும் சகோதரிக்குத் தெரிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லையே......சரி நாம் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று நினைத்து வரும் போது அதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது சந்தோஷமாக இருந்தது. ஆம்! அது எங்கள் ஊர் ஆயிற்றே! அதனால். என் தந்தை வருடம் தோறும் அங்கு எங்கள் உறவினர் ட்ரஸ்டில் தேசிகல் கோயிலில் நடக்கும் தேசிகர் உத்சவத்திற்கும், தெலுங்கு வருடப்பிறப்பன்று புதுப் ப்ஞ்சாங்கம் வாசிக்கும் வைபவத்திற்கும் (எங்கள் உபயம் ) பின்னர் முடிந்தால் கோயில் உத்சவத்திற்கும் செல்வதுண்டு.

  மிக்க நன்றி.

  ReplyDelete