Wednesday, February 2, 2011

கெடுவான் கேடு நினைப்பான்


ஒரு முறை கிருஷ்ண பரமாத்மா பாண்டவர்களுடன் ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தார். அனைவரும் கரை ஏறிய பிறகும் அவர் தண்ணீருக்குள் இருப்பதை தன் கூரிய மதிநுட்பத்தால் உணர்ந்த திரௌபதி ஒரு வஸ்திரத்தை கண்ணனுக்கு அளித்து அவர் மானத்தைக் காத்தாள்.

சூதாட்டத்தில் தோற்ற பாண்டவர்களை அவமதிக்கும் நோக்கில் பாஞ்சாலியைத் துகில் உரிய துச்சாதனன் முனைந்த போது

ஹே கிருஷ்ணா! ஆபத்பாந்தவா! அநாதரட்சகா! துவாரகாநிலையாட்சுதா! ஹிருதய கமல வாசா! ரட்சமாம் சரணாங்கத!கிருஷ்ணா!கிருஷ்ணா!”
என்று யாகத் தீயில் பிறந்த கிருஷ்ணை,
துருபதன் மகள்,
திருஷ்டத்டத்துய்மன் உடன்பிறப்பு,
ஐவர்க்குப் பத்தினி அழியாக் கற்பினள் கதறிய போது கண்ணன் செய்நன்றி மறவாது அவள் துகிலினை வளரச்செய்து திரௌபதியின் மானம் காத்தான்.

துரியோதனாதியரின் மனைவியர் அந்த புடவைகளின் அழகில் மனம் பறிகொடுததனர்.
ஒன்று போல் மற்றொன்று இல்லை.
ஒவ்வொன்றும் ஒரு விதம்.
ஒவ்வொன்றும் வெவ்வேறு வண்ணங்கள்!

இன்றைய Designer Saree க்ளின் முன்னோடி கிருஷ்ணன் தானோ!

அரசவையில் நடைபெற்ற விழாவில் தங்கள் மனம் கவர்ந்த அந்த சேலைகளை அணிந்து பரவசத்தோடு கலந்து கொண்டனர். பார்த்தவர்கள் அனைவரும் அந்த புடவைகளைக் கண்டு அதிசயமும் வியப்பும் அடைந்து முன் எப்போதும் கண்டிராத சேலைகளைத் தொட்டுத்தொட்டுப் பார்த்து மகிழ்ந்தனர்.

திடீரென்று அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த அந்த நொடியிலேயே அத்தனை பேரின் புடவைகளும் பட்டாம்பூச்சிகளாக மாறிப் பறந்து போய்விட்டன. அதனால் தான் வண்ணத்துப் பூச்சிகள் பலவிதம் வொவ்வொன்றும் வொவ்வொறுவிதமோ !!

அரசவைப் பெண்கள் அவமானத்தால் செய்வதறியாது கலக்கமுற்றனர்நாட்டு மக்கள் திரவுபதிக்கு துரியோதனாதியர் இழைத்த கொடுமையையும் அவர்களின் மனைவியர் அடைந்த அவமானத்தையும்ற்றி இழிவாகப் பேசினர்.

கேடுவரும் பின்னே - மதிகெட்டுவரும் முன்னே.
நினைக்கும் கேடு தனக்கே வரும்

மறந்தும் பிறன் கேடு சூழாதீர்
சூழின் தான் கேடுறும் !

என்று பெரியோர் சும்மாவா சொல்லிச் சென்றனர் !!

10 comments:

 1. Thank you for visiting my blog.

  for the questions that you have asked me, regarding the post:

  NO.... THERE ARE NO DISPARITIES IN THEIR TREATMENTS.... Whether they are White Americans or Indians, whoever breaks the law, and if the law requires to track them by this device, thats what they do it. அவர்களை சிறையில் அடிப்பதை விட, இது பெரிய விஷயம் அல்ல. எல்லாம், விதிகளுக்கு உட்பட்டதே. நம்மூரில், அந்த பழக்கம் இல்லாததால் அதை தவறான கண்ணோட்டத்துடன் மீடியா காட்டி, sensational news ஆக்குகிறார்கள்.

  ReplyDelete
 2. நல்லா இருக்குங்க... ரொம்ப புதிய விஷயமா இருக்கு. இதுவரை நான் கேள்விப் பட்டதில்லை.. இது வியாச பாரதத்தில் வருதா? ;-)

  ReplyDelete
 3. நண்பர் ஆர்.வி.எஸ். சொன்னது போல இது புதிய விஷயமாய் இருக்கு! ஆனாலும் கெடுவார் கேடு நினைப்பார் என்பதற்கு நல்ல உதாரணம்.... பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதுமில்லை
  விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதுமில்லை

  சரியே !!

  ReplyDelete
 5. நான் இவ்வளவு நாள் என்ன நினைச்சேன்னா,கோபியர்கிட்டே திருடின சாரிகளைத்தான் திரெளபதிக்கு அனுப்பிவைத்தார் என்று..

  பட்டர்ஃப்ளை வந்த விதம் சூப்பர்.... டிசைனர் பூச்சி

  ReplyDelete
 6. நல்லா இருக்குங்க... ரொம்ப புதிய விஷயமா இருக்கு.

  ReplyDelete
 7. //கேடுவரும் பின்னே - மதிகெட்டுவரும் முன்னே.
  நினைக்கும் கேடு தனக்கே வரும்

  மறந்தும் பிறன் கேடு சூழாதீர்
  சூழின் தான் கேடுறும் !//

  நல்ல பதிவு. பட்டாம் பூச்சி போலவே புதிய தகவல்கள். அருமை. நன்றிகள்.

  ReplyDelete
 8. ;)
  தென்னாடுடைய சிவனே போற்றி !
  எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !!
  சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி !
  பராய்த்துறை மேவிய பரனே போற்றி !!

  ReplyDelete