Friday, May 30, 2014

திருமயிலை திருத்தலம்



ஜடை அலங்காரம்..






















தம்பிரான் தோழர் என்று அழைக்கப்படும் சுந்தரரிடம் 
இவர் தோழர் சிவன் படும் பாடு சொல்லி மாளாது. 
தன் முதல் பாடலிலேயே தன் தோழனை 'பித்தா' என்றுதான் அழைக்கிறார். அதன் பின் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று உரிமையோடு கேட்பதிலிருந்து தூது அனுப்புவது வரை தோழரைப் படுத்தும் பாடு..... அப்பப்பா... பாவம் அந்தத் தோழர்!
இவரப் பார்த்துப் பரிதாபப் பட்ட புலவரொருவர் பாடுகிறார்
இப்படி,வில்லால் அடிக்க செருப்பால் உதைக்க வெகுண்டுஒருவன்
கல்லால் எறியப் பிரம்பால் அடிக்க இக் காசினியில்
அல்ஆர் பொழில்தில்லை அம்பல வாணற்குஓர் அன்னைபிதா
இல்லாத தாழ்வுஅல்ல வோஇங்ங னேஎளிது ஆனதுவே.
பாவம் அந்த அம்பலவானனுக்கு பெற்ற தாய் தந்தையர் இல்லாததனால் அல்லவோ இத்தனை அடிகளையும் வாங்கவேண்டி இருந்தது!

பாசுபதாஸ்திரம் கொடுக்கப்போய் அர்ஜுனனிடம் வில்லால் அடிவாங்கினார், 
செருப்பால் உதைத்தவர் கண்ணப்ப நாயனார்.
சமணரான சாக்கிய நாயனாரோ தினமும் ஒருகல்லால் 
சிவனுக்கு அர்ச்சனை நடத்திய பின்பே உண்ணும் வழக்கம் உடையவர்.
அதன் பின் வந்திக்கு உதவி செய்யப்போய் பாண்டியனிடம் பிரம்படி வாங்கியது தனிக்கதை!

கபாலீஸ்வரர், (சுட்டுக) வெள்ளீசுவரர், காரணீஸ்வரர், விருபாட்சீஸ்வரர், மல்லீஸ்வரர், வாலீஸ்வரர், தீர்த்தபாலீஸ்வரர் என்று ஏழு சிவாலயங்கள் எழிலுற அமைந்துள்ள பெருமைக்குரிய தலமாகத்  கயிலை மலைக்கு நிகரான திருத்தலமாகத் திருமயிலை திகழ்கிறது

நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் நாயனார் இறைவனை மனக்கோயிலில் வழிபட்டு மயிலையில் வாழ்ந்தவர். 
நாகம் தீண்டி மாண்டுபோன பூம்பாவை என்ற பெண்ணை ஞானசம்பந்தர் உயிர்ப்பித்ததும், உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் தோன்றியதும் திருமயில்லை திருத்தலமே.

அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில் கபாலீச்சுரத்திற்கு அடுத்து முக்கியத்துவம் வாய்ந்த கோயிலாகும். 

வேதாரணியம் சிவாலயத்தில் அணையும் நிலையில் இருந்த விளக்கைத் தூண்டி எரியச் செய்த ஓர் எலியைச் சிவபெருமான் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார்.

தினைத்துணை நன்றி செய்யினும் அதைப் 
பனைத்துணையாகப் பாவித்தது பரமனின் பெருங்கருணை. 

ஆனால், அதிகாரப் போதைக்கு ஆளான மகாபலி, தேவர்களையே அவமதிக்க, அவனுக்குப் பாடம் புகட்ட, திருமால் வாமனன் அவதாரத்தில் மகாபலியின் யாகசாலைக்கு வந்து மூன்றடி மண்ணைத் தானமாகக் கேட்க, மகாபலி மமதையோடு தாரைவார்த்துக் கொடுக்க முற்பட, தானத்திலும் சிறந்தது நிதானம் என்று அவனுக்கு உணர்த்த அசுர குலகுரு சுக்கிராச்சாரியார் முயன்றார்.

மகாபலி எடுத்த கெண்டியின் நீர் வரும் வாயை, அவர் வண்டு உருவம் எடுத்து அடைத்துக் கொள்ள, அதனை அறிந்த வாமனராக வந்த திருமால் தன் தருப்பைப் புல்லினால் கெண்டியின் வாயைக் குத்த வண்டு உருவில் வந்த சுக்கிராச்சாரியார் கண் பார்வையை இழந்து கீழே விழுந்தார்.

தானத்தைத் தடுத்த பாவத்திற்குக் கிடைத்தது தண்டனை.

திருமால் தன் நீண்ட திருவடியால் மேலுலகத்தை ஓரடியாலும், 
கீழுலகத்தை ஓரடியாலும் அளந்து எடுத்து, 
மூன்றாவது திருவடியை மகாபலியின் தலையில் வைத்து 
அவனைப் பாதாளத்தில் தள்ளினார்.

சுக்கிராச்சாரியார் தான் இழந்த கண் பார்வையை மீண்டும் பெற, திருமயிலை வந்து இங்கு இருந்த குருந்த மரத்தின் அடியில் சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். 

வைகாசி வளர்பிறை பிரதோஷ நாளில் சிவபெருமான் திருமால், பிரம்மா சகிதமாகத் தோன்றி, சுக்கிராச்சாரியருக்குக் கண்பார்வை அருளினார்.

திருமயிலை திருக்கோயிலில் வைகாசிப் பெருவிழாவில் எட்டாம் நாள் சுக்கிரன் கண்ணொளி பெறும் விழாச் சிறப்பாக நடைபெறுகிறது.

வெள்ளி என்ற சுக்கிரன் வழிபட்ட இறைவன், சுக்கிரன் விரும்பியவாறு வெள்ளீசுவரர் என்ற பெயர் தாங்கினார்.

அன்று காலை 11 மணியளவில் சுக்கிராச்சாரியார், மகாபலிச் சக்கரவர்த்தி, வாமனர் ஆகிய மூன்று உற்சவ மூர்த்திகள், மயிலை சித்திரக்குளம் அருகே சென்று இருக்கப் பெற்று, அபிஷேகங்கள் நடைபெறும்.

பின்னர் உற்சவமூர்த்திகளாக உலகளந்த பெருமாள், பிரம்மா, பிரதோஷ நாயகர் சிவபெருமான் அங்கு எழுந்தருளிட பிரதோஷ கால தீபாராதனை நடைபெற்றுக் கண்ஒளி வழங்கப்படும்.

அப்போது ஓதுவார்கள் பதிகம் பாடுவார்கள்.

சுந்தரமூர்த்தி நாயனார் இழந்த தம் கண்பார்வையைப் பெற வேண்டிப் பாடிய

உற்றவர்க்கு உதவும் பெருமானை
ஊர்வது ஒன்று உடையான், உம்பர்கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றம்இல் புகழாள், உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே

விற்றுக்கொள்ளீர் எனத் தொடங்கும்
விற்றுக்கொள்வீர்; ஒற்றி அல்லேன்; விரும்பி ஆட்பட்டேன்;
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை; கொத்தை ஆக்கினீர்;
எற்றுக்கு அடிகேள், என்கண் கொண்டீர்? நீரே பழிப்பட்டீர்;
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால், வாழ்ந்து போதீரே.

இரு பாடல்கள் கோயில் சுவரில் பதிக்கப் பெற்றுள்ளன.

சுந்தரர் செய்த சத்தியத்தை மீறியதால் கண்கள் குருடாகிவிட, காஞ்சிபுரத்து இறைவனை வழிபட்டு இடக்கண் பெற்றார். அதன்பின் திருவாரூர் இறைவனை வழிபடச்சென்று அங்கே பாடியது இந்தப் பாடல்.

செய்த தவறை உணர்கின்றவர்களுக்குத் தயவு காட்ட இறைவன் தயாராக உள்ளான் என்பதனால்தான் காக்கும் எம் காவலனே, காண்பரிய பேரொளியே என்று மணிவாசகரும், காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே என்று வள்ளலாரும் மனம் கசிந்து பாடினார்கள்.

திருமயிலை தெற்குமாட வீதியின் நடுவில் உள்ள அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில் செங்குந்த மரபினரால் நிர்மாணிக்கப்பட்டது. 

சித்தி புத்தியுடன் உறையும் மகா கணபதி. அருகில் செல்வ விநாயகர். தெற்கு நோக்கிய அம்பிகை சன்னதியில் தேவி காமாட்சி எழுந்தருளியுள்ளார். 

கா என்றால் கலைமகளையும், மா என்றால் திருமகளையும்
தனது கண்களாகத் கொண்டவர் என்று பொருள்.

கிழக்கு நோக்கிய சன்னதியில் வெள்ளீசுவரர் லிங்கத் திருமேனியுடன் காட்சி தருகிறார். முத்துக்குமாரசாமி என்ற பெயருடன் வள்ளி, தெய்வயானை சமேதராக முருகப் பெருமான் முறுவல் புரிகிறார். 

வெளிச்சுற்றின் வடகிழக்கு மூலையில் சனிபகவான் சன்னதியும் நவக்கிரக சன்னதியும் அமைந்துள்ளன.

சனி பகவானுக்கு நேர் எதிரே சுக்கிரன் குருந்த மரத்தடியில் சிவபெருமானை வழிபட்ட நிலையில் நிற்கிறார். 

 சரபேஸ்வரர் சன்னதி. திருமால் தான் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் நோக்கம் நிறைவேறிய பின்னும், உக்கிரம் தணியாமல் தவித்தபோது, சர்வேஸ்வரன் சரபம் என்ற பட்சி உருவம் தாங்கி வந்து, அவரை ஆலிங்கனம் செய்து சாந்தப்படுத்துகிறார். 

ஒவ்வொரு ஞாயிறன்று மாலை 4 1/2 & 6 மணிக்கு ராகு காலத்தில் சரபேஸ்வரர்க்குச் செய்யப்படும் பூஜை மிகவும் சக்தி வாய்ந்தது என்று சுந்தரமாகச் சொல்லப்படுகிறது.

கோயில் கொடிமரத்துக்கு அருகில் உள்ள கல்தூண்களில் வடிவுடன் காணப்படும் சிற்பங்களான சிம்மவாகனத்தில் பஞ்சமுக விநாயகர், பிரம்மா, விஷ்ணு இவர்களைத் தாங்கியவாறு பரமேஸ்வரர் ஒற்றைக்காலில் நிற்கும் ஏகபாதமூர்த்தி மனதை ஏகமாகக் கவர்கின்றன. 

கல்தூண்களில் செதுக்கப்பட்டுள்ள பட்டினத்தார், 
அவரது சீடர் பத்ரகிரியார், வள்ளலார் ஆகியோர் 
உருவச்சிலைகள் அருளைப் பொழிகின்றன.

கோயிலில் ஆண்டுதோறும் வைகாசிப் பெருவிழா 
பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. 



திருவெம்பாவை பத்து நாட்கள், ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, மாசிமகக் கடலாடுதல், நவராத்திரி, ஒட்டக்கூத்தர் விழா, சேக்கிழார் விழா, 
1008 சங்காபிஷேகம், கந்தசஷ்டி, திருஅண்ணாமலையார் தீபம், மகாசிவராத்திரி முதலிய  உற்சவங்கள்  பக்தி வெள்ளத்தில் திளைக்க வைக்கின்றன.

கண்களில் உள்ள கோளாறு நீங்குவதற்கும் பார்வை இழந்த கண்களில் ஒளியைப் பெறுவதற்கும் ஓதவேண்டிய இரு பதிகங்கள் பார்க்க சுட்டவும்..




Singaravelar ,Float Festival Celebrations , Kapaleeswarar Temple ,Mylapore.

17 comments:

  1. திருவள்ளுவர் உட்பட அருமையான தகவல்களுடன் சிறப்பான பகிர்வு அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. வணக்கம் அம்மா
    மனதிற்கு இனிய காலைப்பொழுதை உங்களால் உணரமுடிகிறது அதற்கு முதலில் நன்றிகள். படங்கள் அனைத்தும் அழகாக பகிர்ந்துள்ளீர்கள். வலைப்பக்க நண்பர்கள் காலையில் எழுந்தவுடன் உங்கள் தளத்தைப் பார்த்து விட்டு மற்ற வேலைகளில் ஈடுபடுவடுவதாகச் சொல்லி கேட்டிருக்கிறேன். தங்கள் ஆன்மீக பயணம் தொடர வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அம்மா. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  3. பற்பல திருவிழாக்களைப் பற்றிய பல அரிய தகவல்களையும் புகைப்படங்களையும் ஒரேபதிவில் இணைத்து எங்களை திக்குமுக்காட செய்துவிட்டீர்கள். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  4. திருமயிலை திருத்தலம் மிகவும் அழகான அருமையான பதிவாக அமைந்துள்ளது.

    படங்கள் அத்தனையுமே அழகோ அழகு தான் ;)))))

    >>>>>

    ReplyDelete
  5. இருப்பினும் பின் அலங்காரம் ... பின்னல் அலங்காரம் ... பின்னியெடுப்பதாக வெகு அழகாக சொக்க வைக்கிறது.

    அதுவும் அந்த மூன்றாவது படத்தில் அடடா ...... அதுதான் எவ்ளோ நீண்ண்ண்ண்ண்ண்ண்டு உள்ளது ;)))))

    தலையை அவிழ்த்து விட்டால் தரையைப்பெருக்கும் அளவுக்குத் தலைமுடியுள்ள பெண் என்று சொல்லி பாராட்டுவார்களே ! அது போல அல்லவா உள்ளது. ;)

    மேலே ஐந்துதலை நாகம் போல உள்ளதில் ஐந்து கிளித்தலைகளோ ...

    அவைகளும் மூக்கும் முழியுமாக நன்னாத்தான் இருக்கு.

    சைடில் ஓர் ஜடை தனியாக வேறு ... இரட்டைப்பின்னலோ?

    சிகப்பு பட்டுரோஜாக்கலரில் அதுவும் ஜோர் தான். ரோஜாவோ இரட்சிப்பூக்களோ சரியாக என்னால் உணரமுடியவில்லை.

    >>>>>

    ReplyDelete
  6. வில்லால், செருப்பால், கல்லால், பிரம்பால் ....... கதைகளும், பாடல்களும், விளக்கங்களும் ரஸிக்க வைத்தன.

    >>>>>

    ReplyDelete
  7. திருக்கச்சியிலும் திருவாரூரிலும் சுந்தரர் பாடிய பதிகங்களின் இணைப்புக் கொடுத்துள்ளது பலருக்கும் பயன் படக்கூடியது ...

    ’கண்ணே என் கண்மணியே’ எனச்சொல்ல வைக்கிறது.


    >>>>>

    ReplyDelete
  8. இன்றைய தங்களின் பதிவு கண்ணுக்கும் கருத்துக்கும் களிப்பூட்டக்கூடியது.

    லிங்காஷ்டகம் காணொளி, கண்ணுக்கு விருந்தளித்து, காதினில் தேன் பாய்ச்சுவது.

    அனைத்துக்கும் என் அன்பான நன்றிகள், பாராட்டுக்கள், நல்வாழ்த்துகள்.

    ;) 1290 ;)

    ooooo

    ReplyDelete
  9. வழக்கம் போலவே சிறப்பான பதிவு.

    ReplyDelete
  10. திருமயிலை திருத்தலம் கட்டுரை திருப்தியான தரிசந்த்துடன் திவ்யமான பாடல்களும்...

    ReplyDelete
  11. சென்னையில் அத்தனை வருடங்கள் இருந்தும் ஒரு முறை இந்தக் கோவிலுக்கு போயிருக்கிறேன்.

    ReplyDelete
  12. பதிகங்களோட கூடிய இந்த பதிவு அருமை. நன்றி அம்மா.

    ReplyDelete
  13. அழகிய படங்களுடன் - திருமயிலை திருத்தலத்தில் சுக்கிரன் பார்வை பெற்ற வைபவத்தை விவரித்த - இனிய பதிவு..

    ReplyDelete
  14. எத்தனை தகவல்கள்...... நன்றி.

    ReplyDelete
  15. திருவிழா நாட்களில் கயிலை போலிருக்கும் மனங்கவர் மயிலை பற்றிய பதிவு படங்களுடன் வெகு சிறப்பு . நன்றி பகிர்விற்கு.

    ReplyDelete
  16. மிக நல்ல காட்சிகளுடன் கட்டுைர தரும் தங்களை எப்படிதான் பாராட்டுவதோ தெரியவில்ைல

    ReplyDelete