Tuesday, September 6, 2011

பொன் ஓணம் கொண்டாட்டம்.


Maa Laxmi Glitter Graphics Myspace Orkut Friendster Multiply Hi5 Websites Blogs
blessed joyful Onam comments Graphics Myspace
சிங்க (ஆவ்ணி)மாசத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரைஇருக்கும் 10 நாட்கள்தான் விழா நாட்கள். ஓணம் பண்டிகை - கேரளப் பொங்கல்னு கூட சொல்லலாம் :) .



 அறுவடைக் காலத்தின் ஆரம்பத்தினை முன்னிட்டு மலையாள ஆண்டின் முதல் மாதத்தில் (ஆகஸ்ட் - செப்டம்பர்) கேரளாவில் கொண்டாடப்படுகிறது. 
பத்து நாட்களுக்கும் தனித்தனியாக பெயரெல்லாம் 
கொடுத்து கொண்டாடுகிறார்கள்!..

அத்தம் நாளுடன் ஆரம்பிக்கிற ஓணம், சித்திர், சோதி(சுவாதி), விசாகம், அனிஷம், த்ரிகேட்டா, மூலம், பூராடம், உத்தராடம் என்று வந்து, இறுதியில முக்கிய நாளான திருஓணம் அன்று முடிகிற்து.
மஹாபலிச் சக்கரவர்த்தி வேள்விகள் செய்து, வேள்வியில் வரும் அத்தனை பேருக்கும் தான, தருமங்கள் கொடுத்து வந்தார்.

ஏற்கெனவே தேவர்களால் வெல்ல முடியாமல் இருக்கின்றார். தேவலோகத்தையும் ஆண்டு வருகின்றார் இவர் மேலும் மேலும் வேள்விகள் செய்து வந்தால் அவர் சக்தி இன்னும் அதிகம் ஆகிவிடுமே என நினைத்த தேவர்கள், இறைவனை வேண்ட, அவரும் ஏற்கெனவே தாம் காச்யபரின் என்பவரின் மனைவி வயிற்றில் பிறந்திருப்பதாய்த் தேவர்களிடம் தெரிவிக்கிறார். 

அந்தப் பிள்ளைக்குத் தக்க சமயம் வந்ததும் உபநயனம் செய்விக்கின்றார் காச்யபர்.  மஹாபலியின் வேள்வியில் செய்யப் படும் தானங்கள் பற்றிக் கேள்விப்பட்டு பிரம்மச்சாரியாக அங்கே வந்தார் மகா விஷ்ணு.
கையிலே தாழங்குடை, காலிலே பாதரட்சைகள். திருவோட்டை ஏந்திக் கொண்டு, உலகுக்கே அன்னம் அளிப்பவனும், உலகுக்கே பிட்சை போடுபவனுமான மஹாபலியிடம் வந்து பிச்சை கேட்டான்.

 "பவதி பிட்சாம் தேஹி!" என!  மஹாபலியிடம்!

மாயக் கள்வன், சிரித்துக் கொண்டே, "மஹாபலிச் சக்கரவர்த்தியே, நான் காச்யபரின் மகன். எனக்கு வேறு ஒன்றும் வேண்டாம். என் காலால் அளந்த மூவடி மண்ணே போதும். அதைக் கொடுங்கள்." என்று சொல்ல, மஹாபலியும் அவ்வண்ணமே தந்தேன் எனத் தன் கையில் உள்ள கமண்டலத்தில் நீர் வார்த்துத் தானம் செய்ய எத்தனிக்கின்றான்.

அசுர குருவான சுக்ராசாரியாருக்குப் புரிகின்றது உலகாள்பவனே, வாமன வடிவத்தில் வந்திருக்கின்றான், என்றும், இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கின்றது என்றும். 

உடனேயே குலகுருவான அவர் மஹாபலியிடம்  தானத்துக்கு ஒத்துக் கொள்ளாதே! இது அந்த மஹாவிஷ்ணுவின் தந்திரம், வந்திருப்பது கூட அவன் தான் என்று சந்தேகிக்கின்றேன். என்று எடுத்துரைத்தார்..!

மஹாபலியோ ஆஹா, அந்த சாட்சாத் மஹாவிஷ்ணுவே வந்தான் என்றால் நான் அதை மறுப்பதும் முறையாமோ?? தானம் கொடுத்தே தீருவேன் என்று சொல்லிவிட்டு, தன் கைக் கமண்டலத்தின் நீரால் அர்க்கியம் அளித்துத் தானம் கொடுக்க முயல, சுக்ராசாரியார் ஒரு வண்டு உருவில் கமண்டலத்தின் வாயை அடைக்க, அவர் தந்திரம் புரிந்த மஹாவிஷ்ணு, வண்டை ஒரு சிறு தர்ப்பைப் புல்லால் குத்தித் தள்ள, தானம் வழங்கப் படுகின்றது.

சிறுவன் அளக்க ஆரம்பிக்கின்றான். ஆனால்??? இது என்ன??? இவன் வாமனனா??? திரி விக்கிரமனா??? வளர்ந்து கொண்டே போகின்றானே??
ஓங்கி உலகளக்க ஆரம்பிக்கின்றார் சிறுவன் வடிவில் வந்த மஹாவிஷ்ணு.

ஒரு அடியால் இந்த பூமியையும், மறு அடியால் விண்ணையும் அளந்தாயிற்று. மூன்றடிக்கு இன்னொரு அடி குறையுதே?? மஹாபலி, இது என்ன?? மூன்றாவது அடியை எங்கே வைப்பேன்? என்று கேட்க, மஹாபலியோ, "தந்தேன் ஸ்வாமி!" என இரு கையையும் கூப்பிக் கொண்டு பணிவோடு, அவன் தாள் பணிய, அவன் தலையில் மூன்றாவது அடியை வைத்து ஒரு அழுத்து அழுத்திப் பாதாளத்துக்கு மஹாபலியை அனுப்புவதோடு அல்லாமல், அவன் பக்தியை மெச்சி அவனுக்கு முக்தியையும் கொடுக்கின்றார், உலகாள வந்த பரந்தாமன்.

அப்போது பரந்தாமனிடம் தான் நாட்டு மக்களிடம் பெரும் அன்பு வைத்திருப்பதால் வருடம் ஓர் முறை பாதாளத்தில் இருந்து நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு, மகிழ சந்தர்ப்பம் கொடுக்குமாறு மகாபலி வேண்ட பரந்தாமனும் அப்படியே அருளினார்..!

மகாபலியை வரவேற்க வாசலில் போடும் பூக்களம் அலங்காரம் பண்டைய நாட்களில் ஹஸ்த்தம் ( அத்தம்) நட்சத்திரம் வரும் முதல்நாளே ஆரம்பிக்குமாம்.

குடும்பத்திலே இருக்கும் ஆண்பிள்ளைகள் அத்தப்பூ என்னும் பூவை சேகரித்து வந்து  பூக்களத்துலே முதல்லே வைத்து பிறகு தினமும் வெவ்வேறு பூக்களைச் சேகரித்து  அலங்கரித்துக்கொண்டே இருப்பார்கள்.

இப்படியே 10 நாள் ஆனதும் அந்தக் கோலம் பிரமாண்டமாய் உருவாகிவிடும் ..

ஓணத்தினத்தில் காலையிலே புது அரிசியை இடித்து  மாவாக்கி இலையில் எழுதிய அடை, ஆவியில் புழுங்கி அதைப் பாயாசம் வைத்து கடவுளுக்குப் படையல் வைப்பது வழக்கம் ..!
[o.JPG]

[Onam3.jpg]


[onam1.bmp]

44 comments:

  1. மகாபலி கதை தான் ஓணத்தின் பின்னணியா?
    வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஓணத்தின் போது கேரளா போகவேண்டும்..ஹ்ம்ம்ம்.
    அருமையான படங்கள், வழக்கம் போல்.

    ReplyDelete
  2. திருவோணம் பற்றிய சுவையான விவரங்கள்,படங்கள் மிக அழகு.
    வாமன அவதாரம் பற்றிய அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஓணம் குறித்து அருமையாக அறிய வைத்தீர்கள் சகோதரி ........

    ReplyDelete
  4. படங்களும்,பகிர்வும் அருமை,

    ReplyDelete
  5. கேரளா விழாக்கள்..
    வித்தியாசமானவைகள்..
    பகிவுக்கு நன்றி தோழி..

    ReplyDelete
  6. அப்பாதுரை said...
    மகாபலி கதை தான் ஓணத்தின் பின்னணியா?
    வாழ்க்கையில் ஒரு தடவையாவது ஓணத்தின் போது கேரளா போகவேண்டும்..ஹ்ம்ம்ம்.
    அருமையான படங்கள், வழக்கம் போல்.

    ஓங்கி உலகளந்த உத்தமன் அருளோடு கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  7. RAMVI said...
    திருவோணம் பற்றிய சுவையான விவரங்கள்,படங்கள் மிக அழகு.
    வாமன அவதாரம் பற்றிய அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  8. koodal bala said...
    ஓணம் குறித்து அருமையாக அறிய வைத்தீர்கள் சகோதரி ......../

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  9. ஸாதிகா said...
    படங்களும்,பகிர்வும் அருமை,/

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  10. வேடந்தாங்கல் - கருன் *! said...
    கேரளா விழாக்கள்..
    வித்தியாசமானவைகள்..
    பகிவுக்கு நன்றி தோழி../

    வித்தியாசமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  11. சட்டுனு கேரளா சென்று அங்கு ஓணம் கொண்டாடி இறைவனை தரிசித்து பஷணம் உண்டு நிகழ்ச்சிகள் பலதும் கண்டு களித்து திரும்பிய உணர்வு ராஜேஸ்வரி உங்களுடைய இந்த பகிர்வும் படங்களும் மனதை நிறைக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லைப்பா...

    முதல் படமே மஹாலக்‌ஷ்மி இப்படி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இப்ப தான் முதல் முறை பார்க்கிறேன்பா...

    அன்பு நன்றிகள் ராஜேஸ்வரி பகிர்வுக்கு...

    ReplyDelete
  12. 35 வருடங்களாக இங்கே கேரள மக்கள் திருவோணப்பண்டிகையைக் கொன்டாடுவதைப்பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு ஓணத்தின்போதும் இங்குள்ள கேரள உணவகத்திலிருந்து அனைத்து உணவுகளும் வீட்டுக்கு வரும். ஆனால் உங்கள் பதிவினைப்பார்த்த பின் ஒரு தடவையாவது திருவோண சமயத்தில் கேரளா பக்கம் போக வேன்டும் என்ற ஆசை பிறக்கிறது. அருமையான பதிவு. புகைப்படங்கள் மிக அழகு. அதுவும் மஹாபலியின் தலை மீது விஷ்ணு தன் காலை வைக்கும் ஓவியம் மிக அழகு. எங்கேயிருந்து பிடித்தீர்கள் இந்தப் ப‌டத்தை?

    ReplyDelete
  13. படங்கள் பார்த்து கொண்டே இருக்க சொல்கிறது.

    ReplyDelete
  14. காலத்துக்கு ஏற்ப பண்டிகைக் கொண்டாட்டங்களும் மாறி வருகின்றன. முன்பெல்லாம் அத்தம் துவக்க நாளில் வீட்டின் முன் மாதேரு என்று சொல்லப்படும் களிமண்ணால் செய்த உருவம் பிரதிஷ்டை செய்வித்து பத்து நாளும் மலரிட்டு பூஜை செய்து அதை சுற்றி பெண்கள் ஓணக்களிஎனும் ஒரு வகை நடனம் ஆடுவார்கள்.நளினமும் கடினமும் கலந்த நடனம் அது. இப்போது பூக்களம் வைப்பதே கொண்டாட்டத்தின் முக்கிய பங்காகிறது. எல்லோருக்கும் ஓண வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. G.M Balasubramaniam said...
    காலத்துக்கு ஏற்ப பண்டிகைக் கொண்டாட்டங்களும் மாறி வருகின்றன. முன்பெல்லாம் அத்தம் துவக்க நாளில் வீட்டின் முன் மாதேரு என்று சொல்லப்படும் களிமண்ணால் செய்த உருவம் பிரதிஷ்டை செய்வித்து பத்து நாளும் மலரிட்டு பூஜை செய்து அதை சுற்றி பெண்கள் ஓணக்களிஎனும் ஒரு வகை நடனம் ஆடுவார்கள்.நளினமும் கடினமும் கலந்த நடனம் அது. இப்போது பூக்களம் வைப்பதே கொண்டாட்டத்தின் முக்கிய பங்காகிறது. எல்லோருக்கும் ஓண வாழ்த்துக்கள்./

    மாதேரு செய்து மலரிட்டு வணங்கிய மலரும் நினைவுப் பகிர்வுகளுக்கும், கருத்துரைகளுக்கும் நன்றி ஐயா.
    எல்லோருக்கும் ஓண வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தமிழ் உதயம் said...
    படங்கள் பார்த்து கொண்டே இருக்க சொல்கிறது.//

    நன்றி

    ReplyDelete
  17. மஞ்சுபாஷிணி said...//

    மனதை நிறைத்த அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  18. அசத்தல் பதிவு
    எப்படி இப்படி தொடர்ந்து அந்த அந்த நாட்களுக்குத்
    தகுந்தாற்போல மிகச் சரியாகவும் நிறைவான தகவல்களுடனும்
    அசத்தலான படங்களுடன் பதிவை தருகிறீர்கள் என்
    ஆச்சரியமாக இருக்கிறது
    உங்கள் தயவால் அனைத்து ஆன்மீக விசயங்களை
    மட்டுமல்லாது உலகின் பல நல்ல சுற்றுலத் தலங்களையும்
    மிக எளிதாகச் சுற்றி வருகிறோம்
    ஆண்டவன் உங்களுக்கு எல்லா நலங்களையும்
    குறைவின்றி வழங்கவேணுமாய் நாங்கள் பிரார்த்திகிறோம்

    ReplyDelete
  19. மகாபலிச் சக்கரவர்த்தி மலையாள சாம்ராஜ்யத்திற்கு
    அரும்பெரும் செயல்களை செய்துள்ளார் என்பது
    சரித்திரவழிச் செய்தி.
    அவரின் மண்ணுலக வரவினைக்கொண்டாடும்
    இனிய விழாவாம் ஓணம் திருநாள் பற்றிய அழகிய விளக்கம்
    சகோதரி.
    பகிர்வுக்கு நன்றி.
    படங்களில் புதுமை.

    ReplyDelete
  20. படகுப் போட்டியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். குருவாயூரப்பன் மனது வைக்கவேண்டும்.

    ReplyDelete
  21. ஓணக்கோடி, ஓண ஊஞ்சலாடினது, கைநீட்டம்,ன்னு கொண்டாடினது நினைவுக்கு வருது. கை கொட்டுக் களியும் இந்தச் சமயத்தில் பார்க்க வேண்டிய ஒன்னு.

    ReplyDelete
  22. ஓணம் பற்றிய சுவையான தகவல்கள், அருமையான படங்கள்.(அதுவும்
    அந்தப் படையல் படம்!)நன்றி.

    ReplyDelete
  23. பொன் மகள் வந்தாள்!
    பொன் ஓணம் தந்தாள்!!

    பூக்கோலங்கள் யாவும் அழகோ அழகு.
    கதக்களி டான்ஸ், மலையான மகளிரின் நடனங்கள், படகு ஓட்டமும் ஆட்டமும், பிரஸாத வகையறாக்கள், யானைகள் ஊர்வலம் எல்லாமே சூப்பராக படமாகவே கொடுத்து விட்டீர்கள்.

    வாமனாவதாரக்கதையை சுருக்கமாகச் சொல்லி, தெரியாதவர்களும் தெரிந்து கொள்ள உதவியுள்ளீர்கள்.

    கேரளாவுக்கே தாங்கள், தங்களுடன் கூட்டிச்சென்று, அனைத்து வைபவங்களையும், தரிஸிக்கச் செய்த உணர்வு ஏற்பட்டது. நன்றி.

    ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள்.

    பதிவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

    vgk

    ReplyDelete
  24. Ramani said...//

    அசத்தலான கருத்துரைகளுக்கும், நலமான பிரார்த்தனைகளுக்கும், இதயம் கனிந்து நிறைந்த நன்றிகளை தங்களுக்கு உரித்தாக்குகிறேன் ஐயா.

    ReplyDelete
  25. மனோ சாமிநாதன் said.../

    கேரளா பக்கம் சென்று தரிசித்து முத்து முத்தான புகைப்பட பகிர்வுகளை அளிக்க எதிர்பார்க்கிறோம் முத்துச் சிதறலிடம்.
    கருத்துரைகளுக்கு நன்றி மேடம்!

    ReplyDelete
  26. மகேந்திரன் said...//

    புதுமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  27. DrPKandaswamyPhD said...
    படகுப் போட்டியை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன். குருவாயூரப்பன் மனது வைக்கவேண்டும்./

    குருவாயூரப்பன் அருள்புரிய பிரார்த்திக்கிறேன்.

    கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  28. சென்னை பித்தன் said...
    ஓணம் பற்றிய சுவையான தகவல்கள், அருமையான படங்கள்.(அதுவும்
    அந்தப் படையல் படம்!)நன்றி./

    சுவையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  29. வை.கோபாலகிருஷ்ணன் said...
    பொன் மகள் வந்தாள்!
    பொன் ஓணம் தந்தாள்!!

    பூக்கோலங்கள் யாவும் அழகோ அழகு..../
    மனம் லயித்து அழகான அருமையான கருத்துரையிட்ட தங்களின் அசத்தலான கருத்துரைகளுக்கும், நலமான பிரார்த்தனைகளுக்கும், இதயம் கனிந்து நிறைந்த நன்றிகளை தங்களுக்கு உரித்தாக்குகிறேன் ஐயா.

    ReplyDelete
  30. படங்களுடன் ஓணக்கொண்டாட்டம் கேரளா போய் நேரில் கலந்து கொண்ட திருப்தியைத் தந்தது. உங்களின் படத்தேர்வு என்னை பிரமிக்க வைக்கிறது. பாராட்ட வார்த்தைகளில்லை.

    ReplyDelete
  31. அருமையான பதிவு.
    அழகான படங்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. கேரளாவின் வசந்தத்தை வரவேற்க்கும் வண்ணமிகு திருவிழா...


    ஓணம் விருந்து மிகவும் பிடிக்கும் நண்பர் ஒருவரி வீட்டில் எனக்கு கிடைத்தது....

    பொறியல் மட்டுமே போதும் என்ற அளவுக்கு இருந்தது...


    பதிவுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  33. ஓணக்கொண்டாட்டங்கள் பற்றிய தகவல்களுக்கு நன்றி. நல்ல பகிர்வு.

    அடை பிரதமன், இலை அடை, நேந்திரங்காய் உப்பேரி.....அட..அட...

    ReplyDelete
  34. ஹப்பா!.. கண்கொள்ளா கவின்மிகு காட்சிகள்!
    தங்களுக்கு அன்பான ஓணம் திருவிழா வாழ்த்துகள்!

    ReplyDelete
  35. திருவோணம் பற்றிய சுவையான விவரங்கள்,படங்கள் மிக அழகு.அருமையான பதிவு. அழகிய விளக்கம்
    சகோதரி.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  36. நேற்றைய பதிவில் மகாபலியை பத்தி முழுசா வர்லையேன்னு பாத்தேன்... இன்று அது பூர்த்தியாயிடுச்சு... ஓண்ப்பண்டிகையே கொண்டாடின சந்தோசம் உங்கள் பதிவை பார்த்த போது ஏற்பட்டது..... உங்களது தளம் ஒரு ஆன்மீக என்சைக்கிளோ பீடியாவாக இருக்கிறது

    ReplyDelete
  37. வாமனன் கதை தெரிந்ததுதான் என்றாலும் மறுபடி முழுதும் சுவாரஸ்யமாகப் படித்தேன். நம்ப முடியுமோ இல்லையோ அந்தக் காட்சியை கற்பனை கூட செய்ய முடிவதில்லை. அவ்வளவு பிரம்மாண்டம்.அசத்தலான படங்களுடன் பதிவு அமர்க்களம்.

    ReplyDelete
  38. படங்களும்...பகிர்வும் அருமை...

    ReplyDelete
  39. I am celebarating Onam along with you Rajeswari, along with your beautiful pictures.
    I simply love it.
    viji

    ReplyDelete
  40. ;)
    வநமாலீ கதீ சார்ங்கீ
    சங்கீ சக்ரீ ச நந்தகீ!
    ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது!!

    ReplyDelete
  41. திருவோணம் பற்றிய சுவையான விவரங்கள்,படங்கள் மிக அழகு.
    வாமன அவதாரம் பற்றிய அருமையான தகவல்.
    பகிர்வுக்கு நன்றி.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி. sridhar_kri@dataonein

    ReplyDelete
  42. 991+2+1=994 ;)))))

    பதிலும் அழகு. மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete