Monday, November 3, 2014

ஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷி ஜெயந்தி மகோத்சவம்


Yajnavalkya-Sol.jpg (391×483)
suklaveda0508-015.jpg (640×425)
ஸ்ரீயாக்ஞவல்கியர் ஸ்ரீவித்யா ஸ்துதி

ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே சரணம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே வந்தனம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருவே பாதசேவனம்
ஓம் ஸ்ரீ யாக்ஞ வல்க்கிய குருதேவாய புஷ்பாஞ்சலிம்.

ஸ்துதி

ப்ரம்ம ஸ்வரூபா பரமா ஜோதிரூபா ஸநாதனீ
ஸர்வ வித்யாதி தேவீயா தஸ்யை வாண்யை நமோநம:

விஸர்க்க பிந்து மாத்ரேஷ§ யததிஷ்டான மேவஹா
ததிஷ்டா த்ரீயாதேவீ தஸ்யை நீத்யை நமோ நம:

வ்யாக்வா ஸ்வரூபா ஸாதேவீ வ்யாக்தா த்ருஷ்டாத்ரு ரூபிணி
யயாவிநா ப்ரஸங்க்யாவான் ஸங்க்யாம் கர்தும் நசக்யதே

கால ஸங்க் யாஸ்ய ரூபாயா தஸ்யை தேவ்யை நமோ நம:
ப்ரம்ம சித்தாந்த ரூபாயா தஸ்யை வாண்யை நமோநம:

ஸ்மிருதி சக்தி ஞானசக்தி புத்திசக்தி ஸ்வரூபிணி
ப்ரதிபாகல் பராசக்தி யாசதஸ்யை நமோநம:

க்ருபாம் குருஜகன் மாதா மாமேவம் ஹத தேஜஸம்
ஞானம் தேஹி ஸம்ருதம் வித்யாம் சக்திம் சிஷ்யா போதினீம்

யாக்ஞ வல்க்யக்ருதம் வாணீ தோத்ரம் ஏதத்துய: படேத்
ஸகவீந்த்ரோ மகாவாக்மீ பிருகஸ்பதி ஸமோபவேத்
பைண்டிதம்ஸ மேதாவீ ஸுக்வீந்த்ரோய வேதருவம்
இதிஹியாக்ஞ வல்க்ய ஜிஹ்வாத்வாரே

(ஸ்ரீவித்யா ஸ்துதி ஸம்பூர்ணம்)

பள்ளி , கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களை அதிகாலை எழச்செய்து, சூரிய வணக்கம் செய்து யாக்ஞவல்கியருடைய தியான மந்திரம் கூறி வழிபடச் சொல்வது சிறப்பு.
அனுதினமும் இந்தத் துதியை பக்தியோடு சொல்லி தீபமேற்றி வணங்கினால் ஞானமும்,கல்வியில் சிறப்பான தேர்ச்சியும், நல்ல வேலை வாய்ப்புகளும் கிடைக்கும். எல்லா குழந்தைகளுக்கும் நல்லதைத் தேர்ந்தெடுக்கும் ஞானமும் கல்வியும் கிடைத்திட ஸ்ரீயாக்ஞவல்கியரின் குருவருள் சேர்ந்திடும்..!
30291.jpg (120×136)
சாட்சாத் மஹா விஷ்ணுவின் அவதாரமாகப் பிறந்தவர்
avatars9.jpg (1600×1495)
சீதையின் தந்தை ஜனகரின் குரு யாக்ஞவல்கியர்..ஜனக மஹாராஜா தம்மையும் தம் ராஜ்யத்தையும் குரு தட்சிணையாக யாக்ஞவல்கியருக்கு அர்ப்பணித்தார்.ஜனகர் அளிக்க முன்வந்த ராஜ்ய பதவியை மறுத்த யாக்ஞவல்கியர், தம் சிஷ்யர் பூரணமான ஆத்மஞானியாகி விட்டார், என்று தெரிந்து கொண்டார். 

தம் செல்வங்களைத் காத்யாயினி, மைத்திரேயி ஆகிய இரு பத்னிகளுக்கும் பங்கிட்டுத் தந்து துறவறம் மேற்கொண்டார்.

காத்யாயினி அவள் பங்கை அமைதியாகப் பெற்றுக்கொண்டாள். 

ஆனால் மைத்ரேயி பொன்னையும், பொருளையும் விட ஆத்ம ஞானத்தையும், மோக்ஷத்தையுமே அடைய விரும்பி தன் பங்குச் செல்வங்களைத் துறந்து கணவர் காலடியிலே சிஷ்யையாக அமர்ந்தாள். 

பல ஞானிகளை உருவாக்கிய பரமஞானி யாக்ஞவல்கியர். உண்மையான பிரம்மரிஷி சக்கரவர்த்தியாகத்திகழ்ந்தார்..! 
ST_160047000000.jpg (318×219)
நான்கு வேதங்களையும் தொகுத்த ஸ்ரீவேத வியாசரின் முக்கிய சீடர்களில் ஒருவர் யாக்ஞவல்கியர். வியாசருக்கும் அவருக்கும் ஏற்பட்ட சிறு மனக்கசப்பு காரணமாக, தான் கற்ற யஜுர் வேதத்தை 
யாக்ஞ வல்கியர் மீண்டும் அசானுக்கே திரும்பத்தர நேரிட்டது. 
yajnavalkya_idh111.jpg (309×500)
தான் கற்றதை அப்படியே தன் வாய் வழியாக வெளியே .. யாக்ஞவல்கியரும் கக்கி விட்டார். அதை வேத தெய்வம், தித்திரி என்ற பறவை வடிவத்தில் வந்து உண்டது. அப்படி சாப்பிட்டது தான் தைத்திரியம் என்ற உபநிஷதமாக உருப்பெற்றது. வேதத்தின் சாரமே உபநிஷதம் 
ST_174011000000.jpg (402×300)
யாக்ஞவல்கியர் வியாசரை விட்டுப் பிரிந்து கடுந்தவம் இயற்றினார். 

அவர் முன் சூரிய பகவான் குதிரை முகத்துடன் தோன்றி யஜுர் வேதத்தை இன்னொரு முறையில் கற்றுக் கொடுத்தார். 

வாஜி என்ற சொல் குதிரையைக் குறிக்கும். எனவே யஜுர் வேதத்தின் இப்பகுதிக்கு வாஜஸ்னேயி ஸம்ஹிதை என்றே பெயர். 
Yajnavalkya.jpg (391×483)
 ,கங்கை நதிக்கரையில் வாழ்ந்த- நீண்டகாலமாக குழந்தைச்செல்வம் இல்லாத- பிரம்மாதர்-சுநந்தா தம்பதியர், பிரம்மாதரின் கடும் தவத்தின் பலனாக திருமால் தரிசனம் கிடைத்தது..,  பிரம்மரதர். சர்வ வேதாந்த சாஸ்திரங்களையும் உணர்ந்து, ஒப்பற்ற அழகும் அதி மேதாவியாகவும் சிறந்த பண்புகளையும் உடைய ஒரு ஆண் மகவு வேண்டும் என்று கேட்டார்

அப்படியானால் நானேதான் உன் புத்திரனாகப் பிறக்க வேண்டும். 
தந்தேன் வரம், என்றார் மகாவிஷ்ணு. 

 வரப்பயனாக சுநந்தா கருத்தரித்தும், ஐந்து ஆண்டுகள் ஆகியும், வயிற்றிலிருந்த கரு வெளியே வராமல் தங்கிவிட்டது!

உலக மாயை தன்னைப் பற்றிக்கொண்டு விடும் என்ற காரணத்தால் அந்த ஞானக்குழந்தை வெளிவரவில்லை என்பதைப் புரிந்துகொண்ட பிரம்மாதர், மீண்டும் தவத்தில் ஆழ்ந்தார். 

அதன் பலனாக திருமால் காட்சிக் கொடுத்து, தனது அம்சமாகப் பிறக்கப்போவதால் உலகமாயை பற்றிக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று தந்தைக்கும் குழந்தைக்கும் உணர்த்தினார். 
Yogeeswara+Yajnavalkya.JPG (246×400)
தொடர்ந்து, கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசி, சதய நட்சத்திரமும், தனுசு லக்னமும் கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று குழந்தை பிறக்க, அதற்கு திருமாலே ஞான உபதேசம் செய்வித்தார்.

குழந்தையை காண வந்த மகரிஷிகளும் ஞானிகளும், ‘யக்ஞங்களுக்கு ஆதாரமாக விளங்கும் வேதங்களை ஓதுபவன்’ எனும் பொருளில் ‘யாக்ஞவல்கியர்’ என்று அந்த குழந்தைக்கு பெயர் சூட்டினர். 

உரிய பருவத்தில் குரு பகவான் உபநயனம் செய்துவைக்க, பல்வேறு சாஸ்திரங்களையும் வைசம்பாயனர் வம்சத்து குருநாதர்களிடம் கசடறக் கற்று, மிகப்பெரிய ஞானியாகத் திகழ்ந்தார் யாக்ஞவல்கியர்.

ஸ்ரீ யாக்ஞவல்கியர் சிறந்த யோகீஸ்வரர்! இவர் சுக்லயஜுர் வேதத்தை காயத்ரி தேவியின் வழிகாட்டலின்படி சூரிய பகவானிடம் கற்று வெளிக்கொணர்ந்தவர். 

எண்ணற்ற கிரந்தங்களை இயற்றியவர். இவருடைய பிரகதாரண்ய உபநிஷத் என்ற நூல் ஆன்மிகத்தையும் ஆன்மாவின் மேன்மையையும் விவரிக்கின்றது. இவருடைய ஸ்மிருதிகள் பல சட்ட நுணுக்கங்களை தெளிவாகத் தெரிவிக்கின்றது.

சென்னை பழைய பல்லாவரம், பெருமாள் கோயில் தெருவில் 
ஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷிக்காக ஒரு மகத்தான ஆலயத்தை 
ஸ்ரீ யாக்ஞவல்கியசபை என்ற அமைப்பு கடந்த 2000 ஆம் ஆண்டு அமைத்தது.
gargi.jpg (450×431)
ஆலயத்தில் ஸ்ரீ யோக கணபதி, காத்யாயினீ சமேத ஸ்ரீ யாக்ஞவல்கியர்,
சூரிய பகவான், காயத்ரி தேவி, மைத்ரேயீ தெய்வங்களுக்குத் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ யாக்ஞவல்கியர் மகரிஷி ஜெயந்தி மகோத்சவம் , 3.11.2014 ஆம் தேதி துவங்கி 9.11.2014 ஆம் தேதி வரை கொண்டாடப்படுவதனையொட்டி, சதுர்வேத பாராயணங்கள், ஹோமங்கள்,குத்துவிளக்கு பூஜை, உபன்யாசங்கள் நடைபெறுகின்றன.

prashna20upanishad.jpg (493×335)
yoga1.png (297×210)bhimunipatnam-beach.jpg (505×250)
rajahmundry+1828.jpg (1024×576)


11 comments:

 1. அரிய தகவல்கள்! அறியாத ஆச்சர்யங்கள்!

  ReplyDelete
 2. மகரிஷி ஜெயந்தி மகோத்சவம் அறிந்தேன் உணர்ந்தேன்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
 3. ஸ்ரீயாக்ஞவல்கியமகரிஷி பற்றிய செய்திகள், கதைகள் அவரின் பெருமைகளை தெரிந்துகொண்டேன். நன்றிகள்.

  ReplyDelete
 4. சிறந்த பதிவு
  தொடருங்கள்

  ReplyDelete
 5. அபூர்வமான அழகிய படங்களுடன் -
  மகரிஷி ஸ்ரீ யாக்ஞவல்கியர் பற்றிய பதிவு அருமை..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 6. எத்தனை எத்தனை கதைகள் .?ஏதோ காலத்தில்வாழ்ந்ததாகக் கருதப் படும் முனிவருக்கு என்று ஒரு அடையாளப் படம்...! கதைகள் அறியாதது. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 7. யாக்ஞவல்ய மஹரிஷி பற்றிய அரிய தகவல்களை தெரிந்து கொண்டேன்! சிறப்பான பகிர்வு! நன்றி!

  ReplyDelete
 8. படங்களும் பகிர்வும் அருமை அம்மா...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. ஒரு மகரிஷியைப் பற்றி இவ்வளவு அரிய தகவல்கள் தந்தமைக்கு என் வணக்கம். உங்கள் முனைப்பு எனக்கு ஆச்சர்யம்.. இன்னமும் பல பதிவுகள் உங்கள் வலைப்பூவில் பூக்கட்டும். உங்கள் முந்தைய பூக்களும் பூச்சிகளையும் ரசித்தேன்.. எங்கு தான் படங்களைப் பிடிக்கிறீர்களோ!

  ReplyDelete
 10. தெரியாத தகவல்கள்......

  படங்களும் மிக அருமை.

  ReplyDelete
 11. யாக்ஞ்வல்கர் பற்றிய ஆச்சரியமான தகவல்கள். சுவாரஸ்யமாக அவரது ஸ்துதியுடன் தந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete