Thursday, February 10, 2011

பிரிஸ்பேன் ஆறு


பிரிஸ்பேனில் Mount Coot-thaa மலைக்குச் சென்றிருந்தோம்.

Mt Coot-Tha அகல பார்வைக் கோணம்
சர் தாமஸ் பிரிஸ்பேன் என்கிற திறமையான நகர மேயர் இந்த மலைப்பகுதியை உருவாக்கினார். தென் துருவத்துக்கு அருகாமை தேசத்திலிருந்து வடபகுதி வானத்தில் காட்சியளித்த நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிவிப்புப் பலகையில் குறிப்பிட்டிருந்தார்கள்.

நானும் தான் சிறு வயதில் நட்சத்திரங்களை எண்ணியிருக்கிறேனே! நட்சத்திரங்களை எண்ணினால் மச்சம் வரும், மரு ஏற்படும் என்று தோழிகள் பயமுறுத்தியதால் நிறுத்திவிட்டேன்.

உலோகத்தகடுகளில் திசைகளும்,  நகரங்களின் பெயரும், தூரமும் குறிப்பிட்டிருந்தார்கள். கவனமாக இந்தியா எந்த திசையிலிருக்கிறது என்று பார்த்து அந்த திசையில் கூர்ந்து வெகு நேரம் கவனித்துப் பார்த்துக் கொண்டேன்.

பிரிஸ்பேன் ஆறு
பிரிஸ்பேன் நதி அமைதியாக ஆரவாரமின்றி அழகாக ஓடி பசிபிக்கடலில் கலக்கும் வரை காட்சியளித்தது. பெர்ரி என்னும் பயணியர் படகும், உல்லாசக் கப்பல்களும், மீன் பிடிப்படகுகளும் ஆற்றுக்கு அழகு சேர்த்தன.

சில சமயம் கடலிலிருந்து முதலைகளும் நீரோட்டத்தில் கலந்து ஆற்றுக்குள் புகுந்துவிடுமாம்.

கூவம் நதி
நம் சென்னையில் இருக்கும் கூவம் ஆறும் இது போலத்தானே ஒரு காலத்தில் போக்குவரத்திற்குப் பயன்பட்டு அழகு சேர்த்து சென்னையின் தேம்ஸ் நதியாக ஓடிக்கொண்டிருந்தது?

கண்ணெட்டும் திசையெங்கும் யாரும் ஆற்றில் குளித்துக் கொண்டோ, துவைத்து கொண்டோ, வாகனங்களைக் கழுவிக் கொண்டோ, ஆடுமாடுகளைக் குளிப்பாட்டிக் கொண்டோ, தொழிற்சாலைக் கழிவுகளை ஆற்றில் திறந்துவிட்டுக் கொண்டோ இல்லை! இல்லை! இல்லை தான்.

நதிக்கரையில் இருந்த தாவரவியல் பூங்கா ஏழுமுறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சீரமைக்கப் பட்டு, இறுதியில்இந்த மலை அடிவாரத்தில் மாற்றிவிட்டாராம்.

வானியல் காட்சியகம் அவர் பெயரிலேயே சர் தாமஸ் பிரிஸ்பேன் பிளானடோரியம் என்கிற பெயரில் இயங்கிவருகிறது.

“ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்”
“நதிக் கரைகளே நாகரிகத்தின் தொட்டில்கள்”
“தாயைப் பழித்தாலும் தண்ணீரைப்பழிக்காதே”
கங்கை ஆரத்தி
என்றெல்லாம் பழமொழி கூறிக்கொண்டு, கங்கை ஆற்றுக்கு தினம் ஆரத்திப் பாட்டுப்பாடி ஆரத்தி எடுத்து ஆராதிக்கிறோம் என்று பூஜை செய்தாலும், நாம் சொல்லொனா அசுத்தங்களைச் செய்து நீர்களைப் பாழ் படுத்தித்தானே இருக்கிறோம்??

இப்படி எந்த பஞ்ச் டயலாக்கும் விடாமல், தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் படியாக தங்கள் நீராதாரத்தை காத்து வைத்திருக்கிறார்களே!!

7 comments:

 1. Amma,

  Thaangal sonnathu migavum sari.

  Thavikum vaaikku thanneer kodupathu tamilan marabhu. Aanaal, kaala sulatrathin vegathil naam namathu thanneer thadangalai paathukaakka maranthuthan poivittom.

  Endrum anbudan
  Lakshmi

  ReplyDelete
 2. கங்கை ஆரத்தி அருமை.

  ReplyDelete
 3. பிஸ்பேன் ஆற்றின் காட்சி அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறீர்கள். அருமை.

  ReplyDelete
 4. /நட்சத்திரங்களை எண்ணினால் மச்சம் வரும் + மரு ஏற்பட்டும் என்று தோழிகள் பயமுறுத்தியதால் எண்ணுவதை நிறுத்திவிட்டேன்/

  அதுவரை எண்ணியதை நான் எண்ணிப்பார்க்கிறேன்.

  அதனால் ஏராளமான மச்சங்கள் தங்கள் உடம்பு பூராவும் நட்சத்திரங்கள் போலவே பரவியுள்ளது என் ஞானக் கண்களுக்குத் மட்டுமே தெரிகின்றனவே.

  அத்தனையும் அதிர்ஷ்ட மச்சங்களே!

  ஹலோ எஃப்.எம்.ரேடியோ நிகழ்ச்சியில் சாதனைப்பெண்மணியாக 22.05.2012 அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள, அதிர்ஷ்ட மச்சத்திற்கு சொந்தக்காரியான செளபாக்யவதி ரங்கநாயகிக்கு என் அன்பான வாழ்த்துகள்.

  ReplyDelete
 5. ;)
  “ராம” “ராம” ”ராம”
  ”கோவிந்த தாமோதர மாதவ”

  ReplyDelete