Thursday, September 25, 2014

நவராத்ரி நாயகியர்






Photo
மீனாட்சி என்ற பெயரிலேயே மீன் இருப்பதால் கடாக்ஷத்தாலேயே ஞான தீட்சை தந்துவிடும் குருவாக பூஜிக்கிறோம்..இது மத்ஸ்ய தீட்சை. !

காமாட்சி, பக்தனை ஸ்பரிசித்து, அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கி விடும் ஞானகுரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீட்சை வேண்டி பூஜிக்கிறோம். 

காசியில் இருக்கும் விசாலாட்சி, பக்தர்களை அனுக்ரஹ சிந்தையோடு மனத்தால் நினைத்தே ஞானமளிக்கும் கமட தீட்சை குருவாக இருக்கிறாள்.

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள்  லட்சுமிக்கும், அடுத்த மூன்று நாட்கள் சக்திக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் உரியதாக  விழா எடுக்கிறோம். 

வாழ்க்கைத் தேவையான  பணம் பிற வசதிகள் பெறுவதற்கு 
லட்சுமியை முதலில் துதிக்கிறோம். 

பணத்தைப் பாதுகாப்புடன் வைப்பதற்குரிய தைரியத்தையும் வழிமுறையையும் வேண்டி சக்தியாகிய துர்க்கை, காளி போன்ற காவல் தெய்வங்களை வணங்குகிறோம். 

பாதுகாப்புடன் கூடிய செல்வத்தை  என்னென்ன பயனுள்ள காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது தெரிவதற்கு கல்வி என , காரண காரியங்களுடன் வகுக்கப்பட்டது நவராத்திரி பூஜை முறை. 

வடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்காபூஜை தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது 
இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், அட்சர அப்யாசம் என்னும் முதல் படிப்பு சடங்கு செய்யவும் புரட்டாசியில் வரும் விஜயதசமி நாளிலேயே தொடங்கப்படுகிறது..

புரட்டாசியில் வரும் நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து சாரதா நவராத்திரி என்று  (சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு) கொண்டாடுகிறோம்..
 மனிதனுக்கு அவசியமான கல்வி , செல்வம், தைரியம் அகியவற்றை பெற்று வாழ்வு வளம்பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.


13 comments:

  1. நவராத்திரி நாயகியர் அறிந்தேன்
    நன்றி சகோதரியாரே

    ReplyDelete
  2. நவராத்திரி நாயகியை பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. படங்கள் அனைத்தும் அழகு. நன்றி அம்மா.

    ReplyDelete
  3. மூன்று சகதிகளின் சக்தியும் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
    நவராத்திரி வாழ்த்துக்கள்.
    படங்கள் எல்லாம் அழகு.

    ReplyDelete
  4. நவராத்ரிநாயகியர் பற்றிய சிறப்பான தகவல்கள்.படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அம்பிகையின் அழகான படங்களுடன் இனிய செய்திகளைக் கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    ReplyDelete
  6. தேவியின் ஒவ்வொரு படங்களும் அருமை. timely போஸ்ட். பகிர்வுக்கு நன்றி. Jai ma ambe!

    ReplyDelete
  7. படங்களும், தகவல்களும் அருமை மேடம்.
    உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. நவராத்திரி நாயகியரை விரிவாக விளக்கியமை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  9. இந்தமாதிரியான விழாக்கள் எல்லாம் நம் பண்டைய கலாச்சாரத்தினை வெளிப் படுத்த உதவும் என்னும் முறையில் வரவேற்கப் பட வேண்டியவை. ஆனால் அவையே முயற்சி இல்லாமல் வெற்றி கிட்டும் எனும் எண்ணத்தை வளர்க்காமல் இருந்தால் சரி.

    ReplyDelete
  10. தமிழ் ஹிந்துவில் உங்கள் 4 கட்டுரைகள் வெளியானமைக்கு வாழ்த்துக்கள் ராஜி..

    அடேயப்பா 12 லட்சத்து 63 ஆயிரம் பார்வையாளர்களுக்கு மேலா.. க்ரேட்.. !!!!!!!!!!!!!! :)

    ReplyDelete
  11. தங்களுக்கு எனது உளம் நிறைந்த நவராத்திரி நல் வாழ்த்துக்கள்!

    (அம்மனை தானாகவே ஆராதித்து தீபாரதனை செய்யும் தீப விளக்கு – எனக்கு விட்டாலாச்சார்யா படங்களை நினைவுபடுத்தின)

    ReplyDelete
  12. நவராத்திரி நாயகியர் பற்றிய தகவல்களும் புகைப்படங்களும் அற்புதம். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. நவராத்திரி நாயகியர் பற்றிய கட்டுரை நன்று.

    ReplyDelete