Friday, February 4, 2011

ஆஸ்திரேலியாவில் நம்ம அண்ணாச்சி கடை !!

ஆஸ்திரேலியாவில் இந்தியப்பொருள்கள் தமிழ் வார இதழ்கள் உட்பட அனைத்தும் கிடைக்கும் மளிகைக் கடை ஒன்றின் உரிமையாளர் பெயர் ராமசாமி.


கடை விலாசம்Samy Imports And Exports, 127 Leybourne St, Chelmer, QLD, 4068 


ஆகவே அந்த கடையை சாமி கடை என்று அழைப்பார்கள்.


அந்த கடையில் வாழைக்காய் ஒன்றின் விலையைக் கேட்டேன். அவர் விலை எல்லாம் கேட்காதீங்க! வாங்க மாட்டீங்க ! நான் ஒரு வாழைக்காய் ஒரு டாலர் என்று சொன்னால், நீங்கள் இப்போது தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள் 40 ரூபாயா என்று கணக்கு போட்டுப் பார்ப்பீர்கள் என்றார்.


இட்லிமாவு அரைத்து பிளாஸ்டிக் வாளியில் போட்டு உறைய பெட்டியில் வைத்திருந்தார். எப்போது அரைத்தது என்று கேட்க போன வாரம் தான் வந்தது. எப்போது அரைத்தது என்று எனககுத் தெரியாது. ஒரு மாதம் வரை கெடாது, உபயோகிக்கலாம் என்று சொன்னார்.


காய்கறிகளை சுத்தம் செய்து வெட்டி பாக்கெட் செய்ய அங்கே நிறைய ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு மாதம் வரை கீரைகள் , பழங்கள், காய்கள், எல்லாம் பாக்கெட் செய்து உறைய பெட்டியில் வைத்து விற்கிறார்கள்.


அவரின் மனைவி குழந்தைகள் எல்லாம் இந்தியாவில் இருப்பதாகவும், குழந்தைகள் படித்துக் கொண்டிருப்பதாகவும், அவர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்தியா வந்து குடும்பத்தைப் பார்த்து வருவேன் என்றார். 


சமீபத்தில் வெள்ள எச்சரிக்கை வந்தபோது கீழே இருந்த பொருட்களை எல்லம் ஆட்களை வைத்து மேலே தூக்கி பாதுகாப்பாக வைத்து முன்னேற்பாடுகள் செய்திருந்தும் கடை முழுவதுமாக மூழ்கிப்போனதாம்.



ஆனால் சாமி இறக்குமதி உரிமையாளகள் மற்றும் ஊழியர்கள் மனம் தளராமல் குவின்ஸ்லாந்து தமிழ் சங்கம் உதவியுடன் கடையை சீர் செய்து, இப்பொழுது புது கிளையையும் திறந்திருக்கிறார்.


புதிய கிளை384 Ipswich Road, Annerley, QLD

7 comments:

  1. அண்ணாச்சி கடை மேன்மேலும் கிளை விட வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  2. அண்ணாச்சி கடை மேன்மேலும் கிளை விட வாழ்த்துகிறோம்

    ReplyDelete
  3. அண்ணாச்சி கடை வாழ்க!!!!!

    ReplyDelete
  4. உழைக்கும் அண்ணாச்சி
    பிழைக்கும் அண்ணாச்சி
    பிறருக்கு பிழைப்பு கொடுக்கும் அண்ணாச்சி
    நமக்கு நயமான நல்ல பொருட்கள் தரும் அண்ணாச்சி

    வாழ்க வாழ்கவே!

    [இதுபோலவே “பெருமாள் பூக்கடை” என்று தமிழில் எழுதிய பெயர் பலகையுடன், துபாயில் ஒரு கடைக்குச் சென்றேன்; பலவிதமான அருமையான அனுபவங்கள் ஏற்பட்டது]

    ReplyDelete
  5. ;)
    காயே ந வாசா
    மனஸேந்த்ரியைர் வா
    புத்யாத்மனா வா
    ப்ரக்ருதே ஸ்வபாவாத் !

    கரோமி யத்யத்
    ஸகலம் ப்ரஸ்மை
    ஸ்ரீமந் நாராயணாயேதி
    ஸமர்பயாமி !!

    ReplyDelete