Friday, June 21, 2013

புஷ்பப் பல்லக்கு






"தேவும் எப்பொருளும் படைக்கப்   பூவில் நான்முகனைப் படைத்த
  தேவன் எம்பெருமானுக்கு அல்லால்     பூவும் பூசனையும் தகுமே?  - 

தேவர்களையும் மற்றை எல்லாப் பொருள்களையும்  உருவாக்குவதற்காக   நான்முகனை படைத்த தேவாதிதேவனான எம்பெருமானுக்கு  அல்லாமல் ஏனையோர்க்கு மலர்களும் மலர்களால் அர்ச்சித்து வணங்கும் வணக்கமும் தகுவன ஆகுமோ? ஆகாது !!!!
மலர்கள் எல்லா இடங்களிலும் அழகு தரும்.  எனினும் பூக்கள் அணிவதற்கு ஏற்ற சகல சௌந்தர்ய ஸௌகுமார்யங்களையும் தகுதியையும், முதன்மையும் உடையவர் - ஸ்ரீமன் நாராயணன் மட்டுமே. நம்மாழ்வார் தனது திருவாய்மொழி "திண்ணன் வீடு" என்கிற பத்தில் ..

புஷ்பப் பல்லக்கு  என்பது வாசம் தரும் மலர்களால் ஆனது.  

புஷ்பப் பல்லக்குகள் டிரெய்லர் வண்டிகளில் ஜோடிக்கப்பட்டு மல்லி, சாமந்தி, கனகாம்பரம், கோழிக்கொண்டை பூ என விதவித மலர்களால் அலங்கரிக்கப் பட்டு வரும் அழகு கண்கொள்ளாக்காட்சியாக மனம் நிறைக்கும் ...

எல்லாப் பல்லக்குகளையும் அலங்கரித்து முடிக்க முழுதாக 
மூன்று நாட்கள் ஆகுமாம் ..ஊரெல்லாம் பூ வாசம் !

 புஷ்பப் பல்லக்குத் திருவிழா  மனசுக்குள் பூ மழை பெய்கிறது! 
பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது -
கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள்
ஊரெங்கும் கொண்டாட்டமாக -கண்டோர்கள் கண்பட்டு போகின்ற
எழிலோடு சிங்காரத் தேரோட்டமாக 
புஷ்பப்ம்பல்லக்கு ஊர்வலம் 
பூவுலக் மணக்க நடைபெறும் ஆனந்தத்திருவிழா...1 
  
திருவல்லிக்கேணியில்  பிரம்மோத்சவம் கண்டு அருளும் இறைவன் 
பத்து நாட்கள் 'விடாயாற்றி' என இளைப்பாறுகிறார்.  

பிறகு மணம் தரும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட 'புஷ்பப் பல்லக்கில்' புறப்பாடு கண்டு அருள்கிறார்.





கண்ணாடி பல்லக்கில்  பெருமாள், எதிரே உபயநாச்சிமார் எழுந்து அருளி இருக்க,     வாண வேடிக்கைகளுடன்,  விமர்சையாக புறப்பாடு..





13 comments:

  1. பல்லக்குக்கு ஒரு பதிவு.... பலே... பலே.....

    ReplyDelete
  2. அதிகாலையில் புஷ்பப் பல்லக்கில் இறை தரிசனம் கிடைக்கப் பெற்று மனம் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் ஆகியது. உங்களுக்கு என் உளம் நிறைய நன்றி!

    ReplyDelete
  3. நல்ல தரிசனம்.. வீட்டுப் பெரியார்களும் கண்டு தரிசித்திதிார்கள்.. நன்றி.

    ReplyDelete
  4. ஆஹா! இன்று புஷ்பப் பல்லாக்கா?

    ”அட.... என்னடீ ராக்கம்மா ........
    ப-ல்-லா-க்-கு நெ-ளி-ப்-பு ! ...........
    என் நெஞ்சுக் குலுங்குதடி”ன்னு

    பாட்டுப்பாடலாம் போல உள்ளதே ! ;)))))

    >>>>>>

    ReplyDelete
  5. முதல் படமும் கடைசி படமும் ரொம்ப நன்னாயிருக்குதுங்க.

    எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    >>>>>>

    ReplyDelete
  6. மேலிருந்து கீழ் வரிசையில் 3, 4, 5, 6 மற்றும்

    கீழிருந்து மேல் வரிசையில் 2, 3, 4, 6, 8, 10

    ஆகிய அனைத்துப்படங்களும் அப்படியே என்னை மல்லிகை மணத்தில் சொக்க வைத்து, மயங்கிக்கீழே விழ வைத்து விட்டது. ;)

    எப்படி ..... எப்படி ..... எப்படி ...... எப்படி ?

    எப்படி இப்படியெல்லாம் உங்களால் மிகச்சிறந்த படங்களாகக் காட்டி மனதை மகிழ வைக்க முடிகிறது?

    >>>>>

    ReplyDelete
  7. //எல்லாப் பல்லக்குகளையும் அலங்கரித்து முடிக்க முழுதாக மூன்று நாட்கள் ஆகுமாம் .... ஊரெல்லாம் பூ வாசம் !//

    தங்களின் பதிவெல்லாம்கூட அதே வாஸம் அடிக்கிறதே ! ;)))))

    >>>>>

    ReplyDelete
  8. / புஷ்பப் பல்லக்குத் திருவிழா மனசுக்குள் பூ மழை பெய்கிறது!

    பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த ஊர்வலம் நடக்கின்றது //

    அழகான பாடல் வரிககளைத் தேர்ந்தெடுத்து இடையில் சொருகிவிடுவதே தங்களின் தனித்தன்மைக்கு எடுத்துக்காட்டு. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>>

    ReplyDelete
  9. //கச்சேரி மேளங்கள் வேடிக்கை வாணங்கள் ஊரெங்கும் கொண்டாட்டமாக -கண்டோர்கள் கண்பட்டு போகின்ற எழிலோடு சிங்காரத் தேரோட்டமாக புஷ்பப்பல்லக்கு ....ஊர்வலம் பூவுலம் மணக்க நடைபெறும் ஆனந்தத்திருவிழா...!!!!!

    ஆனந்தம் ..... ஆனந்தம் ..... ஆனந்தமே !

    >>>>>>

    ReplyDelete

  10. மிகவும் அற்புதமான வெகு அழகான பதிவு.

    மனமார்ந்த இனிய பாராட்டுக்கள்.

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    மனதை, பூ மணத்தால் மகிழ்விக்கச்செய்த இன்றைய பதிவுக்கும் பகிர்வுக்கும் மனமார்ந்த இனிய நன்றியோ நன்றிகள்.

    வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

    ooooo 947 oooo

    ReplyDelete
  11. பூம் பல்லக்கில் பொலிந்திட்ட ஊர்வலமாய்
    நாம் தரிசிக்க நயமோடு படைத்திட்டாய்
    ஆம் அழகேதான் அனைத்துமே இங்கு
    யாம் பெற்ற இன்பம் சொல்லிலடங்காதே!...

    மிகவும் அருமை! கண்கொள்ளாக் காட்சி சகோதரி!
    பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. என்ன அழகு. எத்தனை அழகு.. கோடிமலர் கொட்டிய அழகு.. பல்லக்கு அழகு.

    ReplyDelete
  13. புஷ்பபல்லக்கு மிக அழகு.

    ReplyDelete