Tuesday, November 25, 2014

உவகை தரும் உத்தமத் திருநாள் ..




“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளைக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலுமாமே”

என்ற திருமந்திரப் பாடலின் ஆழ்ந்த தத்துவப் பொருள் அறிந்து, உணர்ந்து, அனுபவிக்கத் தக்கது. 

அகல்,எண்ணெய், திரி, சுடர் என்று பலவாறாகத் தோன்றும் விளக்கு என்பது ஒளியில் ஒன்றுபடுவது போல, பலவாறாகத் தோன்றும் பிரபஞ்சமும், ஜீவனும் பரம்பொருளான சிவத்தில் அடங்கும் என்பது இதன் உட்பொருள்.
மலையாய் அமர்ந்த மகாதேவன். அடி - முடிகாண 
முடியா வண்ணம் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் காட்சித்தந்து அவர்கள் அறியாமையை நீக்கி சிவபொருமான் நெருப்பு ஜோதியாய் காட்சித் தந்து அண்ணாமலையாக அருள்பாலித்த திருநாள் திருக்கார்த்திகை திருநாள் ஆகும். 
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை, ஜோதிப்பிழம்பாய் நின்ற இடமே - கார்த்திகைத் திருநாளில் தீபம் ஏற்றப்பட்டு வழிபடப்படுகிறது - .

தீப ஒளி  அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தைத் தருவதாகும் .
கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின்கண்கள் வெறும் புண்கள் '' என்று பொங்கையாழ்வார் கார்த்திகை தீபத்தைப் பற்றிச்சிறப்பாக குறிப்பிடுகிறார். - 

முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்ததன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற  திருவுளம் கொண்ட இறைவன்.  கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி 
நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள். 
-திருவண்ணாமலையே மகேசனாகக் கோயில் கொண்டுள்ளது. 
பஞ்ச பூதத்தலங்களில் அக்னித்தலமாகப் போற்றப்படுகிறது.

கார்த்திகைப் பௌர்ணமியில் பார்வதிதேவி சிவபெருமானின் இடப்பாகம் அமர்ந்து சிவசக்தி ஐக்கிய சொரூபமான அர்த்தநாரீஸ்வரராக  இறைவன் இருக்கிறான்.
 தீபதரிசனத்திற்கு சற்று முன்பு மலை அடிவாரத்திலுள்ள அண்ணாமலையார் சந்நிதியிலிருந்து அர்த்தநாரீஸ்வரர் புறப்பட்டு குதூகலத்துடன் வேகமாக ஓடிவந்து கொடிக் கம்பத்தைச் சுற்றிச் செல்வார்.

அவர் வந்து சென்ற உடன் வேட்டு சத்தத்துடன் மலை முகட்டில்
தீப ஒளி சுடர்விடும்.

அதே சமயம் பஞ்சமூர்த்திகளுக்கும் தீபாராதனை காட்டப்படும். பஞ்சமூர்த்திகளும் தீப ஒளியை தரிசனம் செய்வர்.

திருவண்ணாமலையில் அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம்
முருகப்பெருமானுக்கு ஏற்றப்படுகிறது.
''கார்த்திகை விளக்கிட்டனன்'' என்று மலையில் தீபம் ஏற்றுவதை சீவக
சிந்தாமணிகுறிப்பிடுகிறது.

தீபம் ஏற்றி வழிபடமுடியாத இடங்களில் சொக்கப்பானை வேய்ந்து பனை ஒலையால் சுவாமியை எழுந்தருளச் செய்து சொக்கப்பானைக் கொளுத்துவர்.
''சொக்கப்பானையை வணங்வது சொக்கப்பனையாகும்'' சொக்கப்பனாகிய சிவனை ஒளிவடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை ஆகும்.

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

 திருஞானசம்பந்தர் பதிகம் பாடி பூம்பாவையை உயிர்ப்பித்த 
உகப்பான திருநாள் ..
தொல்காப்பியம் ''வேலியின் நோக்கிய விளக்கு நிலையும்'' என்று கார்த்திகையில் ஏற்றிய விளக்கு பற்றிக் கூறுகிறது.
கார்த்திகை தீபவிழா ஆணவ இருளை நீக்கி ஞான ஒளியை  பெருக்க
உகந்த விழா ,வாழ்வில் எல்லா நலன்களும் கார்த்திகை தீபத்தன்று ஒளி வீச பிரகாசிக்கும்..

7 comments:

  1. காத்திகை தீபத்தின் விளக்கத்தை அறிந்தேன் அம்மா...

    ReplyDelete
  2. முதலாவது திருமந்திரம் அருமை.
    எலி - திருவிளக்கு தகவல்கள் புதிதுஇ
    மிக்கநன்றி சகோதாழ
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  3. விளக்கின் விளக்கம் அறிய முடிகிறது. நன்றி தோழி.

    ReplyDelete
  4. கார்த்திகை தீபப் பெருமைகள் அறிந்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. சிறிய வயதில் சொக்கப்பானை கொளுத்தக் கண்டதுண்டு. இந்த வழக்கம் இப்போது அருகிவிட்டதோ?வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. தீப விளக்கமும் கார்த்திகை தீப விளக்கமும் அருமை!

    ReplyDelete
  7. கார்த்திகை தீபம் தொடர்பான அரிய செய்த்களை அறிந்தேன். புகைப்படங்கள் பதிவுக்கு மெருகூட்டுகின்றன. நன்றி.

    ReplyDelete