Wednesday, April 24, 2013

சித்தம் கவரும் சித்திரைத்திருவிழா





அண்ணல் ஆலவாய் நண்ணினான் தனை 
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே'' 
என்கிறார் ஞானசம்பந்த பெருமான் ....


ஒற்றுமையை வலியுறுத்தும்  நம் பண்பாட்டுக் கலைகளின் அடையாளமாகத் திகழ்கிறது. மக்கள் அனைவரும் ஒன்று கூடி இழுத்தால் தான் தேர் பவனி சிறப்பாக  நடைபெறும். 
நாட்டை ஆளும் மன்னன் நகரை வலம் வருவது போல, இவ்வுலகையே ஆளும் இறைவனும், இறைவியும் தேரில் பவனி வருகின்றனர். 

 தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகிய மூன்று திரிபுர அசுரர்களும் ஆணவம் கொண்டு மூவுலகத்தையும் துன்புறுத்தி வந்தனர். 

சிவபெருமான் தேரேறிப் புறப்பட்டு அவர்களை வதம் செய்து உலகைக் காத்து அருளின புராண நிகழ்வை நினைவூட்டும் விதத்தில் சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும்  ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். 
சித்திரை மாதம் அம்மனுக்கு முடிசூட்டப்பட்டு தொடர்ந்து சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி மாதங்கள் அம்மன் ஆட்சி செய்வதாக கருதப்படுகிறது. 

பின்னர் ஆவணி மாதம் சுவாமிக்கு பட்டாபிஷேகம் செய்யப்பட்டு ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என எட்டு மாதங்கள் சுந்தரேஸ்வரர் ஆட்சி நடைபெறுவதாக ஐதீகம்.

பட்டாபிஷேகத்தின் போது அம்மனுக்கு மச்ச முத்திரை, இடபமுத்திரை முதலிய அணிகலன்களால் அலங்காரம் செய்யப்படும். கழுத்தில் பாண்டிய மன்னர்களுக்கு உரிய வேப்பம்பூ மாலை அணிவிக்கப்படும். நவரத்தினம், சிவப்பு கற்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிவிக்கப்படும்.
 உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட செங்கோல் வழங்கப்படும். 
 அம்மன், சுவாமி மற்றும் பிரியாவிடை வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி  வலம் வருவர். 
திருவிழாவில் அம்மையும் அப்பனும் நமக்காகவே வீதியுலாவாக வருகிறார்கள். அப்போது குருவாக இருந்து ஆட்கொள்கிறார். 

 சுவாமி நந்திகேஸ்வரர் வாகனத்திலும், மீனாட்சி யாளி வாகனத்திலும் பவனி வருகின்றனர். சிவனைச் சிவமே தாங்குகின்ற கோலம் இது. சிவனைப் போலவே நந்திகேஸ்வரரும் கையில் மான் மழு ஏந்தி வருகிறார். கண் குளிர அன்னையையும், அப்பனையும் தரிசித்துப் பிறவிப்பயன் பெறுவோம்
பிரியாவிடையோடு சுவாமி வருகின்ற கோலத்திற்கு சோமாஸ் கந்த மூர்த்தம் என்று பெயர். ஸஹ(சிவம்)+ உமா(பார்வதி)+ ஸ்கந்தர்(முருகன்) மூவரும் இணைந்த கோலம் இது. சுவாமிக்கும் அம்மனுக்கும் நடுவில் குழந்தை முருகனும் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும். 

பிரியாவிடையும் மீனாட்சியும் வேறு வேறு சக்தி அல்ல. இறைவனை விட்டுப் பிரியாத சக்தி என்பதால் பிரியாவிடை என்று அழைக்கிறோம். 
இறைவனோடு இணையும் போது பிரியாவிடையாகவும், 
தனித்து இருக்கும் போது மீனாட்சியாகவும் இருப்பது ஒரே சக்தியே.

தாயும் தந்தையுமாக குழந்தைகளோடு மகிழ்ந்து வாழும் இல்லற வாழ்வின் மேன்மையை உணர்த்துவதாக சோமாஸ் கந்த மூர்த்த கோலம் அமைந்துள்ளது. கோயில்களில் சக்தி இறைவனோடு இணைந்து போகசக்தியாகவும், தனித்து இருக்கும்போது யோகசக்தியாவும் இருப்பதாக ஐதீகம். மதுரையில் போகசக்தி பிரியாவிடை என்றும், யோகசக்தி மீனாட்சியம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.








13 comments:

  1. சித்தம் நாளும் மாறலாம் சித்திரை திருவிழா எப்போதும் மாறது.நித்திரையை அன்று கொண்டுகொள்ளாது

    ReplyDelete

  2. ”சித்தம் கவரும் சித்திரைத் திருவிழா” என்ற இந்தப்பதிவின் தலைப்பும் படங்களும் விளக்கங்களும் அழகோ அழகு.

    எங்கள் ஊரில், எங்கள் தெருவில், நேற்று திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரை மஹமாயி அம்பாள் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

    இன்று இப்போது திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார், தாயுமானவர் + மட்டுவர்குழலம்மை ஆகிய மூன்று தேர்கள் தனித்தனியாக பவனி வந்துகொண்டு இருக்கின்றன.

    தெருவே ஒரே அமர்க்களமாக உள்ளது.

    மீண்டும் நேரம் கிடைக்கும் போது வருவேன்.

    >>>>>>

    ReplyDelete
  3. அருமை அருமை... சித்திரைத் திருவிழாச் சிறப்பு கண்டோம்.

    அத்தனையும் அழகு. பகிர்விற்கு நன்றிகள் பல சோதரி...

    ReplyDelete
  4. மேலிருந்து கீழ் 1, 2, 7 + 8 ஆகிய வரிசைகளில் உள்ள படங்கள் திறக்கப்படவே இல்லை ;((((

    அதனால் தரிஸிக்கும் பாக்யம் இதுவரை கிட்டவில்லை.

    ReplyDelete
  5. மற்ற படங்கள் யாவும் ஜகத்ஜோதியாகவே உள்ளன. ;)))))

    இறைவனைவிட்டு பிரியாத சக்தி என்பதால் ’பிரியாவிடை’ என அழைக்கிறோமா? அப்படியே இருக்கக்கடவது.

    பிரிவினைத்தாங்கவே முடிவது இல்லை தான்.

    >>>>>

    ReplyDelete
  6. வழக்கம்போல அழகழகான படங்கள், அற்புதமான விளக்கங்கள், கண்களைக் கவரும் மிக நல்ல பதிவு. மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 889 ooooo

    ReplyDelete

  7. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் தொலைக் காட்சியில் நேரடி ஒளிபரப்பானது கண்டு ரசித்தோம் படங்களுடன் பதிவு அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  8. சித்திரை திருவிழா கண்டேன், சிந்தை மகிழ்ந்தேன்.

    பிரியவிடை, மீனாட்சி விளக்கம் அருமைபடங்கள் எல்லாம் தெய்வீகம்.

    ReplyDelete
  9. அழகான படங்கள்.
    கண்ணைப் பறிக்கின்றன.

    ReplyDelete
  10. ஸ்துப தூணும் தூண்கள் வரிசையில் மண்டபமும் மிக அருமையான படம் மற்ற விஷயங்களுக்கும் நன்றி

    ReplyDelete
  11. சிறப்பானதொரு பகிர்வு. நன்றி சகோதரி!

    ReplyDelete