Saturday, January 18, 2014

கல் யானைக்குக் கரும்பு கொடுத்த “எல்லாம் வல்ல சித்தர்’




ஒவ்வொரு ஆண்டும் தை மாதப் பிறப்பையொட்டி 
பொங்கல் திருநாளன்று மதுரை மீனாட்சியம்மன் 
ஆலயத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் ஒன்றான 
கல்யானைக்குக் கரும்பு கொடுக்கும் லீலை நடைபெறுகிறது...!

சுந்தரேசுவரர் தனது அவதாரங்களுள் ஒன்றில் அதிசயங்கள் செய்யும் சித்தராக மதுரையில் தோன்றியிருக்கிறார்.  

18 சித்தர்களின் தலைமை சித்தராக சிவனே விளங்குவதால்
 “எல்லாம் வல்ல சித்தர்’ என்று பெயர் பெற்றார். 

“எல்லாம் வல்ல சித்தருக்கு மதுரை மீனாட்சி அம்மன் 
ஆலயத்தில்  தனிசன்னதி உள்ளது. 

சிவனே இங்கு சித்தராக இருப்பதால் சித்தரது சன்னதி எதிரே நந்தி இருக்கிறது. இந்த நந்தி சிவனின் உத்தரவிற்கு காத்திருக்கும்விதமாக, செவி சாய்த்து காட்சியளிப்பது விசேஷம்.
சித்தருக்கு அபிஷேகம் கிடையாது. 
மூலிகை மற்றும் சாம்பிராணி தைலம் மட்டும் சாத்தப்படுகிறது. 
சித்தரது சன்னதியில் மல்லிகை பந்தல் (பூக்கூடாரம்) அமைத்து 
வேண்டிக் கொண்டால் வேண்டியவை நிறைவேறும் என்பது நம்பிக்கை. 

ஒரு சமயம் சித்தராக வந்த சிவபெருமானுக்கும் பாண்டிய மன்னனுக்கும்
‘கல் உள்பட அனைத்துப் பொருட்களுக்கும் ஜீவன் உண்டா, இல்லையா?’ என்று விவாதம் நடந்தது. 

அப்போது அருகிலிருந்த யானை சிற்பம் ஒன்றைக் காட்டி, பாண்டிய மன்னன் ‘இந்த யானை கரும்பு சாப்பிடுமா?’ என்று ஏளனம் செய்தான். 
உடனே சித்தர் ஒரு கட்டு கரும்பு எடுத்து வந்து அந்தக் 
ல்யானைக்குக் கொடுக்கச் சொன்னார். 
மன்னரும் சித்தர் கூறியபடி கரும்புக் கட்டை கொண்டு வரச் சொல்லி கல்யானைக்குக் கொடுக்க எல்லோரும் ஆச்சரியப்படும் வண்ணம், அந்தக் கல்யானை கரும்பைத் தின்றது மட்டுமின்றி, மன்னன் கழுத்தில் உள்ள முத்து மாலையையும் தன் தும்பிக்கையை நீட்டி எடுத்தது.

தன் தவறை உணர்ந்த மன்னவன் சித்தரின் 
காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்.
சிவபெருமானின் இந்தத் திருவிளையாடலை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் சித்தர் சந்நதிக்கு அருகிலுள்ள கல்யானைக்கு உற்சவர் சுந்தரேசர் முன்பு கரும்பு கொடுக்கும் நிகழ்ச்சி பொங்கல் திருநாளன்று நடத்தப்படுகிறது. 
ஒரு சங்கேதமான இந்த நிகழ்ச்சியைக் காண ஏராளமான 
பக்தர்கள் ஆலயத்தில் கூடுகின்றனர். 
இந்நிகழ்வு முடிந்ததும் ஆலயத்திலுள்ள நிஜ யானைக்கும் 
நிஜ கரும்பு தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது
மதுரையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மதுரைக்கும் தேனிக்கும் இடையே சாலை அமைக்கும் பணி நடந்தது. 

அந்த சாலை கருமாத்தூர் ஒச்சாண்டம்மன் கோயில் வழியாக செல்லும்படி திட்டமிடப்பட்டதற்கு கருமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோயில் முன்பு குவிந்தனர். 

அங்கு வந்த ஆங்கிலேய அதிகாரி கோயிலை 
அகற்றி விட்டு சாலை பணியை தொடங்க உத்தரவிட்டார். 

பணியாட்களும் கோயில் முன்பிருந்த கல் யானையை 
அகற்ற முயன்றனர். ஆனால், முடியவில்லை. 

அப்போது ஊர் மக்கள், ‘இந்த யானையை அகற்ற முடியாது.

எங்கள் கோயில் கல் யானை கரும்பு தின்னும்; 
வெள்ளை யானை வேதம் ஓதும்’ என்றனர்.

வாய்விட்டு சிரித்த ஆங்கிலேய அதிகாரி,
‘இதெல்லாம் நடக்காது’ என சவால் விட்டார்.

உடனே கல் யானையின் சிலையை சுற்றி திரையிடப்பட்டு,
 கட்டுக்கட்டாக கரும்பு போடப்பட்டது. 
சிறிது நேரம் கழித்து திரையை விலக்கியபோது 
கரும்பு வெறும் சக்கையாக கிடந்துள்ளது. 

அத்துடன் அந்த ஆங்கிலேய அதிகாரியும் 
அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார். 

நோய்வாய்ப்பட்ட அவர், ஒச்சாண்டம்மனை மனமுருக வேண்டினார். 

இதனை தொடர்ந்து வெள்ளை யானை வேதம் ஓதியதையடுத்து 
அந்த ஆங்கிலேய அதிகாரி குணமடைந்ததாக சொல்கிறார்கள். 

இதன் பின்னரே அமைக்கப்படவிருந்த சாலை, 
கோயிலுக்கு பாதிப்பு இல்லாமல் மாற்றுப்பாதையில் போடப்பட்டது. 

இன்றும் மதுரை - தேனி சாலையில் கருமாத்தூர் நுழையும் இடத்தில், மிகப்பெரிய வளைவை காணலாம்.
[elephant_01_400.jpg]http://www.picgifs.com/graphics/e/elephants/graphics-elephants-494864.gif

19 comments:

  1. கல்யானை கரும்பு சாப்பிட்ட கதையைப் படித்து இருக்கிறேன். ஆனால் மற்ற கதைகள் போல் அடிக்கடி நினைவுக்கு வருவதில்லை. அழகிய படங்களுடன் மனதில் பதியும் வண்ணம் நினைவுபடுத்தியமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. கரும்பு தின்ற கல்யாணை அறியாத செய்தி சகோதரியாரே
    நன்றி

    ReplyDelete
  3. அருமையான படங்களுடன் யானை கரும்பு தின்னும் சம்பவ விளக்கம் மிகவும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. அழகான படங்களுடன் சுவாரசியமான கதை. எல்லாம் வல்ல சித்தர் சிவனென்று தெரியாது. சுவாரசியமான கதை. அதை இன்றைக்கும் நம்புவது இன்னும் சுவாரசியம்.
    பொங்கலுக்குக் கரும்பு தின்னும் வழக்கம் இப்படி உருவானது தானோ?

    ReplyDelete
  5. கல்யானை கதையை இப்பதான் கேள்விப்படுகிறேன் அம்மா!

    ReplyDelete
  6. Interesting info on Siddhar.Nice visuals...Thank you.

    ReplyDelete
  7. கல் யானைகள் யாவும் எனக்குக் கல்யாண யானைகளாகவேக் காட்சியளித்தன. ;)

    பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. அருமையான் செய்திகள். திருவிளையாடல் புரணத்தில் கல் யானைக்கு கரும்புகொடுத்த படலத்தை படித்து இருந்தாலும் நீங்கள் சொல்வதில் சில புது செய்திகளும் இருக்கிறது.
    வாழ்த்து க்கள்.

    ReplyDelete
  9. அழகான படங்களுடன் சுவாரஸ்யமான கதையும் அறிந்தேன். இதுவரை அறிந்தது போல் தெரியவில்லை ரொம்ப நன்றி ...! தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  10. Aha எத்தனை யானைகள்....
    எனக்கு யானைகளை காண்பதே ஒரு பயம் கலந்த சந்தோசம்.
    இங்கே படத்தில் தானே பயம் இல்லாமல் ரசித்து மகிழ்தேன்.
    கல் யானைக்கு கரும்பு கொடுத்த படலம் கரும்பைபோல் இனிக்கிறது
    அழ்கிய பதிவுக்கு நன்றி தோழி

    ReplyDelete
  11. அழகிய யானைப் படங்களுடன் கல் யானைக்கு கரும்பு கொடுத்த கதையைப் போட்டது மிகச் சிறப்பு.
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. கல்யாணை கரும்பு தின்றதையும், வெள்ளையாணை வேதம் ஓதியதையும் இப்பதிவின்மூலம் தெரிந்து கொண்டேன். யாணைகளின் படங்கள் மிக மிக அருமை

    ReplyDelete
  13. அறியாத தகவல்களுடன் அருமையான பகிர்வு! படங்கள் அழகு! நன்றி!

    ReplyDelete
  14. மதுரையில் எத்தனை வருடங்கள் இருந்திருக்கிறேன்? இந்த நிகழ்வுகள் எல்லாம் மிஸ் செய்திருக்கிறேன்! யானைன்னா தனி சுவாரஸ்யம்தான்.

    ReplyDelete
  15. இரண்டு தகவல்களும் எனக்கு புதிய தகவல் அம்மா. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  16. அழகிய படங்களுடன் அருமையான... தெரியாத விஷயத்தை தெரியத் தந்தீர்கள்... அருமை...
    வாழ்த்துக்கள் அம்மா.

    ReplyDelete
  17. வணக்கம்
    அம்மா
    அறியாத பல விடயங்கள் தங்களின் பதிவின் வழி அறியக்கிடைத்துள்ளது... படங்கள் எல்லாம் அழகாக உள்ளது.. வாழ்த்துக்கள் அம்மா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  18. சித்தமெல்லாம் சிவமயமே.சித்தரெல்லாம் சிவனடியார்களே.கல்யானை கரும்பு தின்ற திருவிளையாடல் பகிர்வு நல்ல செய்தி.மதுரையில் ஒவ்வொரு திருவிளையாடல்களுக்கும் விழாக்கள் உண்டு யானைகளின் படத்தொகுப்பு நமக்குப்பார்க்க ஆசையாயிருக்கு.நன்றி

    ReplyDelete
  19. இந்த அரசர்களுக்கு என்னவெல்லாம் சந்தேகம். கூந்தலின் வாசம் இயற்கையானதா. கல் யானை க்ரும்பு தின்னுமா. ? அவற்றைநிவர்த்திசெய்ய சுவாரசியமான கதைகளும் பின்னணிகளும். சிவகுமாரன் கவிதை ஒன்றில் இது பற்றிப் படித்தபோது கதை தெரியாமல் இருந்தது. கடந்த முறை மதுரை சென்றபோது சித்தரையோ யானையையோ பற்றி யாரும் தகவல் சொல்லவில்லை. அழகான படங்களுடன் பதிவு அழகு.பாராட்டுக்கள்.

    ReplyDelete