Monday, February 7, 2011

நீல நாக்கு ....!!


எப்போதும் உணவுக்கு முன் ஏதாவது ஒரு உயிரினத்திற்கு உணவிடுவது என் வழக்கம். அன்றும் உணவை எடுத்துக் கொண்டு பூக்கள் நிரம்பிய பிரிஸ்பேன் வீட்டின் முன் பக்கத்துச் சின்னஞ்சிறிய தோட்டத்திற்கு வந்தேன்.

அங்கே நேற்று வைத்த உணவின் மிச்சத்தை சுவைத்தபடி பாம்பு போல் தோற்றமளித்த முகத்துடன் உடலைச் செடிகளுக்கிடையில் மறைந்தபடிக் காட்சியளித்த உயிரினத்தைக் கண்டு அலறியடித்து வீட்டுக்குள் ஓடிவந்து கதவைச் சாத்தினேன்.

சப்தம் கேட்டு மாடி அறையிலிருந்து வந்த மகனிடம் விளக்கினேன். “பாம்பா! இங்கேயா?? சான்சே இல்லை..” என்று தோட்டத்தில் பார்த்துவிட்டு “அம்மா இது பாம்பு அல்ல! நம் ஊர் பல்லி குடும்பத்தைச் சார்ந்த உயிரினம். இதன் நாக்கு நீல நிறத்தில் இருப்பதால் இதற்கு BLUE TONGUE என்றே பெயர்”.

என் மகனின் அலுவலகத்தில் மேற்பார்வையாளராகப் பணிபுரியும் பெண் இதைப் பார்த்தால் கையில் எடுத்துக் கொஞ்சிக் கொள்வார். எடுத்துக் கொண்டுபோய்த் தன் வீட்டுத்தோட்டதில் விட்டு செல்லப் பிராணியாக வளர்ப்பார்.

அவர் இரண்டு நாய்களைச் செல்லமாக மிகுந்த பொருட் செலவுடன் வளர்த்து வருகிறார். அவை மிகவும் உயர்தரமான பிராண்ட். நாய்களுக்கென்று பிரத்யோகமாகத் தயாரிக்கும் உணவை மட்டுமே சாப்பிடும்.

ஒருமுறை அந்த பிராண்ட் கிடைக்காமல் வேறு பிராண்ட் உணவை அளித்த போது சாப்பிட மறுத்த உயர்வகை நாய்கள் அவை.

அந்த நாய்கள் ஒரு முறை இந்த நீல நாக்கு பல்லியை விரட்டி விளையாடிய போது கடிந்து கொண்டார். . . முன் எப்போதும் நாய்களைக் கடிந்து கொள்ளாதவராம் அவர்.

நம் ஊரில் கூட ஒரு இடம் செழிப்பற்றது என்று எடுத்துச் சொல்ல பல்லியும் ஊராத பாழ் நிலம் என்றல்லவா குறிப்பிடுவோம். வீடு வளமாய் இருக்க அங்கே பல்லி ஊரவேண்டும்.

பல்லியை என் தோட்டத்தில் காணாமல் போயிற்று” என்று கவலை கொண்ட ஒருவரைக் கூட சந்தித்திருக்கிறேனே பிரிஸ்பேனில்!

ஆஹா! அந்த குடும்பத்தைச் சேர்ந்ததா இது? இது தோட்டத்தில் இருந்தாலோ, பார்த்தாலோ அதிர்ஷ்டம் என்று நம்புகிறார்களாம்.

நல்ல வேளை, இதைப் பார்த்து பயந்து கல்லை விட்டெறிந்திருந்தால், இது பாதுகாக்கப்பட்ட உயிரினம் என்பதால் இங்கிருக்கும் சிட்டி கவுன்சில் (நம்மூர் காப்பரேஷன், முனிசிபாலிடி போல ஒரு அரசு அமைப்பு) நடவடிக்கை எடுத்திருக்கும் என்றார்.

அவ்வளவுதான்! விருதகிரி விஜயகாந்த் நினைவுக்கு வந்தார். “இரும்புக்கம்பியாலும், பிற ஆயுதங்களாலும் இந்திய மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது சிட்டி கவுன்சில்? மற்ற மாணவர்களைவிட நான்கு மடங்குக் கட்டணம் கொட்டிக் கொடுத்துப் படிக்கவந்த அவர்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் இல்லையா?” என்று அங்கே ஏன் நிற்கப்போகிறார்? பறந்து போய் பத்து நிமிஷம் ஆகியிருக்குமே!!

12 comments:

 1. Suvaiyana seithi. Arputhamaaga urai nadai tamil'il ezluthiyathu, padikka suvarasiyamaga irunthathu.

  Thodarnthu ezluthungaa...

  aarvamudan,
  tamil priyan!

  ReplyDelete
 2. பெளியே சொல்லி விடாதீர்கள்.புளுடூத் மாதிரி புளூ டங்...என்று எதையாவது கண்டுபிடித்து கணினியிலி மாட்டி குழந்தைகளை இன்னும் கட்டிப் போட்டு விடப் போகிறார்கள்....

  ReplyDelete
 3. வெளியே வீடு விடாதீர்கள்.
  ப்ளூ டூத் மாதிரி ப்ளூ டங் என்று எதையாவது கண்டுபிடித்து கணினியில் மாட்டி,குழந்தைகளையும் மாட்டிவிட்டு விடுவார்கள்

  ReplyDelete
 4. நீல நாக்கு! ம்… புதிய உயிரினம் பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. நல்ல தகவல். சில பேர் தேளைக்கூட செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

  ReplyDelete
 6. நல்ல தகவல் படங்கள் அருமை.

  ReplyDelete
 7. இதே படங்களை சமீபத்தில் ஓர் மீள் பதிவில் பார்த்து பயந்துபோய் எழுதியுள்ளேன். மீண்டும் பார்க்க/படிக்க பயந்துபோய் இதைப்பற்றி எதுவும் எழுதாமல் நான் எஸ்கேப் ஆகிறேன்.

  ஒருசில ஜந்துக்களைப்பார்த்தாலே எனக்கு அலர்ஜி. சிலர் அதைக் கையில் எடுத்து எப்படித்தான் கொஞ்சி மகிழ்கிறார்களோ! ;((((

  ReplyDelete
 8. நண்பரே,

  நல்ல பதிவு ...

  முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
  பார்க்க

  தமிழ் DailyLib

  அவசியம் Vote button ஐ இணைத்து கொள்ளுங்கள்

  To get the Vote Button
  தமிழ் DailyLib Vote Button


  Thanks,
  Krishy

  ReplyDelete
 9. hii.. Nice Post

  Thanks for sharing

  ReplyDelete
 10. புதிய உயிரினம் அறிமுகப்படுத்தியதற்கு பாராட்டுக்கள்..

  ReplyDelete
 11. ;)
  ஆரோக்யம் ஐஸ்வர்யம்
  அனந்த கீர்த்தி
  அந்தே ச விஷ்ணோ:
  பதமஸ்தி ஸத்யம் !!

  ReplyDelete