Tuesday, February 8, 2011

ஆஸ்திரேலியாவில் ரம்ஜான் !!

ரம்ஜான் சமயத்தில் எனது மகனின் அலுவலகத் தோழர்கள் நடத்திய தொழுகையில் கலந்து கொள்ளும் அற்புத வாய்ப்பு கிடைத்தது.

தங்கியிருந்த வீட்டை அலங்கரித்து, தொழுகைக்கான ஹலீம் என்னும் நோன்புக்கான உணவு தயாரித்திருந்தனர்.


கோதுமையும், ஆட்டிறைச்சியும் சேர்த்து தயாரிக்கப்படும் களி மாதிரி
இருந்த அந்த பதார்தத்தை தயாரிக்க ஸ்பெஷலாக ஆட்களைத் தருவித்திருந்தனர்.

கைவிடாமல் கிளற மசாஜ் செய்து உடலைத் தயார் நிலையில் வைத்திருக்கும் நிபுணர்களாம் அவர்கள்.

பல விதமான பழ வகைகளை அழகாக நறுக்கி அலங்காரமாக வைத்திருந்தனர்.

ரமலான் தொழுகை
குறிப்பிட்ட நேரத்தில் பிறை பார்த்து தொழுகையை ஆரம்பித்தனர். ஆண்கள் வரவேற்பறையிலும், பெண்கள் தனி அறையிலும் தொழுதனர். பர்தா அணிந்த இரண்டு ஆப்பிரிக்கப் பெண்களும் உறவினர்களாம். இன்னொரு உயரமான ஆங்கிலேயப் பெண் மிக அழகாக ரோஜா வண்ணத்தில், வசீகரிக்கும் தோற்றத்தில், கண்களைக் கவரும் ஆடை அணிகலன்களுடன் இருந்தார்.

அவள் மதம்மாறி இஸ்லாமியரை மணக்க இருந்தாள். மூன்று பேரும் மண்டியிட்டுத் தொழ ஆரம்பித்தனர்.

நான் தியானம் செய்ய ஆரம்பித்தேன். தொழுகைக்குப்பின் அனைவருக்கும் உணவு பரிமாறபட்டது. எனக்கு பழங்களும், கடலை பருப்பும் வேகவைத்தது கொடுத்தனர்.

கோவையில் இருந்து வந்திருந்த மாணவர் கூறினார் “நான் கோவைக்குப் போய் மூன்று வருடங்கள் ஆகிறது. என் அம்மாவிடம் மாதத்திற்கு ஓரிரு முறை தான் பேச முடிகிறது. அம்மா இப்போது எப்படி உன் முகம் மாறி இருக்குமோ? நான் பழைய படத்தைத்தான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். புதிய இப்போதைய தோற்றத்தில் ஒரு புகைப்படம் அனுப்பு” என்று கேட்டிருக்கிறார்.

ஒரு ஆந்திராக்காரரைப் பார்த்து “He speak many language in Telugu” என்றார்கள். தசாவதாரம் பார்த்திருப்பாரோ? தமிழில் பேசினால் அருமையாக புரிந்து கொள்கிறார்.

அவர்கள் பேசும் ஆங்கிலம் நமக்குப் புரிகிறது. மொத்தத்தில் மொழிப் பிரச்சினை இல்லை.

இங்கிருக்கும் தெலுங்கு மக்கள் Sister city ஆரம்பித்திருக்கிறார்கள்.

இறைவழி மருத்துவம் (Divine Healing) பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். 
குர் ஆன் வசனங்கள் மூலம் நேய் குணமாகிறது. 
குர் ஆன் வானத்திலிருந்து நேரடியாக நபிகள் நாயகத்தால் இறக்கப் பட்டது. நம் கை மணிக் கட்டில் நாடிகளை உணர்ந்தும், ‘மடைமாற்றியும்’ வசனங்களைக் கூறியும் ஓராயிரம் நோய்களைக் குணப்படுத்தலாம்.

இன்ன ஹு அலா ரஜ் இ ஹி லகாதிர்
“நிச்சயமாக அல்லாவே நோயிலிருந்து மீள வைக்கும் வல்லமை வாய்ந்தவர்”

மூக்கடைப்பு நீக்கும் வசனம் “வல் ஆதியாத்தி லப்ஹன்

சிறுநீரக நோய்களைக் குணமாக்கும் வசனம் 
இன்னா அஹ் தைனா கல் கவுசர்
இறைவன் நமக்கு நன்மை அளிக்கக்கூடிய நீர் தடாகத்தைக் கொடுத்திருக்கிறார். 


இன்ன ரப்பக அனாத பின்னாஸ்
இறைவன் தன் ஞானத்தால் உடலில் உள்ள எல்லா உறுப்புககளையும் சூழ்ந்திருக்கிறார். உறுப்புக் குறைபாடுகளைத் தீர்க்கவல்ல வசனமாகும்.

வமா தகீதுல் அர்காமு வமா தஸ்தாத்” உறுப்புகள் சுருங்கிக்குறைவதையும், விரிந்து அதிகரிப்பதையும் நன்கு அறிவார் பல நோய்களை தீர்க்கக் கூடியது.

வீட்டிற்கு திரும்பும் போது மகன் “அம்மா! நீங்கள் வந்து கலந்து கொண்டதும், குர்ஆன் வசனங்களத் தெரிந்து வைத்திருப்பதும் என் நண்பர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நன்றி அம்மா!!” என்றார்.


வெள்ளத்தில் மிதந்த மகனின் வீடு
ஜப்பானியர், ஆப்பிரிக்கர், அராபியர், இத்தாலியர், ஆந்திர, தமிழ், கன்னட மற்றும் பல நாட்டு மனிதர்களைச் சந்தித்த மகிழ்ச்சி!

எந்த அறையில் பெண்கள் தொழுகையும், நான் தியானமும் செய்தோமோ அந்த அறையில் தான் இப்போது என் மகர் தங்கியிருக்கிறார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மகனும், மருமகளும், தப்பிவந்து தஞ்சமடைந்ததும் அந்த அறை தான்.
12 comments:

 1. உங்கள் பதிவுகள் மிகவும் நல்லா இருக்கின்றன. ஒன்றிரண்டு படங்களும் சேர்க்கலாமே .... இன்னும் அழகுறும்.

  ReplyDelete
 2. Rajeswari Jaghamani to Chitra
  show details 6:33 PM (2 minutes ago)
  படங்கள் சேர்க்கச்சொல்லி கருத்துரைத்தமைக்குநன்றி. தங்கள் சித்தம் என்
  பாக்கியம். உடனே நிறை வேற்றுகிறேன்.

  ReplyDelete
 3. நல்ல பதிவு சித்ரா மேடம் சொன்னதுபோல
  படங்கள் இணைத்திருந்தால் இன்னும் சிறப்பாய்
  இருந்திருக்கும்
  தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. வாழ்த்துகளுக்கு நன்றி களை உரித்தாக்குகிறேன். படங்கள் விரைவில் இணைக்கப்படும்.

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு.

  ReplyDelete
 6. Hi Aunty,

  Hope You are doing great! Mahesh advised me to visit Your blog and I am glad I did. I wish I can read tamil :( but Mahesh explained me each and every word You had written in this article. It was really a pleasure knowing about your blog.It is very well written. You have a flair for writing and expressing your self and most importantly I love the way you sound so passionate about what you are writing. Keep up the great work!

  I will keep visiting this BLOG very frequently:)
  Love You Aunty.

  ReplyDelete
 7. மதங்களை இஅணைக்கும் உறவுப் பாலம் அருமையாக் இருக்கிறது.

  ReplyDelete
 8. நல்ல பகிர்வு.தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. மதங்கள் என்ற மார்க்கங்கள் வேறாயினும் பரம்பொருள் ஒருவரே!
  என்பதை வெகு அழகாக விளக்கியுள்ளது இந்தப்பதிவு.

  தொடர்ச்சியாக ஒரு வாரம் [7 நாட்கள்] தினம் தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் [மதியம் 1 மணி முதல் 2 மணி வரை]ஒரு மசூதியில் ஒரு முகமதிய இளைஞர் குரானில் ஒரு குறிப்பிட்ட அத்யாயத்தை சிரத்தையாக ஓத, அதை பொறுமையாக அமர்ந்து நானும் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானது உண்டு.

  மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான வேறு ஒருவருக்காக கூட துணைக்கு என்னைச் செல்ல வைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் அந்த ’அல்லாஹ்’.

  அந்த அனுபவமும் இந்த தங்களின் அனுபவம் போலவே எனக்கும் புதுமையாகும் இனிமையாகும் பலவற்றை உணர்த்தியது என்பதே உண்மை.

  ReplyDelete
 10. வை.கோபாலகிருஷ்ணன் said...

  அருமையாய் கருத்துரை இட்டு சிறப்பாக பகிர்ந்தமைக்கு இனிய நன்றிகள் ஐயா..

  ReplyDelete