Friday, December 16, 2011

புன்னகைப் பூக்களின் தேசம்


alt
கின்னஸ் உலக சாதனை படைத்த 
ஐக்கிய அரபு எமிரேட்டில் அழகான பூங்கா..!


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய தின கொண்டாட்டம் 
புதிய ஆக்கபூர்வமான வடிவமைப்புகள்...
பூக்கள் படைத்த சொர்க்கம்..


இயற்கையை ரசித்தல் என்றும் இன்பமயமானதுதானே!

Located in the city of Al Ain, the United Arab Emirates, theParadise Garden was recently awarded the Guinness World Book of Records- for the most hanging flower baskets!

2,968 baskets are arrayed throughout the 363-acre garden, which represents the latest in landscaping and irrigation technology.


"பூப்பூவாய் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ
 பூவிலே சிறந்த பூக்களின் சொர்க்கத்தின் திறப்பு விழா.."


பூக்கள் சிருஷ்டித்த சொர்க்கம்...

ஊதா ஊதா ஊதா பூ
ஊதும் வண்டு ஊதா பூ
ஊத காற்று மோதா பூ
என்றும் என்றும் உதிரா பூ
The Garden CityAL AIN PARADISE
alt



மலரும் வான் நிலவும் - சிந்தும்
அழகெல்லாம் பூக்களின் எழில் வண்ணமே


மலரே மலரே மலரே மலரே முகவரி என்ன ?
மலரின் மனதில் மனதில் மனதில் உள்ள முதல் வரி என்ன ?
......
The Garden CityAL AIN PARADISE

ஆயிரம் மலர்களே மலருங்கள்
அமுத கீதம் பாடுங்கள் ஆடுங்கள்
அழகு தேவன் அற்புத காவியம்
நீங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்... சொல்லுங்கள்...

பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் தேனில் நனைந்தது உள்ளம்
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் மங்கையிடம் மங்கள வாழ்த்தொலி கீதம்..ம்ம்.
The Garden CityAL AIN PARADISE
சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைத்து
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைத்து
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
பூக்கள் சக்கரவாக பறவை ஆகுமோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து மண்ணில் சேர்ந்த அழகு மலர்கள்!
The Garden CityAL AIN PARADISE
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில்
பூமிக்கு மேலே வானுள்ள வரையில்

The Garden CityAL AIN PARADISE
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் பூதானா
எண்ணம் எங்கும் மலர் பாடும் திரு திரு தில்லானா
The Garden CityAL AIN PARADISE
நிலவு வந்து போனதற்கு வான் வெளியில் சாட்சியில்லை
ஆனாலும் பூமியிலே அல்லி எல்லாம் சாட்சி சொல்லும்
The Garden CityAL AIN PARADISE
Download the Japanese Garden Wallpaper. (right click and press "Save link as
ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்
இலைகளில் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை
வசந்தங்கள் வந்து வாழ்த்தும் பொழுது கிளைகளில் பூவாகும்!
The Garden CityAL AIN PARADISE
வானவில்லே வானவில்லே
வந்ததென்ன இப்போது
அள்ளிவந்த வண்ணங்களை
பூக்கள் மீதுதான் நீயும் தூவு!
The Garden CityAL AIN PARADISE
பனி விழும் மலர் வனம்
பூவின் பார்வை ஒரு வரம்
The Garden CityAL AIN PARADISE

இளங்காத்து வீசுதே! இசை போல பேசுதே!
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே!
மேகம் முழிச்சு கேக்குதே!
கரும்பாறை மனசுல, மயில் தோகை விரிக்குதே!
மழைச்சாரல் தெறிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே! புல்வெளி பாதை விரிக்குதே!
வானவில் குடையும் பிடிக்குதே!
The Garden CityAL AIN PARADISE
மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா
The Garden CityAL AIN PARADISE

மலர்களே மலர்களே இது என்ன கனவா
விண்ணோடும் நீதான் , மண்ணோடும் மலர்தான்
கண்ணோடும்மலர் தான் ,

சின்ன சின்ன மழை துளிகள் சேர்த்து வைத்து
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைத்து
சக்கரவாகமோ மழையை அருந்துமாம்
பூக்கள் சக்கரவாக பறவை ஆகுமோ
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து மண்ணில் சேர்ந்த அழகு மலர்கள்!


மலர்கள் தோறும் நடந்து போகும் சிறிய ஜீவனே
ஓ... பட்டர்பிளை பட்டர்பிளை

அல் ஐன் பாரடைஸ் தொங்கும் தோட்டம் உலகின் மிகப்பெரிய காட்சி ..
கின்னஸ் உலக சாதனைகள் சான்றிதழ் வழங்கி சிறப்பித்திருக்கிறது..
 வசீகரிக்கும் தொங்கும் கூடைகள் கொண்டு கண்களையும் கருத்தையும்  கவர்ந்திழுக்கும் அற்புதப்படைப்பு..
versailles_garden-wallpaper.jpg
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ
நீல வானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள்
விண் வெளியில் விதைத்தது யார் நவமணிகள்
Animated Wallpapers: Free Animated Scenery Sunset .
Free wallpaper, Japanese Green Garden wallpaper

35 comments:

  1. புன்னைகைப் பூக்கும் தேசத்திற்கு, புன்னகையுடன் நுழைந்து விட்டு, புன்சிரிப்புடன் மீண்டும் வருவேன்.vgk

    ReplyDelete
  2. இந்த முறை நான் இவற்றை அல்-அயினில் நேரில் போய் பார்த்திருக்க வேண்டிய அரிய சந்தர்ப்பம் கிடைத்தும், 13.12.2011 அன்று நான் இங்கு திருச்சியில் இருக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டதால், என் பயணத்தை ஒத்தி வைத்துள்ளேன்.

    என் பேத்திக்கும் பேரனுக்கும் இதில் மிகுந்த வருத்தம். அதே 13.12.2011 அன்று பேரன் படிக்கும் பள்ளியில் தாத்தா-பாட்டிகள் தினம். அதற்கு நேரில் பள்ளிக்கு நாங்கள் வருவோம் என்று எதிர்பார்த்த குழந்தைக்கு மிகவும் ஏமாற்றம்.

    தங்கள் பதிவின் மூலம் எனக்கு நேராக UAE சென்று வந்தது போல ஒரே மகிழ்ச்சி. இருப்பினும் பேரனின் அன்புக்கோரிக்கையை நிறைவேற்றித் தர முடியாததில் மிகவும் வருத்தம்.

    சென்ற முறை நான் சென்று அங்கு 45 நாட்கள் தங்கியிருந்தபோது பேரனுக்கு 2 வயது தான் ஆகியிருந்தது, விபரம் தெரியாத குழந்தை அதை நாளடைவில் மறந்து போய் இருக்கிறான். பேத்தி மட்டும் ஞாபகம் வைத்து இருக்கிறாள்.

    ReplyDelete
  3. ஆங்காங்கே நீங்கள் கொடுத்துள்ள பாடல் வரிகள் அழகோ அழகு!

    என் “ஜாதிப்பூ” சிறுகதையின் முதல்வரியான “பூக்களை விட அந்தப்பூக்காரி நல்ல அழகு” என்பது ஏனோ நினைவுக்கு வந்தது, உங்கள் சின்னச்சின்ன பாடல் வரிகளைப் படித்ததும்.

    ReplyDelete
  4. காண கண் கோடிவேண்டும் இந்த பூதோட்டத்தை...

    ReplyDelete
  5. அனைத்து வண்ணத்திப் பூச்சிகளும் ஆங்காங்கே மின்னுவது மிகவும் அழகாக உள்ளன.

    பூக்களுக்கும் இந்த பட்டாம் பூச்சிகளுக்கும் தான் எவ்வளவு ஒரு ஆத்மார்த்தமான நெருக்கம், நம்மையே மிஞ்சிவிடும் அல்லவா!

    பூக்களில் சும்மாவா! சுவையான தேன் அல்லவா உள்ளது. சும்மா விடுமா இந்தப் பட்டாம்பூச்சிகள்! ;)))))

    ReplyDelete
  6. நெத்திச்சுட்டியில் பூவைக்கட்டிக்கொண்டு காட்சி தரும் மீசைக்காரரான கரும் பூனையார், காதின் இருபுறமும் இரு பட்டாம் பூச்சிகள், காலடியில் இரண்டு பூக்களுடன், இரவு நேரத்தில் நட்சத்திரக் கூட்டங்களுடன் ஜொலிக்கிறாரே!

    ReplyDelete
  7. அரபு நாட்டு மன்னர் படம் உள்ள நுழைவாயில் எவ்ளோ அழகாக ஹாட்டின் வடிவத்தில் பூப்பந்தல் போட்டது போல காட்டப்பட்டுள்ளது. மிகவும் சூப்பரான காட்சி தான் அது.

    ReplyDelete
  8. மலர்களாலேயே மலை போல் தேர் போலக் காட்டியுள்ள காட்சி அருமையோ அருமை.

    மலர் தோட்டங்கள் யாவும் வெகு அழகாக கண்ணுக்குக் குளிர்ச்சியாக காட்டப்பட்டுள்ளன.

    “என்னைத் தாலாட்ட வருவாளோ!
    நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ!!

    எனப்பாடி மகிழ்ந்து பரவஸத்துடன்
    காண வேண்டிய இடமல்லவா! ;))))

    ReplyDelete
  9. ”பூமிக்கு மேலே வானுள்ள வரையில்” லுக்கு கீழேயும் மேலேயும் காட்டப்பட்டுள்ள

    டிஸைன்கள் வெகு ஜோர் ! ;)))))


    திரு திரு தில்லானாவுக்குக் கீழே காட்டியுள்ள பூக்கோலம் பிரமாதம்!;))))

    ஊதாப்பூக் கவிதை சாதாப்பூவாகத் தெரியவில்லை! ஸ்பெஷல் சபாஷ், அந்த ஊதாப்பூக்கள் போலவே அதுவும் அழகாகவே எழுதியுள்ளீர்கள்.

    ReplyDelete
  10. புன்னைகைப்பூக்களின் தேசத்திற்கு இன்று எங்களை அன்புடன் அழைத்துச்சென்று, அழகழகாக அனைத்தையும் காட்டி, பதிவிட்டுத் தந்துள்ள தங்களின் பூக்கரங்களுக்கும், அதில் வடியும் தேனாக இனிக்கும் அழகிய வர்ணனைகளுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள், நன்றிகள்.

    நியாயமாகப்பார்த்தால் இந்த ஆண்டின் 365 ஆவது பதிவாகிய இது வரும் 31.12.2011 அன்று தான் வெளியாகியிருக்க வேண்டும். இந்த ஆண்டு முடிய இன்னும் 15 நாட்கள் இருக்கும் போதே இந்த 365 ஆவது பதிவினைக்கொடுத்திருப்பது, உங்களின் தனித்தன்மையைக் காட்டுகிறது. இந்த ஆண்டு முழுவதும் தினமும் ஒரு பதிவுக்கு மேலாகவே கொடுத்துள்ள உங்களுக்கு ஏதாவது விலையுயர்ந்த, மதிப்பு வாய்ந்த பரிசு ஒன்றை வழங்க மிகவும் ஆசைப்படுகிறேன். என்ன வழங்குவது எப்படி வழங்குவது, எங்கு வழங்குவது என்பதில் தான் எனக்குக் குழப்பம் உள்ளது.

    இன்றைய பதிவு மிகவும் அருமை!

    அதில் தங்களின் பூப்போன்ற மனமும், புஷ்பம் போன்ற மணமும் ஒரு சேர இருப்பதை உணர முடிகிறது.

    மிக்க மகிழ்ச்சியுடன்,
    பிரியமுள்ள vgk

    ReplyDelete
  11. படங்கள் கண்ணாஇயும், கருத்தையும் கவர்கின்றது

    ReplyDelete
  12. மேலிருந்து 5 ஆவது படம், அழகிய பூப்போட்ட [பறங்கிக்காய்] பானையில் உள்ள பூக்களும்,

    அதற்கு அடுத்த ஊதாப்பூ மலைபோன்ற குவியலும்,

    அடுத்துள்ள ஊதா நிற பட்டர்ஃப்ளைகளின் நீரின் நிழலாடும் பிரதி பிம்பவும் எனக்கு மிகவும் பிடித்துள்ளன.

    பதிவு முழுவதுமே அழகு கொட்டிக்கிடக்குது எதைச் சொல்வது எதை விடுவது?

    One of your "The Best Posts"
    ;))))))))))))))))))) of 2011 vgk

    ReplyDelete
  13. வை.கோபாலகிருஷ்ணன் said...//

    புன்னைகைப் பூக்கும் தேசத்திற்கு, புன்னகையுடன் நுழைந்து விட்டு, புன்சிரிப்புடன் ரசித்து மலர்ந்து
    பூவின் மணமாய் அளித்த
    பூத்து மிளிர்ந்த அத்தனை பூக்கருத்துரைகளுக்கும் மன்ம் நிறைந்த இனிய நன்றிகள் ஐயா..

    ReplyDelete
  14. RMY பாட்சா said...
    காண கண் கோடிவேண்டும் இந்த பூதோட்டத்தை.../

    உண்மைதான்.. கருத்துரைக்கு இனிய நன்றிகள்..

    ReplyDelete
  15. ராஜி said...
    படங்கள் கண்ணாஇயும், கருத்தையும் கவர்கின்றது/

    கருத்துரைக்கு இனிய நன்றிகள்.

    ReplyDelete
  16. அருமை சகோதரி. பாடல் வரிகள், படங்கள், அனைத்தும் அருமை. வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  17. படங்களும் பாடல் வரிகளும் அருமையோ அருமை. எப்படி பொருத்தமாக பாடல்களை பிடித்தீர்கள்.. எவ்ளோ நாள் உழைப்பு?



    காதல் - காதல் - காதல்

    ReplyDelete
  18. வண்ணமயம் கண்கொள்ளாக்காட்சி
    இத்துடன் அழகிய கவிதைத் தேரோட்டம்
    அசத்திவிட்டீர்கள்
    தங்கள் பதிவால் கண்களும் மனமும்
    குளுமை பெற்றது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. அன்பின் இராஜ இராஜேஸ்வரி - மற்றும் வை.கோ - அருமையான படங்கள் - அழகான கருத்துக் கவிதைகள் - கண்ணுக்குக் குளிர்ச்சி - நெஞ்சினிற்கு மகிழ்ச்சி - எத்தனை எத்தனை படங்கள் - அத்தனையும் இரசித்தேன். விளக்கமாக மறு மொழி இடும் வை.கோவின் கருத்துகளும் அருமை. - திரைப்படப் பாடல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு படங்களின் கீழ் கொடுக்கப் பட்டிருக்கின்றன.

    ஆமாம் -
    மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளில் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் - என்று தேடினேன் - பூக்களாய் மனதை நிறைத்து விட்டீர்கள் - பாக்களும் பூக்களும் போட்டி போட்டன்.

    நல்வாழ்த்துகள்
    நட்புடன் சீனா

    ReplyDelete
  20. அருமையான படங்கள். மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  21. Aha fentastic. Got up early in the morning. Finished poojas very ealy being margali and gone to the temple. Felt lazy to push up the day. But on seeing your post a....h.....a.....
    Putuir perru vitten. I just want to spend this day very good by doing some painting or craft or embroidary.
    Thanks thanks Rajeswari. By giving a very nice post and seeing all the flowers i gor enthu ...
    Thanks again.
    viji

    ReplyDelete
  22. நல்ல தொகுப்பு. ரசித்தேன்.

    ReplyDelete
  23. எதையும் ஒருசேர ஒரே நேரத்தில் பார்த்தால், அதன் அழகே தனிதான்!
    இயல்பை விடக் கொஞ்சம் தூக்கலாகத் தெரியும்!

    நீங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய இந்த மலர்க் கூட்ட அணிவகுப்பு, மனத்திற்கும் உவகை கூட்டிய காட்சி!

    அந்த வண்ணத்து ஜீவன்கள் இரண்டும் நீரில் தங்கள் அழகைத் தாங்களே பார்த்து மோகித்து படபடக்கின்றனவோ? .. நீங்கள் தானே நேரில் பார்த்தீர்கள்?.. நீங்களே சொல்லுங்கள்!

    அங்கங்கே தேர்ந்தெடுத்துப் பதிந்திருக்கும் பாடல் வரிகளோ, லேசாக 'ஹம்' பண்ணியபடியே, மலர்வனத்தை பார்வையிட வைக்கின்றன.

    கடைசியாக முடிவுறும் காட்சி வந்து விடப்போகிறதே என்று நினைக்கும் பொழுதே, அதுவும் வந்தே விட்டது! பதிவை விட்டுப் பிரிய மனமில்லாமல் மீண்டும் முதலில் இருந்து வலம் வர.. ஹைய்யோ.. ஒண்டர்புல்!
    எடுத்துக் கொண்ட சிரமங்களுக்கு கங்கிராட்ஸ்!

    ReplyDelete
  24. பூக்கள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.பதிவை விட்டே போக மனமில்லை.எப்படித்தான் அந்த பிரமாண்ட பூக்களின் தேசத்தை விட்டு வந்தீர்களோ தோழி !

    ReplyDelete
  25. பாலைவனமா சோலைவனமானு கேக்க வைக்குதே? அதுவும் ரோட்டை ஒட்டியப் பூங்கா..பராமரிக்க உழைப்பும் வசதியும் தேவை. பார்த்தாலே நிறைவு தரும் இந்தச் சோலையை உருவாக்கிப் பராமரிக்கும் மனித மனங்கள் வாழ்க. அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றி.

    இடையில் பனிமலையும் பூக்கம்பளமும் இருக்கும் படம் - விலகவே மனமில்லை.

    ReplyDelete
  26. மலர்களின் சொர்க்கம் என்பது இதுதானோ?

    ReplyDelete
  27. செம அழகு.நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  28. பூதோட்டம் அழகோ அழகு.

    அதை எங்களுக்கு அழகுறபகிர்ந்தமைக்கு நன்றி.

    கண்ணையும் கருத்தையும் கவரும் மலர் கண்காட்சி.

    தேர்ந்து எடுத்து போட்ட பாட்டுக்கள் எல்லாம் மிக இனிமையானவை.

    ReplyDelete
  29. பூக்கள் அனைத்தும் இல்லை இல்லை படங்கள் அனைத்தும் அழகு பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  30. பூக்களும் மலர்த் தோட்டங்களும் கண்ணுக்கு அழகு.ரசனைக்கு உரியது

    .//பாலைவனமா சோலைவனமானு கேக்க வைக்குதே? அதுவும் ரோட்டை ஒட்டியப் பூங்கா..பராமரிக்க உழைப்பும் வசதியும் தேவை. பார்த்தாலே நிறைவு தரும் இந்தச் சோலையை உருவாக்கிப் பராமரிக்கும் மனித மனங்கள் வாழ்க. அறிமுகம் செய்த உங்களுக்கும் நன்றி//

    ஐக்கிய அரபு எமிரேட்டுக்குச் சென்றிருக்கிறேன். அங்குள்ள மண்ணில் எதுவும் முளையாது. எல்லாமே இறக்குமதிதான். இவற்றை உருவாக்குபவர் அரபிகள் அல்ல. நம் ஏழை இந்தியர்கள். மிகவும் பரிதாபமான நிலையில் அவர்கள் உழைப்பைக் காணும்போது எனக்கு ரத்தக் கண்ணீர் வராத குறைதான். அதை பராமரிக்கும் மக்கள் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களை எண்ணிய அப்பாதுரைக்கும் நன்றி.
    .

    ReplyDelete
  31. அற்புதமான படங்கள்.
    இணையாக அருமையான கவிதைகள்.
    உங்கள் திறமைக்கு மனப்பூர்வ வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  32. மனசுக்குள் வளரும் ஆலமரம் தொடர்பான தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள்.

    தீபிகா.

    ReplyDelete
  33. தங்களின் பூந்தோட்டத்துக்குள் எதிர்பாராமல் நுளைந்துகொண்டேன். அற்புதம். இயற்கைப் பூக்களை..கவிதைப் பூக்களோடு சேர்த்து தொடுத்திருக்கும் அழகோ...அழகு. பூக்களுக்கு கவிதை அழகு சேர்க்கிறதா? பாடல்வரிகள் பூக்களுக்கு அழகு சேர்க்கிறதா ? சொல்லத் தெரியவில்லை.

    நன்றி

    தீபிகா.
    http://theepikatamil.blogspot.com/

    ReplyDelete
  34. ;) மஹா கணேசா! மங்கள மூர்த்தி!!

    ReplyDelete
  35. 1630+11+1=1642 ;)

    ஏதோ ஒரே ஒரு பதிலாவது கொடுத்துள்ளதற்கு நன்றிகள்.

    அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

    ReplyDelete