Thursday, December 12, 2013

ஸ்ரீ அனந்த சயன நாராயணர்





ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயம், காத்மண்டு, நேபாளம்


ஆதிசேஷா அனந்தசயனா ஸ்ரீநிவாசா ஸ்ரீ வெங்கடேசா
வைகுண்ட நாதா வைதேகிப்ரியா ஏழுமலை வாசா எங்களின் நேசா

வேணுவிலோலனாவிஜயகோபால நீலமேகவண்ணாகார்மேக கண்ணா காளிங்க நர்த்தனாகமனீயகிருஷ்ணா கோமளவாயனா குருவாயூரப்பனா

ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பாடு தீவினையகல அவன் திருவடி தேடு
பாவம் போக்க பார்த்தசாரதியி பாதம் பணிவோம்

திருப்பதி மலையில் திருமுகம் காட்டும்
திருவேங்கடத்தான் திருவருள் பெறுவோம்

ஸ்ரீரெங்கநாதன் பள்ளி கொண்டிருக்கும்
ஸ்ரீரெங்கம் சென்றவன் திருவடி பணிவோம்

என்று வணங்கும் ஸ்ரீமன் நாரயணன் பிரத்யட்சமாக பள்ளிகொண்ட கோலத்தில் அருளும் ஆலயமாக நேபாள தலைநகர் காத்மண்டுவில் 
ஸ்ரீ அனந்த சயன நாராயணர் ஆலயம் திகழ்கிறது ..!

புத்தரை மஹாவிஷ்ணுவின் அவதாரமாகத்தானே கொண்டாடுகின்றார்கள்..!

எனவே  பௌத்தர்கள்  இதனை புத்தரின் அனந்தசயனம் 
என்றே வழிபடுகிறார்கள்..!  

புத்த நீல்கந்த ஆலயம் என  அழைக்கப்படுகிறது. 

புத்தா நீலகண்டா   மகாவிஷ்ணு , குளத்தின் மையப் பகுதியில் - பின்னி பிணைந்த நிலையில் உள்ள 11 பாம்புகளின் மீது சயன கோலத்தில் காட்சி அளிக்கிறார். 
இயற்கை நீரூற்றின் மீது துயில் கொள்ளும் அனந்த சயன நாராயணர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு மனதில் அமைதியை வழங்குவதற்காக இவ்வாறு காட்சி அளிப்பதாக கூறுகின்றனர். 

காத்மண்டுவில் இருந்து சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரி மலை தொடரில் இக்கோயில் அமைந்துள்ளது. 

கோயிலின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரம்மாண்ட குளத்தில் 5 மீட்டர் நீளமுள்ள கருங்கல்லால் ஆன பாம்புகளின் மீது புத்தநீல்கந்தர் காட்சி தரும் மகாவிஷ்ணு சிலை ஒரே கருங்கல்லால் வடிவமைக்கப்பட்டதாகும். 

ஒரு சமயம் வயதான  தமபதியர் தங்களின் விவசாய நிலத்தில் உழுது கொண்டிருந்த போது பூமிக்கு அடியில் இருந்து இந்த பிரம்மாண்ட சிலை வெளிப்பட்டுள்ளது. 

ஊர்காரர்களை அழைத்து வந்து காட்ட முயன்ற போது
சிலை மாயமாக மறைந்து விட்டதாம். 

பின்னர் சிறிது நாட்களுக்கு பிறகு மீண்டும் அந்த விவசாயி தனது நிலத்தை உழுது தொண்டிருந்த போது மீண்டும் பூமிக்கு அடியில் இருந்த வெளிப்பட்ட சிலையில் இருந்து ரத்தம் வழியத் துவங்கியதாக  வரலாறு . 

கோயிலில் அமைந்துள்ள மகாவிஷ்ணு சிலை சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மகாவிஷ்ணு சிலை,13 மீட்டர் நீளமுள்ள குளத்தில் 5 மீட்டர் நீளத்தில் கால்களை குறுக்காக வைத்தபடி சயன கோலத்தில் உள்ளது. 

நான்கு கைகளிலும் முறைகே சங்கு, சக்கரம், கதை
மற்றும் தாமரை மலர்  உள்ளன. 

இந்த சிலை சுமார் 7 அல்லது 8ம் நூற்றாண்டை
சேர்ந்ததாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. 

சிவனைப் போன்று பழமையான நீல நிற கழுத்தை காணப்படுவதால் 
புத்த நீல் கந்தர் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார்.

ஆலய வளாகத்தில் ருத்ராக்ஷ மரம் உள்ள\து.

 விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது.

திறந்த வெளி பசுபதி நாதர் மேடை உண்டு..

 ஜல நாராயணர் திறந்த வெளியில் மேற்கூரை எதுவும் 
இல்லாமல் ஒரு மஞ்சள் விதானம் நிழலில் தரிசனம் தருகிறார்..
 திருவடிகளில் நின்று வணங்குகிறோம்..
தாரா பாத்திரத்தினால் அபிஷேகம் செய்யப்படுகிறது!




20 comments:

  1. அசர வைக்கும் படங்கள் + தகவல்கள்... நன்றி அம்மா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. arumauyaana thagavalgal,arputhamana padangaludan. ullur kovilaga irunthal kandippaga oru muraiyavathu sella mudiyum. anal velinattu kovilaga iruppathaal, angu sella mudiyathvargalukku thangalin intha pathivu oru varapprasaadam. Vazthukkal.

    ReplyDelete
  3. வணக்கம்
    அம்மா
    அனைத்தும் சிறப்பு... படங்களு மிக அருமை வாழ்த்துக்கள்அம்மா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. சிலிர்க்க வைக்கும் மிகவும் அருமையான படங்கள்.

    பார்க்கப்பார்க்க பரவஸமாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  5. நேபாளத்தில் உள்ள மிகப்பிரபலமான பசுபதிநாதரைப் பற்றி மட்டுமே இதுவரை கேள்விப்பட்டுள்ளேன்.

    ஸ்ரீ அனந்த சயன நாராயணர் பற்றி இப்போது இன்று தான் தங்கள் மூல நன்கு அறிய முடிநதுள்ளது.

    >>>>>

    ReplyDelete
  6. இந்த மிகப்பழமை வாய்ந்த பெருமாளின் ஸ்தல புராணம், அதன் நீள அகல ஆழ அளவுகள், அதன் தற்போதைய இருப்பிடம் போன்றவை மிகவும் சிரத்தையுடன் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    படித்ததும் மிகவும் பிரமிப்பாகத்தான் உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  7. மிதக்கும் நிலையில் உள்ள இந்தப்பெருமாளுடன் நம் மனமும் ஆனந்தத்தில் மிதப்பதாக உணர்கிறோம்.

    பல்வேறு நிலைகளில் பெருமாளைப் படம் பிடித்துக்காட்டியுள்ளது மனதுக்கு மிகவும் சந்தோஷம் அளிப்பதாக உள்ளது.

    >>>>>

    ReplyDelete
  8. தாரா பாத்திரத்தில் பால் விட்டு அபிஷேகம் செய்யப்படும் காட்சியும், இதர விளக்கங்களும் பாராட்டத்தக்கவை.

    >>>>>

    ReplyDelete
  9. திருப்பதி ஏழுமலையான், காளிங்க நர்த்தனம் ஆடிய கண்ணன், ஸ்ரீ குருவாயூரப்பன், ஸ்ரீ பார்த்தசாரதி, ஸ்ரீரங்க ரங்கநாதர் ஆகியோருடன் இந்தப்பெருமாளை ஒப்பிட்டு ஒன்றிணைத்துக் கூறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

    >>>>>

    ReplyDelete
  10. ஆரம்ப வரிகளே அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன.

    [இருப்பினும் ஏனோ புத்தரைக் கொண்டுவந்து இவருடன் இணைத்துச் சொல்வதெல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. ;( ]

    o o o o o o o

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ..வாழ்க வளமுடன் ..!

      கருத்துரைகளுக்கு இனிய நன்றிகள்..

      கோவிலுக்கு அழைத்துச்சென்ற வழிகாட்டி புத்தரின் அனந்தசயன ஆலயம் என்றுதான் அழைத்துச்சென்றார்,,

      நம் கண்களுக்கு தரிசனம் தந்ததோ மஹாவிஷ்ணுதான் ..!

      நீலகண்டர் என்று சிவனைத்தானே வணங்குவோம் ....!

      Delete
  11. விவரங்கள் சுவாரஸ்யம்.

    ReplyDelete
  12. படங்களே கதையை அழகாக விளக்கிக் காட்டும் அளவிற்கு
    உள்ளது தோழி !! வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
  13. அழகான படங்களுடன் சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  14. இதுவரை பார்த்திராத சிலை வடிவங்கள் பார்க்கக் கண்டேன்!! நன்றி அம்மா!

    ReplyDelete
  15. நேபாளத்திற்கு சென்று வந்த மாதிரி இருக்கிறது. மிக மிக சிறப்பு வாய்ந்த படங்களும் தகவல்களும்.

    ReplyDelete
  16. படங்கள் அருமை. எல்லோருக்கும் திருப்தி தரும் பகையில் புத்தர் அனந்த சயனர், நீலகண்டர் என்று கூறப் படுகிறது என்று நினைக்கிறேன்.நம்ப முடியாத கதைகள் இல்லாத கடவுளே நீ எங்கிருக்கிறாய்.? வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. நாங்களே நேரே சென்று தரிசித்த உணர்வு.... நன்றி.

    ReplyDelete