Thursday, February 10, 2011

தாவரவியல் பூங்கா

கோளரங்கத்துடன் இணைந்திருந்த தாவரவியல் பூங்காவிற்குச் சென்றிருந்தோம். கறிவேப்பிலை மரம் நிறய கிளைகளுடன் வளர்ந்திருந்தது. அதை இங்கு யாரும் சமையலுக்குப் பயன் படுத்துவதாகத்தெரியவில்லை. உல்வொர்த் போன்ற தொடர் கடை களில் கூட கறிவேப்பிலை இலைகள் காணப்படவில்லை. ஆனால் நிறைய வீடுகளில் பெரிய மரங்களாக அலங்கார மரமாக வளர்க்கிறார்கள்.
    எப்படியோ அதன் காற்றும் ஜீரண சக்தியைத்தூண்டும் தானே!!
மிகப்பெரிய அத்திமரம் ஒன்று காய்களும், பழங்களும் நிறந்து கண்கொள்ளாக் காட்சியாக  நிறைய பறவைகளுடன் அழகாகக் காட்சியளித்ததது.
       இது வரை கண்டிராத நிறங்களும், வடிவங்களும் , வாசனைகளும் நிரம்பிய
வண்ணப்பூந்தோட்டம்.
   அங்கிருந்த பெண்குழந்தை ஒன்று என் உடையைப் பார்த்து , அதன் அம்மாவிடம் இந்தியாவின் உடைகள் என்ற பாடத்தில் இதே வண்ணமும் வடிவமும் கொண்ட ஆடையை ஆசிரியர் படத்தில் காட்டி பாடம் நடத்தியதைச்சொல்லி மகிழ்ந்து வியப்புடன் என்னிடம் கைகுலுக்கியது.
  நடக்க ஆரம்பித்த குழந்தை ஒன்றைத் தூக்க முயன்றேன். தடுத்து என் மகர் என்னை அழைத்துச் சென்றுவிட்டார்.
    அம்மா! ஆஸ்திரேலியாவில் கால் வைத்த உடனே ஐ. டி. பி யில் கொடுக்கும் முதல் அறிவுறுத்தலே உங்கள் முன் குழந்தை கீழே விழுந்து அழுது கொண்டிருந்தால், இரக்கப்பட்டு தூக்கிவிடாதீர்கள் என்பதுதான். நாம் தூக்க முயன்றதால் தான் குழந்தை கீழே விழுந்து மருத்துவச் செலவு என்று ஒரு பொரிய தொகையும், கடத்த முயன்றதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுவிடும்.நம் ஊர் மாதிரி தலைமுறைக்கும் வழக்கு ந்டத்தி இழுத்தடிக்க மாட்டார்கள். உடனடி அபராதம், தண்டனை என்று வாழ்க்கையைத் தொலைத்து அவதிப்பட நேரிடும். எப்போதும் எச்சரிக்கையாக் இருங்கள் என்பதுதான்.  என்றார்.
   பூக்காத தாவரத்திற்கென்றே தனிப்பிரிவு. அந்த இலை களில் தான் எத்தனை வடிவங்கள்? மிகப்பெரிய கண்ணாடி மாளிகை வட்ட வடிவில் வனப்புற நடுவில் அழகிய குளம் ! சுற்றிப் பூஞ்செடிகள்! மயன் சிருஷ்டித்த மாளிகைபோல் கண்கவரும் அந்த இடம் திருமணத்திற்கு வாடகைக்கு விடப்படுகிறதாம். இது போல் இன்னும் வகை, வகையான அரங்கங்கள் திருமணத்திற்குக் கிடைக்குமாம். ஓசோனின் இருப்பை உணரமுடிகிறது.இந்த இனிமையான
இடம் இருமண்ம் கலக்கும் திருமணம் இனிதேற உகந்த இடம் தான்.
     திரும்பும் வழியில் மூன்றாம் பிறை முகிழ்ப்பதைக் கண்டேன். மறையும் வரை கண்கொட்டாமல் ரசித்தேன்.நம் ஊரில் காத்திருந்து காண வேண்டியிருந்தால் சில முறை காட்சிக்கெட்டாமல் போய்விடுமே! 

5 comments:

 1. Amma,

  Naanum intha poongavirkku neenda natkalukku mun sendru irukirean. Thangal katuraiyai padithathu meendum intha azhagiya poongavirkku oru visit seithathu pol irunthathu.

  Melum ungal anubavangalai padikka aarvamaaga irukkirean.

  Endrum anbudan
  Lakshmi

  ReplyDelete
 2. @ lakshmi dhevi
  Melum ungal anubavangalai padikka aarvamaaga irukkirean.
  நன்றி

  ReplyDelete
 3. சூப்பராக பூங்கா தரிசனம் செய்வித்ததற்கு நன்றி.

  ReplyDelete
 4. தங்களின் இந்திய உடையை ரஸித்துத் தங்கள் கையைப் பிடித்துக் குலுக்கிய குழந்தை மிகவும் அதிர்ஷ்டக்கார குழந்தையாகவே இருக்க வேண்டும்.

  தாங்கள் தூக்கிக் கொஞ்ச நினைத்த குழந்தைக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை, பாவம் அது.

  கருவேப்பிலையாய் மணம் பரப்பி, மூன்றாம் பிறை போல ஜொலிக்கும் பதிவுக்கு பாராட்டுக்கள்.

  vgk

  ReplyDelete