Tuesday, March 20, 2012

திருமுருகன் திருவருள்


weinventyou:

jungle encounter, 6 pm



ஓமென்று நினைத்தாலே போதும் 
முருகன் வேல் வந்து அருள் தந்து 
நம் நெஞ்சை ஆளும் 
ஓம் ஓம் ஓம் 

சிவ பெருமான் விழியின் சுடரானவன் 
சரவணத் திருப்பொய்கை மலரானவன் 
தவ மங்கை இருவருக்கும் உயிரானவன் 
தினம் துதி பாடும் உலகினுக்கு ஒளியானவன் 
முருகா என்றதும் உருகாதா மனம் மோகனக் குஞ்சரி மணவாளா
முறை கேளாயோ குறை தீராயோ மான் மகள் வள்ளியின் மணவாளா 

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் 
ஷண்முகாஉனக்குக் குறையுமுளதோ?

 
மறையே புகழும் மாதவன் மருகா மாயை நீங்க வழி தான் புகல்வாய்
அறுபடை வீடென்னும் அன்பர்கள் இதயமே  
அமர்ந்திடும் ஜோதியே நீ வருவாய் 
 ஜென்ம பாப வினை தீரவே பாரினில் சிவமே பதாம்புஜம் தேடி நின்றோம்
தவசீலா... ஹே சிவ பாலா.... தவசீலா ஹே சிவ பாலா
சர்வமும் நீயே ஜெயசக்தி வேலா 

Kandakottam
 
முருகனின் மறுபெயர் அழகு - அந்தமுறுவலில் மயங்குது உலகு
குளுமைக்கு அவனொரு நிலவு குமரா எனச்சொல்லிப் பழகு
ஓராறு முகமும் ஈராறு கரமும் தீராத வினைதன்னைத் தீர்க்கும் 
சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே அனுதினம் ஒருதரமாகினும் 
உன்னைச் சொல்லாத நாளில்லை 
முருகனே செந்தில் முதல்வனே 
மாயோன் மருகனே ஈசன் மகனே 
ஒருகை முகன் தம்பியே 
நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே 
கை தொழுவேனே  ..
அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன் 
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் 
நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும் 
நிமலனாம் குழந்தை முருகேசன் 
தெய்வயானைத் திருமணமாம் திருப்பரங்குன்றம் 
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம் 
தங்கம் வைரம் பவளம் முத்து தவழும் தெய்வானை 
 
  

தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் 
முருகப் பெருமானை முருகப் பெருமானை 
 
உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை 
நெருங்கிச் செல்லுங்கள் குமாரனின் ஊரை 
வேல் முருகா வெற்றி வேல் முருகா வேல் முருகா வெற்றி வேல் முருகா 
 

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள் 
அரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள் 
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்  வெற்றிவேல் முருகா
 
வண்ண மயில் முருகேசன் - குற  வள்ளி பதம் பணி நேசன் - 
 
அருணகிரி நாவில் பழக்கம் - தரும்  அந்தத் திருப்புகழ் முழக்கம் 
siva.jpg
பிஞ்சு மதியணிந்த செஞ்சடை ஈசனும் 
அஞ்சன மணி நீல மஞ்சினும் உமையாளும் 
கொஞ்சிமகிழ் குமரா அஞ்சுடர் வடிவேலா 
தஞ்சம் உனையடைந்தேன் மிஞ்சிய அன்போடு 
 

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன் 
மரகத வண்ணனாம் திருமால் மருகன் 
 
 
நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு 
கமலத்தில் உருவாய் நின்றாய்
 
 

முத்தமிழால் வைதாரையும் ஆங்கே வாழ வைப்பவன் 
 

தொண்டர் தம் பெருமையை சொல்லவும் பெரிதே
முருகன் என்ற பெயரில் வந்த அழகே என்றும் புதியது
முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது
முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு 
நாம் உண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ 
உனக்கு என்ன விதம் இக்கனியை நாம் ஈவதென்று 
நாணித்தான் அப் பனித்தலையர் தரவில்லை...
அப் பனித் தலையர் தரவில்லை ஆதலால் முருகா 
உனக்குச் சாரும் ஒரு பிழையில்லையே
http://farm4.static.flickr.com/3269/2692642564_489150aa1f.jpg 


பங்குனியில் உத்திரத்தில் பழநி மலை உச்சியினில்  

கந்தன் என்னைக் கண்டானடி 
எந்தன் சிந்தையில் நின்றானடி 
 
வேலழகும் மயிலழகும் வீற்றிருக்கும் பேரழகும்
காலமெல்லாம் இருக்குமடி அந்த காட்சி என்றும் இனிக்குமடி 
 
http://capnbob.us/blog/wp-content/uploads/2008/05/peacock.jpg
..தூசாமணியும் துகிலும் புனைவாள்  நேசா! முருகா! நினதன்பருளால் 
 ஆசாநிகளம் துகளாயின பின்  பேசா அனுபூதி பிறந்ததுவே 
 
முருகா என்றதும் மனம் உருகி ..உருகி...பேச மறந்தது...
பேசா உபதேசம் அளித்த மௌனகுரு வள்ளல்...
பாட்டுமட்டும் பாட.. முருகன் அருள்....

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.
 
நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த  
கோள் என்செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு 
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும் 
தோளும, கடம்பும்,எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

 வேல் வந்து வினை தீர்க்க மயில் வந்து வழிகாட்ட கோயிலுக்குள் சென்றேனடி
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி


 
peacock dance1

20 comments:

  1. முருகனுக்கு என்றுமே தமிழ்நாட்டில் தனி இடம் உண்டு.

    ReplyDelete
  2. வணக்கம்! ஒளிர்கின்ற வண்ணக் கலாப மயிலும், அதன் ஆட்டமும் முருகனின் பாமாலைகளோடு படங்களும் அருமை.

    ReplyDelete
  3. Ellap padangalum arumai. Muruganum deivanaiyum ammi mithikkum padaththai veguvaaga rasiththen!

    ReplyDelete
  4. காணுதற்கரிய படங்கள்...

    ReplyDelete
  5. எப்படிப் பிடித்தீர் படமே-மயில்
    இப்படி ஆடும் இடமே
    ஒப்பிட இயலா ஒன்றே- உம்
    உழைப்புக்கு மிக்க நன்றே

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  6. பழனி மலையும் மயிலாட்டமும் கண்ணுக்குள்ளயே நிக்குது.. அருமை.

    ReplyDelete
  7. முருகா சரணம்....
    அருமையான படங்கல்


    வணங்குகிரேன்

    ReplyDelete
  8. "திருமுருகன் திருவருள்”
    இன்று முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைக்கு
    ஏற்ற நல்ல பதிவு.

    ReplyDelete
  9. படங்கள் யாவும் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  10. மயில்கள் யாவும் வெகு அழகாகக் காட்டப்பட்டுள்ளன.

    ReplyDelete
  11. அனைத்து விளக்கங்களும் அருமையாகத் தரப்பட்டுள்ளன.

    ReplyDelete
  12. இன்று முருகனின் திருப்புகழ் தித்திக்குது.

    ReplyDelete
  13. கந்த வேளின் தரிசனம் அற்புதம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி...

    http://anubhudhi.blogspot.in/

    ReplyDelete
  14. முருகனின் அழகு படங்களும், அவனைப் போற்றும் சொல் இனிமையும் மனதை கொள்ளையிடுகிறது.

    ReplyDelete
  15. மொட்டைப்பாப்பாவின் படம் வெகு அழகாக அமைந்துள்ளது. முருகனை வணங்கி ஓம் என்ற நாமத்தினை உரக்கச் சொல்லுவோம்.

    ReplyDelete
  16. படங்கள் அனைத்துமே பிரமாதம். தாமரைகளில் குழந்தைகள் அருமை.

    ReplyDelete
  17. முருகன் திருமால் மறுகன் பெருமை, அந்த முக்கணனுக்கும் இல்லை திரு தணிகாசல முருகன். அஞ்சு முகம் தோன்றின், ஆறுமுகம் தோன்றும்; நெஞ்சமதில் அஞ்சேல் என வேல் தோன்றும். எனக்குப் பிடித்த முருகன் பதிவுக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  18. அருமையான பதிவு.
    வாழ்த்துகள்.

    ReplyDelete