Wednesday, February 8, 2012

புதுப்புது அர்த்தங்கள்..






wedding day animatedwedding day animated
Mangala VazhthuMangala Vazhthu

மகனின் திருமணத்தில் கலந்துகொண்ட வெளிநாட்டவர் நம் திருமண நிகழ்வுகளின் அர்த்தங்களை நுணுக்கமாக வெகு ஆர்வமுடன் கேட்டுத்தெரிந்து வியந்தனர்..

அவர்களுள் ஒரு அமெரிக்கப் பெண்மணி தானும் வலைப்பதிவுகள் எழுதிக்கொண்டிருப்பதாகவும், என்னையும் விரிவாக எழுதும்படியும் கேட்டுக்கொண்டார்...

நம் உடைகளை வெகுவாக ரசித்தவர்களுக்கு அழகு நிலையத்திலிருந்து நிபுணர்களை வரவழைத்து பெண்களுக்கு பட்டுப்புடவை அணிவித்து, பூ பொட்டு வளையல் அணிந்தும், ஆண்கள் பட்டு வேஷ்டி பட்டு சட்டை அணிந்தும் வித்தியாசமாக வலம் வந்தவர்களைப்பார்த்த அனைவரும் வியந்தார்கள்..


முகூர்த்தக்கால்
 '
"ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றனனே"
-திருமூலர்.

திருமண நாளுக்கு மூன்று நாள்களுக்கு முன்னதாக நெருங்கிய உறவினர்கள், மாமன் மைத்துனர்கள் சூழ முகூர்த்தக்கால் ஊன்றி, திருமண வேலையைத் தொடங்குகிறோம். 
மலர்தூவி தேங்காய் உடைத்து, பழம் வெற்றிலை பாக்குப் படைத்து நறும்புகை இட்டுக் கற்பூர ஒளிகாட்டி போற்றுவோம்..
. ஊன்றப்பட்ட முகூர்த்தக்காலை சேர்த்து கல்யாணப்பந்தல் போட்டுவிடுவார்கள். திருமணம் முடிந்து பந்தல் பிரிக்கப்பட்ட பிறகு முளைத்து மரமாகிவிடும்.

மமகனின்ஞ்சளால் பிள்ளையார் பிடித்து வாழை இலைமேல் வைத்து 'இடங்கொண்டருள்க 

திருமணம் என்றால் வீட்டுக்குப் புது வரவாக ஒரு பெண் வருகிறாள் என்கிறபோது, புது மரம் ஒன்று வைத்துவிடுவது நம் மரபு. சமுதாய நலன்காக்கும் வாழ்வியல் நெறி.

இந்த மரப்போத்து ஊன்றும்போதுகூட, குழியில் பால், தயிர், கோமியம் ஊற்றி, கால் ஊன்றுவது இன்றும் பழக்கத்தில் இருக்கிறது. குழியில் பறித்தெடுத்த மண் (அரை அடிமுதல் ஓரடிக்குக் கீழ்) மண்ணுயிர் நிரம்பிய உயிர்மண்ணாக இருக்காது. மேல் மண் மட்டும்தானே உயிர்மண். ஆகவே, வேர் பிடிப்பதற்கு ஏதுவாக, மண்ணுயிர் பெருகி, மரம் வளர, பால் ஊற்றி கால்நடுவது சடங்காக இன்றும் செய்யப்பட்டு வருகிறது.

Naattukal Valhipaadu / Senjoru aindhadai suttrudhal
 திருமணத்தன்று ஒரு முகூர்த்தக்கால் ஊன்றுகிறோம். இன்றும் கிராமங்களில், வீட்டுத் திருமணங்களில் முகூர்த்தக்கால் வைத்து, சடங்குகள் செய்து, மணம் முடிந்தவுடன் மணமகன் போத்தை எடுத்துச் சென்று பொது இடத்தில், ஏரிக்கரை, ஆற்றுப்படுகை, கிராமக் கோயில்களில் நடுவதும், மணமகள் நீர் வார்த்து வருவதும், பொருள் புரியாத சடங்காக, கிராமந்தோறும், வீடுதோறும் செய்யப்பட்டு வருகிறது.
 ஆக, திருமணம் என்றாலே இரண்டு மரம் நடுதல் என்பது நம் சமுதாயப் பண்பாடு. நம் சமுதாயக் கடமை. ஆனால் இன்றோ, திருமண மண்டபங்களில் நிரந்தரமாக வண்ணம் பூசி வைத்திருக்கும் முளைக்க முடியாத மூங்கில் குச்சியை வைத்து சடங்குகள் செய்வதோடு முகூர்த்தக்கால் ஊன்றுவது சுருங்கிவிட்டது. வீட்டில் நடப்பட்ட முகூர்த்தக்கால், திருமணப் பந்தல் பிரிக்கும்போது பெயர்த்து எடுக்கப்பட்டுவிடுகிறது.


அதிலும், ஊன்றப்படும் முகூர்த்தக்கால், மக்களுக்கு, மருத்துவத்துக்குப் பயன்படும் மரமாக நட்டார்கள். பெண்களின் கர்ப்பப்பைகளுக்குத் திடகாத்திரம் அளிக்கக்கூடிய உதிய மரம் வைத்தார்கள். அனைத்துவித கர்ப்பப்பை கோளாறுகளுக்கும்,  பெண் மக்கள் நோய்களுக்கும், உதியம் பட்டையை இடித்து, கஷாயம் செய்து உட்கொள்வது மிகச்சிறந்த தமிழ் மருத்துவம். மரமும் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். மருத்துவமாகவும் பயன்பட வேண்டும் என்பது தமிழர்களின் வாழ்வியல் ஞானம். மரம் நடுதல் என்பது நோயற்ற வாழ்வுக்கான ஆணிவேர்.
 ÷உயிர்கள் விடக்கூடிய கரியமில வாயுவைக் கிரகித்துக் கொண்டு, நீரை உறிஞ்சி எடுத்துக் கொண்டு 688 கலோரி சூரிய ஒளிசக்தியை கிரகித்துக் கொண்டு, மனிதர்களுக்கு வேண்டிய சர்க்கரைப்பொருளை (குளூக்கோஸ்) உற்பத்தி செய்து உணவு சமைத்துக் கொடுப்பதுடன், உயிர்களுக்கு வேண்டிய ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொடுப்பது இந்த மரங்கள்தான் என்பதை இன்றைய படிப்புச் சொல்லிக் கொடுத்தாலும், நம் முன்னோர்கள் பன்னூறு தலைமுறைகளுக்கு முன்னாலேயே தெரிந்து வைத்திருப்பது முன்னோர்களின் அறிவியல் மேம்பாட்டைக் காட்டும் அற்புதம்..

 திருமணம் என்பது கட்டாயம். அதில் முகூர்த்தக்கால் என்று இரண்டு மரம் நட வைத்துவிட்டால் நாடு முழுக்க மரங்கள். எல்லோருக்குமான சமூகக் கடமை. எத்தனை வியப்பு.
 அதிலும் என்றோ பிறக்கப் போகும் தங்களின் குழந்தைக்கான உயிர் மூச்சுக்காற்றை உற்பத்தி செய்ய, திருமணத்தன்றே மரம் நடுதல் என்பது தமிழர்களின் பண்பாட்டுயர்வை அல்லவா காட்டுகிறது.
 சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உணர்த்தியிருப்பது ஒவ்வொரு சடங்கிலும் புகுத்தியிருப்பது எத்தனை பெரிய அறிவியல் நுட்பம். 
tooth-fairy-
இன்றோ காடும் இல்லை. அதனைக் காப்பதும் இல்லை. இந்த ஆறறிவு மனிதன் உள்பட அனைத்து உயிர்களும் மூச்சுவிட மரம் ஒரு அவசியமான ஓரறிவு உயிர் என்பதை மறந்து, முளைக்க முடியாத மூங்கில் குச்சியை முகூர்த்தக்காலாக ஊன்றி, மஞ்சள் சந்தனம் பூசுவதோடு நிறுத்திக்கொண்டு, திருமண மண்டபத்திலேயே பத்திரப்படுத்தி விடுகிறோம். நம்மை என்ன வென்று சொல்வது?



 பூமித்தாயின் நுரையீரல்தான் மரங்கள். நம் குருதியை சுத்திகரிப்பு செய்யும் நுரையீரல் போல, சுற்றுச்சூழல் வளிமண்டலத்தை, சுத்திகரிப்பு செய்யும் நுரையீரல்தான் மரங்கள்.
 காற்றில் 21% ஆக்சிஜன் இருப்பது, இப்போது குறைந்து கொண்டு வரும் செய்திகள் உலகத்துக்கான அச்சுறுத்தல் என்று கருத வேண்டும்.



 மருத்துவமனைகளின் உபயோகத்துக்காகவும், வெல்டிங் பட்டறை மற்ற இரும்புப்பட்டறை உபயோகத்துக்காகவும் ஆக்சிஜன் பிரித்து எடுக்கப்பட்டு வருவதால் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டு வருகிறது. நோயாளிகள் காப்பாற்றப்படுகிறார்கள்தான். எப்படி? பிறர் வைத்த மரங்களால்தானே!
 இவர்களுக்கான சிகிச்சைக் கட்டணம் வசூலிப்பதைவிட, இவர்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட ஆக்சிஜனை உற்பத்தி செய்ய, இவர்கள் பத்து மரங்களையாவது நட்டு வளர்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியபின், மருத்துவமனையிலிருந்து விடுவிக்க வேண்டும்.
 மருத்துவமனை பில்களில் பின்புறம் என்னென்னவோ அச்சடிப்பதை விட்டுவிட்டு, மரம் நட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் அறிவிப்புகளை அச்சடித்துக் கொடுக்க முடியாதா?
 மரம் வளர்க்கும் அவசியத்தை லாரிகளில், "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்' என்று விளம்பரப்படுத்தினால் மட்டும் பொதுமக்களுக்குப் போதுமா?
 இன்றைய நிலையிலும் மரம் ஏன் வளர்க்க வேண்டும் என்கிற புரிதல், முழு அளவில் பலருக்கும் தெரியவில்லை. பள்ளிகளில் பசுமைத்தாயகம் அமைப்பில், தேசிய நலத்திட்டத்தில், சாலையோர புல், புதர், செடி, கொடி, வெட்டித்தூய்மை செய்யப்படும் என்று அச்சடிக்கப்பட்டு, மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பது கண்கூடு.
 இந்த மரம், செடி, கொடிகள் இவர்களுக்கு என்ன தீங்கு செய்துவிட்டன? ஏன் வெட்ட வேண்டும்? ஆக, பசுமை படைக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மரம் நடும் அவசியம் இன்னும் முழுஅளவில் கற்றுக் கொடுக்கப்படவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது! இதுபோன்ற தவறுகளை எப்போது திருத்திக் கொள்ளப் போகிறோம்? சொல்வதைக்கூட திருத்தமாகச் சொல்லித் தரக் கூடாதா?
 ""காடு வளர்ந்தால்தான் நாடு வளரும்.
 மரம் வளர்ந்தால்தான் மண்ணுயிர் பெருகும்.
 மண்ணுயிர் வாழ்ந்தால்தான் மனிதனும் உயிர் வாழ முடியும்''

   
InaicheerPattini Sadha Virunthu




File:Nadu veetu kolam.jpg


சங்குமோதிரம் எடுத்தல்...

மணவறை முன் உள்ள நீர் நிறைந்த மண்பானையில் சங்கும் மோதிரமும் இட்டு மணமக்களை எடுக்கச் சொல்வார்கள் பெரியவர்கள். 


அப்போது மணமகன் பொன்னால் ஆன மோதிரத்தையும் மணமகள் பொன் சங்கையும் எடுக்கவேண்டும். 


இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத பொன்னை மணமகன் தேடுதல் வேண்டும். மக்களைப் பாலூட்டி வளர்க்கும் பாங்கினை மணமகள் மேற்கொள்ளுதல் வேண்டும் என்பது இதன் உட்பொருள். 


நீர் நிறைந்த மட்பானை நீரால் சூழப்பட்ட இப்பூவுலகைக் குறிப்பதாகும்.


நவதானியங்களைக் கொண்டு பாலிகையிட்டு வளர்த்து மணவறையின் முன்பு வைப்பது பாலிகை இடுதல் எனப்படும். பாலிகை எட்டு மங்கலப்பொருள்களில் ஒன்று. அதில் நவ தானியங்களும் நன்கு வளர்ந்து நாட்டுக்கு நலம் பயப்பது போல வாழ்வு சிறந்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நலன் பயப்பதாக இருத்தல் வேண்டும் என்பது கருத்தாகும்.


தங்கம் உடலுக்குச் சூட்டையும் நரம்புகளுக்கு சக்தியையும் கொடுக்கின்றது. தங்கத்துடன் செம்பு சேர்த்து ஆபரணங்கள் உருவாக்கப்படுகின்றன. 
செம்பு சூரியக் கதிர்களை இழுத்து உடலில் படவைக்கின்றது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும். ஆயுர்வேத முறைப்படி இரத்த சுத்தி, மூளைவளர்ச்சியை அதிகப்படுத்துதல், உடலுக்கு நிறம் கிடைத்தல் ஆகியவை தங்கத்தால் கிடைக்கும்.
wedding day animatedWedding Ring)
வலது கைவிரலில் மோதிரம் அணிந்து சாப்பிடும்பொழுது தங்கத்தின் மிகச்சிறிய பகுதி உடலுக்குள் செல்கின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பெருகும். வெள்ளி நகைகளால் இரத்த ஓட்டம் சிறப்பாக அமையும்.

வெள்ளியில் செய்த மெட்டி : வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரணம் செய்யும் ஆற்றல் உள்ளது..
படிமம்:Metti.jpeg

ஆரத்தி எடுத்தல்:
மங்கள மங்கையர் மணமானவுடன் மஞ்சள் நீர் உள்ள தட்டை மணமக்கள் முன் சுற்றி வாழ்த்துவர்.
 மஞ்சள் நச்சுப் பொருட்களை மாற்றவல்லது. மஞ்சள் திருநீறு இட்டு ஆலத்தி எடுத்து வாழ்த்துவது நச்சுத்தன்மையை நீக்கும்.
 மஞ்சள் நீர் போன்று உங்கள் வாழ்வில் வலம் வரும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகுவதாக என்று அர்த்தம்.
animated gifs rainbows
வெற்றிலைபாக்கு மாற்றுதல்:

மணமகனின் தந்தையும் மணமகளின் தந்தையும் கிழக்கு மேற்காக அமர்ந்து வெற்றிலை பாக்கு வைத்து மூன்று தலைமுறையினரைச் சொல்லி இன்னார் மகளை இன்னார் மகனுக்குக் கொடுக்கின்றோம் என இருவீட்டாரும் கூறி ஏழு பாக்கும் ஏழு வெற்றிலையும் வைத்து மாற்றுதல். எழுவகைப் பிறப்பிலும் இன்று சொன்ன சொல் தவறுவதில்லை என்று பலர் முன்னிலையில் உறுதியளிப்பதாகும்.




பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழவாழ்த்தும்
பதினாறு பேறுகள்:


1. நன்மக்கள்.
2. செல்வம்.
3. அழகு.
4. நோயின்மை.
5. இளமை.
6. கல்வி.
7. வாழ்நாள்.
8. நல்வினை.
9. பெருமை.
10. துணிவு.
11. வலிமை.
12. வெற்றி.
13. நல்லுணர்வு.
14. புகழ்.
15. நுகர்ச்சி.
16. நல்ல நண்பன். 

வாழ்வில் முன்னேற பதினெட்டுப் படிகள்:


1. வாழ்க்கை ஒரு சவால்---அதைச் சமாளி.
2. வாழ்க்கை ஒரு பரிசு---அதைப் பெற்றுக்கொள்.
3. வாழ்க்கை ஒரு சாகசம்---அதில் துணிவு காட்டு.
4. வாழ்க்கை ஒரு சோகம்---அதை அடைந்துவிடு.
5. வாழ்க்கை ஒரு கடமை---அதை முடித்துவிடு.
6. வாழ்க்கை ஒரு விளையாட்டு---அதில் பங்கு கொள்.
7. வாழ்க்கை ஒரு துன்பம்---அதை எதிர்கொள்.
8. வாழ்க்கை ஒரு புதிர்---அதற்கு விடை காண்.
9. வாழ்க்கை ஒரு பாடல்---அதைப் பாடிவிடு.
10. வாழ்க்கை ஒரு வாய்ப்பு---அதைப் பயன்படுத்து.
11. வாழ்க்கை ஒரு பயணம்---அதைக் கடந்துவிடு.
12. வாழ்க்கை ஒரு வாக்குறுதி---அதைக் காப்பாற்று.
13. வாழ்க்கை ஒரு காதல்---அதை அனுபவி.
14. வாழ்க்கை ஒரு வனப்பு---அதன் புகழ்பாடு.
15. வாழ்க்கை ஒரு போராட்டம்---அதனுடன் போராடு.
16. வாழ்க்கை ஒரு குழப்பம்---அதைத் தீர்த்துவிடு.
17. வாழ்க்கை ஒரு இலக்கு---அதைத் தொடர்ந்துவிடு.
18. வாழ்க்கை ஒரு தெய்வீகம்---அதைப் புரிந்துகொள்.









28 comments:

  1. ஆஹா நம்முடைய சடங்குகளில் உள்ள
    ஆழமான அர்த்தமுள்ள சூட்சுமங்களை
    மிக மிக அழகாக அருமையாகச் சொல்லிப் போகும்
    இப்பதிவு அருமையிலும் அருமை
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  2. நம் கலாச்சார திருமண சடங்கு முறைகளை
    அழகாக தொகுத்து தந்தமைக்கு நன்றிகள் சகோதரி.

    ReplyDelete
  3. முகூர்த்தக்கால் நடும் காரணத்தை இன்று தான் அறிந்தேன்! மிக்க நன்றி!

    ReplyDelete
  4. நமது திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் அர்த்தம் நம்மிலேயே சிலருக்கு தெரியாதுதான். அதைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி படங்களும் பகிர்வும் நல்லா இருக்கு. வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. திருமண நிகழ்ச்சிகளில் நம் முன்னோர்களின் வியத்தகு அறிவுப்பூர்வமான சம்பிரதாயங்களை சிரமப்பட்டு அழகாக தொகுத்தளித்த உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!!

    ReplyDelete
  6. நிறைய்ய விவரங்கள்.
    சொல்ல மறந்திட்டேனே படங்கள் அழகோ அழகு

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  7. முதல் படத்தில் மாறி மாறித் தோன்றும் காட்சிகளே தங்கள் தலைப்புக்கு ஏற்றாற்போல புதுப்புது அர்த்தங்களைச் சொல்வதாக உள்ளது.

    இப்போது தான் ஒரு பத்திரிகையில் ஒரு அருமையான கட்டுரை படித்தேன்.

    அதில்

    ”வெயிலை அனுபவிக்கணும்.
    பனியை ரசிக்கணும்.
    மழையை ஏற்றுக்கொண்டு தான் வாழணும். அதுதான் வாழ்க்கை.

    அதுபோல வாழ்க்கையிலும் துன்பம், தோல்வி, சந்தோஷம், வெற்றி, அமைதி, நிம்மதி என மாறி மாறி வரும்போது அதை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழ்வது தான் வாழ்க்கையில் நாம் பெறும் அனுபவம். இந்த அனுபவத்தின் முதிர்ச்சி தான் ஞானம்”

    என்று எழுதப்பட்டிருந்தது.

    மேலும் அதில் சுவாரஸ்யமான ஒரு குட்டியூண்டு சிறுகதையும் இருந்தது.

    அதையே தான் உங்களின் இந்த முதல் படமும் உணர்த்துவதாக எனக்குப்பட்டது.

    ReplyDelete
  8. நடைபெற்றதாகச் சொல்லும் மகனின் திருமணம் நகைச்சுவை எழுத்தாளர் சாவி அவர்கள் எழுதிய மிக அருமையான, எனக்கு மிகவும் பிடித்த கோபுலு அவர்களின் நகைச்சுவைப்படங்களுடன் வெளிவந்த ”வாஷிங்டனில் திருமணம்” என்ற பிரபலமான கதையை நினைவு படுத்தியது. ;)))))

    வெளிநாட்டவர் நம் ஒவ்வொரு செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து ஆச்சர்யப்பட்டு ஆயிரம் கேள்விகள் கேட்பார்கள்.

    ReplyDelete
  9. திருமண நிகழ்ச்சி தொடங்கும் முன்பே முஹூர்த்தக்கால் நடுவதைப்பற்றிய அரிய பெரிய விளக்கங்களும், அதில் உள்ள அறிவியல் உண்மைகளும், நம் முன்னோர்களின் பரந்து விரிந்த தொலை நோக்குப்பார்வையும், சமுதாய சிந்தனைகளும், இன்று அதற்கு நேர்மாறாக நடைபெற்று வரும் கூத்துக்களையும், தங்களுக்கே உரிய புத்திசாலித் தனத்துடன் கூறியிருப்பது அருமையோ அருமை.

    சபாஷ், தனிப்பாராட்டுக்கள். ;)))))

    ReplyDelete
  10. திருமண நிகழ்ச்சிக்குத் தேவைப்படும் மங்கலப்பொருட்களும், அந்த மாக்கோலமும், ஆங்காங்கே வெகு அழகாகவே காட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
  11. நீர் நிரம்பிய பானையிலிருந்து சங்கு மோதிரம் எடுத்தல்;

    நவதான்யங்களால் ஆன பாலிகை தெளித்தல்;

    வலது கைவிரலில் தங்க மோதிரம் அணிதல்;

    கால் விரல்களில் வெள்ளியில் செய்த மெட்டி அணிதல்;

    மஞ்சள் கலந்த நீரினால் ஹாரத்தி எடுத்தல்;

    சம்பந்திகளுக்குள் ஏழு தலைமுறை பெயரைச்சொல்லி வெற்றிலை+பாக்கு மாற்றிக்கொள்ளுதல்;

    என அனைத்தையும் அருமையான செய்திகளுடன் விளக்கியுள்ளீர்கள்.

    ஒவ்வொரு காரியங்களிலும் எவ்வளவோ விஷயங்கள் புதையலாக பொக்கிஷமாக புதைந்துள்ளன தான்.

    அதை தகுந்தபடி விளக்குபவர்களும், விளக்கினால் பொறுமையாகக் கேட்டு புரிந்து கொள்பவர்களும் இந்த அவசர உலகத்தில் மிகவும் குறைந்து போய் விட்டார்கள்; என்ன செய்வது?

    ReplyDelete
  12. தம்பதியினர் தங்களின் இனிய இல் வாழ்க்கையில் பெற வேண்டிய பதினாறு பேறுகளையும், அவர்கள் வாழ்வில் முன்னேற தாண்ட வேண்டிய பதினெட்டு படிகளையும் நினைவூட்டியது மிகச் சிறப்பு. ;)))))

    ReplyDelete
  13. ஹாட்டின் வடிவ ஒரு பெரிய மாலைக்குள் மணமகன் மணமகள் கழுத்தில் மாலையிடும் படம்

    எரியும் அந்த தீப விளக்கு அணையாதபடி அதை அணைத்து எடுத்துச்செல்லும், அந்தத்தாய்ப் படம்;

    இரண்டு ஜோடி LOVE BIRDS படம்

    யாவும் மிக நல்ல பொருத்தமான படத்தேர்வுகள்.

    “புதுப்புது அர்த்தங்கள்” தங்களைப் போன்ற விஷயஞானிகள் வாயினால் சொன்னால் தான் புரிகிறது.


    புதுமண தம்பதிகளுக்கு அன்பான வாழ்த்துகள்.

    பதிவிட்ட தங்களுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  14. அருமையான படங்களோடு, மிக முக்கிய சுற்றுசூழல் கருத்தையும் வலியுறுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  15. புதுமண தம்பதிகளுக்கு மனம் கனிந்த வாழ்த்துகள்.....

    திருமணங்களில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்விலும் உள்ள அர்த்தத்தை அழகாக விளக்கியுள்ளீர்கள்...

    ReplyDelete
  16. பதினெட்டு படிகளும் பொன்னெழுத்துக்கள் !

    ReplyDelete
  17. மனப்பூர்வ வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. பல நிகழ்ச்சிகளுக்கான காரணங்கள் புரிந்தது...

    நல்ல பகிர்வு...

    ReplyDelete
  19. மிகச் சிறப்பான பதிவு வாழ்த்துகள்.
    வேதா. .இலங்காதிலகம்.

    ReplyDelete
  20. Looking so divine. Thanks for such a nice blog from yipit clone

    ReplyDelete
  21. மிகவும் புனித உள்ளடக்கம். Aibnb cloneநின் நன்றி

    ReplyDelete
  22. wow I enjoyed much Rajeswari.
    I wish younger generation must read this post.
    viji

    ReplyDelete
  23. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  24. அட இவ்வளவு இருக்கா .. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  25. எப்படியோ இந்தப் பதிவைப் படிக்காம தவற விட்டுட்டேன். வலைச்சரம் மூலம் இப்ப படிச்சதுல மகிழ்ச்சி. நம் திருமணச் சடங்குகள் எத்தனை அர்த்தமுள்ளவை என்பதைத் தெளிவாக்கியது உங்கள் பதிவு. அழகழகான படங்களும் மனதைக் கொள்ளையிட்டன. நன்று.

    ReplyDelete
  26. 9. நந்த முகுந்தா கோவிந்தா

    ReplyDelete