Monday, February 6, 2012

தைப்பூசத் திருத்தேரோட்டம்







murugan_jd1pu7kq.jpgmurugan_jd1pu7kq.jpg



Thaipusam Batu Caves Greetings Card
ஆயிரமாயிரம் அற்புதங்களை அள்ளித் தரும் உன்னதத் திருநாளான தைமாத பூச நட்சத்திரத்தன்றுதான் முதலில் நீரும், அதிலிருந்து உலகமும் உயிர்களும் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
animated-globe.gifHindu Gods Images Pictures Greeting Cards and Scraps for Orkut
தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள்தான் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. 


 முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் ஜோதியை வேல் வடிவில் உருவாக்கி முருகனிடம் கொடுத்தாள். இந்த வேல், பிரம்மவித்யா சொரூபமானது என்று சாஸ்திரம் கூறும். 
அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.


பழனி மலையில் வைத்துத்தான் மகன் முருகனுக்கு வேல் கொடுத்தார் பார்வதி.

எனவே பழனியில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகப் பெருமானின் தலங்களை விட விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
 அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும்..



தேர் ரதவீதிகளை வலம் வரும் போது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா, ஞான தண்டாயுத பாணிக்கு அராகரா என்று பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி பக்திப்பரவசம் பரவச்செய்வார்கள்..

பழனி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகியம்மன் கோயிலில் 
தந்த சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்த 
அருள்மிகு வள்ளி தெய்வானை சமேதர் முத்துக்குமார உற்சவம் 

முருகனின் மணக்கோலம்

சஷ்டிகவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள். 
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். 

தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோவிலில் 
காவடியுடன் ஆடிப்பாடி வந்த சேர்ந்த பக்தர்கள்.



திருநெல்வேலியில் தாமிரபரணி நதிக் கரையில் தவமிருந்த காந்திமதியம்மன் தைப்பூசத்தில் சிவனருள் பெற்றதாக ஐதீகம். எனவே தைப்பூசத்தில் நெல்லையப்பர் ஆலயம் விழாக்கோலம் காணும்.


பாம்பு கடித்து இறந்துபோன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்திக் கலசத்திலிருந்து எழுந்து வரும்படி பதிகம் பாடி ஞானசம்பந்தர் அவளை உயிர்ப்பித்தார். இந்த நிகழ்வு தைப்பூசத்தன்று நடந்ததாக மயிலை கபாலீஸ்வரர் தலபுராணம் கூறுகிறது.


ஸ்ரீவள்ளியை முருகப் பெருமான் திருமணம் புரிந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது.
நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது வேள்வி மலை. இங்குள்ள கோவிலில் முருகப் பெருமான் எட்டடி, எட்டு அங்குல உயரத்தில், அழகிய இரு திருக்கரங்களுடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறம் சுமார் ஆறடி, இரண்டு அங்குல உயரத்தில் ஸ்ரீவள்ளி வளமாக அருள்கிறாள். வள்ளியை முருகப் பெருமான் திருமணம் செய்த தலம் என்று இது சொல்லப் படுகிறது. எனவே இங்கு தெய்வானை விக்கிரகம் இல்லை. 




கும்பகோணத் திலிருந்து தென் கிழக்கில் ஏழு மைல் தூரத்தில் உள்ளது திருச்சேறை திருத் தலம். இங்கு காவேரி ஸ்ரீமன் நாராயணனை நோக் கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்து அருளினார். அந்த நாள் தைப்பூச நன்னாள் என்று புராணம் கூறுகிறது. இத்தலத்தில் மட்டும் தைப்பூசத்தன்று தேரோட்டம் நடைபெறுகிறது. பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி, நீலாதேவி, மகாலட்சுமி, சாரநாயகி ஆகிய தன் ஐந்து பத்தினிகளுடன் தேரில் பவனி வருவார்.

திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்ச வம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது. வஜன், வரகுண பாண்டியன் ஆகிய மன்னர்கள் தங்கள் பாவம் தீர தைப்பூசத்தன்று இங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடி வரம் பெற்றதாக ஐதீகம். இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்..


புலிக்கால்  முனிவர் (வியாக்ரபாதர்), பதஞ்சலி முனிவர், ஜைமினி முனிவர் ஆகிய மூவருடன், தில்லைவாழ் அந்தணர்கள் மூவாயிரவர், முப்பத்து முக்கோடி தேவர்கள், முனிவர்கள் மற்றும் பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையில் உமையவளுடன் இறைவன் நடனம் ஆடினார். அதுவே ஆனந்த நடனம் ஆகும். இந்த அற்புத நிகழ்வு சிதம்பரத்தில் தை மாதத்தில் பௌர்ணமி கூடிய பூசத் திருநாளில் நடந்ததாக புராணம் கூறுகிறது. மேலும் பல திருத்தலங்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு இறையருள் பெறலாம்.


சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கை என்று கருதப்படுகிறாள். அதை நிரூபிக் கும் வகையில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஸ்ரீரங்கம்- கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரி காணுகிறாள் மாரியம்மன். 

அப்போது ரங்கநாதர் கோவிலிலிருந்து மாலை, சந்தனம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் யானைமீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கப்படுகிறது.


மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரி லிருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பத்து குகை என்னும் இடம். தரைமட்டத்திலிருந்து 400 அடி உயரத்தில் இந்தக் குகை உள்ளது. இந்தக் குகைக் கோவிலின் முகப் பில் 42.7 மீட்டர் உயரமுள்ள முருகப் பெருமான் அருள் புரிகிறார். 
. இந்தச் சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானதாம். இந்த முருகன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். பத்து குகை முன்புறமுள்ள பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழிவார்கள். 
தைப்பூசம் மிகச் சிறப் பாகக் கொண்டாடப்படுகிறது.


திருவண்ணாமலை பஞ்சமூர்த்திகள்தேரோட்டம்





பழநியில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்தையொட்டி...

தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர். 
தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள். 



பழநி தைப்பூச தேரோட்ட விழா

முருகன் உறையும் எல்லா தலங்களிலுமே காவடி எடுக்கும் பக்தர்கள் உள்ளனர்.

சிங்கப்பூர் தைப்பூசம் 






Hawaii, USA

22 comments:

  1. முதலில் காட்டியுள்ள இரு முருகன், இரு மயில்கள், நடுவில் வேல் மிக அழகாக உள்ளன.

    ReplyDelete
  2. //தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் அவதரித்த நாள்தான் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. //

    நல்லதொரு அவதாரத் தகவல்.

    //முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்ய அன்னை உமையவளை வேண்டினார். உமையவள் தன் சக்தியின் மூலம் ஜோதியை வேல் வடிவில் உருவாக்கி முருகனிடம் கொடுத்தாள். இந்த வேல், பிரம்மவித்யா சொரூபமானது என்று சாஸ்திரம் கூறும். //

    சக்திமிக்க தகவல் அதுவும் ஒரு சக்திமிக்கப் பதிவரிடமிருந்து. ;))))

    ReplyDelete
  3. //அந்த வேல் பிறந்தநாள் தைப்பூசத் திருநாள் ஆகும்.//

    அடடா! அதுவும் முருகன் போலவே அதே தைப்பூசத்திருநாளிலேயே அவதரித்துள்ளதே, அதிசயம் தான்.

    //பழனி மலையில் வைத்துத்தான் மகன் முருகனுக்கு வேல் கொடுத்தார் பார்வதி.//

    மாம்பழம் கிடைக்காத கோபத்தில் போய் ஆண்டியின் கோலத்துடன் நின்றாரே, அதே பழநியிலா! ஆஹா!!

    //எனவே பழனியில் தைப்பூசத் திருவிழா மற்ற முருகப் பெருமானின் தலங்களை விட விசேஷமாக கொண்டாடப்படுவது வழக்கம்.//

    ஆமாம் ஆமாம். அப்படித்தான் நடைபெறுகிறது.

    ReplyDelete
  4. //அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும்..//

    இந்த வரிகளில் தலைப்பைத் தாவிப் பிடித்து விட்டீர்கள்.;))))

    //தேர் ரதவீதிகளை வலம் வரும் போது வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா, வீர வேல் முருகனுக்கு அரோகரா, ஞான தண்டாயுத பாணிக்கு அராகரா என்று பக்தர்கள் சரண கோஷம் எழுப்பி பக்திப்பரவசம் பரவச்செய்வார்கள்..//

    ஆஹா! அந்த சரண கோஷங்கள் வின்னைத்தாண்டி எதிரொலிக்குமே!

    ReplyDelete
  5. //திருவிடைமருதூர் கோவிலில் பிரம்மோற்ச வம் தைப்பூச நாளில் நடைபெறுகிறது.

    இக்கோவிலிலுள்ள அசுவமேதப் பிராகாரத்தை வலம் வந்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்..//

    அருமையான தகவல். எப்படியோ எல்லோருக்கும் எல்லா தோஷங்களும் நீங்கினால் சரி.


    //சமயபுரம் மாரியம்மன் ஸ்ரீரங்கநாதரின் தங்கை என்று கருதப்படுகிறாள். அதை நிரூபிக் கும் வகையில் ஆண்டுதோறும் தைப்பூச நாளில் ஸ்ரீரங்கம்- கொள்ளிடம் ஆற்றுக்கு தீர்த்தவாரி காணுகிறாள் மாரியம்மன்.

    அப்போது ரங்கநாதர் கோவிலிலிருந்து மாலை, சந்தனம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் யானைமீது ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பிக்கப்படுகிறது.//

    ஆமாம். இது இங்கு பரவலாகப்பேசபபடும் செய்தியே.

    சமயபுரம் தேவஸ்தானமே ஸ்ரீரங்கம் தேவஸ்தானக் கட்டுப்பாட்டில் தான் முன்பெல்லாம் இருந்தது.

    ReplyDelete
  6. //இந்தச் சிலை அமைக்க இரண்டரை கோடி ரூபாய் செலவானதாம். இந்த முருகன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதாகக் கூறுகிறார்கள். பத்து குகை முன்புறமுள்ள பிரம்மாண்ட முருகன் விக்கிரகத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் பூமாரி பொழிவார்கள்.
    தைப்பூசம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.//

    இதுபோன்ற அரிய பெரிய தகவல்களை ஏழை எளிய மக்களாகிய எங்களுக்கு உங்களைத் தவிர யாரால் தர முடியும்? ;))))

    ReplyDelete
  7. //தீராத நோய்கள் ஏற்பட்டு அவதிப்படும் பட்சத்தில், முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பதாக வேண்டிக் கொண்டால் அவர்களைப் பீடித்துள்ள நோய் அகன்று உடல் ஆரோக்கியம் பெறுவதை எண்ணற்ற பக்தர்கள் உணர்வுப் பூர்வமாக அனுபவித்துள்ளனர்.

    தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும், பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் தைப்பூச தினத்தன்று காவடி நேர்ச்சையை செலுத்துகிறார்கள்.//

    தெய்வ நம்பிக்கை என்றும் வீண் போகாது. காவடி எடுப்பதன் நோக்கம் பற்றிய அருமையான விளக்கம் இது.

    ReplyDelete
  8. பழநி தைப்பூச தேரோட்ட விழா படம் ஜோராக உள்ளது. என்னாக் கும்பல் எல்லாப்படத்திலும்; எப்படித்தான் கவரேஜ் செய்தீர்களோ.செய்தார்களோ!

    சிங்கப்பூர் தைப்பூசப்படம் மிகச் சிறப்பாக உள்ளது.

    உடம்பு பூராவும் அலகு குத்தியிருப்பவர்கள் படங்கள், பார்க்கவே மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கடைசி 2 படங்களில் வேல் வடிவ அமைப்பு ஜோர் ஜோர்.

    ”பழநியில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்தையொட்டி...” என்ற படத்தில் பழநிமலையே ஜொலிக்குது!


    திருவண்ணாமலை பஞ்சமூர்த்திகள்தேரோட்டம்
    வெகு அற்புதமாகப் படமாக்கிக் காட்டப்பட்டுள்ளது. ஊர்ந்து வரும் 5 தேர்களையும், கோபுரத்துடனும், ஏராளமான ஜனங்களுடனும் தத்ரூபமாகக் காட்டியுள்ளது, அழகோ அழகு.

    ReplyDelete
  9. முருகனின் மணக்கோலம் மலர்களால் மண்ம் பரப்பி மன மகிழச்செய்கிறது.

    இன்றும் ஏராளமான படங்களையும் தாராளமான தகவல்களையும் அள்ளி அள்ளிக்கொடுத்து,தங்களின் 422 ஆவது பதிவினை வெற்றிகரமாக வெற்றிவேல் முருகனுக்கு சமர்பித்துள்ளீர்கள்.

    தங்கள் சேவை மிகவும் மகத்தானது.
    பார்க்கத்தெவிட்டாத படங்கள்.
    படிக்கச் சலிக்காத பயனுள்ள விஷயங்கள், கடும் உழைப்பும், மிகுந்த ஆர்வமும் கந்தனின் வேல் போல பிரகாஸமாக, [புத்திக்] கூர்மையாகத் தெரிகிறது.

    பா ரா ட் டு க் க ள்

    வா ழ் த் து க ள்

    ந ன் றி க ள்

    வாழ்க வாழ்கவே !

    ReplyDelete
  10. பழனிக்குப் போக இயலாத குறையைத் தீர்த்து வைத்து விட்டீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  11. how's things jaghamani.blogspot.com blogger found your website via search engine but it was hard to find and I see you could have more visitors because there are not so many comments yet. I have discovered site which offer to dramatically increase traffic to your blog http://xrumerservice.org they claim they managed to get close to 1000 visitors/day using their services you could also get lot more targeted traffic from search engines as you have now. I used their services and got significantly more visitors to my blog. Hope this helps :) They offer best backlinks Take care. Jason

    ReplyDelete
  12. நல்ல பதிவு.
    நிறைய தகவல்கள்.
    அற்புதமான படங்கள்.
    வாழ்த்துகள் அம்மா.

    ReplyDelete
  13. அழகான படங்களுடன் நிறைவான பகிர்வு..

    வெள்ளி மலை என்று பேச்சு வழக்கில் குறிப்பிடப்படும் வேளி மலை முருகனையும் ஞாபகப் படுத்திட்டீங்க. மலை உச்சியில் நின்னு பார்க்கும்போது தெரியும் ஒரு பக்கம் தெரியும் நீலக்கடலும், மற்ற மூன்று பக்கங்களிலும் பசுமைக்கடலெனத் தெரியும் தென்னந்தோப்புகளும் கண்ணை அங்கே இங்கே நகர்த்த விடாமக் கட்டிப் போட்டுரும்.

    ReplyDelete
  14. அற்புதமான பதிவு.
    ஆன்மீகத் தகவ்களும் தெய்வீகப் படங்களும்
    திவ்யம்.

    ReplyDelete
  15. படங்களும் பதிவும் நல்லா இருக்கு. விசாக நட்சத்திரமும் கார்த்திகை நட்சத்திரமும் கூட முருகனின் நட்சத்திரங்கள் என்று சொல்வார்களே?

    ReplyDelete
  16. அழகான படங்களுடன் அற்புதமான பகிர்வு...வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
  17. வணக்கம் முதல் முதலாக உங்களின் விருதைப் பெறுகிறேன் இதை மிகவும் மகிழ்வுடன் ஏற்கிறேன் உங்களுக்கு எமது பணிவான பாராட்டுகளும் வணக்கங்களும் நன்றி நன்றி நன்றி மாலதி .....

    ReplyDelete
  18. அழகான படங்கள்! அருமையான விளக்கங்கள்!! வாழ்த்துக்கள்!!!பாராட்டுக்கள்..

    ReplyDelete
  19. 8. புண்டரீகாக்ஷா கோவிந்தா

    ReplyDelete
  20. 8. புண்டரீகாக்ஷா கோவிந்தா

    ReplyDelete
  21. தகவல்கள்.
    அற்புதமான படங்கள்.

    ReplyDelete