Saturday, November 15, 2014

ஸ்ரீ சக்ர மஹா கால பைரவர்




ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்


தனந்தரும் வயிரவன் தளிரடிபணிந்திடின் 
தளர்வுகள் தீர்ந்து விடும் 
மனந் திறந் தவன்பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள்வந்து விடும் சினந்தவிர்த் தன்னையின்
சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலை யீடுயாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

 பைரவர் என்றால் பயத்தை, பாபத்தை நீக்குபவர், என்று பொருள்..

 படைத்தல், காத்தல், அழித்தல் - அதாவது ஒடுக்குதல் ஆகிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் பைரவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்படுகிறது.
படைத்தல் தொழிலை உடுக்கையும், 
காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும், 
அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். 

 பைரவர் கடவுளே அனந்த பைரவராக உலகைப் படைக்கிறார்.

 பின்னர் கால பைரவராக உலகை காக்கிறார். 
அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார். 

இக்கட்டான நேரத்தில் முழு மனதுடன் பைரவரை நினைத்தாலே கூட போதும். சந்தோசத்துடன் உடனே செயல் பட்டு  ஆபத்துகளிலிருந்து காபாற்றுவார். 

காசியில் காலபைரவரையும், 
சிதம்பரத்தில் சொர்ண பைரவரையும் தரிசித்தால் சிறப்பு.
 கலையை ஆட்டுவிக்கும் கடவுளாக கருதப்படும் காலபைரவர் பிரம்மனின் தலையை தன் நகத்தால் கிள்ளி எறிந்து தன் திருவிளையாடலை நடத்தியவர். 
கல்லுக்குறிக்கையில் ஆஞ்சநேயர் மலை, பைரவர் மலைக்கு இடையே படேதலாவு ஏரிக்கரையோரம் மலையடிவாரத்தில் ரம்மியமான சூழலில் காவல் தெய்வமான கால பைரவர் கோயில் அமைந்துள்ளது.
 இங்கு வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் கால பைரவர் எதிரி பயம் நீக்கி மன நிம்மதியை தந்தருள்கிறார்.

செல்வம் செழிக்க வளர்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்தக்காசுகளை அலுவலகம் அல்லது வீட்டில் பணப் பெட்டியில் வைக்க செல்வம் செழிக்கும்.
தலைமை சித்தர் ஸ்ரீ அகத்திய மாமுனிவர், பிரதிஸ்டை செய்து வழிபட்ட ஸ்ரீசக்கரம் உள்ள ஸ்ரீ சக்கராதேவி ஆலயமும், அகத்தியரால் வழிபாடு செய்யபட்ட லிங்கமுமான அருள்மிகு ஸ்ரீ அகஸ்தியலிங்கம் உள்ள திருத்தலமும் ,மூர்த்தி, ஸ்தலம் , தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளையும் தன்னகத்தே உடைய உன்னத திருத்தலமாம் ஸ்ரீ பாலசுப்பரமண்ய சுவாமி திருக்கோவில் , தமிழ்நாட்டில், சேலம் , சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகில் உள்ளது. இந்த கோவிலில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள தனம் தரும் ஸ்ரீ சக்ர மஹா கால பைரவரின் அருள் பார்வையினால் மிகவும் சக்திவாய்ந்தவர். 

மிகவும் சக்தி வாய்ந்த பஞ்ச முக ருட்திராட்சங்கள், வேத மந்திர உருவேற்றி, அற்புத சக்தி வாய்ந்த அதிர்வலைகளுடன் ,பைரவருடைய கருவறையின் மேற்புறத்தில் வேயப்பட்டுள்ளன
தேய்பிறை அஷ்டமி திதியில் ,மாலை 6.30 மணிக்கு மேல் 108 கலசங்களில் தீர்தங்களுடன்,அக்னி ஹோமம் வளர்க்கப்பட்டு, பின்னர், பாலாபிஷேகம், பன்னீர், சந்தனம்,தேன், தயிர், இதர அபிஷேகங்கள் செய்யப்பட்டு, யாக கலச தீர்த்தத்தில் அபிஷேகம் முடிந்து, புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு, வாத்தியங்கள் முழங்க , பைரவ அர்ச்சனை செய்யப்படுகிறது.அன்னதானம் நடைபெறுகிறது.



13 comments:

  1. தெரிந்துகொண்டேன்.

    ReplyDelete
  2. மகா கால பைரவர் அறிந்தேன் உணர்ந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  3. படங்கள் அருமை தோழர்..
    வடைமாலை ஆஞ்சநேயர் ... வாவ்

    ReplyDelete
  4. சிறப்பான தகவல்கள் அம்மா...

    ReplyDelete
  5. எண்ணற்ற தகவல்கள் ...
    பகிர்வுக்கு நன்றி சகோதரி....

    ReplyDelete
  6. காசியில் பைரவர் சன்னதிப் பாண்டா, பிரசாதம் கொடுக்கும் முன் பக்தர்களின் முதுகில் செல்லமாக பலமாகத் தட்டுகிறார். பார்த்துக் கொண்டிருந்த நான் என்னைத் தட்ட வேண்டாமென்று சொல்லிவிட்டேன். இப்படித் தட்டுவதற்கும் ஏதாவது கதை இருக்கிறதா?
    (in lighter vein) வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. பைரவர் என்றாலே பயப்பிராந்திதான் மனதிலே.. என்னவோ தெரியாது சிறுமியாய் இருந்த காலம் தொடக்கம் பைரவர் என்றாலே பயம்.
    கோயில்களில் நாய் வாகனுத்துடன் நாக்கு வெளியே தள்ள சூலத்துடன் நிற்பவரை கண்டு எட்டிப்பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டு ஒரே ஓட்டம்தான்..:)
    ஒழுங்காக் கும்பிடாட்டி நாய் ரூபத்தில வைரவர் வந்து உன்னைக் கடிப்பார்..ன்னு சொல்லிச் சொல்லியே பயமுறுத்தி வளர்த்ததால் என்று நினைக்கின்றேன்.

    அருமையான படமும் அரிய தகவல்களும் சகோதரி!
    நன்றியுடன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. காலபைரவரை பற்றி பல அரிய தகவல்களை தெரிந்து கொண்டேன். நன்றிம்மா.

    ReplyDelete
  9. நிறையத் தகவல்கள். எனக்கு மிகவும் பிடித்தவர் இவர்.. வைரவர்... காலபைரவர்.. கபாலபைரவர்... எப்பவும் குழப்புவேன் இதில்.

    ReplyDelete
  10. பைரவர் குறித்த நிறைய தகவல்கள்! படங்கள் அழகு! நன்றி!

    ReplyDelete
  11. இளமதி, பயந்த குழந்தைகளுக்கு பயம் போக பரைவருக்கு தயிர் சாதம், வடைமாலை சாற்றி வழி படுவார்கள் பயம் போய் விடும் குழந்தைகளுக்கு.

    பைரவர் வழி பாடுபற்றிய செய்திகள் , படங்கள் எல்லாம் அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. பஞ்சமுக ருத்திராட்சக் கூரை, அதிர்வலைகள்
    மிக வித்தியாசமான தகவல் அருமை
    தகவல்களை அறிய ஒரு தற்பெருமை வருகிறது இத்தனை உண்மைகளா என்று
    பாராட்டுகள் சகோதரி
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  13. அன்புடையீர்! வணக்கம்!
    அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (28/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    இணைப்பு: http://gopu1949.blogspot.in/

    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    FRANCE

    ReplyDelete