Sunday, November 23, 2014

கங்காவதாரண மகோத்ஸவம்






சங்காபிஷேக பாடல் :

கங்கையே முதலாம் மிக்க கடவுண்மா நதிகள் தீர்த்தம்
தங்கமா கலசந் தம்மில் தகுமணம் சேர்த்து வைத்தோம்
அங்கமின் படையும் வண்ணம் ஆடநீர் அபிஷேகித்தோம்
எங்களை ஆண்டுகொள்வாய் ஈஸ்வரா தேவி நீயே!

பகவதி பவலீலா மௌலிமாலே தவாம்பஹ்
கணமனு பரிமாணம் பிராணினோ யே ஸ்ப்ருஷாந்தி!
அமரநகரநாரீ சாமர் க்ராஹிணீணாம்
விகத கலிக லங்கா தங்கமங்கே லுடத்தி!!



"ஹே! கங்கா பகவதியே!  சிவபிரானின் செஞ்சடைமீது
 சீர்மிகு மாலையெனத் திகழ்பவளே!  நின் பவித்ரமான
ஜலத்தில் ஒரு துளி ஸ்பரிசமே பாவங்களைப் போக்கி கலியின் 
வடுவை நீக்கும் தன்மையது.  நீரின் வலிவும் பொலிவும்
புனிதமாக்கி நிர்மலமான எழிலுடையதாக்கும். 
-ஸ்ரீ ஆதி சங்கரர்.

இந்தப் புனிதமான கங்காஷ்டகத்தை யார் ஒருவர் 
மனமிசைந்து பாராயணம் செய்கின்றார்களோ அவர்கள் 
எல்லாப் பாபங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணுபதம் 
அடையும் தகுதிக்கு உயர்வார்கள்.

 அபிஷேகப்பிரியரான சிவபெருமானது தலையில் கங்காதேவி நிரந்தரமாகக் குடியிருந்து குளிர்விக்கிறாள்.

பித்ரு கடனை நிறைவேற்றும் பொருட்டு "கங்காஷ்டகம்' என்ற ஸ்லோகத்தை மனம் உருகிப் பாராயணம் செய்து, சிவனருளால் திருவிசலூரில் தனது வீட்டின் கிணற்றிலேயே கங்கையை வரவழைத்தார்  பஜனை சம்பிரதாயத்தின் மும்மூர்த்திகளில் ஒருவராய்த் திகழ்ந்த ஸ்ரீதரஐயாவாள் என்னும் மகான். 

இந்த வைபவம் நடந்தது ஒரு கார்த்திகை மாத அமாவாசை தினத்தில். இப்பொழுதும் கார்த்திகை மாதம்  அமாவாசையன்று ஒவ்வொரு ஆண்டும் இந்த வைபவம் "ஸ்ரீதர ஐயாவாள் கங்காகர்ஷணம்' என்ற பெயரில் திருவிசலூரில் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று மக்கள் பெருந்திரளாகக் கூடி  அப்புனித நீரில் நீராடுவது வழக்கம்.

அவ்வகையில் கங்காவதாரண மகோத்ஸவம் பாகவதர்களின் நாம சங்கீர்த்தனத்துடன் நடைபெற்று , கங்கா பூஜை, கங்காஷ்ட பாராயணம் காலை ஐந்தரை  மணிக்கு நடைபெறும்.

. தொடர்ந்து கங்கா ஸ்நானம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

தஞ்சாவூர் அருகிலுள்ள திருவிசலுõர் கிராமத்தில், ஸ்ரீதர அய்யாவாள் என்ற மகான் வசித்து வந்தார். அந்தணரான இவர் ஒருமுறை திதி கொடுக்கச் சென்ற போது, வழியில் ஏழை ஒருவன் பசியால் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவன் மீது இரக்கப்பட்டு, திதிக்காக வைத்திருந்த உணவை அவனுக்கு கொடுத்து விட்டார். 

இதை சக அந்தணர்கள் எதிர்த்தனர். இந்த பாவத்திற்கு பரிகாரமாக, காசி சென்று கங்கையில் நீராடி வந்தால் தான், அய்யாவாளுக்கு திதி செய்து கொடுப்போம் என கூறிவிட்டனர். 

காசிக்குப் போய் திரும்ப வேண்டும் என்றால் நடக்கிற காரியமா? அய்யாவாள் சிவபெருமானை மனதால் நினைத்து, கங்கையையே திருவிசநல்லுõருக்கு வரவழைத்து விட்டார். 

அவ்வூர் வழியாக ஆறு பெருகி வந்தது. அய்யாவாள் அதில் நீராடினார். அந்த ஆற்றின் பிரவாகத்தை தாங்க முடியாத அந்தணர்கள், அதை அடக்கியருளுமாறு அய்யாவாளிடம் வேண்டினர். அய்யாவாளும் "கங்காஷ்டகம்' என்ற ஸ்லோகத்தைச் சொல்லி, அங்கிருந்த ஒரு கிணற்றில் அதை அடக்கி வைத்தார். இச்சம்பவம் கார்த்திகை சோமவாரத்தன்று நிகழ்ந்தது.

இந்த நிகழ்வின் அடிப்படையில் சங்குகளில் புனிதநீர் நிரப்பி, அத்தீர்த்தத்தை கங்கையாகப் பாவித்து, கார்த்திகை சோமவாரத்தில் அபிஷேகம் செய்கிறார்கள். இறைவனுக்கு மனிதன் கட்டுப்பட்டவன். அதுபோல், பக்தனுக்கு இறைவனை தன்னுள் அடக்கும் சக்தியுண்டு என்பதை விளக்கும் உயரிய தத்துவம் சங்காபிஷேகத்தின் மூலம் விளக்கப்படுகிறது.

சங்கு செல்வத்தின் சின்னம். வற்றாத பொருள் செல்வம் வேண்டும் என இல்லறத்தாரும், இறைவனின் அருள்செல்வம் வேண்டுமென துறவிகளும் இப்பூஜையின் போது வேண்டுவர். வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாக காட்டப்படுகிறது. பகவான் கிருஷ்ணனின் பாஞ்சஜன்யம் என்ற சங்கொலி கேட்டு குரு÷க்ஷத்ர களமே நடுங்கியது என மகாபாரதம் கூறுகிறது.

அபிஷேகத்திற்கு பாத்திரங்களை விட, சங்கு இயற்கையாகவும் வெண்மையானது. சுட்டாலும் வெண்மையாகத்தான் இருக்கும். மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. சங்கில் பால், பன்னீர், பஞ்சகவ்யம் என எதை நிரப்பி அபிஷேகம் செய்தாலும் அதை கங்கையாக பாவித்தே அபிஷேகம் செய்ய வேண்டும்.
கிணற்றுக்குள் பொங்கும் கங்கை..!



9 comments:

  1. அறியாத... சிறப்பான விளக்கம் அம்மா.... நன்றி....

    ReplyDelete
  2. கங்காவரதான மகோத்சவம் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. நம்ப முடியாத கதைகள், ஏதோ தாத் பரியத்தை விளக்க என்று புரியாமல் கதைகளையே உண்மை என்று நம்ப வேண்டுமா.. வாழ்த்துக்கள். கிணற்றுக்குள் பொங்கும் கங்கை படத்துக்கு மேலே இருந்த புகைப் படம்.? திறக்கவில்லை.

    ReplyDelete
  4. போன வருடம் சென்று தரிசனம் செய்து வந்தோம்.இந்த வருடம் மழை அதிகமாய் இருந்ததால் போக வில்லை.

    ReplyDelete
  5. அரிய புகைப்படங்களுடன் அறிந்திராத தகவல்களுடன் நல்ல பதிவு. நன்றி.

    ReplyDelete
  6. ஜோரான கதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சங்காபிஷேகம் தெரிந்தாலும் அதன் மூலம் அறியாதது...
    இன்று அழகிய படங்களுடன் அறியத் தந்தீர்கள் அம்மா...

    ReplyDelete
  8. அரிய புகைப்படங்களுடன் அறிந்திராத தகவல்களுடன் நல்ல பதிவு.

    ReplyDelete
  9. கங்கைத் தகவல்கள் மகிழ்வு
    மிக்க நன்றி சகோதரி.
    இறையாசி நிறையட்டும்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete