Wednesday, November 5, 2014

ஐப்பசி விஷு திருவிழா


srivilliputhur_swami.jpg (460×286)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத பௌர்ணமி அன்று நடைபெறும் ஊஞ்சல்  உற்ஸவத்தில் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார் ஸ்ரீரங்கமன்னார். 
மழையோ, வெயிலோ மனிதர்களும், இதர உயிரினங்களும் தாங்கும் சம அளவில் இருக்க வேண்டும்;, எது அதிகமானாலும், துன்பம் தான். 

 காலநிலையை சமநிலையில் வைத்திருக்குமாறு வேண்டும் திருநாளே, விஷு பண்டிகை! விஷு என்றால், சமம்.
இந்தியாவில், விஷுவை இரண்டு முறை கொண்டாடுகிறோம்.

சித்திரை விஷு;  மாதத்தில் கடும் வெயில் அடிக்கும். 

ஐப்பசி விஷு; மாதம் மழையின் தாக்கம் அதிகமாகும். அளவுக்கு மீறிய வெப்பம், மழை இரண்டுமே உயிர்களைப் பாதிக்கும். இது சமநிலையில் இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டும் நாள் தான் விஷு!
ஐப்பசி மாதம் மழைக் காலம் என்பதால், ஆறுகளில் போதுமான அளவு தண்ணீர் ஓட வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டுமென்று வேண்டுமுன், நதிகள் பிறந்த வரலாற்றையும், அதன் புனிதத்தையும் அறிந்து கொண்டால், ஆறுகளை பாதுகாக்க வேண்டுமென்ற எண்ணம் பிறக்கும்.

தமிழகத்தின் உணவு ஆதாரத்தை பாதுகாப்பது காவிரி; தெற்கே இன்னும் வற்றாமல் ஓடிக்கொண்டிருப்பது தாமிரபரணி. இந்த இரண்டு நதிகளையும் உருவாக்கியவர் அகத்தியர் என்கிறது, தாமிரபரணி மகாத்மியம் என்ற நூல்.

இமயமலையில், சிவபார்வதி திருமணத்தைக் காண உலகமே ஒன்று திரண்டது. இதனால், வடக்கே தாழ்ந்து, தெற்கு உயர்ந்தது. உலகை சமநிலைப்படுத்த, அகத்தியரை தெற்கேயுள்ள பொதிகை மலைக்குச் செல்லும்படி சிவன் உத்தரவிட்டார். தன் திருமணக்காட்சியை அங்கேயே காட்டுவதாகவும் வாக்களித்தார். இதனால், தன் மனைவி லோபமுத்திரையை, நீர் வடிவாக்கி, கமண்டலத்தில் அடைத்த அகத்தியர், கமண்டலத்துடன் தெற்கே வந்தார். 
குடகுமலைக்கு வந்த போது, விநாயகர் காகம் வடிவில் வந்து கமண்டலத்தை தட்டி விட்டார். கமண்டலம் சரிந்து தண்ணீர் ஓடி, மிகப்பெரும் ஆறாக உருவெடுத்தது. அது சோலைகளின் நடுவே பரந்து சென்றதால், 'காவிரி' ஆனது. 'கா' என்றால் சோலை; 'விரி' என்றால் பரந்து செல்லுதல்.
கவிழ்ந்த கமண்டலத்தை எடுத்த அகத்தியர், அதில், மீதி தண்ணீர் இருப்பதைக் கண்டார். அதை எடுத்துக் கொண்டு பொதிகை வந்தவர், மலையின் உச்சியில் மீதமிருந்த தணிணீரை ஊற்றினார். அது, தாமிரபரணி என்னும் சிறு நதியாக உருவெடுத்தது.

இந்தப் புராணக்கதை மூலம் உலகிற்கு உணர்த்தப்பட்ட அறிவுரையையே கருத்தில் கொள்ள வேண்டும்.
உலக நன்மை கருதி, ஒரே ஒரு நபர் தன் ஆசையைத் தியாகம் செய்தால் கூட போதும், உலகமே பயன்பெறும் என்ற அரிய தத்துவம் இதில் புதைந்து கிடக்கிறது.
elephantgod.jpg (460×286)
நதிகளின் புனிதத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற 
எண்ணம் வந்தால்தான். நதிகளின் புனிதத் தன்மையும் புரியும்.

ஐப்பசி விஷு நன்னாளில், புனித நதிகளில் நீராடுவது புண்ணியம். இந்நாளில், நம் தேசத்திலுள்ள அத்தனை நதிகளின் கதையையும், புராண வரலாற்று பின்னணியுடன் பெரியவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதுடன், அனைத்து நதிகளும் பெருகி ஓட நம் இஷ்ட தெய்வத்தையும் பிரார்த்தித்துக்கொள்வோம்..!
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விஷு திருவிழாவில், நடராஜமூர்த்திக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுவது கண்கொள்ளாக்காட்சிகத்திகழுகிறது..!

குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விஷு திருவிழா தொடங்கியதும் திருவிலஞ்சிக்குமாரர் குறறாலநாதர் கோயிலுக்கு வருகைபுரியும் நிகழ்ச்சி நடைபெறும்..!

நாள்தோறும் திருவிலஞ்சிக்குமாரர், சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதியுலா வருதல் நடைபெறும்..
குற்றாலநாதர் கோயில் ஐப்பசி விஷு திருவிழாவையொட்டி  நடைபெறும் தேரோட்டம்.
குற்றாலநாதர் கோயில் ஐப்பசி விஷு திருவிழாவையொட்டி திங்கள்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
 விநாயகர், முருகன், சுவாமி, அம்பாள் ஆகிய 4 தேர்களை பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் தேர்திருவிழா சிறப்பாகும்..
குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விஷு திருவிழாவில், நடராஜமூர்த்திக்கு நடைபெற்ற பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை.
தென்னகத்தின் அயோத்தி எனப் போற்றப்படும் கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமர், சீதை ஒரே பீடத்தில் பட்டாபிஷேக கோலத்தில் எழுந்தருளியுள்ளனர். இந்தக் கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் ராமாயணக் காட்சிகள் மூலிகை வர்ணத்தால் வரையப்பட்டுள்ளன.

உற்சவர் ராமருக்கு ஒரு அடி உயரத்தில் பச்சைக்கல் பதித்த வெள்ளி கிரீடம்.

9 comments:

 1. நீங்கள் சொன்னது போல் அனைத்து நதிகளிலும் நீர் நிறைந்து பெருகி ஓட நம் இஷ்ட தெய்வத்தை வணங்கி கொண்டேன்.

  படங்கள் எல்லாம் அற்புதம்.
  சிலரின் தியாகம் பலரின் வாழ்வு. மிக அருமையான பதிவு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. விஷூவைப்பற்றி தெரிந்து கொண்டேன்.
  கால சமநிலை என்றும் சமமாக இருக்கவும், நதிகளில் நீர் நிறைந்து ஓடவும் இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 3. நதிகளின் நிலையும் கதைகளின் பின்புலமும் விளங்கச் சொல்லி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. காலநிலை பற்றிய தகவல்கள் இன்றே அறிந்து கொண்டேன். நதி பிறந்த கதையும் சிறப்பு. தியாக பூமியை சிதைக்காமல் காப்பது அவசியம் என்பதை வளரும் தலைமுறைக்கு உணர்த்த வேண்டும். நன்றிங்க.

  ReplyDelete
 5. உலகம் சமநிலை பெற வேண்டும் என்ற அகத்தியனின் வாக்கு மெய்ப்பட வேண்டும்.

  ReplyDelete
 6. ஐப்பசி விஷுவைப் பற்றி ஐயமற அறிந்தோம்.

  ReplyDelete
 7. ஐப்பசி விஷு தகவல்கள் அருமை! நன்றி!

  ReplyDelete
 8. படங்களுடன் சிறந்த பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 9. ஐப்பசி விஷு பற்றிய தகவல்கள் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.

  படங்கள் அனைத்துமே அருமை.

  ReplyDelete