Saturday, July 7, 2012

அழகியல் நடனம்




Inside the Capitol Theatre

Capitol Theatre ceiling

 File:Capitol Theatre ceiling detail house left corner.jpg


சீன நடன அமைப்பு ஒன்று Shen Yun  ....Shen Yun என்றால் தெய்வத்தன்மை பொருந்திய அழகியலை நடனத்தின் மூலம் வெளிப்படுத்துதல் என்று பொருள்படும். 

சிட்னியின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் Capital Theatre அரங்கில் தினமும் இரண்டு காட்சிகளாக பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டது..

சீனர்கள் தாங்கள் தனித்துவமாக கட்டிக்காத்துப் பெருமையுடன் போற்றி வாழ்ந்த தமது பழமையை பறைசாற்றும் விதமான முயற்சியாக மிளிர்கிறது...
சீனாவில் இந்த நிகழ்வு தடைசெய்யப்பட்ட நிலையில் 200 பேர் வரை தேர்ந்தெடுத்தகலைஞர்கள் பல நகரங்களில் தொடர்ந்து காட்சிப்படுத்திவருவது பிரமிப்பு அளிக்கிறது.. . 
எடுத்துக் கொண்ட கொள்கையும், அதைச் சிறப்பாக நடத்தவேண்டும் என்ற கருத்தொருமித்த கூட்டும் இருந்தால் எப்படிப்பட்ட உயரிய இலக்கை அடையலாம் என்பதற்கு உதாரணமாக கட்டியம் கூறுகிறது சீனர்களின் Shen Yun அமைப்பு ..
திறமையான படைப்பை எடுத்துக் கொள்வதோடு தகுந்த அரங்கமும் கிடைத்தால் பிரம்மாண்டமான வெற்றி கிடைக்கும் என்பதை சிட்னியின் Capital Theatre உறுதி செய்கிறது. 
அரங்கத்தின் உள்ளமைப்பு அரண்மனையில் நிலாவொளியில் அமர்ந்து மேலே நட்சத்திரக் கூட்டங்கள் கண்காணிக்கச் சுற்றிவரக் கோட்டை கொத்தளங்களில் சிற்ப வேலைப்பாடுகளுமாக அமைந்திருக்கும் சூழ்நிலையே திறமையான படைப்பை மனம் ஒன்றி ரசிக்க வைக்கின்றது. 
திட்டமிட்ட நேரத்துக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கின்றது. வெள்ளையர் ஒருவர் ஆங்கிலத்திலும், சீனப்பெண்மணி சீனத்திலுமாக அருமையாக வர்ணனைகளை வழங்கி வழிகாட்ட ஒவ்வொரு நிகழ்வும் அரங்கேறுகின்றன. 
அரங்கத்துக்கும் மேடைக்கும் இடையில் உள்ளே மறைவான அடித்தளத்தில்  வாத்தியக் கலைஞர்கள் நேரடியாக இசை வழங்க, மேடைக்குப் பின் புறம் பெரிய திரையில் அரங்கத்திற்கு எடுத்து வரமுடியாத அம்சங்கள் நகரும் காட்சிகள் மெல்ல மெல்ல மேடையிலே உள்வாங்கப்பட்டு காட்சியில் தோன்றிய நடிகர்கள் மேடையில் உன்னதமாக கலை படைக்க்கும் பாங்கு வியக்கவைக்கிறது..
 ஒவ்வொரு நடனமும் 5000 ஆண்டு பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் அற்புதத்தை இனங்காட்டுகின்றன
ஒவ்வொரு குழுவிலும் முப்பதுக்கும் மேற்பட்ட சீன இளைஞர்களும் , இளம்பெண்களுமாக ஒரே அச்சில் வார்க்கப்பட்டது போல் அளவிலும் உருவ அமைப்பிலும்.  கணினியால் உருவாக்கப்பட்ட எந்திர மனிதர்களோ என  வித்தியாசமான அனுபவம் அளிக்கின்றனர்...
நடனங்கள் ஒவ்வொன்றும் சீன தேசத்தின் பாரம்பரியம், 
வரலாறு பேசும் கதைகளாக, காட்சிகளாக விரிகின்றன. 
நேரடியாக வாத்திய விருந்து முன்னிருந்து முழங்க வண்ன வண்ண ஆடை அலங்காரங்களோடு தோன்றி ஆடும் நடன மங்கையர் மிகவும் நேர்த்தியாக  அடிப்படை சுயகட்டுப்பாட்டோடு பாங்கான நடனத்தில் வெளிப்படும் அனாயாசமான வித்தைகள் கண்கொள்ளாக்காட்சி..
தமக்கான அடையாளத்தைப் புதிதாகத் தேடவேண்டியதில்லை. பழமைக்குப் புத்துயிர் கொடுத்து கலாச்சார நிகழ்வுகள் மூலம் தம் அடையாளத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்..
திறமையும் அதைக்கொடுக்கும் ஆற்றலும் கொண்டு கொடுக்கும் படைப்பை மொழி, நாடு கடந்து எல்லோருமே ஏற்றுக் கொள்வர் என்ற வெற்றித் தத்துவத்தை சீனர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்.
சமரசம் கடந்து கொடுக்கும் படைப்பு காலத்தை வென்று நிற்கும். வாழ்வில் ஒருமுறையேனும் அனுபவிக்க வேண்டிய கலைப்படைப்பு Shen Yun........

Beautiful Darling Harbor at Sunset --Sydney, Australia


Beautiful Darling Harbor at sunset, Sydney, Australia
Skyline by Night
Skyline by night, Sydney, Australia

22 comments:

  1. கண்களை வியக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  2. மனதை மயக்க வைக்கும் பதிவு.

    ReplyDelete
  3. படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு.

    ReplyDelete
  4. ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் ... சுகம் ... சுகம்.......

    ReplyDelete
  5. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் அற்புதத்தை இனங்காட்டும் இந்த நடனக்கலைகளை, சீனாவில் நிகழ்த்த தடைசெய்யக் காரணம் என்னவோ?

    ReplyDelete
  6. மேலிருந்து நான்காவது படம் எவ்ளோ அழகாகப் படமாக்கிக் காட்டப்பட்டுள்ளது. வெகு ஜோர் ;)

    ReplyDelete
  7. கீழிருந்து 3 முதல் 7 வரையிலான படங்களில் போட்டோ கவரேஜ் மிகவும் பாராட்டப்பட வேண்டியதாக உள்ளன.

    ReplyDelete
  8. சீன நடனம் பல அறிந்திராத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .அழகிய படங்களுடன் அருமையான பதிவு அக்கா .

    ReplyDelete
  9. ”அழகியல் நடனம்”

    என்ற தலைப்பிலேயே

    அழகியலும் நடனமும் ஜோராகப் பொருந்தியுள்ளது.

    அதற்கு ஏற்றார்போலவே இந்தப் பதிவு முழுவதுமே அழகழகான நடனக் காட்சிகளுடன் பிரமிக்க வைப்பதாகவே உள்ளன.

    அனைத்துக்கும் பாராட்டுக்கள்.
    வாழ்த்துகள்.

    அழகான பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  10. மிக அழகான புகைப்படங்கள் ராஜராஜேஸ்வரி! எங்களுடன் இவற்றைப்பகிர்ந்து கொண்டதற்கு அன்பான நன்றி!

    தாய்லாந்தில் இது போன்ற நடனங்களைப்பார்த்து ரசித்திருக்கிறேன். உங்கள் பதிவு அவற்றை நினைவு படுத்தியது!!

    ReplyDelete
  11. அருமையான பகிர்வு.

    இவர்களுடைய நடனத்தை பார்க்கும்போதெல்லாம் வியக்காமல் இருக்கமுடிவதில்லை.

    ReplyDelete
  12. பிரமிக்க வைக்கும் வண்ண படங்களுடன் கூடிய நடனமும் அதை பற்றிய விளக்கமும் அற்புதம்.... அருமையான வண்ண படங்கள் அக்கா... வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  13. பிரம்மிப்பை ஏற்படுத்தும் புகைப்படங்கள்!

    ReplyDelete
  14. பதிவு அருமை! அருமை!
    கிருஷ்ணாலயா வலைப்பூ மால்வேர் பிரச்னையால் பாதிக்கப்பட்டு, கிருஷ்ணாலையா எனப் பெயர் மாற்றம் கொண்டுள்ளது. http://krishnalaya-atchaya.blogspot.com
    தொடர்ந்து சகோதரியின் ஆதரவும் , ஆலோசனையும் கிருஷ்ணாலையா-விற்கு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்!
    அட்சயா!

    ReplyDelete
  15. புதிய தகவல்களை அறிந்து கொண்டேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  16. harim. fine. from where u collect?fantastic.nowords.again unity ,proved

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் அற்புதத்தை இனங்காட்டும் இந்த நடனக்கலைகளை, சீனாவில் நிகழ்த்த தடைசெய்யக் காரணம் என்னவோ?//

    5000 ஆண்டுகள் பழமை பொருந்திய சீனர்களின் கலாச்சாரத்தை சீனக்கம்யூனிசம் விழுங்கிவிட்டது..

    தனி மனித ஒழுக்கங்களும், நெறிமுறைகளுமே உலகில் குற்றச் செயல்களைத் தடுக்க வல்லன என்ற நோக்கில் பல்வேறு நெறிமுறை சார்ந்த ஒழுக்க நடைமுறைகளோடு அமைக்கப்பட்ட இதன் செயல்வடிவம் சீன அரசுக்குக் கண்குத்திப் பாம்பாகத் தோன்றவே 1999 இல் தடை செய்து விட்டது

    சீனாவில் இந்த Falun Gong நெறி சட்டவிரோதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இதைப் பின்பற்றுவோர் கடூழியச் சிறை மற்றும், தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

    ReplyDelete
  18. மனோ சாமிநாதன் said...
    மிக அழகான புகைப்படங்கள் ராஜராஜேஸ்வரி! எங்களுடன் இவற்றைப்பகிர்ந்து கொண்டதற்கு அன்பான நன்றி!

    தாய்லாந்தில் இது போன்ற நடனங்களைப்பார்த்து ரசித்திருக்கிறேன். உங்கள் பதிவு அவற்றை நினைவு படுத்தியது!!

    தாய்லாந்தில் அல்காஸர் ஷோ பிரம்மிக்கத்தக்க வகையில் பார்த்து ரசித்திருக்கிறோம்...

    கருத்துரைக்கு மனம் நிறைந்த இனிய நன்றிகள்

    ReplyDelete
  19. 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனக் கலாச்சாரத்தின் அற்புதத்தை இனங்காட்டும் இந்த நடனக்கலைகளை, சீனாவில் நிகழ்த்த தடைசெய்யக் காரணம் என்னவோ?//

    *****5000 ஆண்டுகள் பழமை பொருந்திய சீனர்களின் கலாச்சாரத்தை சீனக்கம்யூனிசம் விழுங்கிவிட்டது..

    தனி மனித ஒழுக்கங்களும், நெறிமுறைகளுமே உலகில் குற்றச் செயல்களைத் தடுக்க வல்லன என்ற நோக்கில் பல்வேறு நெறிமுறை சார்ந்த ஒழுக்க நடைமுறைகளோடு அமைக்கப்பட்ட இதன் செயல்வடிவம் சீன அரசுக்குக் கண்குத்திப் பாம்பாகத் தோன்றவே 1999 இல் தடை செய்து விட்டது

    சீனாவில் இந்த Falun Gong நெறி சட்டவிரோதமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு இதைப் பின்பற்றுவோர் கடூழியச் சிறை மற்றும், தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.*****

    *****
    தகவல் களஞ்சியம், தட்டாமல் அளித்த, அருமையான விளக்கத்திற்கு நன்றிகள்.

    ReplyDelete
  20. வியக்க வைக்கும் அழகியல் பதிவு.

    ReplyDelete
  21. 3576+9+1=3586 ;)

    ஓர் சந்தேகத்திற்கு தங்களின் விளக்கமான பதில் மகிழ்வளித்தது.

    ReplyDelete