Sunday, March 13, 2011

கேள்விகள்


கேள்வி ஒரு உளி கேட்கப்படுபவனை அது செதுக்குகிறது
கேள்வி ஒரு தூரிகை கேட்கப்படுபவனை அது ஒவியமாக்குகிறது
கேள்வி ஒரு தோணி அதைச் செலுத்துபவனை அது கரைசேர்க்கிறது
கேள்வி ஒரு வேள்வி அது கேட்கப்படுபவன வேதமாக மாற்றுகிறது
கேள்வி ஒரு கடமை அது செய்பவனை கர்மவீரனாக்குகிறது
கேள்வி ஒரு தீக்குச்சி அது உரசுபவனுக்கு வெளிச்சத்தைத் தருகிறது
தன்னுள் எந்நாளும் எழும் கேள்விகளுக்கும் பதில் கண்டுகொண்டவன் யோகி
தன்னிடம் எந்நாளும் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்ப்வன் ஞானி
யோகியான பின் ஞானியாகிறானா அல்லது
ஞானியான பின் யோகியாகிறானா??
இதுவே இப்போதைய கேள்வி??
அறியாமையால் விளைந்த கேள்வி
அறிந்தபின் கேட்கும் கேள்வி
ஆத்திரத்தில் எழும் கேள்வி
துயரத்தில் எழும் கேள்வி
தூஷணையில் எழும் கேள்வி
பற்றினால் எழும் கேள்வி
பாசத்தில் எழும் கேள்வி
பெருமையில் பொங்கும் கேள்வி
கேள்வியில் தான் எத்தனை வகை?
கேள்விப்பட்டதில்லை??
கேள்விப்பட்ட பூக்கள்.......
 


புன்னை_punnai
வாகை_vaagai
செருவிளை_seruvilai -   வெண்காக்கணம் -venkaakanam
கருவிளம்_karuvilam
காயா_kaya

ஆவிரம்_aviram
31e0ae95e0af81e0aeb1e0af81e0aea8e0aeb1e0af81e0ae99e0af8de0ae95e0aea3e0af8de0aea3e0aebf_kurunarungkanni1
திலகம்_thilagam
சண்பகம்_sanbagam
தாமரை_thaamarai
சேடல்_Sedal
வழை_vazhai
மரவம்_maravam
கொன்றை_kondrai

அவரை_avarai
பலாசம்_palasam

சிந்துவாரம்_cintuvāram
குருக்கத்தி_kurukkatti
பீரம்_pīram
நந்தி_nantiதோன்றி_thondri

7 comments:

  1. நல்ல கேள்விகளும்.
    கண்ணுக்கு குளிர்ச்சியான மலர்களும்..

    ReplyDelete
  2. @அன்புடன் மலிக்கா said...//
    அன்புடன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. யோகியான பின் ஞானியாகிறானா அல்லது
    ஞானியான பின் யோகியாகிறானா??//
    Good Question.

    ReplyDelete
  4. நான் இதற்கு அழகாக ஒரு பின்னூட்டம் அளித்திருந்தேன். அதை யாரோ கடத்திச்செல்ல வழி செய்து விட்டீர்கள். ஏதோ கோல்மால் நடந்துள்ளது. நான் உங்களுடன் மீண்டும் டூ

    ReplyDelete
  5. @ வை.கோபாலகிருஷ்ணன் said//
    இவ்வளவு கேள்விகளா என்று உங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற தைர்யம் தானே உங்ககளுக்கு? இது எப்படியிருக்கு, காட்டியுள்ள பூக்களைப்போலவே அழகோ அழகு தானே! பர்ராட்டுக்களும் வாழ்த்துக்களும் எல்லாப் பூக்களாலும் அர்சித்தவாறே, அழகிய பூக்களை அள்ளித்தந்த பூவிற்கு.
    Thank you Sir.

    ReplyDelete
  6. nalla kelvikalum!
    malarkalum!

    ReplyDelete
  7. 254+4*+1=259 [*1 out of 4 is not appearing directly - but it is there in your reply]

    ReplyDelete