Sunday, September 4, 2011

மெச்சத்தக்க மெல்போர்ன் நகர்


Sri Venkateswara Temple Helensburgh Hindu Temple Sydney NSW

Shiva - Vishnu Temple of Melbourne Australia
அழகான ஆஸ்திரேலிய சிவா விஷ்ணு கோவில் நேர்த்தியாக பராமரிக்கிறார்கள்.

சிவாய விஷ்ணு ரூபாய
விஷ்ணவே சிவ ரூபிணே’’
ஹரியே சிவன், சிவனே ஹரி. அகில உலகமும் நிறைந்து இருக்கும் மெய்ப்பொருளும் உண்மையும் இவ்விருவரே என்பதற்கு சாட்சியாக இருக்கிறது சிவ விஷ்ணுகோவில்.

மெல்போர்ன் அருகே இருக்கும் ஒரு கடற்கரைப் பகுதியில் இரவில் கூட்டம் கூட்டமாய்ப் பென்குயின்கள் கரைக்கு வரும் என்று பார்க்கச் சென்றிருந்தோம்

பொதுவாக மெல்போர்ன் காலநிலை எப்போதும் ஒரு சீராக இருப்பதில்லை..

ஒரு நாளில் ஆறு வானிலைகள் தோற்றம் காட்டும் மழை..வெயில்..குளிர்...மெல்போர்ன் என்றாலே 
இம்மூன்றும் நினைவுக்கு வந்து  வாட்டும்.

இரட்டைக் குதிரை பூட்டிய வண்டிச் சவாரியும் உண்டு.
எவ்வளவு பெரிய குதிரைகள்! வண்டிச் சவாரி சாதாரணமாய்
கிளம்பிய இடத்தில் திருப்பிக் கொண்டு வந்து விட்டுவிடும் குதிரை டாக்ஸி!

குறிப்பிடத்தக்கது மெல்போர்ன் கிரிக்கட் மைதானம்.

டென்னிஸ் கோர்ட்

 தொடருந்து (ரயில்) நிலையம் பழங்காலத்துக் கட்டிடமாய் பொன்னிறத்தில் பிரகாசிக்கிறது. ஆற்றங்கரையில் ஓரம் அமைந்திருக்கிறது.
Melbourne Public Transportation - 
Flinders Street Station and the City Circle Tram for City Tours
Flinders Street Station and the City Circle Tram for City Tours
யெல்லோகேப்ஸ் - டாக்ஸிகள்.

ஆற்றின் மீது ஒரு விசைப்படகுச் சுற்றுலாப் பயணமும் சென்றோம்

படகுப் பயணம் முடிந்து இருகரைகளில் எங்கு வேண்டுமானாலும்
இறங்கிக் கொள்ளலாம் .

நடுநகர்ப் பகுதியின் முக்கிய தெருக்களில் பெரிய அளவில் கடைவீதி அமைந்திருக்கிறது.

சாலைகள் சுத்தமாகவும், பராமரிக்கப்பட்டும் இருக்கின்றன.

அழகான பூந்தோட்டங்கள்; செடிகொடிகள்; பசும் புல்வெளிகளில் வெண்புறாக்கள். நடைபாதையிலே இடப்பட்டிருக்கிற சதுரக் கற்களிலே கலைப்படங்கள் செதுக்கப் பட்டு மிகவும் ஈர்த்தன.


மெல்போர்ன் நடுநகர்ப் பகுதி (City Center) ஒரு ஒழுங்காய் அமைந்திருக்கிறது.

செவ்வக வடிவத்தில் குறுக்கும் நெடுக்குமாய்த் தெருக்கள்.

வெளிப்புறமாய் இருக்கிற தெருவில் அழகான சிறிய பஸ் இலவசமாய் ஆட்களை ஏற்றிச் சென்று சுற்றிக் கொண்டிருக்கிறது.

நகரின் முக்கிய பகுதி ஆற்றங்கரையின் அருகே அமைந்திருக்கிறது.

ஆற்றங்கரையை அழகாகப் பயன்படுத்தி சிறப்பாக்கியிருக்கிறார்கள் கூவமாக்காமல்..பாராட்டலாம் தராளமாக.
ஆறுள்ள ஊரு அழகாக கவர்கிறது. 
யாரா நதி யார்ரா என்று கேட்காமல் வெள்ளியை உருக்கி ஊற்றிய மாதிரி பார்ரா என்று அழகு காட்டியது.

கரையை ஒட்டிப் ‘ப்ராமனாடு’ என்று அமைத்திருக்கிற இடங்களில் நிறைய உணவகங்களும் பிற பொழுதுபோக்கு அம்சங்களும் -இசைக்கேற்றபடி எழுந்து வீழ்ந்து ஆடும் செயற்கை நீர்ப்பொழிவு-அழகு.

இரண்டு கரைகளையும் இணைக்கும் அழகான நடைப்பாலம் சற்று மேலெழுந்து வளைந்து காட்சியளிக்கிறது. 

Qantas A380 Takes Off, Flies


48 comments:

  1. மெல்போர்ன் சூப்பர் !

    ReplyDelete
  2. அழகான, அளவான, ஐந்து நிமிடங்களில் படித்து முடிக்கக் கூடிய பதிவு. நன்றி.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு...

    உங்கள் தயவில் நாங்களும் மெல்போர்ன் பார்க்க முடிந்தது...

    மிக்க நன்றி.

    ReplyDelete
  4. அன்பு சகோதரி
    மெல்போர்ன் போய் வந்த சந்தோசம்.
    காலநிலைகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
  5. சிவாய விஷ்ணு ரூபாய
    விஷ்ணவே சிவ ரூபிணே’’

    ஹரியே சிவன், சிவனே ஹரி.

    பண்டரிபுரம் ஸ்ரீபாண்டுரங்கனுக்கு இடுப்பு ஒட்டியான அளவெடுக்கத் தன் கண்களைக் இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்த தீவிர சிவபக்தனான பொற்கொல்லர் கதை நினைவுக்கு வந்தது.


    ஆஸ்திரேலிய சிவா விஷ்ணு கோவில் நேர்த்தியாக அழகாகப் பராமரிக்கப்படுவது தங்கள் படத்திலேயே தெரிகிறது.

    ReplyDelete
  6. கட்டைகுட்டையான பென்குயின்களையும் அதன் தளிர் நடைகளையும் பார்க்கும் போது எனக்கு அந்தக்கால என் வீட்டு மாங்காஜாடி (பீங்கான் ஜாடி - 10 படி வடு மாங்காய் கொள்ளும் - திருகு மூடி போட்டிருக்கும்) ஞாபகம் தான் வருகிறது.

    ReplyDelete
  7. கிரிக்கெட் மைதானத்திலும் உங்களை மட்டுமல்ல, யாரையுமே தெளிவாகப் பார்க்க முடியவில்லை. குளத்தைச்சுற்றி கொசு மொய்ப்பது போலல்லவா ஜனங்கள் கூடியுள்ளனர்!

    ReplyDelete
  8. Rathnavel said...
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html//

    வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  9. DrPKandaswamyPhD said...
    அழகான, அளவான, ஐந்து நிமிடங்களில் படித்து முடிக்கக் கூடிய பதிவு. நன்றி.//

    அழகான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  10. koodal bala said...
    மெல்போர்ன் சூப்பர் !//

    சூப்பர் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  11. வெங்கட் நாகராஜ் said...
    நல்ல பகிர்வு...

    உங்கள் தயவில் நாங்களும் மெல்போர்ன் பார்க்க முடிந்தது...

    மிக்க நன்றி.//


    அழகிய கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  12. மகேந்திரன் said...
    அன்பு சகோதரி
    மெல்போர்ன் போய் வந்த சந்தோசம்.
    காலநிலைகளை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.//

    அழகிய கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  13. MANO நாஞ்சில் மனோ said...
    அழகான படங்களுக்கு நீங்கதான் சொந்தக்காரர் அருமையா இருக்கு...!/
    அழகிய அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  14. வை.கோபாலகிருஷ்ணன் said...
    சிவாய விஷ்ணு ரூபாய
    விஷ்ணவே சிவ ரூபிணே’’

    ஹரியே சிவன், சிவனே ஹரி.

    பண்டரிபுரம் ஸ்ரீபாண்டுரங்கனுக்கு இடுப்பு ஒட்டியான அளவெடுக்கத் தன் கண்களைக் இறுக்கிக் கட்டிக்கொண்டு வந்த தீவிர சிவபக்தனான பொற்கொல்லர் கதை நினைவுக்கு வந்தது.


    ஆஸ்திரேலிய சிவா விஷ்ணு கோவில் நேர்த்தியாக அழகாகப் பராமரிக்கப்படுவது தங்கள் படத்திலேயே தெரிகிறது.//

    அழகான நேர்த்தியான கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  15. தங்களின் தயவில் மெல்போர்னை சுற்றிப்பார்த்து விட்டோம்.
    அழகியபடங்கள்,அருமையான தகவல்கள்.யாரா நதி படம் மனதை கொள்ளைகொள்கிறது.

    ReplyDelete
  16. ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள ரயில் நிலையம் பழமையான கட்டடமாக இருப்பினும், பொன்னிறத்தில் மின்னுவது தங்களின் தெய்வாம்சம் பொருந்திய கடைக்கண் பார்வையால் இருக்கலாம்.

    யெல்லோகேப்ஸ் - டாக்ஸிகளின் அணிவகுப்பு அருமையாக கவரேஜ் செய்யப்பட்டுள்ளது.

    தங்கள் உயர்ந்த உள்ளம் போன்ற மிக உயரமான கட்டடங்கள், அழகாக அருமையாக அந்தத்தண்ணீரில் பிரதிபலிக்கிறதே அது தங்களின் அன்றாடப் படைப்புக்களும் படங்களும் என்றும் எங்கள் மனதில் நீங்காத நினைவுகளுடன் இருப்பதைப் பிரதிபலிப்பதாகவே உள்ளது.

    ReplyDelete
  17. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கட்டைகுட்டையான பென்குயின்களையும் அதன் தளிர் நடைகளையும் பார்க்கும் போது எனக்கு அந்தக்கால என் வீட்டு மாங்காஜாடி (பீங்கான் ஜாடி - 10 படி வடு மாங்காய் கொள்ளும் - திருகு மூடி போட்டிருக்கும்) ஞாபகம் தான் வருகிறது.//

    ஞாபகம் வந்தது அந்த மாங்கா பீங்கான் ஜாடி.வேடிக்கையாக இருக்கிறது ஒப்பிட்டுப்பார்த்தால்.

    நன்றி ஐயா.

    ReplyDelete
  18. வை.கோபாலகிருஷ்ணன் said...
    கிரிக்கெட் மைதானத்திலும் உங்களை மட்டுமல்ல, யாரையுமே தெளிவாகப் பார்க்க முடியவில்லை. குளத்தைச்சுற்றி கொசு மொய்ப்பது போலல்லவா ஜனங்கள் கூடியுள்ளனர்!//

    கிரிக்கெட் பைத்தியங்கள் என்மகன்கள் தான்.

    ReplyDelete
  19. வை.கோபாலகிருஷ்ணன் said.../

    அழகை பிரதிபலிக்கும் அரிய கருத்துரைகளுக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  20. RAMVI said...
    தங்களின் தயவில் மெல்போர்னை சுற்றிப்பார்த்து விட்டோம்.
    அழகியபடங்கள்,அருமையான தகவல்கள்.யாரா நதி படம் மனதை கொள்ளைகொள்கிறது.//

    அழகிய அருமையான கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  21. படகுப்பயணம், கடைவீதிகள், சுத்தமாகப் பராமரிக்கப்படும் சாலைகள்,அழகான பூந்தோட்டங்கள், செடிகொடிகள், புல் வெளிகள், [நர்ஸ்கள் போன்ற?] வெண்புறாக்கள், காலடியில் கொட்டிக்கிடக்கும் கலைப்படங்கள், உணவகங்கள், செயற்கை நீர் பொழிவுகள், இரு கரைகளையும் இணைக்கும் அழகான நடைபாலம் என அத்தனையையும்
    QANTAS A380 விமானத்தில் உங்களுடன் எங்களையும் ஏற்றிக்கொண்டு போய் காட்டி அசத்தி விட்டீர்களே!

    அட்டா, என்ன பாக்யம் செய்தோமோ இவற்றையெல்லாம், வீட்டில் இருந்த படியே ரஸித்து மகிழ!

    //ஆறுள்ள ஊரு அழகாக கவர்கிறது. யாரா நதி யார்ரா என்று கேட்காமல் வெள்ளியை உருக்கி ஊற்றிய மாதிரி பார்ரா என்று அழகு காட்டியது.//

    நல்ல பொருத்தமான வரிகள். சபாஷ்!

    ReplyDelete
  22. வை.கோபாலகிருஷ்ணன் said...//

    அசத்தலான துல்லியமான கருத்துரைகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  23. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பற்றிய இந்தத்தங்களின் பதிவு, மொத்தத்தில் அருமையோ அருமை.

    மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான வாழ்த்துக்கள். பகிர்வுக்கும், அதற்கான கடும் உழைப்பிற்கும் நன்றிகள்.

    [எங்களைப் பொருத்தவரை எல்லாமே வெறும் கற்பனையே என, பதிவைப்பார்த்து மகிழ்ச்சியுரும் நெஞ்சத்திலும் ஆங்காங்கே ஒருசில ஓட்டைகள். அவைகளையும் அருமையாகக் காட்டிவிட்டீர்கள் அந்தக் கடைசிப்படத்தில் - சூப்பர்!]

    ReplyDelete
  24. கோட்டை மாதிரியான சுவர்களுடன் கோவில்! உண்மையிலேயே மெச்சத் தகுந்தது தான்!

    ReplyDelete
  25. நல்லதொரு பதிவு

    தொடர்ந்து வேர்களைத்தேடி வந்து இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

    நன்றி.

    ReplyDelete
  26. மாறுபட்ட கால நிலைகள் ஒரே நாளில்
    என்பது புதிய தகவலாய் இருந்தது
    மெச்சத் தக்க மெல்போர்னை
    மெச்சத் தக்க வகையில்
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  27. சிவா விஷ்ணு கோவிலும், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், பென்குயின் என்று ஒரு சுற்று சுற்றியாகி விட்டது! நன்றி.

    ReplyDelete
  28. வை.கோபாலகிருஷ்ணன் said...
    ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பற்றிய இந்தத்தங்களின் பதிவு, மொத்தத்தில் அருமையோ அருமை.

    மனமார்ந்த பாராட்டுக்கள், அன்பான வாழ்த்துக்கள். பகிர்வுக்கும், அதற்கான கடும் உழைப்பிற்கும் நன்றிகள்.//

    அன்பான வாழ்த்துக்களுக்கும் நுணுக்கமான கருத்துரைகளுக்கும் நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  29. பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துகள்.. சகோ.. படங்கள் அருமை..

    ReplyDelete
  30. முனைவர்.இரா.குணசீலன் said...
    நல்லதொரு பதிவு

    தொடர்ந்து வேர்களைத்தேடி வந்து இலக்கியத் தேன் பருகியமைக்காக உங்களுக்கு “இலக்கியத் தேனீ“ என்னும் விருது வழங்கி மகிழ்கிறேன்..

    http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

    நன்றி.//

    அபூர்வமாக விழுதுகளைப் பெருமைபடுத்திய வேர்கள்.

    தேனீக்களுக்கு அங்கீகாரமளித்த மலர்கள்!!

    வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  31. Ramani said...
    மாறுபட்ட கால நிலைகள் ஒரே நாளில்
    என்பது புதிய தகவலாய் இருந்தது
    மெச்சத் தக்க மெல்போர்னை
    மெச்சத் தக்க வகையில்
    பதிவாக்கித் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி//

    அருமையான கருத்துரைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  32. ராஜா MVS said...
    பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துகள்.. சகோ.. படங்கள் அருமை../

    வாழ்த்துகளுக்கு நன்றி.

    ReplyDelete
  33. ஸ்ரீராம். said...
    சிவா விஷ்ணு கோவிலும், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், பென்குயின் என்று ஒரு சுற்று சுற்றியாகி விட்டது! நன்றி.//

    அருமையான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  34. மேல்மருவத்தூருக்கும் மெல்போர்னுக்குமிடையே அசாதாரணமாகத் தாவுகிறீர்கள்.
    ப்ராமெநாட் படத்தில் கொழுந்து விட்டெறிவது போல்... செயற்கைத் தீப்பந்தங்களா? யார்ரா பார்ராவா? பின்றீங்க போங்க.

    ReplyDelete
  35. அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  36. மெல்போர்னை சுற்றிக்காண்பித்து கலக்கி விட்டீர்கள்...இடையில் யாரா நதி பற்றி எழுதியதை படித்தவுடன் குபீர் என சிரிப்பு வந்தது....வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  38. மெல்போர்ன் ந‌க‌ர‌ அழ‌கு உங்க‌ள் க‌ண்க‌ளூடே மேலும் சிற‌ப்பாக‌. ம‌ன‌துள் 'மெல்போர்ன் ந‌க‌ர்போல் மெல்லிய‌ அழ‌கா' என‌க் க‌ம‌ல் பாட‌ல் ப‌ட‌க்காட்சி விரிந்த‌து. பெங்குவின் பொலிவும், வை.கோ. சாருக்கு நினைவிலெழுந்த‌ பீங்கான் ஊறுகாய் ஜாடியும் வெகு ஜோர். உங்க‌ எழுத்தாற்ற‌ல் வ‌ள‌ர்ச்சியை விள‌க்க‌வுரைக‌ளின் தெறிக்கும் சொற்செட்டுக‌ள் காட்டுகின்ற‌ன‌. பாராட்டுக‌ள்.

    ReplyDelete
  39. நிலாமகள் said...

    //பெங்குவின் பொலிவும், வை.கோ. சாருக்கு நினைவிலெழுந்த‌ பீங்கான் ஊறுகாய் ஜாடியும் வெகு ஜோர்.
    உங்க‌ எழுத்தாற்ற‌ல் வ‌ள‌ர்ச்சியை விள‌க்க‌வுரைக‌ளின் தெறிக்கும் சொற்செட்டுக‌ள் காட்டுகின்ற‌ன‌. பாராட்டுக‌ள்.//

    தங்களின் அன்பான ஜோரான பாராட்டுக்கள், பீங்கான் ஜாடியிலிருந்து எடுத்த ஊறுகாய் போல ருசியோ ருசியாக உள்ளது.

    மிக்க நன்றி! அன்புடன் vgk

    ReplyDelete
  40. ;)
    வநமாலீ கதீ சார்ங்கீ
    சங்கீ சக்ரீ ச நந்தகீ!
    ஸ்ரீமாந்நாராயணோ விஷ்ணுர் வாஸுதேவோSபிரக்ஷது!!

    ReplyDelete
  41. 978+8+1=987 ;)))))

    மனதுக்கு மகிழ்வளிக்கும் பின்னூட்டங்கள். ஒவ்வொன்றுக்கும் குதூகுலமான தங்களின் பதில்கள். திருமதி. நிலாமகள் அவர்களின் பாராட்டுக்கள், என எல்லாமே திரும்பப்படிக்க திருப்தியளித்தன. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. நன்றிகள். ;)))))

    ReplyDelete
  42. Really super post,how to go to international tour package? pls give me a details.mail id : jaffersadiq2012@gmail.com.thankq

    ReplyDelete
  43. how to goto international tour package.pls give details my mail id : jaffersadiq2012@gmail.com.thank u

    ReplyDelete