

தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள் சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில்இருக்கும்.
சந்திரன் என்பது மன அறிவு,
சூரியன் என்பது ஜீவ அறிவு.
அக்னி என்பது ஆன்மா அறிவு.
சந்திரன் சூரியனில் அடங்கி ,சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தை பூசம்.
மனம் ஜீவனில் அடங்கி,ஜீவன் ஆன்மாவில் அடங்கி,ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்,என்பதை காட்டவே தை பூசம் வள்ளல் பெருமானால் அளிக்கப்பட்டது.
அசுரன் சூரபத்மனை வதம் செய்ய வேலாயுதத்தை முருகப் பெருமானுக்கு, தாய் பார்வதி அளித்த நாளையே தைப் பூசம் என 48 நாட்கள் விரதம் இருந்து, தைப் பூசத்தன்று காவடி எடுத்து பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற புகழ் பெற்ற முருகன் ஆலயங்களுக்கு செல்லும் திருநாள்...
நடராசர், நடேசர், நடனசபாபதி, ஆடலரசன், ஆடல்வல்லான், கூத்தபிரான் என்ற பல பெயர்களுக்குரியவராய் திகழ்கிறார் நடராசப் பெருமான்.
இவர் ஆடிய ஆட்டங்கள் எத்தனையோ வகை உண்டு. தில்லையில் பொன்னம்பலத்தில் ஆடியது ஆனந்த நடனம். எனவே அவர் ஆனந்த நடராசர்.
பதஞ்சலியும் (ஆதிசேஷன்), புலிக்கால் முனிவரும் (வியாக்ரபாதர்) தவமிருந்து ஒரு தைப்பூச நன்னாளில் திருவடிச் சிலம்புகள் கலீர் கலீரென ஆனந்த நடனத் தரிசனம் கிடைத்தது.
ஆதியில் தேவ லோகத்தில் . ஆனந்த நடன நிகழ்ச்சியில்
விநாயகர் தன் தும்பிக்கையைத் தவழவிட்டு ஓய்வாக இருந்தார்.
அடியவராகிய அருணகிரி நாதர் "மயிலுமாடி நீயுமாடி வரவேணும்' என்று பாடியபோது ஆடி ஓடி வந்த முருகன் - தந்தையுடன் ஆனந்த நடனம் ஆடி இனிமையாக காட்சியளித்தார் ...
திருவண்ணாமலையில் கம்பத்தில் காட்சி தந்த கந்தனை இன்றும் காணலாம். கந்து என்றால் தூண். எனவே அங்கு முருகனை கம்பத்திளையனாராக வழிபடுகின்றோம்...
கயிலையில் முருகன் சிவனுடன் ஆடியபோது மயிலும் ஆடியதனால் மயிலின் காலடியில் இருந்த நாகம் தப்பிச் சென்று விநாயகரின் அசைவற்றிருந்த தும்பிக்கையுள் புகுந்து விட்டது.
நாகத்தை வெளியேற்ற விநாயகரும் ஆடினார்.
மாமனான திருமால், ""விநாயகா, இது என்ன நடனம்?'' என்றார்.
நாகத்தை வெளியேற்ற முயன்றுகொண்டிருந்த விநாயகர்
""இதுதான் நாக நடனம்'' என்றார்.

இதை நினைத்துதான் கிருஷ்ணாவதாரத்தில் காளிங்கனாகிய பாம்பின் தலைமீது நடனமாடினார் கண்ணபிரான்.
தித்திக்கும் தில்லானாவின் வேகம் காளிங்க நடனத்தில் உண்டு.

தைப்பூச நாளில் காலை ஆறு மணி அளவில் கிழக்கு வானில் தன் பொற்கிரணங்களப் பரப்பி தத்தகாயமாய் உதிக்கவும், அதே நேரம்... மேற்கு வானில் கதிரவனுக்கு நேர்க்கோட்டில் தண் கிரணங்களைப் அளித்தபடி சந்திரனும் காட்சிப்படும் வானியல் அற்புதம் நிகழும் பொன்னாள்.
சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும்.
முருகன் தலங்களில் தேரோட்டம் நிகழும் திருநாள் தைப்பூசம்...


.jpg)

.
,

