சில ஆண்டுகளுக்கு முன் பிப்ரவரி 13ம் தேதி கோயமுத்தூரில் ‘கிளீன் விஸ்டா’ என்ற தொண்டு அமைப்பு மரம் நட்டது.
அதன் சின்னம் ‘பூனை’. பூனை தன்னை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுமாம் ஆகவே தன்னைச் சுத்தப்படுத்தி கொண்டிருக்கும் காட்சியிலுள்ள பூனையைத் தங்கள் சின்னமாக தேர்ந்தெடுத்திருக்கிறார்களாம்.
அவர்கள் நட்ட கடம்ப மரங்கள் இன்று கிளை பரப்பி குளிர்ச்சியான நிழலும், விலை மதிக்க முடியாத பிராண வாயுவையும் வழங்கிக் கொண்டிருக்கின்றன.
முருகனை “கடம்ப மாலையை இனி விட நீ வரவேணும்” என்று அருணகிரிநாதர் வேண்டுவதிலிருந்து கடம்ப மாலை போர் களத்திற்குச் செல்லும் போர் வீரர்கள் அணிவார்கள் என்று அறிகிறோம்.
அன்னை காமாட்சி கடம்பவனத்தில், காஞ்சி புரத்தில் தவக் கோலத்தில் எழுந்தருளியிருப்பதால் அன்னைக்கும் பிரிய மரமாகி, சந்திர மௌளீஸ்வரரை அடைய உதவியிருக்கிறது.

இதே காட்சியை சிங்கப்பூர் விமான நிலையத்தில் பட்டாம்பூச்சி பூங்காவில் (Butterfly Park) காணலாம். அப்போதுதான் கூட்டுப் புழுவிலிருந்து பூச்சிப் பருவத்திற்கு உருமாறியிருந்த புத்தம் புது பட்டாம் பூச்சிகளைக் கண்ணாடிப் பெடியிலிருந்து பத்திரமாக வெளியில் பறக்க விடுகிறார்கள்.
அவற்றின் உணவுக்காக ஆங்காங்கே அன்னாசிப் பழத்துண்டு களை வட்ட வடிவில் வெட்டி வைத்திருக்கிறார்கள். பூச்செடிகளும் அவற்றின் உணவுத் தேவைக்காக பார்க்கப் பார்க்கத் திகட்டாத இயற்கைச் சூழலில் கண்ணாடி அறையில் அற்புதக் காட்சி!!
இந்த கடம்ப மரங்கள் சற்று உயரமாக வளர்ந்து மின் கம்பங்களை சமீபிக்கும் போது கம்பிகள் செல்ல பாதுகாப்பாக, தேவையான கிளைகளை மட்டும் வெட்டாமல் முழுமையாக வெட்டி கீழே எறிந்து பாழ்படுத்தி விடுகிறார்கள்.
சீரான இடைவெளிக் காலங்களில் ஒழுங்குற வெட்டி, வெட்டிய இலை, கிளைகளை எருவாகவும், மண்வளத்தைப் பாதுகாக்கவும் பயன்படுத்தலாமே!!
சமூக அக்கறையுடன் பதிந்திருக்கிறீர்கள்/ வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
ReplyDeleteஅழகிய தகவல்கள்.
ReplyDelete134+2+1=137
ReplyDelete