Sunday, April 13, 2014

சௌபாக்யம் அருளும் காயத்ரி தீபம்







ஓம் பூர் புவஸ் ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்க்க தேவஸ்ய தீமஹி

தியோ யோந: ப்ரசோத யாத்



அந்த பிராண ஸ்வரூபமான,
துக்கத்தை நாசம் செய்யும் 
சுகஸ்வரூபமான உன்னதமான தேஜஸ்வியான
பாபத்தை நாசம் செய்யகூடிய தேவஸ்வரூபமான
பரமாத்மாவை நாம் அந்தராத்மாவில் வைத்துக்கொள்வோமாக !!
அந்த பரமாத்மா நமது புத்தியைத் தூண்டி வழிநடத்தட்டும் !!


இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியன் தன் அருள் ஒளியால் அறியாமை என்னும் இருளகற்றி அறிவென்னும் ஒளிச்சுடரை தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவாகத்திகழ்கிறான்..!!
சூரியனின் மத்தியில் பர்கன் என்கிறபெயரில் வீற்றிருக்கும் சிவபெருமானையும் , சிவப்பரம் பொருளின் திவ்ய மங்கள் ஜோதியையும் துதிப்பதே காயத்ரி மந்திரமாகும் ..!














காயத்ரி மந்திரத்தை குறிக்கும் தீபம் காயத்ரி தீபம்  என்று அழைக்கப்படுகிறது 
 காயத்ரி தீபம்  நடுவில் ஐந்து முகங்களும் பத்து கரங்களும் கொண்ட காயத்ரி தேவி அமர்ந்திருக்கிறாள். 

காயத்ரி தேவியைச் சுற்றியுள்ள பிரபா  மண்டலத்தில் ஐந்து சுடர்கள் பிரகாசிக்கின்றன
இதை இறைவன் முன்பாகக் காட்டும்போது ஓம்பூர்: புவ: சுவ: என்று தொடங்கும் காயத்ரி மந்திரம் ஓதப்படுகிறது. 
இதன் பொருள் ஓம் பூலோகம்,  சுவர்க்கலோகம், பாதாள லோகம் ஆகிய மூன்று உலகங்களிலும் எவன் நம்முடைய புத்தியினை நன்றாக நடத்துகிறானோ அந்த ஒளி வடிவான (சூரியனின் மையத்தில் இருக்கும்) பர்க்கன் என்கிற  தேவனுடைய மகிமைகளைத் தியானிக்கிறேன் என்பதாகும்.




15 comments:

  1. காணொளியும் அருமை அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!..

    ReplyDelete
  3. மிகவும் அழகழகான படங்கள் + விளங்கங்களுடன் கூடிய அற்புதமான பதிவு. காணொளி இணைப்பினையும், தொடர்புடைய பதிவினையும் கொடுத்துள்ளதில் மேலும் மகிழ்ச்சி.

    ReplyDelete
  4. அழ்கான படங்கள் பகிர்வு! பக்திமணம் கமழுகின்றது!

    ReplyDelete
  5. ஒளிரும் தீபமானது உள்ளத்தில் மகிழ்வு தர அனைவருக்கும் என் இனிய
    வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .மிகவும் அழகிய பகிர்வு தோழி உங்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .

    ReplyDelete
  6. அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  7. படங்கள் கொள்ளை அழகு!

    ReplyDelete
  8. காணொளி கேட்க வேண்டும் அம்மா..
    படங்களுடன் பகிர்வு அருமை...

    ReplyDelete
  9. முதலாவது படம் ரெம்ப அழகு. தகவல்கள்,படங்கள்,காணொளி சிறப்பு,அருமை.நன்றி.

    ReplyDelete
  10. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete

  12. சூரியனின் அந்தராத்மாவாக இருப்பவர் விஷ்ணு .பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லியுள்ளபடி சிவனுக்கும் அந்தராத்மா விஷ்ணுதான்

    ReplyDelete

  13. சூரியனின் அந்தராத்மாவாக இருப்பவர் விஷ்ணு .பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்லியுள்ளபடி சிவனுக்கும் அந்தராத்மா விஷ்ணுதான்

    ReplyDelete
  14. காயத்ரியை உல பூர்வமாக தினமும் சுத்தியுடன் ஜபிக்க அதனால் நம்மிடம் உண்டாகும் நல்ல பலன்கள் பற்றி சற்று விரிவாக எழுதுங்களேன்.

    ReplyDelete
  15. நல்ல பதிவு. புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete