Saturday, February 12, 2011

தேன் சிந்தும் வானம் !!

நம் ஊரில் அபூர்வமாகவே காட்சிப்படும் வானவில் பிரிஸ்பேன் நகரில் தினசரி தூறிய மழையால் அடிக்கடி காட்சியளித்தது. சில நாட்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் கூட தோன்றி மகிழ்வித்தது.


நம் ஊர் ஊட்டி, கொடைக்கானல் போல இந்நகரத்தின் இனிய, குளிர்ச்சியான மிதமான குளிரையும், அழகிய வானில் காணப்படும் வண்ண மேகங்களின் அழகைக் கண்டு களிப்பதற்கும் வெளிநாடுகள், மற்ற மாநில பகுதிகளில் இருந்தும் ஆர்வலர்கள் வருவார்களாம்.

மிதவைப் பாலம் பிரிஸ்பேன் நதியின் நீர்ப்பகுதியின் மேல் அமைத்திருக்கிறார்கள். FERRY என்னும் பயணியர் படகு சற்று தூரத்தில் ஓடினால் மென்மையாக அசைவை உணரமுடிகிறது.


அருகில் இருந்த உணவகத்தில் FLOOD என்கிற மிகப்பெரிய கட்அவுட் போன்ற எழுத்துக்களின் அடிபகுதி முழுவதும் அழிக்கப்பட்டு, அந்த பகுதிவரை ஒருமுறை வந்த வெள்ளத்தில் மூழ்கி இருந்ததை நினைவூட்டிக்கொள்கிறார்கள்.
மிகப்பெரிய தொங்கு பாலம் அமைத் திருக்கிறார்கள். கட்டும் வரை இதன் பெயர் Jubilee Bridge.  கட்டி முடித்தப் பின் STORY BRIDGE என்ற பெயரில் இன்று வரை அழைக்கிறார்கள். மூன்று லேனில் வாகனங்கள், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் வாசிகளுக்கென தனி லேன் ஆக மொத்தம் இரு வழி போக்குவத்துக்கு எட்டு லேனில் அமைந்த பெரிய பாலம். இது மட்டுமல்லாது பாலத்தின் உச்சி வரை தீரச்செயல் சாகசம் என்று ஏறி இறங்க கட்டுப்படுதப்பட்ட வழி வேறு. பொறியியல்அற்புதம்!!

ஆற்றின் அடியில் செல்லும் CLEM JONES என்ற சுரங்கப்பாதை ஒன்றை, திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடித்து நிறைய செலவு குறைந்தததால் அரசாங்கத்தின் பாரட்டையும் பெற்றிருக்கிறார்களாம் . தற்போது இதன் சுருக்கப் பெயர் 'C7'ஆம்.

சுங்க வசூல் செய்ய வாகனங்களை நிறுத்தி கட்டணம் பெற்றால், காலதாமதமும், எரிபொருள் விரயமாவதையும் கருத்தில் கொண்டு, சாலையின் தொடக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கி காமிராவால், வாகன எண் பதியப்பட்டு, வீட்டு முகவரிக்கு தகவல் வருகிறது. வீட்டுக் கணிணியில் அடுத்த நிமிடமே கட்டணமும் வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பப்பட்டுவிடும் உயரிய தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு. 

அடுக்கடுக்காக அமைக்கப்பட்ட மலை பகுதியில் மலை ஏற்றப் பயிற்சிக்கு உறுதியான கயிறுகள், பாதி வழியில் அமர்ந்து இளைப்பாற பரண்கள் எல்லாம் நதிப்பகுதியை பிரம்மிப்பூட்டும் வகையில் காட்சிபடுத்துகிறது.

இங்கே ரிவர் பயர் என்னும் களிப்பூட்டும் பிரம்மாண்டமான தீபாவளிப் பண்டிகைபோல பட்டாசுகளால் வானவேடிக்கை வருடம் ஒருமுறை நடக்கிறது. அப்போது போர் விமானம் ஒன்று பேரொலியுடன் நெருப்பைக் கக்கிக் கொண்டு நதியின் இருகரை களுக்கும் சிலமுறை சென்று வந்து அனைவரின் உற்சாகக் கரவொலியை வாங்கிகொண்டது. இந்த வருடத்தோடு விமானக் காட்சி கடைசியாம்.

கைப்பேசி மூலம் எடுத்த வீடியோ பகிர்வு

அடுத்த பிரம்மிப்புக்கு மறைமுகமாக நம்மை தயார் படுத்திக் கொள்ள செய்து விட்டார்கள்..!!

8 comments:

 1. தோழி,
  தங்களின் வலைபதிவு ,ஆஸ்திரேலியா குறித்து மிக அருமை.மிக்க நன்றி, தோழி

  ReplyDelete
 2. padikka migavum suvaiyaga irunthathu. Brisbane nagarukku oru virtuval tour sendru vanthathu poal irunthathu. Thodarndthu elzudungal.

  anbudan, Tamil priyan.

  ReplyDelete
 3. Anbu Amma,

  Thangal 'Thean sindhum Vaanam' katturai padikka unmaiyeleyea theanaaga irunthathu. Ungal payana anubavangalai thodarnthu ealuthungal.

  Endrum anbudan
  Lakshmi

  ReplyDelete
 4. கிட்டத்தட்ட ஆஸ்த்ரேலியாவை அழகாகா சுற்றிக்காட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள்.

  ReplyDelete
 5. கிட்டத்தட்ட ஆஸ்த்ரேலியாவை அழகாகா சுற்றிக்காட்டிக்கொண்டு இருக்கின்றீர்கள்.
  சிறப்பாக இருக்கிறது.

  ReplyDelete
 6. Nice info... Keep posting more....

  ReplyDelete
 7. அழகான ஆஸ்திரேலியாவை, ஒட்டு மொத்தமாக அருமையாகக் காட்டிவிட்டீர்கள். ;)

  ReplyDelete