Sunday, September 25, 2011

கொள்ளை அழகு கொட்டிக்கிடக்கும் கோனார்க்.




பிரத்யட்ச தெய்வமாக வழிபடும் சூரியனுக்காக மாபெரும் கோயில் ஒன்று ஒரிசா மாநிலத்தில் கோனார்க் என்ற இடத்தில்அமைந்துள்ளது.

கோயில் என்ற முறையில் மட்டும் அல்லாமல் கட்டடக் கலையின், சிற்பக் கலையின் சுரங்கமாகவும் கண்டு பிரமித்தோம்.


 வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்திய சுற்றுலாப் பயணிகளை விட மிக அதிகம் என்பது உண்மை.

பூரி கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்த கோனார்க் சூரியக் கோயில் கடந்த காலங்களில் பராமரிப்பின்றியும், கடல் அலைகளின் சீற்றத்தாலும் பெருமளவு சிதிலமடைந்துவிட்டது.


எனினும் மீதமிருப்பவற்றை மட்டும் காண ஒரு நாளும், இரண்டு கண்களும் போதாது. அவ்வளவு அற்புதமான கலை நயம் மிளிர்கிறது.

இந்த கோயில், முதலாம் நரசிம்ம தேவனால் 13ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று வரலாறு கூறுகிறது.



கோனார்க் கோயிலின் அமைப்பைப் பார்த்தால் நாம் வியந்து போவோம்... அந்த காலத்திலேயே இப்படி ஒரு கட்டட அமைப்பா என்று. கோயிலுக்குள் எங்கும் தூண்கள் காணப்படவில்லை. அதுபற்றி கேட்டதற்கு, ஒவ்வொரு கற்களுக்கும் நடுவில் இரும்புத் துண்டுகளைக் கொடுத்து இணைத்து கட்டியுள்ளனர். 


ஏழு குதிரைகள் பூட்டி 24 சக்கரங்களைக் கொண்ட தேரில் சூரியன் எழுந்தருளுவது போல் இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. 7 குதிரைகள் என்பது 7 நாட்களும், 24 சக்கரங்கள் என்பது 24 மணி நேரத்தையும் குறிக்கும் விதத்தில் இந்த கோயிலின் அமைப்பு உள்ளது. இந்த கோயிலின் கோபுரம் சரியத் துவங்கியதால் சூரியநாரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு தற்போது பூரியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.


இந்த கோயிலுக்கு வரும் மூன்று தலைமுறைக்கும் தனித்தனியான சிற்பங்கள் உள்ளன. அதாவது பேரன் பேத்திகளுக்காக விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சிற்பங்கள் மிக குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.தாய், தந்தைக்காக ஊடல், ஆடல் போன்றவையும், தாத்தா பாட்டிக்கு என ஆன்மீகச் சிற்பங்களும் இடம்பெற்றிருக்கின்றன.


 கோயிலில் மூன்று பிரிவுகளாகப் பிரித்து அதன் அமைப்பு இருந்துள்ளது. அதன்படி ஒவ்வொரு 4 மாதத்திலும் ஒவ்வொரு பிரிவின் வழியாக சூரிய ஒளி சூரியனார் சிலை மீது படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாழிகை, நேரத்தை துல்லியமாகக் கணக்கிடும் வகையில் இதன் அமைப்பு இருந்துள்ளது.

பெரும்பாலும் சிதிலமடைந்து, தன் தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கும் இந்த கோயிலை இந்த நிலையிலேயாவது நிலைநிறுத்தி எதிர்கால சந்ததிகளுக்கு காட்டும் வகையில், உலகப் பாரம்பரிய சின்னமாக அறிவித்து பராமரித்து வருகிறது யுனெஸ்கோ.

[Konark+Sun+temple+wallpaper.jpg]

சாலை மார்கம் : ஒரிசா மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து தேசிய நெடுஞ்சாலைகள் கோனார்க்கை இணைக்கின்றன. பூரி, புவனேஸ்வர், பிப்லி போன்ற பல நகரங்களில் இருந்து பேருந்துகள் மூலமாகவோ, சொந்த வாகனம் மூலமாகவோ கோனார்க் செல்லலாம்.

ரயில் மார்கம் : பூரி ரயில் நிலையத்தில் இருந்து 31 கி.மீ. தொலைவிலும், புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் இருந்து 64 கி.மீ. தொலைவிலும் கோனார்க் உள்ளது.
Historical Places in India

விமான மார்கம் : புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து 64 கி.மீ. தொலைவில் கோனார்க் உள்ளது. சென்னை, டெல்லி, ஹைதராபாத், கொல்கட்டா, நாக்பூர் விமான நிலையங்களில் இருந்து புவனேஸ்வருக்கு நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
[konarkgaurdiansw.jpg]
Konark also has enticing beaches within the circumference of 3 km from the temple. 
[konark+beaches.jpg]



[Konark+Sun+temple+view.jpg]

[Konark+Sun+temple+Photo.jpg]
[Night+view+of+konark+sun+temple.jpg]

34 comments:

  1. ”கோனார்க்” பற்றி
    கோனார் நோட்ஸ்
    போல அனைத்து விபரங்களும், அழகழகான படங்களுடன் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.

    [Copy & Paste போடும் வசதிகளை இன்னும் நீங்கள் சரிசெய்யாததால், இன்று இந்தக் குட்டியூண்டு கமெண்ட் மட்டுமே]

    vgk

    ReplyDelete
  2. கோனார்க்.கொள்ளை அழகு!
    இந்த சிற்பங்களில் எத்தனை வரலாறு பொதிந்துள்ளதோ?
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. ஆஹா அழகான சுற்றுலா தளம் பகிர்வுக்கு நன்றி மேடம் ,
    படங்களும் அருமை

    ReplyDelete
  4. பதிவும் படங்களும் கொள்ளையழகுதான்.. இந்த தேர்ச் சக்கரத்தின் மாதிரியை எங்கூர் நேரு கோளரங்கத்தில் வெச்சிருக்காங்க :-)

    ReplyDelete
  5. மிக அழகிய பகிர்வுப்பா...

    கோனார்க் கோயில் சூரியனாருக்காக அமைக்கப்பட்டது என்றும், சரியான பராமரிப்பு இல்லாததால் நிறைய கடல் அரிப்புகளால் சிதிலமடைஞ்சிருந்தாலும் பார்க்க கண்கொள்ளாதுன்னு நீங்க சொன்னது உண்மையேப்பா....

    நுணுக்கமான வேலைப்பாடுகள் அந்த காலத்தில் இப்ப இருப்பது போன்ற வசதிகள் எதுவும் இல்லையென்றாலும் இத்தனை அழகான வேலைப்பாடுகளுடன் அதுவும் பிள்ளைகளுக்காக விலங்குகள் அது போன்ற சிலைகளும் ஆண் பெண் நடுத்தரவயதுடையவருக்காக ஆடல் பாடல் காட்சிகளுடனும் வயதானவர்களுக்காக ஆன்மீகத்திலும் இப்படி அசத்தலாக அமைத்திருப்பது மிக மிக அபூர்வம் அழகு கூட...

    அதிலும் இரவின் ஒளியில் எத்தனை அழகாக பிரம்மாண்டமாக தெரிகிறது...

    சூரியனார் சிலை இப்ப பூரியில் இருக்கிறது என்ற மேலதிக தகவலுடன்...

    எப்படி செல்வது என்ற வழி சொல்லி கொடுத்ததுடன்....

    மிக அழகிய படங்களுடன்

    இந்த அருமையான பகிர்வுக்கு என் அன்பு நன்றிகள்ப்பா....

    ReplyDelete
  6. அக்கா நீங்கள் போய்ட்டு வந்தீர்களா? படங்கள் அனைத்தும் அருமை. தெளிவான விளக்கங்களுடன் உள்ளது

    ReplyDelete
  7. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ”கோனார்க்” பற்றி
    கோனார் நோட்ஸ்
    போல அனைத்து விபரங்களும், அழகழகான படங்களுடன் கொடுத்து அசத்தி விட்டீர்கள். /

    அழகழகான கருத்துரைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  8. கோகுல் said...
    கோனார்க்.கொள்ளை அழகு!
    இந்த சிற்பங்களில் எத்தனை வரலாறு பொதிந்துள்ளதோ?
    பகிர்வுக்கு நன்றி.//

    கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. கவி அழகன் said...
    wow supper photos/

    கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  10. M.R said...
    ஆஹா அழகான சுற்றுலா தளம் பகிர்வுக்கு நன்றி மேடம் ,
    படங்களும் அருமை//

    அருமையான கருத்துரைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. அமைதிச்சாரல் said...
    பதிவும் படங்களும் கொள்ளையழகுதான்.. இந்த தேர்ச் சக்கரத்தின் மாதிரியை எங்கூர் நேரு கோளரங்கத்தில் வெச்சிருக்காங்க //

    அருமையான தகவலுக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  12. மஞ்சுபாஷிணி said...
    மிக அழகிய பகிர்வுப்பா........மிக அழகிய படங்களுடன்

    இந்த அருமையான பகிர்வுக்கு என் அன்பு நன்றிகள்ப்பா....//

    மிக அழகிய பிரம்மாண்டமான ரசித்து லயித்து இட்ட கருத்துரைக்கு மிக்க நன்றிங்க..

    ReplyDelete
  13. காந்தி பனங்கூர் said...
    அக்கா நீங்கள் போய்ட்டு வந்தீர்களா? படங்கள் அனைத்தும் அருமை. தெளிவான விளக்கங்களுடன் உள்ளது//

    ஆமாங்க ஆமாம்.. குடுத்தினருடன் சென்று ரசித்து வந்தோம்..
    கருத்துரைக்கு மிக்க நன்றிங்க..

    ReplyDelete
  14. மிக அழகிய புகைப்படங்கள்! தெளிவான விள‌க்கங்கள்! சிற‌ப்பான பதிவு!

    ReplyDelete
  15. அருமையான பதிவு.
    அருமையான படங்கள்; நிறைய விஷயங்கள்.
    மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. ஒரு உண்மையை அப்பட்டமாக சொல்ல வேண்டும் என்றால் மிகசிறந்த ஆக்கம் மட்டுமல்ல மிக சிறந்த சேவையும் கூட இப்படி பட்ட இடங்களுக்கு எம்மால் செல்ல இயலுமோ முடியாதோ அனால் உங்களின் தயவினால் நாளும் காணுகிறேன் பாராட்டுகள்

    ReplyDelete
  17. அமைதியான இடம் போல் தோன்றுகிறது. இன்னொரு பயணத்தில் பார்த்துவிட வேண்டியது தான்.
    எப்படிப் போக வேண்டும் என்ற விவரங்களுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  18. கர்ணன், சூரியன் போன்ற படங்களில் பாடல் காட்சிகளில் இந்த இடத்தைப் பார்த்திருக்கிறேன். நேரில் பார்க்க ஆவல் கொண்டுள்ளேன். படங்களுடன் அழகிய பதிவு.

    ReplyDelete
  19. ம்.நான் இதுவரை சென்றதில்லை.ஆனால் திட்டம் உண்டு.படங்கள் அருமை.

    ReplyDelete
  20. உங்கள் பதிவையும் படங்களையும் பார்த்தவுடனேயே கோனார்க் செல்ல வேண்டுமென்ற ஆவல் அதிகமாகிவிட்டது...இது போன்ற பாரம்பரியம் மிக்க கோவில்கள் கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வருவது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும் ...

    ReplyDelete
  21. இன்று ஞாயிறு என்பதால் சூரியனார் கோவில் பற்றி பதிவு தந்திருக்கிறீர்கள் போல... சிறப்பான படங்களுக்கு தனியான பாராட்டுகள்.

    ReplyDelete
  22. தகவல்களும் படங்களும் வழக்கம் போல மிக அருமை.

    ReplyDelete
  23. அன்புடையீர்

    வணக்கம். இப்பதிவைப் படித்த போது நேரில் சென்று பார்த்த திருப்தியை தந்தது. இக்கோயிலின் சிறப்பம்சமான சிற்பங்களைப்பற்றி ஓரிரு வரிகளாவது சொல்லியிருக்கலாம்.

    ReplyDelete
  24. சிறு திருத்தம். கோனார்க் கங்கை ஆற்றின் படுக்கையில் இல்லை. ’கங்கை அரசர்குலத்தாரால்’ கட்டப்பட்டது. நல்ல பதிவு, நான் உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன்.

    ReplyDelete
  25. பகிர்வுக்கு நன்றி மேடம்... நிறைய படங்களை இணைத்திருப்பதால் லோட் ஆக அதிக நேரம் எடுக்கிறது...

    ReplyDelete
  26. தகவல்கள் வியப்பும் மகிழ்ச்சியும் தருகின்றன. படங்களோ பிரமிப்பை ஊட்டுகின்றன. மொத்தத்தில் நேரில் சென்று காண வாய்ப்பில்லாதவர்களுக்கு அக்குறை நீக்கிய பதிவு. நன்று!

    ReplyDelete
  27. அற்புதமான படங்கள் கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில்.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  28. அழகான படங்களுடன், புதிய தகவல்கள்.

    ReplyDelete
  29. நமது முன்னோர்களின் கைவண்ணம் திறமைகளை படங்கள் மூலம் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  30. 1072+2+1=1075 ;)

    கேட்ட கேள்விக்கு இல்லாவிட்டாலும், ஏதோ ஒரு பதிலுக்கு நன்றி.

    ReplyDelete
  31. காண கண்கோடி வேண்டும்

    ReplyDelete
  32. காண கண்கோடி வேண்டும்..!

    ReplyDelete