Tuesday, February 8, 2011

நம்பினா நம்புங்கள்


உறவினர் ஒருவர் பித்தப்பையில் கற்கள் வந்து அவதிப்பட்டு வந்தார்.
வியாபார விஷயமாக பரோடா நகரத்திற்குச் சென்றிருந்தார்.
ஒரு தேனீர்க் கடைக்குச் சென்று தேனீர் கேட்டார்.  வயிற்றைத் தடவிக் கொடுத்த படி வேதனைப் பட்டுக் கொண்டிருந்த அவரிடம் நேயைக் கேட்டறிந்த  கடைக்காரர் அங்கிருக்கும் முஸ்லிம் பெரியவர் ஒருவரைக் குறிப்பிட்டு அனுப்பினார்.

ஒரு சிறிய வீட்டில் நிறைய பேர் வலியுடன் காத்திருக்க அவரும் காத்திருந்து பெரியவரை சந்தித்தார்

ஸ்கேன் எடுத்து வரும்படி சொல்லி, பார்த்து, கல் இருக்கும் பகுதி நிச்சயப்படுத்திக் கொண்டு, கட்டைவிரல், ஆள்காட்டி, நடுவிரல்களால் பிதுக்கி கற்களை வெளியேற்ற, ட்ரேயில் சிறுவன் ஒருவன் ஏந்திக் கொண்டானாம்.

மயக்க மருந்தோ, வேறு எந்த வலி நிவாரணக் களிம்புகளோ பயன்படுத்தவில்லை. ஆயினும் அதிக வலிஏதும் அவர் உணரவில்லை.

கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த போதே ஸ்கேனில் பார்த்த கல்லின் அளவே இருந்த கல் டிரேயில்.

அதிசயப்பட்ட அவர் கண்ணடிக் குப்பியில் கல்லை அடைத்து வந்து காட்டினார்கற்களை எடுத்தபிறகு மீண்டும் ஒருமுறை ஸ்கேன் செய்து முழுமையாகக் கற்கள் எடுத்தாகி விட்டதா என்று நிச்சயப் படுத்திக் கொள்கிறார்.

சிறுநீரகக் கற்கள் வந்தால் கற்களை மட்டும் சிகிச்சை செய்து அகற்றுவார்கள். ஆனால் பித்தப்பைக் கற்களென்றால், உணவுப் பழக்கத்திற்கேற்ப மீண்டும் வரக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால் பித்தப் பையையே அகற்றி விடுகிறார்கள்.

அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பமில்லாத்தால், கற்கள் உருவாகித் தொல்லை கொடுக்கும் போதெல்லாம் ஸ்கேன் பிலிமுடன் பரோடாவிற்கு ரயில் ஏறிவிடுகிறார்.

கற்களை எடுத்தபிறகு வலி ஏதுமில்லாமல் நிம்மதியாக இருப்பதை உணர்ந்தார்.  நம்பத்தான் முடியவில்லை. ஆனால் கண்ணெதிரே கண்ணாடிப்பாட்டிலில் உடலிலிருந்து எடுக்கப்பட்ட கல்லுடன் நிம்மதியாக வலியின்றி அமர்ந்திருப்பவரைப் பார்த்து நம்பாமல் இருக்கவும் முடிவதில்லை.

9 comments:

 1. நம்பவே இயலவில்லை!!!!!!!!!!

  ReplyDelete
 2. இதை எப்படி எடுதுக்கனும்னு தெரியலை ஆனா வலி குறஞ்சிருக்குன்னு சொல்லும்போது நமபத்தான் தோனுது.

  ReplyDelete
 3. நம்பவே இயலவில்லை!!!!!!!!!!

  ReplyDelete
 4. சில விஷயங்கள் இதுபோலத்தான் வாழ்க்கையில் நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் உள்ளன.

  சில விசித்திர வைத்திய முறைகளும், ஒருசில ஜோதிடர்கள் கூறுவதும் இது போலவே அமைந்து விடுவதுண்டு.

  சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் + மனநிம்மதி தந்தால் அவர்கள் மட்டும்
  நம்புவார்கள். மற்றவர்கள் நம்ப மறுப்பார்கள்.

  ஆச்சர்யமான தகவல்களாக அள்ளித் தருகிறீர்கள். நன்றி.

  ReplyDelete
 5. வை.கோபாலகிருஷ்ணன் said...
  சில விஷயங்கள் இதுபோலத்தான் வாழ்க்கையில் நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல் உள்ளன.

  சில விசித்திர வைத்திய முறைகளும், ஒருசில ஜோதிடர்கள் கூறுவதும் இது போலவே அமைந்து விடுவதுண்டு.

  சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறுதல் + மனநிம்மதி தந்தால் அவர்கள் மட்டும்
  நம்புவார்கள். மற்றவர்கள் நம்ப மறுப்பார்கள்.

  ஆச்சர்யமான தகவல்களாக அள்ளித் தருகிறீர்கள். நன்றி./

  ஆம்.. மிகவும் ஆச்சரியம் அளித்த நிகழ்வு..

  கருத்துரைக்கு மனம்
  நிரைந்த நன்றிகள்..

  ReplyDelete
 6. Dear Mam,

  It is Possible please send me the address and contact details of that treatment.
  thanks

  arunghanpath@hotmail.com

  ReplyDelete
 7. @Arun Murugan said...//

  அகமதாபாத்திலிருந்து vadodara ஸ்டேஷனில் இறங்கி பத்ரிவாலா -
  Patri wala - என்று அங்கிருக்கும் ஆட்டோக் காரரிடம் சொன்னால் 70 ரூபாய் கட்டண்ம வாங்கிக்கொண்டு அந்த இடத்தில் கொண்டுவிடுகிறார்களாம்..

  பத்ரி என்றால் கல்.. என்று அர்த்தம்...

  கட்டணம் அதிகமாகக் கேட்டால் அங்கிருக்கும் போலீஸ்காரரிடம் புகார் கூடத் தரலாமாம்.. நியாயமான வாட்கையாம்..

  செல்லும்போதே ஸ்கேன் எடுத்துச்செல்லிதல் நலமாம்... அங்கிருக்கும் ஸ்கேன் சென்டர்களில் கூட்டம் அலைமோதுமாம்...

  ReplyDelete
 8. ;)
  ஆரோக்யம் ஐஸ்வர்யம்
  அனந்த கீர்த்தி
  அந்தே ச விஷ்ணோ:
  பதமஸ்தி ஸத்யம் !!

  ReplyDelete