Tuesday, March 29, 2011

புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி.



சிறுவாணித் தண்ணீராய் சுவைக்கும் கோயமுத்தூருக்கு புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லைப் பதித்தது போல் கோவை வடவள்ளி அருகில் பாலாஜி நகரில் அருள் கோலம் கொண்டு எழிலாய் அமைந்திருக்கிறது புவவேஸ்வரி அம்மன் ஆலயம்.

ஆன்மாக்களை லயப்படுத்தும் ஆலயத்தில் முன்புறம் கோசாலையில் அழகாக பசுவும் கன்றுமாக லட்சுமி கடாட்சத்துடன் இனிய தோற்றம் அளிக்கிறது.

ஆனைமுகன், முதல் பிள்ளையாய் லட்சணமாய் வரவேற்கிறார்.
வில்வமரத்தடியில் விஷேஷமாய் திருநீலக்கண்டரான சிவனைத்தரிசிக்கிறோம்.

புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி, பஞ்சாட்சரி, ஆனந்த ரூபிணி, பரமேஸ்வரி தாயின் கருணைப் புன்னகையுடன் அரசாட்சி செய்கிறாள்.

தன்வந்திரி பகவான் அமிர்தகலச ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார்.

ஆஞ்சநேய வீரன், அனுமந்த சூரன் கம்பீரமான காட்சிதருகிறார்.

தாமரை வடிவ பெரியபீடத்தில் அனுக்கிரஹ நவக்கிரகங்கள் ரட்சிக்கின்றார்கள்.

சன்னதிக்குப் பின்புறம் பெரிய அரசமரம், அடியில் விநாயகரும் நாகப்பிரதிஷ்டையும்.

சிற்ப்புறு மணியாய், குறைவிலாதருளும் குணமுடன் வாழ மனம்வைதருளும்
மங்களம் தங்கும் செவ்வாய் பகவான்,சிவந்த ஆடையுடனும், சிவப்பு மலர்களாலும் அலங்கரிக்கப் பட்டு அருளுகிறார்.

அபூர்வமான நாகதுர்க்கை, அஷ்ட்ட நாகங்களை, காதுகளிலும், கைகளிலும். இடுப்பில் மேகலையாகவும், குடையாகவும் ,கழுத்தில் மாலையாகவும், பாதங்களிலும் கொண்டு அருளுகிறாள்.

எதிரில் மிகப்பெரிய பாம்புப்புற்று கவனத்தை ஈர்க்கிறது.அதற்குள் நாகங்கள் இன்றும் வசித்துக் கொண்டிருப்பதாகவும்,அம்மனின் மேல் இரவுநேரங்களில் ஊர்ந்து வருகிறது என்றும், புற்று வளர்ந்துகொண்டு வருவதாகவும் கலியுக  அற்புதம் என்றும் கூறுகிறார்கள்.

வளர்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது.

தேனாபிஷேகம் பெரிய அளவில் நடைபெறுகிறது. பெயர் நட்சத்திரம் மற்றும் வேண்டுதலையும் கூறி அர்ச்சனை செய்கிறார்கள். தேன் அங்கேயே விற்பனைக்குக் கிடைக்கிறது. நாமே வாங்கியும் செல்லலாம். பெரிய வாளி,வாளியாக தேனாபிஷேகம் கண்கொள்ளாக்காட்சி.

 அபிஷேகத்தேன் சேகரிக்கப்பட்டு, சிறுசிறு பாட்டில்களில் நிரப்பி அர்ச்சனை செய்தவர்களுக்குப் பிரசாதமாக வழங்குகிறார்கள். திருமணத்தடை, பத்திரப் பேறு, நாகதோஷம் என்று கோரிக்கையை முதலிலேயே அனுமதிச்சீட்டில் பதிந்து அதற்கேற்ப தேன் தருகிறார்கள்.

பஞ்சமி திதி வரும் நாட்கள், திதியின் ஆரம்ப,முடிவு நேரங்கள் அச்சிட்ட அட்டை வழ்ங்குகிறார்கள்.

ஐந்து பஞ்சமி தொடர்ந்து வந்து கலந்து கொண்டு,பிரசாதம் வாங்கி சாப்பிடச்சொல்கிறார்கள். அப்படி வரமுடியாதவர்கள் பணம் கட்டி, விலாசம் தந்தால் அனுப்புகிறார்களாம்.

திருமணம் நாக தோஷத்தால் நடைபெறுவது பாதிக்கப்ப்ட்டவர்கள், பிரசாத தேனை காலை குளித்தபின் சிலதுளிகள் சாப்பிடவேண்டுமாம்.

புத்திரபாக்கியத்திற்கு தம்பதியர் இருவருமாக சாப்பிடச் சொல்கிறார்கள்.
பாலாபிஷேகமும் உண்டு.அபிஷேகத்திற்குப் பிறகு பூக்களால் அலங்காரம் சிறப்பாகச் செய்கிறார்கள்.

வசந்த மண்டபத்தில் மூலிகைகள்,பூத்துச் சொறியும் பூக்களால் ஆன நந்தவனத்தின் ந்டுவே தாமரைத் தடாகத்தில் அழகான தாமரைகள் சூரியனைக் கண்டு மகிழ்ந்து சிரிக்கின்றன.

 ந்டுவே வெண்தாமரையில், கையில் வீணையுடன் அறிவுததும்பும் முகக் களையுடன் கல்விக்கரசி கலைமகள் அரசோட்சிக் கொண்டிருக்கும் இனிய திருக்கோலம்.

வட்ட வடிவ குளத்தின் படிக்கட்டின் இருபுறமும் செழுமையான தோகையுடன் இருமயிலகளின் சிற்பம் மயிலாசனம் கண்கொள்ளாக் காட்சி.

கல்விப்பெருஞ் செல்வப் பேற்றை மோனத்தவத்துடன் அமர்ந்து ஏகாந்தமாய் வழிபடுகிறோம்.

திருமண்த்திற்காக ஜாதகப் பரிவர்த்தனைக்காக் நட்சத்திரவாரியாக ஆண், பெண் ஜாதகங்கள் வைத்திருக்கிறார்கள்.

கோவிலுக்கு எதிரே தனியான கோபுரத்துடன் கூத்தனூர் போல சரஸ்வதி ஆலயம் தனியாக எழுப்பி கல்விச் செல்வத்தின் சிறப்பை பறைசாற்றுகிறார்கள்.
 photos
 சத்சங்கம் அமைத்து திருப்புகழ், மூகபஞ்சதி,சவுந்தர்ய லஹரி பாடல்களும், இசையும், வாத்தியங்களும், இனிது ஒலிக்க பங்கயாசன்த்தில் கூடும் பசும் பொன் கொடிக்கு ,சகலகலாவல்லிக்கு வாழ்த்துரைக்கிறார்கள்.           

14 comments:

  1. சகலகலாவல்லியான தங்களின் அருளால் அனைத்து ஸத்விஷயங்களையும் அவ்வப்போது தரிஸித்து,படித்து, ருசித்து, ஆன்மிக சுகத்தை அற்புதமாக அனுபவிக்க முடிகிறது.

    நன்றிகள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். தங்களின் இது போன்ற நற்பணிகள் தொடரட்டும்.

    அன்புடன் vgk

    ReplyDelete
  2. சிறுவாணி தண்ணீரை சுவைத்ததை விட சுவையாக இருக்கிறது இந்த பதிவு..

    கோவை பாலாஜி நகரின் புவனேஸ்வரி ஆலயம்... தரிசனம் கண்டேன்...

    நான் கோவை வந்த போது, தென் திருப்பதி தரிசனம் செய்தேன்... இந்த கோவிலை பற்றி அறிந்திருந்தால், சென்றிருக்கலாம்...

    அழகான பசுவும் கன்றும் லட்சுமி கடாட்சத்துடன் தரிசனம்

    ஆனைமுகன் பிள்ளையார் தரிசனம்

    வில்வ மரத்தடியில் திருநீலகண்டரின் விசேஷ தரிசனம்..

    தன்வந்திரி பகவான்... ஆஞ்சநேயர் ... நவக்கிரகங்கள்.. செவ்வாய் பகவான்....நாகதுர்கை தரிசனம் என அனைத்து தெய்வங்களின் தரிசனம் இந்த பதிவுனூடே கண்டேன்...

    நன்றி.........

    ReplyDelete
  3. சிறுவாணி தண்ணீரை சுவைத்ததை விட சுவையாக இருக்கிறது இந்த பதிவு..

    கோவை பாலாஜி நகரின் புவனேஸ்வரி ஆலயம்... தரிசனம் கண்டேன்...

    நான் கோவை வந்த போது, தென் திருப்பதி தரிசனம் செய்தேன்... இந்த கோவிலை பற்றி அறிந்திருந்தால், சென்றிருக்கலாம்...

    அழகான பசுவும் கன்றும் லட்சுமி கடாட்சத்துடன் தரிசனம்

    ஆனைமுகன் பிள்ளையார் தரிசனம்

    வில்வ மரத்தடியில் திருநீலகண்டரின் விசேஷ தரிசனம்..

    தன்வந்திரி பகவான்... ஆஞ்சநேயர் ... நவக்கிரகங்கள்.. செவ்வாய் பகவான்....நாகதுர்கை தரிசனம் என அனைத்து தெய்வங்களின் தரிசனம் இந்த பதிவுனூடே கண்டேன்...

    நன்றி.........

    ReplyDelete
  4. @ வை.கோபாலகிருஷ்ணன் //
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா.

    ReplyDelete
  5. @R.Gopi said...//
    விரைவில் தரிசனம் பெறப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  6. Wow... thanks a lot Rajeshwari... for .. that too glad to hear it is in my home town ... சொர்கமே என்றாலும் அது நம்மூரை போலாகுமா?....:)))

    Jokes apart... many thanks friend

    Best Regards,
    Bhuvana//
    நன்றிங்க.

    ReplyDelete
  7. //சிறுவாணித் தண்ணீராய் சுவைக்கும் கோயமுத்தூருக்கு புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்லைப் பதித்தது போல் கோவை வடவள்ளி அருகில் பாலாஜி நகரில்//
    ஆஹா...கேட்க கேட்க இனிக்குதுங்க பொறந்து மண்ணு பேரு...:))

    நேர்ல போய் வந்த உணர்வை கொடுத்தது உங்கள் வர்ணனை... நீலகண்டர் படம் கண்ணை கொள்ளை கொண்டது... மிக்க நன்றிங்க ராஜேஸ்வரி பகிர்ந்து கொண்டதற்கு... இன்னிக்கி ஊருக்கு பேசறப்ப அம்மாகிட்ட சொல்லணும்...:)

    ReplyDelete
  8. @ அப்பாவி தங்கமணி said...//
    இன்னிக்கி ஊருக்கு பேசறப்ப அம்மாகிட்ட சொல்லணும்...:)

    March 29, 2011 6:58 PM//
    அவசியம் தரிசனம் செய்யச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  9. புவனேஸ்வரி அம்பாளின் தர்சனம் கிடைத்தது.

    ReplyDelete
  10. @மாதேவி said...//
    ந்ன்றிங்க.

    ReplyDelete
  11. I went to that temple recently.
    your write made me feel visited again.
    viji

    ReplyDelete
  12. அருமையான பகிர்வுகள்.. வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete