Saturday, November 29, 2014

சகல ஐஸ்வர்யங்கள் வர்ஷிக்கும் தாமோதர மாதம்



 நான்கு முக்கியமான. சதுர் மாதங்களில், கடைசியாக வருவது  தாமோதர மாதம் என்று அழைக்கப்படும் கார்த்திகை மாதம் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மிகவும் பிரியமானது

விஷ்ணுவின் பன்னிரு பெயர்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பனவற்றை தமிழ் மாதங்களில் பொருத்தி அழைப்பார்கள்..!


தமிழ் மாதங்களில் கார்த்திகையைப் போல் இந்த தாமோதர மாதத்தில் பகவானின் ஆலயத்தையும், பூஜை அறையையும் நெய் தீபங்களால் அலங்கரிப்பார்கள்

""புண்ணிய மாதங்கள் அனைத்திலும் அதிபுண்ணிய மாதம் தாமோதர மாதம்'' என்று புராணமும் இம்மாதத்தின் மகிமைகளை பலவாறு விவரிக்கிறது.

 கார்த்திகைமாதம் முழுவதும் தமோதரரான ஸ்ரீகிருஷ்ணருக்கு தினசரி நெய் தீபம் காட்டுவது, 3. "ஹரே கிருஷ்ண' மஹாமந்திர ஜபத்தை இயன்ற அளவு செய்வது ஆகியன இந்த விரதத்தின்  விதிமுறைகளாகும்..

""யார் ஒருவர் இம்மாதத்தில் தினசரி நெய் விளக்கு தீபம் காட்டுகிறாரோ அவருடைய பல கோடானு கோடி பாவங்கள்கூட அவரிடமிருந்து நீங்கி விடுகின்றன'' என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. 

இஸ்கான்-ஹரே கிருஷ்ணா கோயில்களில் தினசரி மாலை, 
தீபம் காட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கிருஷ்ணரை சிறப்பாக வழிபடுவதற்குரிய மாதத்தை 
"தாமோதர மாதம். என்பர். 

"தாம' என்றால் கயிறு. "உதர' என்றால் வயிறு. கிருஷ்ணரை, அன்னை யசோதை கயிற்றால் உரலில் கட்டிய நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் பொருட்டும், 

கிருஷ்ண பக்தையான ராதாராணியை வழிபடும் பொருட்டும் தாமோதரத் திருவிழா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. 

இந்த மாதத்தில் ராதாகிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டுவதால் நற்பலன் பெறலாம் என்று வேத சாஸ்திரங்கள் கூறுகின்றன.
கண்ணணுக்கு அவல் கொடுத்த குசேலருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அன்று கொடுத்தது போல கண்ணபெருமான் தான் தாமோதரன் என்ற திருநாமம் கொண்ட இந்நாளில் தன்னை நினைத்து வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள்பாலிக்கிறார்.

தாமோதஷ்டக பாடல்கள் -தினசரி தீபம் காட்டும்போது "தாமோதர அஷ்டகம்' என்று கூறப்படும் சத்யவிரத முனிவரால் இயற்றப்பட்ட துதியைப் பாடினால் அது தாமோதரரை மிகவும் மகிழ்ச்சிப்படுத்தும்

 தாமோதரத் திருவிழா உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

, துளசி பூஜை மற்றும் சந்தியாக் கால பூஜையைத் தொடர்ந்து தாமோதர தீப ஆரத்தி சமயம் ஸ்ரீகிருஷ்ணருக்குப் பிரியமான தாமோதஷ்டக பாடல்கள் பாடப்பட்டு  பக்தர்கள், தங்கள் கரங்களால் நேரடியாக சுவாமிக்கு  நெய் தீப ஆரத்தி காட்டுவது விழாவின் சிறப்பம்சமாக அமையும்.  ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜப தியானமும், நரசிம்ம பிரார்த்தனையும் நடைபெறும்..

கிருஷ்ணருக்கு தீப ஆரத்தி காட்டினால் நிலைத்த செல்வத்தையும், நல்ல குழந்தைகளையும், புகழையும், வெற்றியையும் பெற முடியும். 

பல லட்சக்கணக்கான கல்பங்களில் செய்யப்பட்ட பாவங்கள் முழுவதும் அழியும். 

அனைத்து புண்ணிய நதிகளில் நீராடிய பலன், யாகங்கள் செய்த பலன் கிடைக்கும். 

முன்னோர்களையும் நற்கதியடையச் செய்யலாம் என கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு மரத்துண்டுகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்தால் நெருப்பு உண்டாவது எப்படி நிச்சயமோ, அதேபோல் தாமோதர மாதத்தில் கிருஷ்ணருக்கு நெய் தீப ஆரத்தி காட்டுவதால் நிச்சயம் அதன் நற்பலனை சந்தேகத்திற்கு இடமின்றி பெறலாம் என பத்மபுராணம் கூறுகிறது. 

தாமோதர மாதத்தில் கிருஷ்ண பிரசாத அன்னதானம் செய்வதும் மிக மிக விசேஷமானது.

புரட்டாசி மாதம் பாசாங்குஷ ஏகாதசியை தொடர்ந்து வரும் பவுர்ணமி முதல் உத்தாண ஏகாதசியை அடுத்து வரும் பவுர்ணமி வரையிலான மாதத்தில், பகவான் கிருஷ்ணரை அன்னை யசோதா உரலில் கட்டிய
லீலை நடந்ததால், வைஷ்ணவர்கள் இம்மாதத்தை தாமோதர மாதமாக அழைக்கின்றனர்.

ஆண்டின் 12 மாதங்களில் தாமோதர மாதமே பகவான் கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானதாகும்

இம்மாதத்தில் எவரொருவர் பகவான் ஸ்ரீஹரியின் கோவிலில் நெய் விளக்கேற்றி வழிபடுகின்றாரோ அவருக்கு முன் ஜென்மத்தில்  செய்த பாவங்கள் யாவும் தீர்ந்துவிடும் என நம்பப்படுகிறது

8 comments:

  1. பதிவு மிகவும் பயனுள்ளதாகவும் படங்கள் மிகவும் நன்றாக உள்ளது

    ReplyDelete
  2. தாமோதர மாதம் அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. ஸ்ரீ கிருஷ்ண... கிருஷ்ண கிருஷ்ண..

    ReplyDelete
  4. தாமோதர மாதம் என்ற சொல் பயன்பாட்டினை இப்போதுதான் அறிந்தேன். இவ்வாறாக ஒரு சிறப்பான மாதம் இருப்பதைத் தாங்கள் உரிய புகைப்படங்கள் மற்றும் விளக்கங்களுடன் வெளியிட்டமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. கார்த்திகை தீபத்தின் மகிமை!..
    ஹரே கிருஷ்ண.. ஹரே கிருஷ்ண!..

    ReplyDelete
  6. தாமோதர மாதம் அறியாத செய்தி! பயனுள்ள தகவல்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  7. ஸ்ரீஹரியின் கோயிலில் நெய் தீபமிட்டு நம் பாவங்களிலிருந்து விடுபடுவோம். படங்கள் அனைத்தும் அருமை

    ReplyDelete
  8. தாமோதர மாதம், நெய் தீபம் ஏற்றுவது விளக்கம் அறிந்தேன்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete