Wednesday, April 2, 2014

கல்வி வரமருளும் திருவஹீந்திரபுரம் - ஔஷதகிரி திருத்தலம்




முன் இவ்வுலகேழும் இருள் மண்டி உண்ண
முனிவரோடு தானவரும் திசைப்ப வந்து
பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்
பரிமுகமாய் அருளிய நம்பரமன்

-என்று ஹயக்ரீவரைப் பாடித் தொழுதிருக்கிறார், திருமங்கையாழ்வார். 
DSC03006.JPG
 பரிமுகன், கல்வியும் ஞானமும் அருள வல்லவர். பரீட்சைக்கு ஆயத்தமாகும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது ஐ.ஏ.எஸ்  போன்ற தேர்வு எழுதுபவர்களும் இவரது ஆசி பெற்றுச் சென்று வெற்றிவாகை சூடுகிறார்கள். 
DSC02930.JPG
பிறவியிலேயோ அல்லது இடைப்பட்ட ஏதேனும் காரணத்தாலோ பேச்சிழந்த குழந்தைகள் ஹயக்ரீவர் சந்நதியில் கால் பதித்தாலே உடனடி நிவாரணம் பெறுகிறார்கள்
கிரகங்கள் அல்லது வேறுவகை தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. 
 ஹயக்ரீவருக்கென்று பிரத்யேகமாக ஒரு ஸ்லோகம் இருக்கிறது:

ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக் ருதிம்
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே

 ஞானமயமாகத் திகழ்கிறார் ஹயக்ரீவர். 
கலக்கமற்ற ஸ்படிகம் போல ஒளிர்பவர். 
ஹயக்ரீவரே அனைத்து வித்தைகளுக்கும் ஆதாரமானவர். 
ஹயக்ரீவரை உபாசித்தால் கல்வி, ஞானத்தில் மேம்பட முடியும் என்று பொருள். 


1. ஸ்ரீமந் நிகமாந்த தேசிகர்; 2. ஹயக்ரீவர். என இரண்டுமே 
திருவஹீந்திரபுரம் தலத்தின் முக்கியமான இரு சிறப்புகள்: 
swamy.jpg

காஞ்சி, தூப்புல் தலத்தில் பிறந்த நிகமாந்த தேசிகர், நாற்பதாண்டுகள் திருவஹீந்திரபுரத்தில் தங்கி, தனக்கென ஒரு வீட்டையும் கிணற்றையும் அமைத்துக் கொண்டு, வடகலை வைணவ சம்பிரதாயத்துக்கு அருந்தொண்டாற்றியவர். 
ராமானுஜர் ஸ்ரீபெரும்புதூரில் தன் திருமேனியை உருவாக்கிக் கொண்டதுபோலவே, திருவஹீந்திரபுரத்தில் தேசிகரும் தன் வடிவத்தை செய்வித்தார். 

பார்க்க தத்ரூபமாக இருக்கிறது’ என்று பாராட்டிய பலருள் 
சிற்ப வல்லுநரும் ஒருவர். 

வெறும் பாராட்டோடு நிற்காமல், ‘இந்தச் சிலை அச்சு அசலாக உம்மைப்  போலவே இருப்பது உண்மைதான். ஆனால், இதற்கு உங்களால் உயிரோட்டம் கொடுக்க முடியுமா?’ என்று கேட்டார். 

‘தொட்டுத்தான் பாருங்களேன்’ என்று தேசிகர் 
அமைதியாக பதில் சொன்னார். 

தன் கை விரல் நகத்தால் மெல்ல அந்தச் சிலை மீது 
கீறிப் பார்த்தார் வல்லுநர். 

உடனே அந்தப் பகுதி ரத்தக் கோடிட்டது! விதிர்விதிர்த்துப் போய்விட்டார் வல்லுநர். தன் ஆணவத்தை மன்னிக்குமாறு தேசிகர் காலில் 
விழுந்து மன்னிப்பு கேட்டார். 

தேசிகரால்,  திருவஹீந்திரபுரம் தலத்தில் மிகவும் விரும்பி வழிபடப்பட்டவர், ஹயக்ரீவர். தேவநாதன் கோயிலுக்கு வலது பக்கம் ஒரு மலைமீது கோயில் கொண்டிருக்கிறார், இந்தப் பரிமுகன்

ஹயக்ரீவரது மந்திரத்தை, கருட பகவான் தேசிகருக்கு உபதேசித்தார்

எப்போதும் அந்த மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்த தேசிகருக்கு ஹயக்ரீவர் காட்சி தந்ததோடு, அனைத்து வேத சாஸ்திரங்களையும் இந்த ஔஷதகிரியிலேயே கற்பித்தார். 

தேசிகரால் வழிபடப்பட்ட ஹயக்ரீவ மூர்த்தியை இன்றும் தேவநாதன் கோயிலில் தனி சந்நதியில் காணலாம். 
001.jpg
ஒருமுறை, இவரை தரிசனம் செய்துவிட்டு மலையிலிருந்து கீழிறங்கிய தேசிகர், கீழே மூலவரான தேவநாதனை வழிபடாமல் பெண்ணை ஆற்றங்கரை நோக்கிச் சென்றார். 

அப்போது, தன்னை அவர் தரிசிக்காவிட்டாலும் தான் அவரை ஆட்கொள்ள வேண்டும் என்று திருவுளங்கொண்ட தேவநாதன் இவருக்கு முன் போய் நின்று காட்சி கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்குத் தன் கடமையில் பேரார்வம் கொண்டிருந்தவர் தேசிகர். 
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திர நாளன்று தேசிகனை, ஹயக்ரீவர் சந்நதிக்கு எழுந்தருளச் செய்து சிறப்பிக்கிறார்கள். 
 திருக்கோயிலில் பிரம்மோத்சவம் நடைபெறும் பத்து நாட்களிலும் தேசிகருக்கும் பெருமாளைப் போலவே விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன
தேசிகருடைய உற்சவ விக்கிரகத்துக்கு ரத்னாங்கி அணிவித்து
அழகு சேர்த்து மகிழ்கிறார்கள்.
தேவநாதன் கோயிலில் ஸ்ரீராமன் சீதை, லட்சுமணன், அனுமனுடன் தனி சந்நதியில் கொலுவிருக்கும் ராமரின் தோற்றம் சற்றே வித்தியாசமானது. 

இடது கரத்தால் வில்லினையும் 
வலது கரத்தால் அம்பினையும் பற்றியிருக்கிறார். 
பொதுவாக வலது கரத்திலேயே வில்லைப் பற்றியிருக்கும் ராமர் இங்கு இவ்வாறு காட்சி தரும் காரணம் எல்லாம் பக்தர்கள் நலம் கருதிதான். 

திருவஹீந்திரபுரம்  தலத்துக்கு வரும் பக்தர்களுக்கு ஏதேனும் ஆபத்து என்றால் உடனே வலது கையிலிருக்கும் அம்பை இடது கரத்திலுள்ள வில்லில் பூட்டி, அந்த ஆபத்தை உடனே குத்தி எறிந்துவிடும் பரிவுதான் காரணம். 

இளவல் லட்சுமணனும் அவ்வாறே காட்சியளிக்கிறார். 

வடலூர் ராமலிங்க அடிகள், ‘வெவ்வினை தீர்த்தருள்கின்ற ராமா’ என்று ராமரைப் பாடிப் பரவசப்பட்டிருக்கிறார். 
இங்கு தரிசனமளிக்கும் லட்சுமி நரசிம்மரும் வித்தியாசமானவரே. 
 மஹாலட்சுமியைத் தன் வலது பாகத்தில் ஏந்தியபடி சேவை சாதிக்கிறார்.  தன்னுடைய இந்த அபூர்வ திருக்கோலத்தை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் எல்லா வளங்களையும் அள்ளித் தருகிறார், 
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
ராஜகோபாலன், வேணுகோபாலன், ரங்கநாதர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆழ்வார்கள் ஆகியோருக்குத் தனித்தனி சந்நதிகள் அமைந்து, கோயிலுக்கு மேலும் அழகூட்டுகின்றன.
 மார்க்கண்டேயர் சிவபெருமானிடமிருந்து ‘என்றும் பதினாறு’ என்ற சிரஞ்சீவித்துவம் பெற்றுவிட்ட போதிலும் முக்தியாகிய பேரின்பத்தைத் தன்னால் அடைய முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு மேலிட்டது. 

மார்க்கண்டேயர் இத்தலத்தின் அருகே சௌகந்திக வனம் என்ற காட்டை அடைந்து தனக்குக் கேட்ட அசரீரி வாக்குப்படி   மேற்கொண்ட தவத்தின் பயனாக தாமரை மலரைத் தன் இருப்பிடமாகக் கொண்ட மூன்று வயதுப் பெண் குழந்தையை  கண்டார். 

அந்தக் குழந்தை, அருகிலிருந்த கடல் அலைகளைப் பார்த்து மகிழ்ந்ததால், அதற்கு தரங்காநந்தினி (தரங்கம் என்றால் அலை; ஆனந்தினி என்றால்  மகிழக் கூடியவள்) என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். 

அவள் திருமணப் பருவத்தை எட்டியபோது, ஒரு தந்தைக்குரிய கடமையினை நிறைவேற்ற வேண்டுமே என்று பொறுப்பால் வேதனை கொண்டார் மார்க்கண்டேயர். 

மீண்டும் அசரீரி. மீண்டும் பெருமாள் வழிபாடு. எம்பெருமான் அவருக்குப் பிரத்யட்சமாக, தன் மகளை அவர் ஏற்க வேண்டும் என்றும் அந்தத் தலத்திலேயே அவர் நிலை கொண்டு அருள்பாலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார், மார்க்கண்டேயர். 

உடனே ஆதிசேஷன், பெருமாள் தங்குவதற்கு வசதியாக இங்கே ஒரு நகரத்தையே சிருஷ்டித்தார் என்கிறது,  புராணம். 

இந்த நகரை பெருமாளுக்கு அர்ப்பணித்ததால் இது திருஅசீந்திரபுரம் என்று வழங்கப்பட்டது. 

தேவநாதப் பெருமாளுக்கு, வருடம் பூராவும் ஒவ்வொரு நாளும் 
உற்சவத் திருநாளே! 
குறிப்பாக புரட்டாசி மாதம் 3வது சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள். 

தினமுமே பக்தர்கள் பெருமாள் சந்நதிக்கு முன் திருமண பந்தத்தில் ஒன்றுபடுகிறார்கள். 

பக்கத்து மலைமீது 74 படிகளை ஏறிச் சென்றால் 
ஹயக்ரீவரின் திவ்ய தரிசனம் கிட்டுகிறது. 

இந்த 74 படிகளும் ராமானுஜர் ஏற்படுத்திய 74 சிம்மாசனாதிபர்களைக் குறிப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப் படிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15ம் நாள் படிபூஜை நடத்தப்படுகிறது. 

மலைமீது நிலவும் ஏகாந்தமும் மூலிகை மணம் சுமந்துவரும் மென்காற்றும்  உள்ளத்தையும் உடலையும் வருடிச் செல்கிறது. 
THIRUVAHEENDRAPURAM MANAVALA MAMUNIGAL
தொண்டரடிப்பொடி ஆழ்வார்,,,
thondaradippodi azhwar.JPG
இந்த மலை ஔஷதகிரி என்று அழைக்கப்படுகிறது..

அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்துக் கொண்டு, போரில் மூர்ச்சித்திருந்த லட்சுமணனைக் காப்பதற்காக வந்தபோது, அந்த மலையிலிருந்து விழுந்த ஒரு பகுதிதான் இந்த ஔஷதகிரி மலை ..!

அதோடு, சஞ்சீவி மலையில் அனுமனுக்கு சஞ்சீவி மூலிகையை  அடையாளம் காட்ட ஹயக்ரீவர் உதவினாராம் ..!

அனுமன் எடுத்துச் சென்றபோது கீழே விழுந்த மலையின் 
ஒரு பகுதியோடு ஹயக்ரீவரும் சேர்ந்து இங்கே தரையிறங்கினார். 

கடலூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது திருவஹீந்திரபுரம். சென்னை-கடலூர் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவும் செல்லலாம்..!


DSC01555.JPGDSC01567.JPGIMG_0560.JPG

22 comments:

  1. அடேங்கப்பா ..... எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யப் பதிவு !!!!!!

    பொறுமையாகத்தான் ஒவ்வொன்றாய் படிக்கணும்.

    >>>>>

    ReplyDelete
  2. ஒளஷத கிரி என்ற பெயரே நன்னா இருக்கு.

    >>>>>

    ReplyDelete
  3. இந்த அனுமார் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துப்போகையில் ஆங்காங்கே பல இடங்களில் இவ்வாறு சிறு சிறு போர்ஷன்களைத் தவற விட்டுள்ளார். சிதற விட்டுள்ளார்.

    அவர் அவசரம் அவருக்கு !

    தஞ்சை ஜில்லா, பேராவூரணி தாலுகாவைச் சேர்ந்த மருங்கப்பள்ளம் என்ற கிராமத்திற்குச் சென்று வந்தேன். அங்கு உள்ள ஒரு கோயிலிலும் இதையே தான் சொன்னார்கள். அதாவது அனுமார் போட்டுச்சென்ற சஞ்சீவி மலைப்பகுதி ... மருந்து மலை இங்கு விழுந்ததால் .... இந்த இடமே ஒரே பள்ளமாகி .... ‘மருந்து பள்ளம்’ என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டதாம்.

    பிறகு அந்தப்பெயர் ’மருங்கப்பள்ளம்’ என நாளடைவில் மாறிப்போனதாம்.

    அங்கு இப்போதும் வசிக்கும் ஓய்வுபெற்ற தாசில்தார் திரு, ரகுபதி அவர்கள் தான் இதை எனக்குச்சொன்னார்கள்.

    >>>>>

    ReplyDelete
  4. படங்களும், விளக்கங்களும், ஆங்காங்கே சொல்லியுள்ள அசரீரி போன்ற கதைகளும் அருமை.

    >>>>>

    ReplyDelete
  5. ஐந்து தலை நாகத்துடன் கூடிய மணவாள மாமுனிகள் அவர்களின் படம் மிகவும் ஜோராக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  6. மேலிருந்து கீழ் 1, 2 + 4 அம்பாள் படங்கள் ..... கலக்கல் !

    >>>>>

    ReplyDelete
  7. ரத்னாங்கி சேவையில் ‘முன்னழகு’ + ‘பின்னழகு’ ....
    என இரண்டையுமே காட்டி ...... பின்னிட்டீங்கோ !

    >>>>>

    ReplyDelete
  8. கோதண்டராமர் வில்லை இடக்கரத்திலும் அம்பை வலக்கரத்திலும் வைத்துள்ளதின் பரிவு விளக்கம் .........................................’அடடா என்ன அழகு .............................................’

    >>>>>

    ReplyDelete
  9. தொடர்புடைய பதிவுக்கும் சென்று வந்தேன்.

    16 இல் 6 ஐயும் கண்டு மகிழ்ந்தேன்.

    >>>>>

    ReplyDelete
  10. பெருமாள் என்றாலே மிகப்பெரியவர்.

    அவருக்கு எல்லாமே பெரிய சைஸ் தான். முரட்டு சைஸ் தான்.

    அதுபோல இந்தப்பதிவும் மிகவும் பெரிதாக அமைந்துவிட்டது.

    அதுபோல என் பின்னூட்டங்களும் எண்ணிக்கையில் இன்று பெரிதாக அமைந்து விட்டது.

    சுருக்க நினைத்தும், சுருக்கமாக முடிக்க நினைத்தும், ஏனோ மனஸு கேட்க மறுக்கிறது.

    நாளை முதல் மீண்டும் முயற்சிக்கிறேன் ...... சுருக்க.

    oo oo oo oo oo

    ReplyDelete
  11. படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்... அறியாத தல விளக்கங்களுக்கும் நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  12. அருமறையை ஊழிதனில் காத்தார் வந்தார்
    அதுதன்னை அன்று அயனுக்கு அளித்தார் வந்தார்
    தரும வழி அழியாமல் காப்பார் வந்தார்
    தாமரையாளுடன் இலங்கும் தாதை வந்தார்
    திரு உரையாய் தாம் பொருளாய் நிற்பார் வந்தார்
    திருவருளால் செழுங்கலைகள் தந்தார் வந்தார்
    மருவலர்க்கு மயக்குரைக்கும் மாயோர் வந்தார்
    வானேற வழி தந்தார் வந்தார் தாமே !

    திருவஹீந்திரபுரம் வாழ் ஹயக்ரீவர்,
    தேவ நாதப் பெருமாள்
    பார் புகழும் பார்கவி,
    செங்கமலவல்லி
    ஹேமாம்புஜத்தாள்
    அடியவர்களின் குறை தீர்க்க வில்லும் அம்பும் ஏந்தி தயார் நிலையில் இருக்கும் ராம லட்சுமணர்கள்

    இவர்களுடன்

    ஸ்ரீ நிகமாந்த தேசிகர் ( இரத்னாங்கி சேவையில் மிக மிக அழகு )
    மணவாள மாமுனிகள்
    தொண்டரடிப் பொடியாழ்வார்

    என அனைவரையும் காண
    புண்ணியம் செய்தனை மனமே.!

    யாம் பெற்ற புண்ணியத்தில் ஒருபகுதி
    உமக்கும் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  13. ரத்னாங்கி சேவை மிக அழகு. பக்தர்களுக்கு அவர்களின் துன்பத்தை போக்க வலது கரத்தில் அம்பும் இடது கரத்தில் வில்லும் ஏந்திய ராமன் வெகு அழகு.
    திருவஹீந்திபுரம் பார்த்து பல வருடங்கள் ஆகி விட்டது. இன்று உங்கள் தளத்தில் கண்டு களித்தேன் நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. திருவஹீந்திரபுர தலத்தின் பெருமைகளை,சிறப்புகளை அறிந்து கொண்டேன்.படங்கள் அற்புதம்,அழகு. நன்றி.

    ReplyDelete
  15. திருவஹீந்திபுரத்தின் சிறப்புகள் சிறப்பான படங்களுடன் விளக்கியிருப்பது சிறப்பு. இங்கெல்லாம் என்று செல்வது? ஏக்கம்!

    ReplyDelete
  16. இந்தக் கோவிலுக்கு நான் சென்றிருக்கிறேன். ஆனால் அக்கோவில் பற்றிய இவ்வளவு விவரங்களையும் உங்கள் பதிவின் மூலமே தெரிந்து கொண்டேன். படங்கள் அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்

    ReplyDelete
  17. திருவஹிந்தி புரம் திருத்தலப் பெருமைகளும் அருமைகளும் அழகாய் விளக்கமாய் பகிர்ந்தமை சிறப்பு! படங்கள் பதிவுக்கு அழகு சேர்த்தன! நன்றி!

    ReplyDelete
  18. திருவஹீந்திரபுரம் அருமையான தரிசனம். அதுவும் ரத்னங்கியில் கொள்ளை அழகு.
    ஸ்ரீ தேசிகன் ஸ்வாமியின் விக்ரஹத்தில் உயிரோட்டம் பற்றி இன்றுதான் படிக்கிறேன்.
    நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  19. படங்களின் அழகும், தகவல் களஞ்சியமுமாய் இருக்கிறது உங்கள் பதிவு.

    ReplyDelete
  20. திருவந்திபுரம்..... சிறு வயதில் இக்கோவிலுக்குச் சென்றதுண்டு....

    கோவிலில் பார்த்தவை அத்தனை நினைவில்லை....
    மீண்டும் செல்லத் தூண்டுகிறது உங்கள் பகிர்வு.

    ReplyDelete
  21. ஔஷதகிரி அறிந்தேன் சகோதரியாரே
    படங்கள் அருமை
    நன்றி

    ReplyDelete
  22. THE UTSAVAR N RATNANGI S SRI MANAVALA MAMUNIKAL ---PL GIVE CORRECT INFORMATION -=-=-

    ReplyDelete