Thursday, July 11, 2013

சகல நலன்கள் அருளும் "சப்த கன்னியர்''




ஆடி செவ்வாய் விரதம்
சங்க சக்ர கதா சார்ங்க க்ருஹீத பரமாயுதே
ப்ரஸீத வைஷ்ணவீ ரூபே நாராயணீ நமோஸ்துதே.

கடகளிறு தவுக பாய்மிசைப் போர்த்தவள் 
கருகுவிது ஊறுகலின் வாரியைத் தூர்த்தவள்
கடல்வயிறு எரியவொள் வேலினைப் பார்த்தவள்
கடிகமழ் தருமலர் தார்முடி சேர்த்தவள்

இடியுக வடலரி யேறுகைத் தார்த்தவள்
எழுதரு முழுமறை நூலினிற் கூர்த்தவள்
எயிறுகொடு உழுதெழு பாரினைப் பேர்த்தவள்
எனும் இவரெழுவர் கடாண்முடி சூட்டுதும் - குமர குருபர சுவாமிகள்


குமரி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலின் பிரதான நுழைவு வாயிலின் இடதுபுறத்தில் வடக்கு திசை நோக்கியபடி சப்த கன்னியர் சன்னதி உள்ளது.

சப்தகன்னியரின் வலது புறம் விநாயகரும்,  இடதுபுறம் வீரபத்திரரும் தனி, தனி சன்னதியில் காட்சி அளிக் கிறார்கள்.
 சுசீந்திரம் சப்தகன்னியர் சன்னதிக்கு முன்புறம் சுடலை மாடன் காட்சி அளிக்கிறார்.

தாணுமாலயன் கோவிலில் மார்கழி, சித்திரை திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறும்.

அப்போது தேரில் கும்பம் ஏற்றப்படும்.

அப்போது சப்த கன்னியர்களுக்கும் சுடலை மாடனுக்கும் சிறப்பு  பூஜைகள் நடைபெறும்.
நள்ளிரவு 12 மணிக்கு இந்த பூஜைகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

சப்தகன்னியரை வழிபட்டால் சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்கு அருகில் வடதிசையில் அம்பிகை ஆண் தெய்வங்களுக் கெல்லாம் முந்திப் பிறந்ததால் முன்னுதித்த நங்கை அம்மன்  எனப் பெயர்பெற்ற கோவிலில் அம்மன் சன்னதிக்கு இடதுபுறத்தில் மேற்கில் இருந்து கிழக்கு பார்த்த கோலத்தில் சப்தகன்னியர்கள் காட்சியளிக்கிறார்கள்.

இங்கு ஒரே கல்லில் சப்த கன்னியர்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளனர்.  அம்மனை வழிபட்டு செல்பவர்கள் சப்த கன்னியர்களையும் தரிசிக்க தவறுவதில்லை.
சுசீந்திரம் புகைப்படங்கள் - தாணுமாலயன் கோயில்

23 comments:

  1. அழகிய படங்களுடன் அருமையான விளக்கங்கள்... நன்றி அம்மா...

    ReplyDelete
  2. எது இல்லையோ, எது கிடைக்கவில்லையோ அதனை நினைத்து நினைத்து உள்ளம் வேதனையுறும். தீரா மனக்கவலை குடிகொள்ளும். நியாயமான பிரார்த்தனைகளை சப்தகன்னியர்களிடம் வைக்கும் போது, அவை நிறைவேறுகின்றன. மனக் கவலை, மனத் துயரம், மன சங்கடம் நீக்குபவர்களும் சப்த கன்னியர்களே! சப்த கன்னியரை வழிபட வேண்டுமென்கிற உணர்வினைத் தூண்டும் உன்னத பதிவு! சிறப்பானதொரு தன்னலமற்ற சேவைக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  3. சமீபத்தில் வேறு ஒரு இடத்தில் சப்தகன்னியர்களைப் பார்த்தேன்.....

    நல்ல படங்கள் மற்றும் தகவல்கள்..நன்றி.

    ReplyDelete
  4. தாணுமாலயன் கோவில் பற்றி என் அம்மா சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். போனதில்லை.. படங்கள் அருமை..

    ReplyDelete
  5. மிக சிறு வயதில் நாங்கள் நாகர்கோவிலில் இருக்கும் போது போனது சுசீந்தரம் தாணுமாலயன் கோவில். சப்தகன்னியர் கோவில் பார்த்த நினைவு இல்லை. மறுபடி அங்கு போய் பார்க்க ஆவல்.
    படங்கள், செய்திகள் அருமை.

    ReplyDelete
  6. ”சகல நலங்கள் அருளும் சப்த கன்னியர்” களுக்கு என் அன்பான வந்தனங்கள்.

    >>>>>>

    ReplyDelete
  7. சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலைப்பற்றி மிக அருமையான விளக்கங்கள் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    கோவையிலிருந்து சுடச்சுடக்கொடுத்துள்ள இந்தப்பதிவினில் iஇன்று ஆவி பறக்கிறதே!

    நான் மிகவும் லேட்டாக வருவதற்குள் அது சற்றே ஆறிப்போய் விட்டது.

    ஆறு மனமே ஆறு ... ஆண்டவன் கட்டளை ஆறு ! என நானும் மனதை ஆற்றித்தான் வருகிறேன்.


    >>>>>>

    ReplyDelete
  8. படங்கள் எல்லாமே அழகோ அழகு. விளக்கங்கள் அதைவிட அழகு.

    ஒருசில செய்திகள் எப்போதோ உங்கள் பதிவினில் படித்தது நினைவுக்கு வந்தது.

    மீண்டும் இன்று படித்ததில் ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே !

    >>>>>>>

    ReplyDelete
  9. கடைசியில் காட்டப்பட்டுள்ள மூன்று படங்களும் மிகவும் ஜோராக உள்ளன.

    படத்தேர்வுகளுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  10. எல்லாவற்றிற்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்,

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.

    ooooo 967 ooooo

    ReplyDelete
  11. good pictures of saptha kannigal thanks for sharing

    ReplyDelete
  12. As usual nice post dear.
    very nice pictures. I had not seen this place. Thanks for sharing.
    viji

    ReplyDelete
  13. நல்லதொரு ஆலயம் பற்றிய சிறப்பான தகவல் பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  14. ரொம்பவும் வித்தியாசமான தகவல்! சப்த கன்னியர் கோவில் பற்றி இன்று தான் தெரிந்து கொண்டேன்! படங்களும் அழகு!!

    ReplyDelete
  15. சப்த கன்னியர் பற்றிய தகவல்களும், படங்களும் அருமை.

    ReplyDelete
  16. சப்த கன்னியர் படங்களும் தகவல்களும் அருமை...

    ReplyDelete
  17. சுசீந்திரம் கோவில் தரிசித்து இருக்கிறேன். சப்த கன்னியர் பற்றி இப்போதுதான் அறிகிறேன். அடுத்த முறை போகும்போது தரிசித்திட்டு வர வேண்டும்.
    ஒரே கல்லில் சப்த கன்னியர் அருமையாக வடிக்கப்பட்டிருக்கின்றனர்.

    ReplyDelete
  18. சப்த கன்னியர்கள் அறிந்திருக்கின்றேன். படங்கள் நன்றாக இருக்கின்றன.

    ReplyDelete
  19. சப்த கன்னியர் தனித்தனியாகவே பல கோயில்களின் பிரகாரங்களில் தரிசித்திருக்கிறோம். ஒரே கல்லில் செதுக்கப் பட்ட ஏழு கன்னியர் தாணுமாலயன் கோயிலில் இருப்பது வெகு சிறப்பே.

    நான் பிறந்த ஊரான குறியாமங்கலத்தின் (கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம்) அருகே ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீ தீப்பாய்ந்தாள் முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஏழு கன்னியரும் ஒரே சிலையில் காட்சி அளிக்கின்றனர். இவ்வாலயம் எழுப்பப் படும் முன்பே ஆலயத்தின் அருகிலுள்ள ஓடையருகே இந்த சப்த கன்னியர் எழுந்தருளி விட்டதாக ஐதீகம். அவ்வூர் மக்கள் ஆண்டு தோறும் மாசி மகத்துக்கு முன் சாந்தால் மெழுகி சந்தனத்தால் கோலமிட்டு கரும்பால் கால் நிறுத்தி அரும்பால் பந்தலிட்டு கன்னிப் பெண்கள் கும்மி கொட்டி சாட்டையடி வாங்கி வாய்க்கால் தண்ணீரில் சாமி வந்தவர்களை மலையேற்றி கொண்டாடி இருக்கிறார்கள். வாய்க்காலும் வானம் பார்த்த வாய்க்கால் ஆகிவிட, குளம் குட்டைகளும் வற்றிவிட கன்னித் திருவிழா சுருங்கி,கன்னிப் பெண்களுக்கான மங்கலப் பொருட்களுடன் மாவிளக்கு போட்டு படைப்பதோடு இருக்கிறது.

    இக்கோயிலில் இந்த ஆடிமாதக் கடைசியில் ஐம்பதாவது தீமிதித் திருவிழா நடைபெற இருக்கிறது. வருகிறீர்களா தோழி?

    ReplyDelete
  20. எங்களின் குல தெய்வம் "சப்த கன்னியம்மன்" தான்.
    இவரகளை காமாட்ஷி தாயின் போர்வீரர்கள் என்றும் அவர்களின் தலைவி ஸ்ரீ வைஷ்ணவி என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இவர்களைப் பற்றிய முழுமையான தகவல்கள் தேடுகிறேன். நிறைய இடங்களில் ஏழு கற்களை வைத்து பூஜித்திருப்பதைப் பார்த்திருக்கிறேன், ஆனால் விவரங்கள் தெரிந்தவர் அதிகம் எனக்கு காணக்கிடைக்கவில்லை..
    தனக்குள் பதிவும் படங்களுக்கும் சந்நிதிக்கு போய்வந்த நிறைவை தருகிறது, மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  21. நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  22. நல்ல பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete